அகப்பயணம்

Friday, January 25, 2008

அப்துல்கலாமின் குடியரசு தின செய்தி


  • 1. நான் எங்கு இருந்தாலும் என்மனதில் என்றும் எழும் கேள்வி: "என்னால் என்ன கொடுக்க முடியும்?" என்பதாக இருக்கட்டும்.
  • 2. நான் செய்யும் பணி எதுவாக இருந்தாலும் என் குறிக்கோள் "ஒருமையுடன் உழைத்து ஒருமையுடன் வெற்றி அடைவேன்"என்பதாக இருக்கட்டும்.
  • 3. என் நினைவில் எப்போதும் சிறகுகள் விரித்திடும் என் காலம் வீணில் பறந்திட அனுமதிக்க மாட்டேன் எனும் எண்ணம் இருக்கட்டும்.
  • 4. எனக்கு இருக்கும் பெரும் இலட்சியம் எப்போதும் என்னை பெரிய எண்ணங்களில் மூழ்கிச் சிறந்து பணியாற்றி இலட்சியத்தை அடைய வேண்டிய உணர்வினை என்னுள் தந்து கொண்டே இருக்கட்டும்.
  • 5. என் மிகச்சிறந்த நண்பர்களாக மிகச் சிறந்த மானுடர்கள், மிகச்சிறந்த ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூல்கள் விளங்கட்டும்.
  • 6. எந்த பிரச்சனையும் என்னைத் தோற்கடிக்க முடியாது என நான் உறுதியாக நம்புகிறேன். நான் பிரச்சனைகளுக்கு மேலாக திகழ்வேன். பிரச்சனைகளைத் தோற்கடிப்பேன். வெல்வேன்.
  • 7. என் தேசிய கொடி என் இருதயத்தில் என்றும் பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கும். நான் என் தேசத்துக்கு நன்மையும் கௌரவமும் கொண்டு வருவேன்.

Thursday, January 24, 2008

ஜிகாத் 2008


மு.கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு ஜிகாதிகளின் சுவர்க்கபுரியாக மாறி வருகிறது. அண்மையில் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்ட இசுலாமியவாதி அல்டாப் சென்னையில் உள்ள கடை ஒன்றிடம் தொடர்பு கொண்டுள்ளான்.

மேலும் திருநெல்வேலியில் போன ஆண்டு கருணாநிதி ஆதரவளிக்கும் இசுலாமியவாதிகளின் ஒரு பயங்கரவாத கும்பலான அல்-உம்மாவினாரால் கொல்லப்பட்ட நிஷா என்னும் பெண்ணின் கொலையில் முக்கிய சாட்சியை பட்டபகலில் அல்-உம்மா இசுலாமியவாதி மிரட்டியுள்ளான்.

நேற்று (ஜனவரி 24, 2008) இந்துக்களின் சமூக-பண்பாட்டு சேவை அமைப்பான ராஷ்ட்ரீய சுவயம் சேவக சங்க தென்காசி அலுவலகத்தின் மீது கோழைத்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடப்பதற்கு உதவியாக அந்த இடத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்து சமுதாய இயக்கங்களைத் தாக்க ரவுடித்தனமாக பேசிய ஆர்காடு வீராசாமி என்கிற மின்சார இலாகா அமைச்சர் குறித்து இது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Friday, January 18, 2008

குழந்தைகளுக்கான இறைமறுப்பு திரைப்படம்

ஹாரி பாட்டரை கிறிஸ்தவ அடிப்படைவாத திரையுலகம் சி.எஸ்.லூயிஸின் நார்னியா கதைகள் மூலம் எதிர்கொண்டது. இப்போது இறை மறுப்பு கோட்பாடு அதீதகற்பனை கதையாக உருவெடுத்துள்ளது. பிலிப் புல்மானால் உருவாக்கப்பட்ட இந்த அதீதகற்பனை நாவல்கள் இறை மறுப்பாளரும் மானுடவாதியுமான ஒருவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இந்நாவல்களின் முடிவில் பழுத்த கிழமான (ஆபிரகாமிய தேவனை) வில்லனை குழந்தைகள் கொல்கின்றன. பிலிப் புல்மான் பேட்டி ஒன்றில் சி.எஸ்.லூயிஸின் நார்னியாவில் நிரம்பியுள்ள கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு எதிர்வினையாகவும், குழந்தைகள் மனதில் நிரப்பப்படும் கிறிஸ்தவ இறை நம்பிக்கை சிதைப்பதற்காகவும் குறிப்பிட்டதாக சர்ச்சை கிளம்பியது. என்ற போதிலும் சில ஓரளவு திறந்த மனம் படைத்த கிறிஸ்தவ பெருந்தலைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். (நிச்சயமாக எவாஞ்சலிஸ்ட்கள் மற்றும் நாசி இளைஞர் முகாமில் பயிற்சி பெற்ற இன்றைய போப்பாண்டையும் இவரை ஆதரிக்கமாட்டார்கள் என கட்டாயமாக நம்பலாம்.) இந்த திரைப்படத்தின் மூலக்கதை குறித்து பிலிப் புல்மானின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
Q:You’re not really giving us any clues to the source of the extreme antipathy to the Church in your books.


Philip Pullman : Well, all right, it comes from history. It comes from the record of the Inquisition, persecuting heretics and torturing Jews and all that sort of stuff; and it comes from the other side, too, from the Protestants burning the Catholics. It comes from the insensate pursuit of innocent and crazy old women, and from the Puritans in America burning and hanging the witches – and it comes not only from the Christian church but also from the Taliban.

Every single religion that has a monotheistic god ends up by persecuting other people and killing them because they don’t accept him.Wherever you look in history, you find that. It’s still going on.


