அகப்பயணம்

Sunday, December 31, 2006

சிலை உடைப்பும் பயங்கரவாத சுவர்க்கமும்


கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பிரச்சனை. மரத்தடி சாஸ்தா கோவில் பீடத்தை உடைத்து சாஸ்தா சிலையை உடைத்து குளத்தில் எரிந்துள்ளனர் மத வெறியர்கள். காலம்
காலமாக மக்கள் வழிபட்டு வரும் மரத்தடி தர்ம சாஸ்தா கோவில் திருவட்டார் அருகே அமைந்துள்ள ஆற்றூர்குழிவிளை எனும் ஊரில் அமைந்துள்ளது.இதற்கு 100 அடி தூரத்தில்
பெந்தகோஸ்தே அமைப்பினர் 'செப பிறை' ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவினார்கள். (ஏனென்றால் ஒரு மதத்தவர் ஆலயங்களுக்கு அருகே பிறமதத்தவர் ஆலயங்கள் அமைக்க தடை உள்ளது. எனவே சர்ச் என்று சொல்லாமல் ஜெப கூடாரம், ஜெபவீடு, ஜெபபிறை என்கிற பெயர்களில் இவர்கள் முதலில் அமைப்பார்கள்.) பின்னர் அது சர்ச் ஆகியுள்ளது. இந்நிலையில் கடந்த கார்த்திகை 1 ஆம் தியதி ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு விழா நடத்திய போது இந்த பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதனையடுத்து 'சிறுபான்மையினர் பாதுகாப்பு பேரவை' என்கிற பெயரில் ஒரு கூட்டத்தை கார்த்திகை 1 ஆம் தேதி கூட்ட முயன்றனர். இதற்கு போலிஸ் அனுமதி
வழங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தமிழ்முரசு (டிசம்பர் 31 2006) செய்தி:
"திருவட்டார் டிச.31 திருவட்டார் அருகே கோவில்-சர்ச் பிரச்சனையில் நேற்று இரவு சாஸ்தா கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு அருகில் இருந்த குளத்தில் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..... சாஸ்தா கோவிலில் நேற்று இரவு சுவாமி சிலை இருந்த பீடமும் சுவாமி சிலையும் உடைக்கப்பட்டிருந்தன.பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு அருகில் இருந்த குளத்தில் வீசப்பட்டு கிடந்தன."
நன்றி: தமிழ்முரசு -நாகர்கோவில் பதிப்பு- 31-12-2006


பயங்கரவாதிகளின் சுவர்க்கமாகிறது தமிழ்நாடு:

தமிழ்நாடு இந்து விரோத பயங்கரவாதிகளின் சுவர்க்க பூமியாகி வருகிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 2005 தீபாவளி சந்தை தாக்குதல் போலவே டெல்லி
பகர்கஞ்ச் சந்தை பகுதியில் வெடிகுண்டு வைத்து ஏராளமானவர்களை கொல்ல திட்டம் வகுத்த சமியுல்லா (34) மற்றும் அலி முகமது (26) ஆகிய லஸ்கர் ஈ தொய்பா
பயங்கவரவாதிகளை ஜாயிண்ட் கமிஷனர் டெல்லி போலிஸ், கர்னால் சிங் கைது செய்தார். சமியுல்லாவும் முகமதுவும் அவர்கள் பயங்கரவாத திட்டத்தை நிறைவேற்றிய பின்னர்
தமிழ்நாட்டிற்கு தப்பி செல்ல திட்டம் தீட்டியிருந்ததை கர்னால் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது இந்துக்களின் வாழ்வுரிமையும் வழிபாட்டுரிமையும் நசுக்கப்பட்டுவரும் அதே நேரத்தில் பயங்கரவாதிகள் பதுங்கும் சுவர்க்கபுரியாக (ஆயில் மசாஜ் செண்டர், ஆயுர்வேத
சிகிச்சை மற்றும் சிறையில் கூட சிக்கன்) தமிழ்நாடு மாறிவருகிறதா? என்பதனை இந்துக்கள் சிந்திப்பதுடன் இந்த பாசிச பயங்கரவாத ஆதரவு அரசுக்கு எதிராக அகில இந்திய
அளவில் குரல் எழுப்பவும் வேண்டும்.

Saturday, December 30, 2006

கலவரத்தை தூண்டும் பாசிச போக்கு

தற்போதைய சோனியா-கருணாநிதி இந்துவிரோத வகுப்புவாத அரசுகள் உருவானதிலிருந்து இந்துக்களுக்கு எதிராக பல வன்முறை செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.
மண்டைக்காடு கலவரங்களுக்கு பிறகு வேணுகோபால் கமிசன் அறிக்கை ஒரு மதத்தினரின் கோவிலுக்கு அருகில் பிற மத கோவில்கள் புதிதாக கட்டப்படக்கூடாது என கூறி
மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தது. இம்முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமுலாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குருசடிகள் எனப்படும் ஏசு மற்றும்
கத்தோலிக்கர் புனிதர்கள் என கருதும் சாமியார்களின் உருவச்சிலைகள் கொண்ட ஸ்தூபிகளை தெரு முனைகளில் நிறுவியிருக்கின்றனர் கத்தோலிக்கர்கள். ஏதோ அரசமரத்தடி
பிள்ளையார் சிலை போல தனிநபரால் நிறுவப்படும் சமாச்சாரம் அல்ல இது என்பதும் இதன் பின்னால் கத்தோலிக்க சபை ஒரு பெரிய திட்டத்துடன் செயல் படுகிறது என்பது தற்போது
தெரியவந்துள்ளது. உதாரணமாக தக்கலை பத்மநாபபுரம் முச்சந்தியில் இருந்த இத்தகைய ஒரு குருசடியை கத்தோலிக்க சபை ஒரு சர்ச்சாக மாற்ற திட்டமிட்டு செயல்பட்டு
வருகிறது. அங்கே ஏசுவின் இரத்தத்தையும் உடலையும் சடங்காக புசிக்கும் திருபலி என்கிற கத்தோலிக்க சடங்கினை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெரு
முச்சந்தியில் முக்கியமான இடத்தில் இத்தகைய அப்பட்டமான ஆக்கிரமிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பத்மநாபபுரம் நகராட்சியில்
காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.


