அகப்பயணம்

Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

போதிசத்வ அம்பேத்கரின் சிந்தனைகள்

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் அந்த சமுதாய பெண்களின் முன்னேற்றமே.


மேல்சாதி என தம்மை கருதிக் கொள்ளும் ஹிந்துக்களுக்கு ஹிந்துத்துவம் எத்தனை உரிமையானதோ அதே போல ஒடுக்கப்பட்ட தீண்டப்படத்தகாதவர்கள் என கருதப்பட்ட ஹிந்துக்களுக்கும் ஹிந்துத்துவம் உரிமையானதுதான். ஹிந்துத்துவத்தின் வளர்ச்சிக்கும் மகோன்னதத்துக்கும் ஹிந்து சமுதாயம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே கடமைப்பட்டிருக்கிறது. தீண்டப்படத்தகாதோர் என கருதப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த வான்மீகி முனிவரும், வியாதகீதையின் ஆசிரியரும், சொக்கமேளரும், ரோகிதாஸும் வசிஷ்டர் போன்ற பிராமம்ணர்களைப் போலவும், கிருஷ்ணர் போன்ற ஷத்திரியர்களைப் போலவும், ஹர்ஷர் போன்ற வைசியர்களைப் போலவும், துகாராம் போன்ற சூத்திரர்களைப் போலவும் ஹிந்துத்துவத்துக்கு பங்களித்திருக்கிறார்கள்....சித்நாக மகார் போல ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக போராடிய ஒடுக்கப்பட்ட சமுதாய வீரர்கள் ஏராளமானவர்கள். ஹிந்துத்துவத்தின் பெயரில் உருவாக்கப்படும் அந்த உன்னத திருக்கோவில் அதன் ஐஸ்வரியமும் வளமும் மெல்ல மெதுவாக எண்ணற்ற தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களும் தாழ்த்தப்படாத ஹிந்துக்களும் செய்த மகத்தான தியாகங்களால் உருவானதாகும். எனவே அது சாதி வேறுபாடற்று அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது. அதன் கதவுகள் அனைத்து ஹிந்து சமுதாயத்துக்கும் திறக்கப்பட வேண்டும்.



ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலையைக் குறித்து சிந்திக்கும் போது தேசத்தின் ஒட்டு மொத்த நலனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியத்தன்மையை அழித்துவிடும். இஸ்லாமுக்கு அவர்கள் மாறினால் இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கு துணை போய்விடுவார்கள். கிறிஸ்தவத்துக்கு மாறினால் கிறிஸ்வதர்களின் எண்ணிக்கை அதிகமாகி அன்னிய மேலாதிக்கம் இந்நாட்டில் வலுபட்டுவிடும்.

Monday, April 05, 2010

ஹுசைனும் மதமெனும் மனநோயும்

இது கூட்டாஞ்சோறு:

அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,
நீங்கள் சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் போன்றவர்களைப் பற்றி என்ன நிலை எடுக்கிறீர்கள்? அவர்கள் புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டியவைதானா? தடை செய்யப்பட வேண்டியவை என்று ஒரு சட்டம் இருந்தால் அது சரியான சட்டம்தானா? ரஷ்டியின் புத்தகம் வெறுப்பை உமிழ்கிறது என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. Subjective feelings of "victims" cannot be the basis for government action and only tangible actions against the "victims" can be a realistic basis. இறை நிந்தனையை தண்டிக்க சட்டம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். அப்புறம் ஹுசேன் மேல் என்ன கேஸ்?

என் பதில்:

