Friday, May 18, 2007

மசூதியில் வெடிக்கும் குண்டுகள்

மலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மசூதியில் நேற்று வெடித்த வெடிகுண்டு வரை ஒரு வகாபியிச முத்திரை அழுத்தமாகவே பதிந்திருக்கிறது. மலேகானில் குண்டு வெடித்தது ஒரு பாகனிய தாக்கத்தால் எழுந்த இஸ்லாமிய திருவிழாவின் போது. வகாபியிஸ்ட்கள் மிகவும் வெறுக்கும் இந்த திருவிழாவில் வெடித்த வெடிகுண்டுகளுக்கு பின்னால் சிமி அமைப்பினர் இருப்பது தெரியவந்தது. நேற்று ஹைதராபாத் மெக்கா மசூதியும் வகாபியிஸ்ட் கோட்பாடுகளுக்கு எதிராக, முஸ்லீம்கள் நபி என நம்புகிற முகமது என்கிறவரின் தாடியில் உள்ள மயிரை புனித மயிராக வைத்திருக்கும் மசூதியாகும். வகாபியிச அடிப்படைவாதிகளால் இத்தகைய 'புனித பொருள்' வணக்கம் வெறூக்கப்படுகிறது. 2006 இல் ஆந்திராவில் இருந்து சென்ற மூன்று ஷியா முஸ்லீம் யாத்திரீகர்கள் சன்னி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். டிஃபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு செல்போனால் இயக்கப்பட்டு வெடித்திருக்கிறது. ஹைதராபாத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு ஏதோ நேற்று ஏற்பட்ட விதிவிலக்கல்ல. வகாபியிச எதிர்ப்பு இஸ்லாமியரையும் காஃபீர்களையும் குறிவைத்து அழிக்கும் சவூதி இறக்குமதி இஸ்லாமிய மதவெறி என்றோ ஆரம்பமாகிவிட்டது. 2003 இல் சாய்பாபா கோவிலில் வெடித்த குண்டு ஆறு உயிர்களை பலிவாங்கியது. 2005 இல் தசரா திருவிழாவின் போது பேகம்பேட்டில் மனிதவெடிகுண்டு வெடித்தது. மனித உரிமை என்கிற பெயரில் காவல்துறை கைகளை கட்டிப்போட்டால் கண்ட இடங்களில் குண்டு வெடிக்கத்தான் செய்யும். வகாபியிச வன்முறையில் இயற்கையான இலக்கு காஃபீர்களை போன்றே தங்கள் வழியை ஏற்காத இதர இஸ்லாமியர்களும்தான். மலேகானும் ஹைதராபாத்தும் தரும் பாடம் இதுதான்.

Labels: , ,

14 Comments:

Anonymous Anonymous said...

இஸ்லாமியர்களை வஹாபிகள் கொல்லுவதை குர்ஆனும் ஹதீஸ்களும் ஏற்றுக்கொள்ளுகின்றனவா?

7:37 PM, May 18, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

இது பிரச்சனையே அல்ல. வஹாபியிசத்தை ஏற்காதவர்கள் இஸ்லாமியர்களே அல்ல காஃபீர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை என சொல்லிவிட்டால் போச்சு.

7:52 PM, May 18, 2007  
Blogger ஜயராமன் said...

அநீ,

மிக அழகாக பல தெரியாத விவரங்களை எழுதியிருக்கிறீர்கள். படரும் இந்த பயங்கரவாதத்தின் பிண்ணனியை விளக்கியிருக்கிறீர்கள். இவர்களின் குறிக்கோள் என்ன என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். நன்றி.

இந்த ஜிகாதி தீவிரவாதம் புதுப்புது இடங்களில் மேலும் படர்ந்து வருவது கவலை அளிக்கிறது. அமைதியாக இருந்த தென்னிந்தியாவையும் இந்த ஜிகாதி - வகாபி - வெறிக்கொள்கைகள் ஆக்கிரமித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசாங்கத்தின் மெத்தனமான போக்கே இதற்கு காரணம். ஜிகாதிகளையும், முஸ்லிம் சமுதாயத்தினரையும் பிறித்துப்பார்க்காத அரசாங்கமும், சிறுபான்மை சமுதாயமும் இதற்கு அடிப்படை காரணம்.