நன்றி: தினகரன் குமரி பதிப்பு: 29-12-2006

இதைப்போலவே நாகர்கோவிலில் நூற்றாண்டுகள் பழமையான அம்மன் கோவில் ஒன்று கிருஷ்ணன் கோவில் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் செல்லும் சாலையில்
அமைந்துள்ள இந்த கோவிலுக்கும் பெரிய தெப்பகுளத்துக்கும் நடுவாக சாலை செல்கிறது. இச்சாலையில் இருந்துதான் பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அந்த
இடத்தில் அவர்களது சர்ச் குறித்த ஒரு ஸ்டீல் அறிவிப்பு பலகையை வண்ண மயமாக நிறுவியுள்ளனர் கத்தோலிக்கர்கள். இந்த கத்தோலிக்க ஆக்கிரமிப்பு புதிதாக ஊருக்குள்
அமைக்கப்பட்டுள்ள ஒரு சர்ச் குறித்ததாகும்.


கிருஷ்ணன் கோவிலில் அம்மன் பக்தர்களை சீண்டுவது போல வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவ மத பிரச்சார அறிவிப்பு பலகை

இதைப்போலவே நாகர்கோவிலில் மீனாட்சிபுரத்தில் இருக்கும் மணியடிச்சான் கோவில் மிகவும் பழமையானதாகும். அங்கிருக்கும் சுவாமிக்கு முன்னால் தொங்கும் ஆலய திருமணியை
அடித்து வேண்டினால் நினைப்பது நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும், இப்போது இங்கு ஆலய திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் 'மிக்கேல் அதிதூதர்
ஆலயம்' எனும் அறிவிப்பு பலகையை இக்கோவிலின் அருகில் நட்டு வைத்துள்ளனர் கத்தோலிக்கர்கள். மண்டைக்காட்டு கலவரங்களுக்கு முன்னர் பிரச்சார வழக்குகளில் இந்து
சாமிகளைத்தான் இந்த மிக்கேல் என்கிற 'புனிதன்' தன் காலில் இட்டு வதைப்பதாக சொல்லி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேணுகோபால் கமிசன் அறிக்கை அளித்த
நடைமுறைகளை மீறி மிகவும் திட்டமிட்டு இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த வழிபாட்டுதல ஆக்கிரமிப்புகள் இந்துக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணியடிச்சான் சாமி கோவிலில் பக்தர்களை வைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மத பிரச்சார அறிவிப்பு பலகை


நன்றி: தினகரன் குமரி பதிப்பு: 29-12-2006

ஏற்கனவே மதமோதல்களை இந்துக்களுக்கு எதிராக ஆதிக்க மதத்தவர்கள் தொடங்கியுள்ளனர். திங்கள்சந்தை யோகபரமேஸ்வரி அம்மன் கோவில் கொடைவிழாவில் பாசிச போக்கு
கொண்ட ஆதிக்க மதத்தவர்கள் இந்துக்களை தாக்கியுள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் ஒரு புறமிருக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அரசு நடத்தும் தேவசம் போர்ட்டு இந்துக்களுக்கு வழிபாட்டுரிமையைக் கூட உதாசீனப்படுத்தி பக்தர்களின் மனதை புண்படுத்தி நடக்கிறது. ராஜன் என்ற பக்தர் 22.12.2006 அன்று அம்மனுக்கு சந்தன காப்பு சாத்த ரசீது வாங்கியிருந்தார் ஆனால் அன்றைக்கு சந்தனகாப்பு சாத்தப்படவில்லை. இது குறித்து ராஜன் கேட்ட்போது கூட நிர்வாகத்தினர் ஒழுங்காக பதில் கூறவில்லை.


இவ்வாறாக இந்துக்களுக்கு அனைத்துவிதங்களிலும் ஆம்புலன்ஸ் நடத்துவதற்காக படுகொலை செய்யப்படுவது முதல் வழிபாட்டு தலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் மாற்று மதப்பிரச்சாரம்
என அனைத்துவிதத்திலும் இடையூறு அளித்துவரும் ஆதிக்க பாசிச சக்திகளுக்கு அடிவருடியாக செயல்பட்டுவருகின்றன மனித விரோத மத்திய முஸ்லீம்-லீக் காங்கிரஸ் கூட்டணி
அரசும் மாநில பாசிச திமுக அரசும்.

Thursday, December 28, 2006

இந்து தருமத்தில் பெண் அர்ச்சகர்கள் தேவையா?


இந்து தருமத்தில் கோவில் அர்ச்சகர்களாக பெண்கள் இருக்கலாமா? கூடாது என்று சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அரிகரன். மாதவிடாய் போன்ற காரணங்களையும்
காட்டி இருக்கிறார். இதனை அவரது தனிப்பட்ட கருத்தாக கூறியிருந்தால் சரி. (கருத்து சரி அல்ல. அவரது கருத்துரிமை.) ஆனால் ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் குரலாக
அவர் ஒரு கருத்தை முன்வைக்கும் போது இந்து சமுதாய இயக்கங்களின் பார்வையை அவர் அவதானிக்க வேண்டியவர் ஆகிறார்.