1. இறைநம்பிக்கைக்கு எதிராக அல்ல ஒரு குறிப்பிட்ட வெறுப்பு வெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்களைக் கருத இடமிருக்கிறது. எப்படி யூதர்களுக்கு நாஸி சின்னங்கள் வெறுப்புச்சின்னமாக மாறியுள்ளதோ அதே போல. இப்போது ஹுசைனுக்கு எதிராக வழக்கு போட சுதந்திரமிருக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வியே. எப்படி ஹுசைனைத் physical ஆக தாக்க ஒருவருக்கு சுதந்திரம் இல்லையோ எப்படி அவரது ஓவியங்களை அழிக்க ஒருவருக்கு சுதந்திரமில்லையோ அது போல அவர் மீது வழக்கு போடக் கூடாது அவர் மீது வழக்கு போடுவதே கலை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு என்று சொல்லுவது அசிங்கமாக இருக்கிறது. ஹுசைனும் தனக்கு ஆபத்து என்பதால் அல்ல வழக்குகளை சந்திக்க விருப்பமில்லாமல்தான் தான் கத்தார் சென்றுவிட்டதாக சொல்லுகிறார். இந்த வழக்கு போடப்பட்டதே இறைநிந்தனை குற்றமாக இல்லாத இந்திய அரசியல் நிர்ணய சட்டத்துக்கு உட்பட்டுத்தான். ஆனால் கத்தார் மதம் மாறினால் மரண தண்டனை என அரசியல் சட்டத்தில் சொல்கிற நாடு. யூத வெறுப்பை வெளிகக்கும் சித்திரங்களை அரசு நிர்வாகத்தினரின் ஆசியுடன் நடத்தும் பத்திரிகை வெளியிடும் நாடு.

2. நான் எதையுமே தடை செய்வதை ஆதரிப்பவன் அல்ல. ஹுசைனின் ஓவியத்தை பௌதீகமாக தாக்கியவர்கள் மிக மோசமானவர்கள் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் ஹுசைன் என்னைப் பொறுத்தவரையில் ஒரு வெறுப்பிமிழும் ஜனநாயக விருப்பில்லாத ஓவியன்தான். அவருடைய ஹிந்து மத வெறுப்பு அவருடைய ஜனநாயக வெறுப்பிலிருந்தும் அந்த ஜனநாயக வெறுப்பு இஸ்லாமியத்தில் இயல்பாகவே இருக்கும் இறையியல் பாசிசத்திலிருந்தும் வந்திருக்கலாம். இதில் இஸ்லாமிய இறையியலின் தாக்கம் இருக்கிறதா என்பதை நோக்குவது சுவாரசியமாக இருக்கக் கூடும். இஸ்லாமியர்களால் இறுதி இறைத்தூதர் என நம்பப்படும் முகமது விக்கிரக ஆராதனையாளர்களும் தாய் தெய்வ வழிபாட்டாளர்களும் வழிபட்டுவந்த மெக்காவை வெற்றிக் கொள்ளும் போது கலீத் இபின் வலீத் என்பவரை அல் உஸா எனும் பெண் தெய்வக் கோவிலை அழிக்க அனுப்புகிறார். அவர் அழித்துவிட்டு திரும்புகிறார். அப்போது தன்னை இறைத்தூதர் என சொல்லிக்கொள்ளும் முகமது "நீ எதையாவது பார்த்தாயா?" என கேட்க வலீத் இல்லை என்கிறார். இதனையடுத்து வலீத் மீண்டும் சென்று இடிபாடுகளிடையே தேடுகையில் 'ஆடையற்ற கறுப்பான தலைவிரி கோலமான ஒரு பெண்" வருகிறாள். "உஸ்ஸா உனக்கு மறுப்புதானே ஒழிய வழிபாடல்ல" என சொல்லி வலீத் அவளைக் கொல்கிறார். பாகனீய பெண் தெய்வங்களை இஸ்லாம் பார்க்கும் இவ்வெறுப்புப் பார்வையே ஹுசைனின் நிர்வாண தேவி ஓவியங்களில் வெளிப்படுகிறது. இந்த தூய இஸ்லாமிய ஐதீகத்தின் படி ஹுசைனின் ஓவியங்களை காணுங்கள்.

ஆபிரகாமிய மதங்கள் அனைத்திலும் இருக்கும் இந்த விக்கிரக ஆராதனை வெறுப்பு சக-மானுட வெறுப்பு. உதாரணமாக எவனாவது மனு ஸ்மிருதியின் அடிப்படையில் பிராம்மணர்கள் உயர்ந்தவர்கள்; சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் அவர்கள் சொத்து வைத்துக்கொள்ளக் கூடாது ஒரு பெண்ணும் சுதந்திரமாக இருக்கக் கூடாது" என்றெல்லாம் சொன்னால் அது எத்தனை மானுட விரோதமோ அதற்கு எள்ளளவும் குறையாத மானுட வெறுப்பு விக்கிரக ஆராதனையளார்களை இஸ்லாமும் இதர ஆபிரகாமிய மதங்களும் வெறுப்பதில் உள்ளன.

