அகப்பயணம்

Friday, May 18, 2007

மசூதியில் வெடிக்கும் குண்டுகள்

மலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மசூதியில் நேற்று வெடித்த வெடிகுண்டு வரை ஒரு வகாபியிச முத்திரை அழுத்தமாகவே பதிந்திருக்கிறது. மலேகானில் குண்டு வெடித்தது ஒரு பாகனிய தாக்கத்தால் எழுந்த இஸ்லாமிய திருவிழாவின் போது. வகாபியிஸ்ட்கள் மிகவும் வெறுக்கும் இந்த திருவிழாவில் வெடித்த வெடிகுண்டுகளுக்கு பின்னால் சிமி அமைப்பினர் இருப்பது தெரியவந்தது. நேற்று ஹைதராபாத் மெக்கா மசூதியும் வகாபியிஸ்ட் கோட்பாடுகளுக்கு எதிராக, முஸ்லீம்கள் நபி என நம்புகிற முகமது என்கிறவரின் தாடியில் உள்ள மயிரை புனித மயிராக வைத்திருக்கும் மசூதியாகும். வகாபியிச அடிப்படைவாதிகளால் இத்தகைய 'புனித பொருள்' வணக்கம் வெறூக்கப்படுகிறது. 2006 இல் ஆந்திராவில் இருந்து சென்ற மூன்று ஷியா முஸ்லீம் யாத்திரீகர்கள் சன்னி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். டிஃபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு செல்போனால் இயக்கப்பட்டு வெடித்திருக்கிறது. ஹைதராபாத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு ஏதோ நேற்று ஏற்பட்ட விதிவிலக்கல்ல. வகாபியிச எதிர்ப்பு இஸ்லாமியரையும் காஃபீர்களையும் குறிவைத்து அழிக்கும் சவூதி இறக்குமதி இஸ்லாமிய மதவெறி என்றோ ஆரம்பமாகிவிட்டது. 2003 இல் சாய்பாபா கோவிலில் வெடித்த குண்டு ஆறு உயிர்களை பலிவாங்கியது. 2005 இல் தசரா திருவிழாவின் போது பேகம்பேட்டில் மனிதவெடிகுண்டு வெடித்தது. மனித உரிமை என்கிற பெயரில் காவல்துறை கைகளை கட்டிப்போட்டால் கண்ட இடங்களில் குண்டு வெடிக்கத்தான் செய்யும். வகாபியிச வன்முறையில் இயற்கையான இலக்கு காஃபீர்களை போன்றே தங்கள் வழியை ஏற்காத இதர இஸ்லாமியர்களும்தான். மலேகானும் ஹைதராபாத்தும் தரும் பாடம் இதுதான்.

Labels: , ,