இந்து தருமம் ஒரு வளர்ந்து வரும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் தேசத்தின் தருமம். காலனிய ஆதிக்கத்தின் அனைத்து கொடுமைகளையும் அனுபவித்த ஒரு சமுதாயத்தின் தருமம். அக்கொடுமைகளின் அனைத்து பின்விளைவுகளையும் -உறைந்து போன சாதீயத்தின் தீக்கொடுமைகள் உட்பட- சந்தித்து வரும் தருமம். மாறாக கிறிஸ்தவத்தை ஒரு ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டால் காலனிய ஆதிக்கத்தின் சுரண்டலின் பலன்களையும் உபரி பலன்களையும் அனுபவிக்கும் சமுதாயம் மற்றும் அதிகார பீடங்களின் தருமமாக கிறிஸ்தவம்
விளங்குகிறது. அது பேசும் 'விடுதலை இறையியல்' (Liberation theology) கூட இந்த அசைக்கமுடியாத ராட்சத சக்தி கொண்ட அதிகார கோட்டை அரண்களின் உள் அமைந்த
பீடத்தின் துணையுடன் தான். மாறாக இந்து சமுதாயத்தின் சமூக சீர்திருத்தவாதிகளோ ஒரே நேரத்தில் பலவித போர்முனைகளில் போராடும் சூழலில் இருக்கிறார்கள்.
தேங்கிக்கெட்ட சமுதாய சூழலும் அது உருவாக்கியுள்ள சுரண்டல் சக்திகளும். மக்களை சாதீயத்தின் மூலம் சுரண்டும் கிராமப்புற கொடுவன்மையாளர்கள் ஒருபுறமும் அந்த
அவலங்களை அரசியலாக்கி ஆதிக்க சக்திகளின் வாக்குவங்கிகளாக்க அடிமட்ட மக்களை மாற்றி சுயநல அரசியல் செய்யும் முற்போக்கு வேடதாரிகள் மறுபுறமுமாக. வளரும்
நாடுகளை சுரண்டி உருவாக்கிய வசதிகளின் மேலிருந்து இந்துக்களை மேலும் கூறுபோட தயாரிக்கப்பட்டு விற்கப்படும் கருத்தியல்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதையையும்
விற்றுவிட்டு முற்போக்குகளாக தம்மை காட்டிக்கொள்ளும் அறிவுசீவிகள் மற்றொரு புறம். எவ்வாறு பிரச்சனைகளை தீர்வு காணாமல் ஒரு சமுதாயத்தை சின்னாபின்னப் படுத்தி அழிப்பது என முனையும் இந்த வெறுப்பியலாளர்களின் வெற்றுக்கூச்சல்களுக்கு அப்பால் அரிகரனின் வார்த்தைகளில் எனக்கு தெரிவது நேர்மையான பிற்போக்குத்தனம். வெறிப்பிடித்த வெறுப்பியலாளர்களின் முற்போக்கு வாதத்தில் இருக்கும் வெற்று ஆரவாரம் அரிகரனின் வார்த்தைகளில் இல்லை. அவரிடம் இருப்பது என்னைப் பொறுத்தவரையில் வெறும் அறிவீனமும் அசட்டுத்தனமும் மட்டுமே. ஆனால் இந்துசமுதாயத்தின் சமுதாய முன்னகர்வுகளை அவர் உள்வாங்கியிருந்தால் எத்தகைய அடிப்படை கருத்தியல்களிலிருந்து அது ஆற்றல் பெற்று எத்தகைய தடைகளை மீறி முன்னேறியுள்ளது என அவர் உணர்ந்திருந்தால் அவர் தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என நம்புகிறேன்.


மாதவிடாய் என்பது ஒரு உயிரியல் நிகழ்வே அன்றி அதனை ஒரு தீட்டாக பார்க்கும் பிற்போக்குத்தனம் மாற்றிக்கொள்ளப் படவேண்டும். வேத ரிஷிகளிலும் பெண்கள் உண்டு
என்பதனை உணரந்து கொள்வோம். சாஸ்வதமான சத்தியங்களை இறையாவேச நிலையில் தரிசித்தவர்கள் அவர்கள். இந்த இறையாவேச நிலை மாதவிடாய் எல்லாம் கணக்கில்
எடுத்துக்கொண்டு வருகிற விஷயம் அல்ல. அது ஒரு அனுபவ நிலை அல்லது தரிசன நிலை. ஒருவேளை சுய-ஹிப்னாட்டிசத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் பெண்களே கூட இந்த
தலைமுறையில் மாதவிடாய் காலத்தில் மட்டும் நாங்கள் பூசனை செய்யவில்லை என ஒதுங்கிடக் கூடும். ஆனால் வெகுவிரைவில் அந்நிலையும் மாறிடுமெனவே கருதுகிறேன். மாறுவதே சரியானதும் கூட.


இந்து சமுதாயம் இத்தனை தேக்க நிலை அடைந்திருந்தும் கூட பெண் பூசாரிகள் பெண் வேதவேள்வியாளர்கள் நூற்றுக்கணக்கில் சமுதாய இயக்கமாகவே உருவாகியுள்ளார்கள்
என்பதுதான் இங்கு சொல்லப்பட வேண்டிய முக்கியமான விஷயம்.


பூனாவில் மட்டும் மூன்று அமைப்புகள் பெண்களை வேத வேள்விச்சடங்குகளை செய்விக்கும் பயிற்சிகளை அளிக்கிறது. அவை உத்யான் பிரசாத் மங்கள காரியாலயம், சங்கர சேவா
சமிதி மற்றும் வேதாந்த மண்டல் ஆகியவை. இன்றைக்கு பூனாவில் மட்டும் 500க்கும் அதிகமான பெண் அர்ச்சகர்கள் இருக்கின்றனர். 1976 இல் இருந்து அனைத்து சாதிகளையும்
சார்ந்த பெண்கள் 7000 பேருக்கு மேல் வேதவேள்வி செய்யும் பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் இன்றைக்கு தமக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை மலர் பாதையில் நடந்து
பெற்றிட வில்லை. பூக்குழி இறங்கித்தான் பெற்றிருக்கின்றனர். ஆனால் போராட்டங்களுக்கு அப்பால் இந்து சமுதாயம் முன்னகர்ந்திருக்கிறது. ஷீரடி சாயிபாபாவின் சீடரான குரு
உபாசினி பாபாவால் உருவாக்கப்பட்ட உபாசினி கன்யா குமாரி ஸ்தான் அமைப்பு யக்ஞங்களை பெண்களால் நடத்துவித்து வருகிறது. 1994 இல் ஆஸ்திரேலியாவின் விஸ்வநாதர் கோவிலில் பூசைகளை செய்தவர்கள் மூன்று சகோதரிகள் ஆவர். அவர்கள் சாந்தா மனோகரி ஸ்ரீகணேசன், கௌரிமனோகரி கந்தராஜா மற்றும் ஜெய மனோகரி பொன்னம்பலம் என்பவர்கள் என அறிகிறேன். வாராணாசியிலேயே பெண்கள் வேள்வித்தீ வளர்த்து யக்ஞம் செய்விக்கின்றனர். பாணினி கன்யா மகாவித்தியாலயா இந்த சேவையினை செய்துவருகிறது.அண்மையிலிருக்கும் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தினைச் சேர்ந்த கொடுங்கல்லூர் குருபதம் மையத்தில் அந்தணரல்லாத 47 பெண்கள் வேத சடங்குகள் செய்விக்கும் தகுதியுடன் பயிற்சி பெற்றுள்ளனர். மாதா அமிர்தானந்தமயி ஏற்படுத்தியுள்ள பிரம்மஸ்தான கோவில்களில் எந்த சாதியை சேர்ந்தவராயினும் பெண்கள் அர்ச்சகராகவே சேவை ஆற்றுகின்றனர். ஞான ப்ரபோதினி அமைப்பு பெண்கள் வேள்விமுதலான இதுவரைஆண்களே நடத்திட்ட சடங்குகளை முன்னின்று நடத்திட எட்டுமாத பாடத்திட்டத்தினை நடத்துகிறது. இதற்கான கட்டணம் மாதம் ரூபாய் 800 மட்டுமே.