3.ஹுசைனை இஸ்லாமியராக பார்ப்பது சரியா என்றால் -ஒவ்வொருமுறையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் சமுதாயத்தையும் மட்டுமே மதித்து நடப்பேன் என்று சொல்கிற நபரை 90 ஆண்டுகளாக அணியாத காலணியை கத்தார் மக்களின் மன-உணர்வுகளுக்காக அணியக்கூடிய ஒருவரை வேறெப்படி சொல்ல?

4. இறுதியாக ஹுசைனின் இல்லாத கலை-சுதந்திர ஆபத்துக்காக இப்போது உரக்கக் குரல் கொடுப்பவர்களின் மனச்சீர்தன்மை அவர்களின் மன-ஆரோக்கியம் எனக்கு கேள்விக்குறியாகத்தான் படுகிறது. டானிஷ் கார்ட்டூனையும் தஸ்லிமா நஸ்ரீனையும் விடுங்கள். சென்னையில் 2008 இல் அவுரங்கசீப் குறித்த ஓவியக்கண்காட்சியில் இஸ்லாமிய பாசிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் காவல்துறை மூன்று ஹிந்து பெண்களை அவமதித்ததும் அங்கிருந்த ஓவியங்களை சேதப்படுத்தியதையும் இவர்கள் எதிர்த்தார்களா? அன்று எங்கு போனது கலைச்சுதந்திர உணர்வு? காஃபிருடன் பழகியதற்காக பத்வா அளிக்கப்பட்டு நடுத்தெருவில் ஓட ஓட விரட்டி கல்லாலடித்தும் பின்னர் கத்தியைச் சொறுகியும் ஒரு பெண் கொல்லப்பட்டதை கண்டித்தார்களா? அவையெல்லாம் தமிழ்நாட்டில்தானே நடந்தன. ஆக இவர்களுக்கு பிரச்சனை கலை சுதந்திரம் அல்ல. ஹிந்துக்களை திட்ட ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

ஹுசைனின் படங்கள் எனக்கு பிரச்சனையில்லை. அவரது இஸ்லாமிய மனநோயை வெளிக்காட்டும் மற்றொரு வாய்ப்பு அவ்வளவுதான். ஆனால் வழக்குகளை சந்திக்காமல் ஒரு ஜனநாயகமற்ற இஸ்லாமிய நாட்டில் அதிசொகுசான வாழ்க்கை வாழும் ஹுசைனுக்கு ஏதோ கலாசுதந்திரப் போராளிபட்டம் வாங்கிதரும் முற்போக்குகள்தான் எனக்கு குமட்டலை ஏற்படுத்துகிறார்கள். நெல்லை வீதியில் இஸ்லாமிய பாசிஸ்ட்களால் "காஃபீருடன் பேசாதே" என எச்சரிக்கப்பட்ட போது கல்லெறியையும் தன் கழுத்தை அறுக்கப் போகும் கத்தியையும் பொருட்படுத்தாமல் "உன் வேலையை பார்த்துக் கொண்டு போ" என சொல்லி நடுத்தெருவில் கத்திக்குத்தாலும் கல்லடியாலும் உயிர்விட்ட அந்த பீடி சுற்றும் இஸ்லாமிய பெண்ணின் பதிலில் நான் சுதந்திரத்துக்கான தியாகத்தை வணங்குகிறேன். அந்த பெண்ணின் காலடி தூசிக்கு இணையாவரா ஹுசைனும் அவரை ஆதரிப்பவர்களூம்?

Thursday, April 01, 2010

அவதாரை முன்வைத்து

புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது அல்லது எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலை அல்லது எதிர்காலத்தை அல்லது இரண்டையுமே அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?

அவதாரை முன்வைத்து

முழுக்கட்டுரையையும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்