'ஹாய் மதன்'பகுதியில் இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கேள்வி பதில்:
கிருஷ்ணர் கடவுளா, அரசரா?என்.பிரபாகர், ஆ.புதூர்.
மகாபாரதத்தில், கிருஷ்ணர் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன்உட்பட கௌர-வர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குருஷேதிரபோர் வரை செல்லவிட்டார்?முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணர் யாதவர்களின்அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணரால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷணர் வழிபாட்டை முதலில் துவக்கிவைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!'
தமிழ் வலைப்பதிவர் ஜடாயு அவர்கள் இதற்கு அருமையான பதிலை அளித்திருக்கிறார். இதனை இக்கட்டுரையின் இறுதியில் காணலாம்.
பொதுவாக ஆனந்தவிகடன் போன்ற பொதுஜன பத்திரிகைகளில் தங்களை அறிவுசீவிகளாக காட்டிக்கொள்ளும் மதன் போன்றவர்கள் கூறுவது பெரிய அளவில் மக்களை போய் சேர்கிறது. எனவே அவர்கள் எழுதும் போது பொறுப்புணர்ச்சியுடன் எழுதுவது அவசியம். துரதிர்ஷ்டவசமாக இன்று அத்தகைய பொறுப்புணர்ச்சி - குறிப்பாக இந்து தருமத்தை குறித்து பேசும் போது- இந்த பத்திரிகையாளர்களுக்கு இல்லாமல் போனது வருந்துதலுக்கு உரியது. ரோமானிய சர்வாதிகார அரசியல் தேவைகளுக்காகவும் வன்முறை நிர்ப்பந்தங்களுக்காகவும் ஏசு எனும் கற்பனை பாத்திரம் ஐரோப்பாவின் மீது கடவுளின் ஒரே குமாரன் என திணிக்கப்பட்ட காலத்தைக் காட்டிலும் கண்ணன் இந்த தேசத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி மக்களின் உள்ளன்பினாலும் ஞானிகளின் உண்மை அனுபவங்களாலும் எல்லையற்ற பரம்பொருளாக வணங்கப்படும் காலம் மிக மிக அதிகமானதாகும்.
துவாரகை ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி நமக்கு பல அதிசயங்களை அளித்துள்ளது: துவாரகை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மகா விஷ்ணு விக்கிரகம்ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்ததற்கும் சரி, ஏறக்குறைய 2500 ஆண்டுகளாக அவர் பரம்பொருள் அவதாரமாக கருதப்படுவதற்கும் சரி ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்.
சாந்தோக்ய உபநிடதத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடப்படுகிறார். புத்தருடைய காலத்துக்கு முந்தையதாக கருதப்படும் இதில் ஸ்ரீ கிருஷ்ணர் தேவகியின் மகன் என குறிப்பிடப்படுகிறார். (சந்தோக்யம் 3:17:6) அவர் ஆத்மஞானம் கை வரப்பெற்றவர் ஆவார். பின்னர் கிமு ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அஷ்டத்யாயீ ஸ்ரீ கிருஷ்ண பக்தி மார்க்கத்தைக் குறிப்பிடுகிறது.
பதஞ்சலி மகாபாஷ்யத்தில் கிருஷ்ண ஆலயங்களில் துதிப்பாடல்களுடன் வழிபாடு நடந்தது குறிப்பிடப்படுகிறது.
அலெக்ஸாண்டரின் படைகளை தோற்கடித்த புருஷோத்தமரின் வீரர்களின் பதாகையில் வாசுதேவ கிருஷ்ண தெய்வத்திருவுரு திகழ்ந்தது. பாரதத்துக்கு வெளியே உருவான கிரேக்க அரசர்கள் கூட வாசுதேவ-கிருஷ்ணனை வழிபடும் வைணவத்தை ஏற்றுக்கொண்டனர். வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஆண்ட பாக்திரிய-கிரேக்க அரசனான அகோதொகிள்ஸ் வெளியிட்ட வெள்ளி காசுகளில் ஒருபக்கம் ஸ்ரீ கிருஷ்ணரும் மறுபக்கம் பலராமரும் காணப்படுகிறார்கள்.
கிமு 113 இல் கிரேக்க அரச தூதனாக பாரதம் வந்த ஹிலியோதோரஸ் விஷ்ணு பக்தனாகி தேவதேவனான வசுதேவனுக்காக கருடத்வஜம் ஒன்றினை நிறுவினார். அதில் வாசுதேவனை ஆராதித்தும் 'புலனடக்கம், நற்செய்கைகள் மற்றும் ஆன்மாவில் லயித்தல் ஆகியவற்றின் மூலம் முக்தி அடையலாம்' எனவும் இந்த கிரேக்க தூதர் குறிப்பிடுகிறார்.