கோவில் அர்ச்சகர்களாகபெண்கள்


பெண்ணை அர்ச்சகராக கொண்ட சிவன்கோவில் மூலவர்

ஆக செயல் அளவிலும் இந்து சமுதாயத்தில் பெண்கள் பூசனை செய்வதும், பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே செய்து வந்த சடங்குகளை பெண்கள் செய்வதும் கோவிலில் அர்ச்சகராக அமைவதும் நடக்கக் கூடியது மட்டுமல்ல ஏற்புடையதும் ஆகும். ஆக கருத்தியல் ரீதியாகவும் செயல்முறையிலும் இதற்கு தடைகள் ஏதும் இல்லை. ஆகமவிதி முறைப்படி உருவாக்கப்பட்ட விதிகளை ஆராய்ந்து பெண் அர்ச்சகர்களை ஏற்கும் வழிமுறைகளையும் ஆராய்ந்திட வேண்டும். சமுதாய ஏற்பினையும் உருவாக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்கலாம். மாதா அமிர்தானந்த மயி போன்ற ஆன்மிக சமுதாய அருளாளர்களைக் கொண்டு பிரம்மஸ்தான கோவில்களை உருவாக்கி பெண் பண்டிதர்களை சமய வல்லுநர்களை ஏற்படுத்தலாம். இவற்றின் மூலம் பெண் அர்ச்சகிகளுக்கு சமுதாய ஏற்புடைமை உருவாகும். விரைவில் பேராலயங்களிலும் குறிப்பாக பெண் தெய்வ ஆலயங்களில் பெண்கள் அர்ச்சகர்களாகிடும் நிலையும் வந்திடும்.

மௌலானா முகமது அலி : 4


சிறை உடையில் அலி சகோதரர்கள்

கோகட் கலவரம்:
10 செப்டம்பர் 1924 இல் (இப்போது பாகிஸ்தானில் உள்ள) கோகட் எனும் இடத்தில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடித்தது. இங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள்.
இஸ்லாமிய வியாபாரிகளுக்கு இந்து சிறுபான்மையினர் போட்டியாகவும் இருந்து வந்தனர். இந்நிலையில் ஜீவன்தாஸ் என்பவர் நடத்தி வந்த ஒரு பத்திரிகையில் முஸ்லீம்கள் நபி என
நம்பும் முகமதுவை கேலி செய்யும் கவிதை வெளியானதாக முஸ்லீம்கள் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் இந்து தலைவர்கள் எழுத்து மூலம் மன்னிப்பு எழுதிக்கொடுத்ததுடன் அந்த இதழின் 900 பிரதிகளை தீயிட்டு கொழுத்தவும் ஒப்புக்கொண்டனர். அது பொது இடத்தில் எரிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையையும் ஏற்று அந்த இதழ்களை பொது இடத்தில் எரித்தனர். அந்த இதழ்களின் அட்டைப்படத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் இருந்த போதிலும் அவை எரியூட்டப்பட்டன. அதன் பின்னர்
நிகழ்ந்தவைக் குறித்து மகாத்மா காந்தி எழுதினார்:

" அதற்கு பின்னரே மிக மோசமானவை நடைபெற்றன. ஒரு குருத்துவாரா உட்பட கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலைகள் அடித்தொழிக்கப்பட்டன. பல கட்டாய மதமாற்றங்கள் நடந்தன. இவற்றினை நான் மதமாற்றம் எனக் கூற மாட்டேன் ஏனெனில் அவை பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட நடிப்புதான். குறைந்த பட்சம் இரண்டு இந்துக்களாவது மதம் மாற மறுத்தமைக்காகக் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்துக்கள் தங்கள் சிகைகளையும் நூல்களையும் நீக்கி முஸ்லீம்கள் ஆனார்கள். அல்லது அவர்கள் பாதுகாப்பு தேடும் போது அவர்கள் அணுகிய முஸ்லீம்கள் இந்துக்கள் தங்களை முஸ்லீம்கள் என வெளிப்படையாகக் கூறி அறிக்கையிட்டு பின்னர் இந்து மத சின்னங்களை அவர்கள் நீக்கிவிட வேண்டுமெனக் கூறினார்கள்."1

கோகட் கலவரம் மிக முக்கியமான பிற்கால சம்பவங்களுக்கு முன்னோடியாக விளங்குவதை அறிந்த ஒரு தலைவரும் இருந்தார். அவர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள். இந்தக்
கொடூரமான கலவரத்தின் மூலம் கோகட் இந்துக்கள் அனைவருமே முழுமையாக துடைத்தொழிக்கப்பட்டு அகதிகளாக ராவல்பிண்டியில் வாழ்வதை ஒரு அறிக்கையாக அவர்
வெளியிட்டார். கோகட், அமேதி, சம்பல், குல்பர்கா ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதிர்ந்து போன மகாத்மா காந்தி முகமது அலியின் வீட்டிலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்கள் முகமது அலியின் கூரையின் கீழ் நடந்த இந்த உண்ணாவிரதத்தை எவரும் முகமது அலிக்கு எதிரானது என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மகாத்மா.

முகமது அலி வீட்டில் மகாத்மா காந்தி 21 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டார்

உண்ணாவிரதம் குறித்து 'யங் இந்தியா'வில் எழுதினார்: "ஆனால் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது சரிதானா? ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவுக்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார்? இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் முகமது அலியிடம் ஒரு தனிப்பட்ட விஷயத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது 'அலி சாகேப் என்னுடையதெல்லாம்
உங்களுடையது. உங்களுடையதெல்லாம் என்னுடையது' எனக் குறிப்பிட்டேன். பொதுமக்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன், முகமது அலியின் இல்லத்தைக் காட்டிலும் வேறெங்கும் நான் அன்பும் அனுசரணையும் கொண்ட கவனிப்பையும் உபசரிப்பையும் பெற்றது கிடையாது. என்னுடைய ஒவ்வொரு தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன..."
என கூறினார் மகாத்மா காந்தி.3 மகாத்மா காந்தியும் பிரச்சனையின் வேதனைகளை உணர்ந்திடாமல் இல்லை. இந்த உண்ணாவிரதத்தினை ஏற்றெடுக்க தீர்மானித்த
போது அவருடன் இருந்த மகாதேவ் தேசாய் மகாத்மா காந்தியிடம் அவர் எந்த தவறுக்கு பிராயசித்தமாக இந்த உண்ணாவிரத நோன்பினை மேற்கொள்கிறார் என கேட்டார். அதற்கு
மகாத்மா காந்தி அளித்த பதில் அவரது உள்ள வேதனையை வெளிக்காட்டுகிறது.

