அகப்பயணம்

Monday, June 30, 2008

அமர்நாத்தும் பிள்ளையார்புரமும்

அமர்நாத் யாத்திரையால் இலாபம் பெறும் காஷ்மீர் முஸ்லீம்கள் அந்த யாத்திரைக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை அதிகாரியை நாயைப்போல அடிக்கும் காட்சி

அண்மையில் அமர்நாத் கோவில் யாத்திரைக்கு நிலம் ஒதுக்கியதற்காக அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததையும் அதனைத் தொடர்ந்து அந்த நில ஒதுக்கீட்டினை அரசு இரத்து செய்து விட்டதையும் நாம் அனைவரும் அறிவோம். இது ஏதோ அமர்நாத்தில் மட்டும் நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல. மாறாக, கிறிஸ்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்புவாதிகள் இந்துக்களுக்கு அவர்களது அடிப்படை வழிபாட்டுரிமையையும் முடிந்தால் வாழ்வுரிமையையும் அழிக்க திட்டமிட்டு இந்தியா முழுவதும் காய் நகர்த்துவதன் ஒரு வெளிப்பாடே இது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிள்ளையார்புரம் நிகழ்ச்சி. ஆத்திக்காட்டு விளை ஊராட்சியின் கீழ் வரும் பிள்ளையார் புரம் இந்துக்களே நிரம்பிய ஊர். ஊரில் மொத்தம் எட்டோ பத்தோ கிறிஸ்தவ குடும்பங்கள். இவர்கள் அம்மன் கோவிலுக்கு நேர் எதிராக உள்ள தெருவில் குடியிருப்பதுடன் அந்த தெரு முடியும் இடத்தில் புதிதாக ஒரு கிறிஸ்தவ பிரச்சார-பிரார்த்தனை கட்டிடத்தையும் (சர்ச்) கட்டியுள்ளனர். இந்த தெருவில் இந்துக்களும் உள்ளனர். இந்த தெருவில்தான் இந்துக்கள் அம்மனின் சப்பரவாகனத்துடன் வரக்கூடாது என்றும் ஏனெனில் இந்த தெருவே தென்னிந்திய கிறிஸ்தவ சபைக்கு சொந்தமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதிர்ந்து போன இந்துக்கள் இந்த 'தெரு விழுங்கி' கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைக் குறித்த ஆவணங்களை வெளியிட தாசில்தாரை கேட்டபோது அவர் அந்த ஆவணங்களை தராமல் தட்டிக்கழித்துவிட்டார். அவர் கிறிஸ்தவர். (மதச்சார்பற்ற அரசு கிறிஸ்தவர்களுக்கு மத அடிப்படையில் அரசு பணிகளில் இடஒதுக்கீடு செய்து கொடுத்தால் என்னவெல்லாம் 'தெரு'விளையாடல்கள் நடத்தப்படும் என்பதற்கு தமிழக இந்துக்களுக்கு பிள்ளையார் புரம் ஒரு எச்சரிக்கை மணி.) ஆக நிலப்பதிவு ஆவணங்கள் இந்துக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில் இந்துக்கள் இரண்டு ஆதாரங்களை காட்டுகிறார்கள். ஒன்று கிறிஸ்தவ டயோஸிஸ¤க்கு சொந்தமானது என கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடும் இந்த தெருவுக்கு ஆத்திக்காட்டு விளை ஊராட்சி சம்பூரண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2.5 இலட்ச ரூபாய் செலவில் காங்கிரீட் தெரு அமைத்துக்கொடுத்துள்ளது. கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசனால் சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இந்த தெருவில் பிள்ளையார்புரம் ஊர் மொத்தத்துக்கும் சொந்தமான தண்ணீர் கிடங்கு உள்ளது. இதில் துயரமான வேடிக்கை ஒன்று உள்ளது. இந்த தெருவில் இருக்கும் இந்த பொது தண்ணீர் நிலைக்கு நிலத்தை தானமாக அளித்தவர் ஒரு இந்து. பிள்ளையார்புரம் ஒரு எச்சரிக்கை. மத அடிப்படையில் வாங்கு வங்கி அரசியல்வியாதிகளால் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது இந்துக்களின் வழிபாட்டுரிமைகள் எப்படி அழிக்கப்படும் என்பதற்கான ஒரு ஒத்திகை நமக்கு காட்டப்பட்டுள்ளது இங்கே. எனவே இந்துக்களும் சரி மத நல்லிணக்கம் சமுதாய முன்னேற்றம் உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றில் அக்கறை உள்ளவர்களும் சரி ஆதிக்க மதவாதிகளும் ஊழல் அரசியல்வாதிகளும் நடத்தும் ஆபத்தான விளையாட்டை முறியடிக்க ஒன்றுபட வேண்டும்.

இந்த தெருவை கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசன் தம்முடையது என சொல்கிறது


ஆனால் உண்மை என்ன? டயோசீசனுக்கு உரிய தெருவுக்கு ஊராட்சி 2.5 இலட்ச ரூபாய் செலவளித்ததா?