'தேவர்களுக்கெல்லாம் தேவனான வாசுதேவனின் கருடத்வஜம்'பாரதத்தின் வடதிசையில் மட்டுமல்ல தெற்கிலும் மக்கள் உள்ளங்களை கவர்ந்திழுத்து ஆன்ம விடுதலல அளிக்கும் பரம்பொருளாகவே ஸ்ரீ கிருஷ்ணன் கருதப்பட்டார்.
ஐந்து மூர்த்தங்களை திருமால் தன்னுடன் உள்ளடக்கியவர்.சங்கருஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் மற்றும் வாசுதேவன் என்பவை அவை. பரிபாடல் அழகு தமிழில் இதனை நமக்கு தருகின்றது:
செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! - (பரி.3:81-82)
சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே! பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.
காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் கண்ணனையும் பலதேவனையும் இருப்பெருந் தெய்வம் என பாடுகின்றார்:
பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறம்:58:14-16
பிறப்பித்தோர் இல்லாத கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் தயாபரனாவான். இதனை பரிபாடல் விளக்குகிறது:
புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-பரி.15:49-52
ஆக ரொம்ப ரொம்ப காலத்தை குறைவாக மதிப்பிட்டாலும் கூட கிமு 500 க்கு சற்றும் குறையாத காலம் முதல் பரிபாடலின் ஏழாம் நூற்றாண்டு ஊடாக இன்று வரையிலுமாக கிருஷ்ணனை முழுமுதல் கடவுளாக வணங்கும் பாரம்பரிய தொடர்ச்சியினைக் காணமுடியும்.
சோழர் கலையழகில் அருள் தரும் காளிங்க மர்த்தனன் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா ஆத்மஞானி என்பதனை சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. கம்சனின் கொடுங்கோலிலிருந்து மக்களை காப்பாற்றி, அமைதியின் தூதுவனாக நடந்து, கீதை எனும் அருமருந்தை மானுடத்துக்கு அருளிய ஒரு ஆத்மஞானி பரம்பொருளில் லயித்த ஒரு வாழ்க்கை வாழ்ந்த கர்மயோகியை பரம்பொருள் என பாரதம் வழிபடுவதில் அதிசயம் என்ன? அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் அவ்வாறு வணங்கப்பட்டிருக்கலாம். எனவே 'அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான்' என மதன் கூறுவது பெரும் அறியாமையாகும்.
மதன் பெயர் சொல்லாமல் குறிப்பிடும் சைதன்ய மகாப்பிரபுவுக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே ஆழ்வார்கள் கிருஷ்ணனை முழுமுதல் கடவுளாக அனுபவித்து அன்பு செய்தனர். ஆயர் குல மாயன் ஆழ்வார்களுக்கு அனைத்துமாகி நின்றான்:
ஆறுமாறு மாறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடோசை ஆய ஐந்து மாய ஆய மாயனே - நாலாயிர திவ்ய பிரபந்தம் 753
என திருமழிசை ஆழ்வார் ஆயர்குல மாயனை பரம்பொருளாக கண்டுணர்ந்தது சைதன்யருக்கு பிறகு அல்ல.
இன்னும் சொன்னால், சைதன்யரின் பக்திக்கு தென் தமிழகம் பெரும் பங்களிப்பு கொடுத்துள்ளது.
சமுதாயம் விலக்கிய தொழு நோயாளியை அணைத்து சேவை செய்யும் வைணவ அன்பு அருள் வடிவம் சைதன்யமகாபிரபு சைதன்ய மகாபிரபு (1486-1533) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவில் வந்து அங்கிருந்து 'பிரம்ம சம்ஹிதை' எனும் வைணவ தத்துவங்களுக்கு எல்லாம் சாரமான மிக அரிதான ஒரு நூலை கண்டு அதனால் நெகிழ்ந்து மனமுருகி அதனன பிரதி எடுத்து அதனை மிகவும் சிரத்தையுடன் பொக்கிஷமென வட பாரதத்துக்கு கொண்டு சென்றார்.
சைதன்ய மகாபிரபு அருட் திருவடிகள் பட்ட குமரி மாவட்ட ஆதிகேசவ பெருமாள் கோவில்ஆதிகேசவ பெருமாள் கோவில் தூண் சிற்பத்தில் நான்கு கரங்களுடன் விஷ்ணு ரூப சதுர் புஜ வேணு கோபாலன் உண்மைகள் இவ்வாறு இருக்க திரு.மதன் போன்றவர்களும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளும் இந்து தருமம் குறித்த விசயங்களில் கவனமில்லாமல் இந்துக்களின் மனதை புண்படுத்தும் தவறான தகவல்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என இணைய உலகு வாழ் இந்துக்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஜடாயு அவர்களின் கட்டுரையை காண இங்கே சொடுக்கவும்