" எனது தவறு! எனது தவறா? ஏன் நான் இந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக கருதலாமே. நான் அவர்களிடம் முஸ்லீம்களுடன் அன்புடன் ஒற்றுமையாக நட்புறவு கொள்ளச் சொன்னேன். முஸ்லீம்களின் புனித தலங்களின் பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கைகளையும் சொத்துக்களையும் முஸ்லீம்களுக்காக விட்டுக்கொடுக்க சொன்னேன். இன்றைக்கும் நான் அவர்களிடம் அகிம்சையின் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேன். உயிரை அளிப்பதன் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேனே அன்றி கொலையின் மூலமாக அல்ல. ஆனால் இதில் கிடைத்த விளைவு என்ன? எத்தனை கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன? எத்தனை சகோதரிகள் என்னிடம் துயரத்துடன் வருகின்றனர்? இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்துடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்... அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைகளை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி
என்னால் சகித்துக்கொள்ளமுடியும்? நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும்? முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள்? இருந்தாலும் நான் இந்துக்களை இன்றைக்கும் வேண்டியேயாக வேண்டும். கொல்லாதீர்கள் இறந்துபடுங்கள். இதற்கு உதாரணமாக என்னுடைய உயிரையே நான் கொடுக்க வேண்டும்."4


இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்த மௌலானா முகமது அலி டிசம்பர் 1924 பம்பாய் முஸ்லீம் லீக் மாநாட்டு மேடையில் மகாத்மா காந்தியுடன் பிரசன்னமானார். கோகட்
கலவரங்களைக் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்: "கோகட் இந்துக்களின் துன்பங்கள் ஒன்றும் தூண்டுதல் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக அவர்களே மிக
மோசமான முறையில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள் என்பதுடன் அவர்களே வன்முறையையும் தூண்டினார்கள்..."2 முஸ்லீம் லீக் மாநாட்டில் முஸ்லீம் லீக்காரர்களே கோகட் கலவரத்தை நியாயப்படுத்தாத அளவுக்கு நியாயப்படுத்திய இந்த அறிக்கை மகாத்மா காந்தியை அதிர்ந்திட வைத்தது. என்ற போதிலும் சந்தேகத்தின் பலனை மௌலானாவுக்கே அளித்திட மகாத்மா மீண்டும் முன்வந்தார். அதேசமயம் மௌலானாவின் இந்த செயலைக் குறித்து தமது உணர்வுகளையும் நயமாக அவருக்கு தெரிவித்திருந்தார். முகமது அலிக்கு எழுதிய கடிதத்தில் மகாத்மா பின்வருமாறு கூறினார்:


"எனது அன்புள்ள சிநேகிதர் மற்றும் நண்பருக்கு,


எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். ஸாஃபர் அலிகானின் (முஸ்லீம் லீக் தலைவர்) தீர்மானம் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக உள்ளது. நீங்கள் நல்லதாகத்தான்
நினைத்திருப்பீர்கள் ஆனால் அது முடிந்திருக்கிற விதம் மோசமாக இருக்கிறது. உங்கள் தீர்மானம் ஏதோ இந்துக்களுக்கு நேர்ந்தது அவர்களுக்கு சரியாக கொடுக்கப்பட வேண்டிய
அடிதான் என்பது போலல்லவா இருக்கிறது.... ஓவ்வொரு முறை இந்த அறிக்கையை படிக்கும் போதும் அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்றாலும் இது சரியானது என
உங்களுக்கு தோன்றினால் நீங்கள் இந்த தீர்மான நிலைப்பாட்டிலேயே இருங்கள். நான் உங்கள் இதயத்தினை மாற்றி அதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றப் போகிறேன்.
உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதென்பதால் நான் உங்களை கைவிடப் போவதில்லை. இந்த அறிக்கை உங்கள் மனம் செயல்படும் விதத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கை
-அதன் வார்த்தைகள் எத்தனை மோசமானதென்றாலும்- உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது....இந்த விஷயங்களில் நீங்கள் இந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் கலவரத்தை தூண்டவில்லை, முதல் வன்முறை அவர்கள் தரப்பிலிருந்து ஏற்படவில்லை என்பதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு நம்புவது தவறாகக் கூட இருக்கட்டுமே, என்ற போதிலும் அவர்கள் அவ்வாறு நம்புவதால் நீங்கள் இந்த மாதிரி கூறியிருக்கக் கூடாது. "
5கலவரம் குறித்த அறிக்கைகளை வெளியிடுவது குறித்து அடுத்த சர்ச்சை ஏற்பட்டது. முஸ்லீம் தலைவர்கள் (ஹக்கிம் அஜ்மல் கான், டாக்டர்.அன்சாரி) இந்த அறிக்கைகள்
வெளியிடப்படாமல் இருப்பதே நல்லது என வாதாடினார்கள். இதனை மோதிலால் நேரு கடுமையாக எதிர்த்தார். இதனையடுத்து மாற்றங்களுடன் அறிக்கைகள் வெளியிடப்படுவது
நல்லது எனக் கருதப்பட்டது. மகாத்மா முதலில் ஷௌகத் அலியின் அறிக்கையை படித்தார். அதிலுள்ள கருத்துக்களில் எவ்வித மாற்றமும் செய்யாததுடன் அதன் இறுதி பாரா
தெளிவற்று இருந்தமையால் அது தெளிவாக அமையும் வண்ணம் அதை திருத்தி எழுதினார். ஆனால் கலவரம் குறித்த மகாத்மா காந்தியின் அறிக்கையினை மிகத்தீவிரமாக ஷௌகத்
அலி எதிர்த்தார். ஜெனரல் டையரின் கொடூரத்துடன் அக்கலவரத்தை மகாத்மா ஒப்பிட்டிருந்ததையும் இந்துக்களே அக்கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறியிருந்ததையும் நீக்கிவிட அவர் கூறினார். காந்திஜியும் உடனிருந்த மற்ற காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவற்றை முழுமையாக
நீக்கிவிட்டார்.6
பின்னர் கோகத்திலிருந்து ராவல் பிண்டியில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களுக்கு மகாத்மா காந்தி பிப்ரவரி 10 1925 இல் ஒரு கட்டளையை அனுப்பினார்:

"பிரச்சனைகளுக்கு சுவராஜ்ஜியத்தின் பார்வையில்தான் நான் தீர்வு கூறமுடியும். தற்போதைய தனிப்பட்ட இலாபங்களை விட்டு விட்டு நாளைய தேச நலனின்
அடிப்படையில் தியாகங்களை செய்யத்தான் வேண்டும். முஸ்லீம்கள் இறங்கி வரவில்லை என்றாலும் கூட, இந்துக்கள் தங்கள் சொத்துக்களையும் வீடுவாசல்களையும் முழுவதுமாக
இழக்க வேண்டியிருந்தாலும் கூட, என்னைப் பொறுத்தவரையில், முஸ்லீம்களுடன் சமாதானம் ஏற்படுத்தாமல், அரசு பாதுகாப்பு இல்லாமல் முஸ்லீம்களின் நல்லிணக்கத்துடன்
பாதுகாப்பாக வாழலாம் என்கிற நிலை ஏற்படும் வரை இந்துக்கள் கோகட்டுக்கு திரும்ப நினைக்கவே கூடாது. இது மிகவும் ஆதர்சமான அறிவுரை என்பதும் இந்துக்களால்
ஏற்கப்படாது என்பதும் எனக்கு தெரியும் என்றாலும் இதுதான் என்னால் கொடுக்கமுடிந்த மிகச்சிறந்த அறிவுரையாகும்...."லாலா லஜ்பத்ராய்

இந்த கலவரங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1919 இல் கிலாபத் இயக்கத்தினை ஆதரித்த முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுக்கு (லாலா லஜ்பத் ராய், ரவிந்திரநாத்
தாகூர் போன்றோர்) இஸ்லாம் குறித்து அறிவு ஏற்படலாயிற்று. 1921 இல் மாப்ளா படுகொலைகள் அரங்கேறின. 1922 இல் தேசபந்து சித்தரஞ்சன் தாஸுக்கு எழுதிய கடிதத்தில்
லாலா லஜ்பத்ராய் சில அடிப்படையான அச்சங்களைத் தெரிவித்தார். "நான் இந்துஸ்தானத்தில் உள்ள 7 கோடி இஸ்லாமியர்களைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால் இவர்களையும் ஆப்கானிஸ்தானிலும் அரேபியாவிலும் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளையும் குறித்து சிந்திக்கிறேன். நான் நிச்சயமாகவும் நாணயத்துடனும் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கிறேன். இஸ்லாமிய தலைவர்களை முழுமையாக நம்ப தயாராக இருக்கிறேன். ஆனால் குரானையும் ஹதீஸையும் மீறி இவர்களால் செயல்பட முடியுமா?"7


1924 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் இரவீந்திர நாத் தாகூரும் ஒரு விசயத்தை சுட்டிக்காட்டினார். பல முஸ்லீம்களுடன் தாம் கேட்ட போதும் அவர்கள் ஒரு
இஸ்லாமிய நாடு பாரதத்தின் மீது படையெடுக்கும் பட்சத்தில் தாம் இஸ்லாமிய நாட்டுடன் இணைவதையே விரும்புவார்கள் என்று கூறியதையும் மௌலானா முகமது அலி உட்பட
இந்த விஷயத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு இஸ்லாமியன் மற்றொரு இஸ்லாமியனுடன் போரிடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளதையும் கூறினார்.8

நேரு அறிக்கை

1928 இல் இந்திய தேசிய காங்கிரசினை விட்டு நேரு அறிக்கையை (சுயராஜ்ஜிய அரசியல் சாசனம்) எதிர்த்து முழுமையாக வெளியேறினார் மௌலானா முகமது அலி.
இத்தனைக்கும் மத்திய ஆட்சியில் கால் பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தது அந்த அறிக்கை. இதற்கு மாற்றாக முகமதலி ஜின்னாவின் 14 அம்ச கோரிக்கையை முகமது
அலி ஆதரித்தார். பின்னர் பிரிட்டிஷாரின் முக்கிய ஆதரவாளரான ஆகாகானுடனும் அப்போது முஸ்லீம்-லீக்கில் முக்கியமானவராக வளர்ந்து வந்த முகமதலி ஜின்னாவுடனும்
இணக்கமானார்.


மோதிலால் நேருவின் அறிக்கை இஸ்லாமியவாதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை

1928 இல் ஆகாகான் தலைமையில் நடந்த அனைத்து கட்சி முஸ்லீம்கள் மாநாட்டில் முகமது அலி பங்கேற்றார். 1930 இல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை
இயக்கத்தினை அவர் முழுமையாக எதிர்த்ததுடன் முஸ்லீம்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் சேரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் ஏனெனில் மகாத்மா காந்தி முகமது அலிக்கு
திருவாளர்.காந்தியாக ஆனது மட்டுமன்றி இந்து ராஜ்ஜியத்திற்காக பாடுபடுகிறவராகவும் ஆகிவிட்டிருந்தார்.
பிரிட்டனுக்கு முகமது அலி வட்டமேசை மாநாட்டிற்காக சென்றார். ஒட்டு மொத்த இந்தியர்களுக்காக அல்ல மாறாக முஸ்லீம்களின் பிரதிநிதியாக சென்ற குழுவில் முஸ்லீம் லீக் சார்பில் அவர் சென்றிருந்தார்.9

முகமது அலி கலந்துகொண்ட வட்டமேசை மாநாடு


ஏன் எருசலேமில் புதைக்கப்பட்டார் முகமது அலி?