சிமி முதலிய அடிப்படை லோகல் குழுக்களின் உதவி இல்லாமல் இம்மாதிரி குண்டு வெடிப்புகள் நடக்காது என்பதே போலிஸ் நம்புகிறது. அதனால், லோகல் முஸ்லிம்களும் இந்த பிரச்சனையில் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாசக்கார சக்திகளுக்கு துணை போவது மிகவும் கவலை அளிக்கிறது.

நன்றி

10:18 PM, May 18, 2007  
Anonymous Anonymous said...

//இது பிரச்சனையே அல்ல. வஹாபியிசத்தை ஏற்காதவர்கள் இஸ்லாமியர்களே அல்ல காஃபீர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை என சொல்லிவிட்டால் போச்சு.//


சொல்லிவிட்டால் போச்செல்லாம் இல்லை. ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள், அப்துல் வகாபின் காலத்திலேயே. இன்னும் சொல்லப்போனால், இதுவே வகாபிக்களின் ஆரம்பகால போர்களின் அடிப்படையாக இருந்தது. அவர்கள் சவுதியைக் கைப்பற்றும்போது ஏனைய முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்ந்தார்கள் - இதையே சொல்லிக்கொண்டு. பெட்ரோம் வளம் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பு பிற முஸ்லீம்களை காஃபீர்கள் என்றழைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்(இது முகமதின் சுன்னாஹ் என்று சொல்லிக்கொண்டு ).

1:28 AM, May 19, 2007  
Blogger லெனின் said...

Aravind Sir,

Nadavadikkai Yaar meethu edukkapadukirathu allathu Yaar palikada aagapogiraargal poruthirunthu paarpom

Sir Naan Puthiyavan, Tamilil Ezhutha Ennaseiya Vendum

2:18 AM, May 19, 2007  
Blogger லெனின் said...

Arvind Sir,

Ungal Articles Thesiya Unarvai Thoondukirathu. Keep it up. Ungalukku entha thadayum neraathirukka Iraivanai Vendukiren.

Sir Naan puthiyavan Tamilil Ezhutha Enna Seiya Vendum.

2:22 AM, May 19, 2007  
Anonymous Anonymous said...

மலேகுவான் மசூதியும் ஹைதரபாத மசூதியும் ஷியா மசூதிகள். அதனால்தான் அவை சிமி போன்ற அமைப்புகளால் தாக்கப்படுகின்றன.
இது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஷியா மசூதிகளை வெடி வைத்தாற்போலவும் ஆயிற்று, இந்து அமைப்புகள் மீது பழி போட்டு, இந்திய அரசாங்கம் மூடி மறைக்கிறது என்று சொல்லவும் முடியும்.
இந்திய அரசாங்கம் உண்மையை வெளியில் சொல்ல வேண்டும்.

ஹஜரத்பல் மசூதி ஜிகாத் வெறியர்களால் தாக்கப்பட்டதற்கும் இதே காரணம்தான்.

8:12 AM, May 19, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

லெனின், தங்கள் கருத்துகளுக்கு நன்றி, முரசு.காம் இல் இருந்து முரசஞ்சலை தரவிறக்கம் செய்து நிறுவி அதனை பயன்படுத்தவும். அதில் யுனிகோட்டாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

8:50 AM, May 19, 2007  
Blogger ஜடாயு said...

//வகாபியிச வன்முறையில் இயற்கையான இலக்கு காஃபீர்களை போன்றே தங்கள் வழியை ஏற்காத இதர இஸ்லாமியர்களும்தான்//

கடைசியில் இது ஒரு ஷியா-சுன்னி மோதல் என்ற அளவில் வந்திருக்கிறது.