ஒவ்வொரு இந்திய குழந்தையும் (பெரியவர்களும் கூடத்தான்) கட்டாயம் காணவேண்டிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தின் வலைத்தளம்: http://www.goldencompassmovie.com/
இங்கே சில அருமையான சைக்காலாஜிக்கல் சுய-பரிசோதனை கருவிகள் உள்ளன. அதில் என்னை நானே அக-முகம் பார்த்த போது நான் கண்டது கீழே... இதை நீங்க ஒத்துக்கிறீங்களா அப்படீங்கறதை கீழே 'கிளிக்'கி நீங்களும் சொல்லலாம்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்கனைஸர் பத்திரிகையில் இத்திரைப்படம் குறித்து வெளியான விமர்சனம் இங்கே

Monday, January 14, 2008

ஞாயிறு போற்றுதும்


காளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்
உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்காமல் அனைத்திலும் ஒற்றுமையை உணர்ந்திட்ட காலம் இது.

டிரரன்ஸாக்ஸியன் கிஸீல் குகை கோவிலோவியங்களில் ஆதவ கடவுள்
ஆனால் இந்த ஆதவ ஒளிக்கிரணங்களை மூடிட எழுந்த இருட்சக்திகள்தான் 'ஏக இறை' எனும் போதையேறிய பொறாமை தேவன்கள். யஹீவாவாம் ஏசுவாம் அல்லாவாம் இந்த இருட்சக்திகள் அழித்திட்ட ஆதவ வழிபாடுகள் உலகெங்கிலும் எத்தனை எத்தனை!

ஹமுராபிக்கு சட்டங்கள் அளிக்கும் ஆதவ இறைவன்

ஆதவ இறைவனை மையமாக கொண்ட அஸ்டெக் வானிலை இயக்க மண்டலம். இது இருந்த கோவில் ஏசு கும்பலால் அழிக்கப்பட்டு அங்கு யஹீவா என்பவனின் மகனாக வணங்கப்படும் ஏசு என்பவனுக்கு கோவில் கட்டியுள்ளார்கள்.
சிலுவைப்போர்களையும் ஜிகாதுகளையும் கொடும் நோய்களாக உலகெங்கும் பரப்பி உன்னத ஆதவ வழிபாட்டினை அழித்திட்ட வன்செயல்கள் நம் மனதில் நீங்கா வடுக்களாக நிலைத்திருக்க,

ஜப்பானில் வழிபடப்படும் ஆதவ தேவி - இவளே ஜப்பானிய கொடியிலும் திகழ்கிறாள்.
இத்தனை கொடுமைகளுக்கும் அப்பால் இன்றும் வாழும் நம் பண்பாட்டில் ஆதவ வழிபாடு - பொங்கலாக மகர சங்கராந்தியாக- ஞாயிறு போற்றுதும். இயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம்.

பொங்கல் விழாவில் தேவியராக குழந்தைகள் அணிவகுப்பு
பொறாமையையும் புனிதப்போர்களையும் உருவாக்கும் ஏக இறை இருட்சக்திகள் அழிந்திட போர்ப்பறை முழக்குவோம்.

ஞாயிறு போற்றுதும்சூரியக் கோவில்கள்: மெக்ஸிகோ கொனாரக்

ஸ்ரீமாவும் பொங்கலும்

2001 இல் கிறிஸ்தவ பிரிவினைவாத பயங்கரவியாதிகளான NLFT அமைப்பினர் பொங்கல் கொண்டாட விதித்திருந்த கிறிஸ்தவ தடையை மீறி பொங்கலை கொண்டாடியதற்காக ஜனவரி 13 2002 அன்று குடும்பத்துடன் பலிதானியாகிய ஸ்ரீமாவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தருமத்துக்காக இயற்கையின் இறைத்தன்மையை கொண்டாடும் ஹிந்து-பாகனீய மரபின் உரிமைக்காக தன் உயிரையே பலிதானியாக்கிய ஏழுவயது ஸ்ரீமாவின் நினைவாக ஒவ்வொரு இந்துவும் இந்த பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி பெருநாளை கொண்டாடுவோம். பாரத தருமத்தை அழிக்க நினைத்திடும் அதரும ஆபிரகாமிய அசுர சக்திகள் சூரிய தேவனின் ஒளியில் மங்கி மறையட்டும் ஒவ்வொரு பாரத குடும்பத்திலும் அன்பும் அறமும் வளமையும் பொங்கட்டும். மேன்மைகொள் பாரத தருமம் ஆதவ ஒளிபோல் உலகெங்கும் அருளும் அன்பும் அமைதியும் பரப்பட்டும்.


இலங்கை சர்வ இந்து அமைப்புகள் சங்கம் வெளியிட்டுள்ள பொங்கல் செய்தி

தை பொங்கல் அனைத்து இந்துக்களுக்கும் புனிதமான பாரம்பரிய திருநாளாகும். சூரியதேவனை நண்றியுடன் நினனவு கூர்ந்து அவருக்கு பொங்கல் படைத்திடும் நாள் இது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நூற்றாண்டுகளாகத் தொடரும் நம்பிக்கை ஆகும்.ஆனால் இலங்கை தமிழருக்கு இந்த பொங்கல் திருநாளிலும் கூட சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன. கொலைகள், கடத்தல்கள், சொத்து பறிமுதல்கள் என பல துயரங்களை எம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எமக்கும் தைபிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. எனவே அனைத்து இந்துக்களுக்கும் இந்த பொங்கல் திருநாளன்று இந்நாளின் புண்ணிய புனித தன்மையை உணர்ந்து அதனை பிரார்த்தனையுடன் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம். [நன்றி: டெய்லி நியூஸ் 15-01-2008]