பாபாசாகேப் அம்பேத்கர்

திண்ணைக்காக ஹமீது ஜாஃபர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்: "மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால் பெரும் எழுச்சி ஏற்படும் என்ற பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதே அக்ஸாவிற்கு (ஜெருஸலம்) அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது."10 என்ற போதிலும் மௌலானா முகமது அலியின் சொந்த விருப்பமே அவர் எருசலேமில் புதைக்கப்படவேண்டும் என்பதுதான். ஏன்? இந்து முஸ்லீம் ஒற்றுமையின் இயலாமையை வெளிக்காட்டும் விதமாக இது குறித்து கேலியாகக் குறிப்பிடுகிறார் பாபா சாகேப் அம்பேத்கர் :
"மற்ற வார்த்தைகளில் சொன்னால் ஒரு உண்மையான முஸ்லீம் என்றென்றும் பாரதத்தை தம் தாய் நாடாக ஏற்றுக்கொள்ளவோ இந்துக்களை தம் சகோதர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவோ இஸ்லாம் என்றைக்கும் அனுமதிக்காது. மௌலானா முகமது அலி என்கிற பெரிய இந்தியர் மற்றும் உண்மையான முஸ்லீம் தாம் பாரதத்தில் அல்லாது எருசலேமில் புதைக்கப்பட விரும்பியது அதனால் தானோ என்னவோ!"11


இவ்வாறாக கிலாபத் இயக்க தலைவரில் ஒருவரான முகமது அலியின் வாழ்க்கை முடிந்தது. ஆனால் கிலாபத் இயக்கமே பாரத அரசியலில் ஒரு முக்கிய இயக்கமாக அமைந்தது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானின் வரலாறு குறித்த தனது இணைய தளப்பக்கத்தில் கிலாபத் இயக்கம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது: "கிலாபத் இயக்கம்
தனது இலட்சியத்தை (துருக்கியில் இஸ்லாமிய கலீபாவின் ஆட்சி) அடையாவிட்டாலும் தெற்காசிய முஸ்லீம்களுக்கு மிகவும் முக்கிய நிகழ்வாக ஆயிற்று. பல காலத்துக்கு பிறகு
முழுக்க முழுக்க ஒரு தூய இஸ்லாமிய பிரச்சனையில் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். முஸ்லீம் பொதுமக்களை இணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்தும் அனுபவம் வாய்ந்த தலைவர்களின் தலைமுறை உருவானது. பாகிஸ்தான் இயக்கத்தின் போது இந்த அனுபவம் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயன்பட்டது."12

(இத்துடன் மௌலானா முகமது அலி குறித்த இத்தொடர் முற்றும். ஆனால் இந்த தொடருக்கு தொடர்புடையதான மற்றொரு தொடர்,:பாகிஸ்தானிய மற்றும் இஸ்லாமிய மேன்மைவாத இயக்கத்தின் மற்றொரு பரிமாணம் குறித்த புதிய தொடரினை ஆரம்பிக்க உள்ளேன்.)

 • 1. மகாத்மா காந்தி, 'யங் இந்தியா' 25-9-1924
 • 2. அதே ('யங் இந்தியா', 25-9-1924)
 • 3.The Collected Works of Mahatma Gandhi, பாகம். XXV, பக். 174-76
 • 4. சையது ஷரிஃபுதீன் ஃபிர்ஸாதாவால் தொகுக்கப்பட்ட 'அகில இந்திய முஸ்லீம் லீக் ஆவணத்தொகுப்பு: 1906-1947 ' பாகம்-1 பக்.28-29
 • 5. மகாதேவ் தேசாய், Day-to-day with Gandhi பாகம்-5 பக்.111-112
 • 6. மகாதேவ் தேசாய், பாகம்-6 பக்.49
 • 7. டிசம்பர் 1922 இல் எழுதிய கடிதம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
 • 8. அதே நூல் அதே அத்தியாயம்.
 • 9. பாகிஸ்தானிய இணைய தளம்: www.storyofpakistan.com/person.asp?perid=P038
 • 10. இக்வான் அமீர் எழுதிய கட்டுரை: 'பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்' திண்ணைக்காக ஹமீது ஜாகபர் (www.thinnai.com)
 • 11. பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
 • 12.http://www.mofa.gov.pk/Pages/History.htm

Saturday, December 23, 2006

பொய் பூக்கும் பூங்கா

தமிழ்மணத்தின் வலைப்பதிவு இதழான பூங்காவில் அண்மையில் வெளிவந்த பொறுக்கி என்பவரின் திருப்பதி திருமலை முடி காணிக்கை குறித்த கட்டுரையில் இருந்த தகவல்
பிழைகள் தவறான முடிச்சு போடல்கள் ஆகியவற்றினை வெளிப்படுத்தும் ஒரு கடிதத்தை அண்மையில் திரு. அருணகிரி என்பவர் எழுதியிருந்தார். .அருணகிரி சிந்தனையை
தூண்டும் பல கட்டுரைகளை திண்ணை இணைய இதழில் எழுதி வருபவர். பூங்காவுக்கும் பொறுக்கிக்கும் இதர தமிழ்மண வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கும்
இக்கடிதம் கண்ணை திறப்பதாக அமையும் என நம்புகிறேன். இக்கடிதத்தை எனது வலைப்பதிவில் வெளியிட அனுமதி அளித்த அருணகிரி அவர்களுக்கு நன்றியுடன்.


கடந்த வருடம், இந்த வருடம் ஆகியவற்றில் தொடங்கி, இந்துத்தலங்கள் மீது செலக்டிவாக நடத்தப்படும் நெகடிவ் புரோபகண்டாவின் தொடர்ச்சியாகவே திருப்பதி முடியிறக்கம் குறித்த இச்செய்திகளையும் நான் பார்க்கிறேன். திடீரென இது குறித்து புற்றீசல் போல வெளி வரும் நெகடிவ் செய்திகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.


 • http://www.indiadaily.com/breaking_news/36189.asp
 • http://in.news.yahoo.com/061012/211/68fzc.html
 • http://www.zreportage.com/hair.shtml
 • http://www.womensenews.org/article.cfm/dyn/aid/2808/context/archive
 • http://observer.guardian.co.uk/world/story/0,,1805328,00.html

இது குறித்து பூங்கா வெளியிட்டுள்ள பொறுக்கி கட்டுரையில் பல பொய்கள் போகிற போக்கில் அள்ளி வீசப்பட்டுள்ளன. உங்கள் பார்வைக்கு அவற்றை வைக்கிறேன்-
எனது அலசலோடு.


பொறுக்கி எழுதிய கட்டுரை ஒன்று பூங்காவில் வந்துள்ளது. திருப்பதியில் இறக்கப்பட்ட முடிக்கற்றைகள் எப்படி பலகோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது என்பதாய்
வளரும் கட்டுரை முடிவில் பக்தர்களின் நம்பிக்கையைப் பகடி செய்வதிலும், முடியிறக்கும் இண்டஸ்ட்ரியில் சுரண்டலுக்கு திருப்பதி கோவிலை அடையாளம் ஆக்கியும்
முடித்திருக்கிறது. இதில் உள்ள பொய்களும் அபத்தங்களும் வெளிச்சம் போடப்பட வேண்டும்.