நேசகுமார், ஒரு கேள்வி - ஷியாவாக இருக்கும் முஸ்லீம்கள் சுன்னிகளாக மாற முடியுமா? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா? இப்படி எங்காவது நடந்திருக்கிறதா? இல்லை இந்த ஷியாக்கள் என்பவர்கள் ஒரு மாறமுடியாத "இனம்" என்ற கணக்கில் வருவார்களா?

10:43 AM, May 19, 2007  
Anonymous Anonymous said...

ஜடாயு,


மாறலாம். ஷியாக்கள் சுன்னிக்களாவதும், சுன்னிக்கள் ஷியாக்களாவதும் நிகழ்ந்திருக்கின்றது, இன்றும் நிகழ்ந்துவருகிறது.

ஆனால், இந்த மாற்றங்கள் பெரும்பாலும் அச்சுறுத்தல் மற்றும் நிர்ப்பந்தகளாலேயே நிறைவேற்றப்படுகின்றன(ஏனையோரை இஸ்லாமியர்களாக்கியது போன்று).

இது இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்டது என்பதால் இப்படி ஒரு குழு இன்னொரு குழுவை காஃபிராகக் கருதி உண்மையான இஸ்லாத்திற்கு(ஆளுக்காள் தாங்கள் பின்பற்றுவதுதான் உண்மையான இஸ்லாம் என்கிறார்கள் - ஷியாக்கள் வகாபிக்களை காஃபிர்கள் என்கிறார்கள், வகாபிக்கள் ஷியாக்களை காஃபிர்கள் என்று சொல்லி சவுதியில் இஸ்லாமிய(வகாபி) மதகுருமார்களே இது சம்பந்தமான ஃபத்வாக்கள் தந்துள்ளார்கள்).


ஈரான் வலுக்கட்டாயமாக சுன்னிக்களை ஷியாக்களாக மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு முன்பு எழுந்தது - இணையத்தில் தேடினால் கிட்டலாம்.

1:32 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

சென்னையில் எங்களுடைய பஞ்சாலையில் வேலை செய்யும் ஒரு இஸ்லாமிய அன்பர் சொன்னார், இந்தியாவில் ஷியாக்களுக்குள்ளும், சன்னிகளுக்குள்ளும் திருமணம் பந்தம் நிலவுவதில்லை என்று.

6:42 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

This talks about the forcible conversion of sunni muslims alongwith kashmiri hindus into shia islam.

http://blown.sulekha.com/blog/post/2007/05/civil-war-against-the-forceful-conversion-to-islam.htm

6:58 AM, May 20, 2007  
Blogger Fiyas said...

Islam tell this terorr? This is poolih idea. this is happend with muslim shiya,sunney problem? cannot understand. which is i belived?

12:22 PM, May 20, 2007  
Blogger ஜடாயு said...

நேசகுமார்,

பதிலுக்கு நன்றி.

ஹைதராபாத் நண்பர் ஒருவரிடன் இன்று பேசிக் கொண்டிருந்தபோது, இந்த தீவிரவாதச் செயலின் வகாபிய, ஜிகாதிய பரிமாணம் பற்றி எங்கும் பேச்சே இல்லை என்றார்.

சும்மா ராண்டமாக ஒரு மசூதியில் குண்டுவைத்தால், வைத்தவர்கள் இந்துக்கள் என்று சந்தேகம் எழுந்து உடனே பெரிய கலவரம் நிகழும், அதன் மூலம் "நாட்டின் அமைதியை குலைக்கும்" முயற்சியாக "தேச விரோதிகள்" குண்டு வெடிப்பு என்று தான் வழக்கமான வழவழா செய்திகள் வந்துகொண்டிருக்கின்றனவாம்.

நல்ல வேளை, வதந்திகள் தீப்பொறியாகப் பரவும் முன், குற்றவாளிகளை துரிதமாக அடையாளம் காட்டிய அரசுத் துறைகளின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

6:00 AM, May 21, 2007  

Post a Comment

<< Home