போலிஸ் தடியடியில் இறந்த இந்து பெண்


போலிஸ் தடியடியில் தாக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட இந்து பெண்கள்


மக்களின் குமுறல்

Labels:

Saturday, June 07, 2008

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

இந்து என்று ஒன்றே கிடையாது என்பதாகவும், நாட்டார் தெய்வங்களே எங்கள் தெய்வங்கள் என்றும் ஜல்லி அடிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் உண்மையில் அம்மன் தெய்வங்கள் தாக்கப்படும் போது, அம்மனை வழிபடும் பக்தர்கள் அடிக்கப்படும் போது, அவர்கள் கண்ணீர் விடும் போது இந்த கூட்டம் மௌனம் சாதிக்கும். இவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அப்போது அங்கே இந்து இயக்கங்கள் மட்டுமே போராடும்.ஏனென்றால் நாட்டார் தெய்வங்கள்-குல தெய்வங்கள் இந்துக்களின் இரத்தத்தில் உறைபவை. அவற்றுக்காக இரத்தம் சிந்தி போராடவும் கண்ணீர் சிந்தி கதறவும் இந்துக்களால் மட்டுமே முடியும். நாட்டார் தெய்வன்கள் குறித்து ஏசி அறை செமினார்களில் பேசுபவர்களுக்கோ நாட்டார் தெய்வங்கள் இந்து சமுதாயத்தை பிரிக்க ஒரு உக்தி மட்டுமே. மற்றபடி இந்து நாட்டார் தெய்வங்கள் ஊர்வலங்கள் தடைபட்டாலும் சரி பக்தர்கள் தாக்கப்பட்டாலும் சரி இவர்கள் மௌனி பாபாக்களாக மௌனம் சாதிப்பார்கள். அல்லது பழியை தாக்கப்பட்ட இந்துக்கள் மீதே போட்டாலும் போடுவார்கள். கீழே உள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு இந்து உரிமை போராட்டம். முத்தாரம்மனுக்காக இரத்தம் சிந்தியவர்கள் கண்ணீர் விட்டவர்கள் யார் என பாருங்கள்...
கதறி அழுத இந்து பெண்கள்

நீதி கேட்டு முத்தாரம்மன் கோவிலில் குமுறி அழும் இந்து பெண்
இது மலேசியா அல்ல கன்னியாகுமரி மாவட்ட பிள்ளையார்புரம்

நாகர்கோவில்: நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் சமீபத்தில் திருவிழா நடந்தது. 2-ஆம் நாள் திருவிழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் குழந்தைகள் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்களம் போல் காட்சி அளித்தது. ...நேற்று நாக்ர்கோவில் வந்த பாஜக தலைவர் இல.கணேசன் பிள்ளையார்புரம் சென்று பார்த்தார். அவரை பார்த்ததுமே பெண்கள் சிலர் கதறி அழுதனர். போலிசார் அத்துமீறி நுழைந்து தாக்கினர். பெண்கள் என்று கூட பாராமல் தரக்குறைவாக பேசினர். வீட்டுக்குள் இருந்தவர்களை தேடி தேடி வந்து அடித்தனர் என்று கூறி அழுதனர்.

அல்லல் பட்டு ஆற்றாது அழும் இந்தக் கண்ணீருக்கு பதில் என்ன சொல்வீர்கள்?


[ஆதாரம் படங்கள் & செய்தி தினகரன், தமிழ் முரசு: 7-ஜூன் 2008]

Wednesday, June 04, 2008

இதற்கும் எதற்கும் தொடர்பில்லை:85

[ராஜேந்தர் மன்னிக்க வேண்டுகிறேன்.]
புறநானூற்று வீரத்தை புறமுதுகு கண்ட குடமுருட்டி குண்டே
ஐய்யயோ கொல்றாங்களே என காமிரா கண்டலறிய மண்டே
செய்த ஊழலுக்கு கேட்டது கணக்கென்றால் கூசாமல் நீ
கட்டிய பொண்டாட்டி வீட்டையும் மகளின் அம்மா வீடென்றதும் உண்டே
மானங்கெட்டு பகுத்தறிவு பேசும் உன் தோளில்
பிரகாசித்து உன் பகுத்தறிவின்மையை ஊருக்கே சொல்லுமடா உன் மஞ்சள் துண்டே
ஓட்டு பிச்சை தேடி கஞ்சி நக்க ஓடும் சுயமரியாதையில்லா குஞ்சே
நீ கெட்டகேடுக்கு எப்படி இன்னும் துடிக்குது உன் வஞ்ச நெஞ்சே
இயற்கை சேதமைக்கும் சமுத்திரத்தில் மண்ணை அள்ளி
மீனவர் வயிற்றில் நீ அடிக்கும் துரோகம்
அதற்காக கொட்டி கிடைக்குமாடா உன் பினாமிகளுக்கு இலாபம்?
இதனை தமிழ்நாட்டுக்கு என்று முடிச்சு போடும் உன் நயவஞ்சக புத்தி
உன் சந்ததிகளுக்கே செல்வம் சேர்க்க தமிழ்நாட்டை நாசமாக்கும் உன் அரக்க
சக்தி
உன் சொந்த தகராறால் ஊரார் பிள்ளைகளை கொல்பவனுக்கு நீ தகப்பன்
ரவுடி கும்பல்களை இலக்கிய உலகிலும் கொண்டுவரும் மொழிக்கு நீ அப்பன்
தலைமுறையே சாபக்கேடாய் தமிழ்நாட்டின் மீது வந்து விழுந்தாயடா
கெடுமதியே முழு உருவாய் வந்த உன்னையும் மனிதனென பெற்று போட்டாளே ஒருத்தி
அவள் மட்டும் பிறக்காதிருந்தால் இந்த நன்றாயிருந்திருக்கும் இந்த
நாட்டின் தலைவிதி