 • 1. பொறுக்கி எழுதுவது: " மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்களின் மயிர் சுமார் 400 தொன் வரை வருடம் ஒன்றுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
  செய்யப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 130 கோடி டொலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது".


  இவர் கொடுத்துள்ள தொடுப்பிலேயே உள்ள ஒரு செய்தி: "In the most recent financial year the temple sold over 3 million kilos of hair for about $1 million".
  (http://www.womensenews.org/article.cfm/dyn/aid/2808/context/archive)


  நம்நாட்டிலிருந்து மொத்தம் சீனாக்கு ஏற்றுமதி செய்யப்படும் முடியின் மதிப்பு 136 மில்லியன் டாலர்கள்தாம். இதில் திருப்பதி, பழனி தொடங்கி, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி
  முதலாக சீக்கிய முடி, பார்பர் முடி என அனைத்தும் அடக்கம். (யுகே, யுஎஸ்-கான மொத்த முடியழகு சாதன ஏற்றுமதி மதிப்பு எனக்கொண்டால் 300 மில்லியன் டாலர்கள்)

 • 2. பொறுக்கி மற்றொன்றும் சொல்கிறார்: "கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத்
  தேவையில்லை"


  திருப்பதி கோயில் நிர்வாகத்தின் வரவு என்னவென்றால் கூகுளில் தேடியதில் கிடைத்தது:
  விக்கிபிடியா சொல்வது- "The popularity of the temple can be judged by the annual income which is around six billion rupees" அதாவது ஏறக்குறைய 133 மில்லியன் டாலர்கள் எனலாம். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக ஹிண்டு செப் 21, 2003 கட்டுரை ஒன்றில் இவ்வாறு உள்ளது. "Tirupati Trust had an income of Rs. 532 crores last year-2002"- அதாவது ஏறக்குறைய 120 மில்லியன் டாலர்கள் எனலாம். பொறுக்கி சொல்வதோ, திருப்பதி கோவிலின் வருமானம் அல்ல, செலவே 120 கோடி டாலர்களாம், அதாவது 1.2 பில்லியன் டாலர்களாம். (100கோடி=1 பில்லியன்). 1.2 பில்லியன் டாலர்கள் செலவு செய்யும் திருப்பதிக்கு "வருமானம் பற்றி சொல்லத் தேவையில்லை' என்று வேறு அலுத்துக்கொள்கிறார்.

  திருப்பதி கோவிலின் வருமானம் 120-140 மில்லியன் டாலர்கள்- அவர்கள் எப்படி 1.2 பில்லியன் செலவழிக்கிறார்கள் என்பது லக்கி லுக்குக்கும் அவரது கணக்கு புக்குக்குமே வெளிச்சம்.

 • 3. இப்போது அடுத்த விஷயத்துக்கு வருவோம். இப்படி பிரம்மாண்ட நம்பர்களை வைத்து திருப்பதியைப் பகடையாக்கி இப்போது மயிர் கேம் ஆட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு விடை தெரிய இக்கட்டுரையின் மையத்திற்கு வர வேண்டும். மையம் என்ன? இந்தியாவிற்கே பெரிய அன்னியச்செலாவணி ஈட்டித்தரும் ஒரு தொழிலில் திருப்பதிக்கே பெரும்பங்கு உள்ளது எனக்காட்டி விட்டால், அத்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் எனக்காட்டும்போது அதற்கான முழுப்பொறுப்பையும் திருப்பதி கோவில் மீது வசதியாகச் சுமத்தி விடலாம். ஒரு தொழிலின் அவலம் அத்தனையையும் ஒரு கோவிலின் மேல் ஏற்ற வேண்டும் என்றால், எப்படி அதனைச் செய்ய வேண்டும்? 300 மில்லியன் டாலர் பெறுமான இண்டஸ்டரியில், 1 மில்லியன் மட்டுமே திருப்பதி கோவில் பங்கு என்று சொன்னால் அது சாத்தியமா? அல்லது 130 மில்லியன் டாலர் திருப்பதியின் பங்கு என்று சொன்னால் சாத்தியமா? எண்ணிப்பாருங்கள். அதாவது, முதலில் ஒரு தொழிலில் உள்ள சுரண்டல் என்ற (நியாயமான) பிரச்சனையை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பிரம்மாண்ட எண்களில் வார்த்தை விளையாட்டு விளையாடி, அந்த இண்டஸ்ட்ரியின் சுரண்டல் பேரமைப்பாக ஒரு பிரபல இந்துக்கோவிலை- இவ்விஷயத்தில் திருப்பதி கோவிலை மட்டுமே - காட்ட வேண்டும் (நாகூரிலும்,
  வேளாங்கண்ணியிலும் முடியிறக்குபவர்கள் பற்றியும் அங்கு தொழிலாளர் நிலை குறித்தும் மூச்- பேசப்படாது). 300-இல் ஒரு பங்கு தொடர்புதான் இந்துக்கோவிலுக்கும்
  அந்த இண்டஸ்ட்ரிக்கும் என்றாலும் பரவாயில்லை. பெரிய நம்பர்களைத் தூக்கிப்போட்டு விட்டால் எவன் கேள்வி கேட்கப் போகிறான்? இன்னும் ஒரு விஷயமும் செய்து விட்டால் முற்போக்கு வேடம் முழுமையடைந்து விடும். அதாவது, இந்த இந்துக்கோவில்களை நிர்வாகம் செய்வது இந்து எதிர்ப்பு செக்யூலர் அரசுதான் என்பதையும், சர்ச்களையும், மசூதிகளையும் அவ்வாறு செய்யாமல் அந்த அந்த மதங்களில் கையில் விட்டிருக்கிறது என்பதையும் வெகு கவனமாகக் குறிப்பிடாமல் விட்டு விட வேண்டும். பிறகென்ன ஈசிதான்- மொட்டையடிப்பது போன்ற "மூட" வழக்கங்களையும், மதங்கள் எப்படி மனிதனைச் சுரண்டுகின்றன என்றும் சொல்லி பகடி செய்து முடித்தால், சமூகத்தைப் புரட்டிப்போடும் முற்போக்குக் கட்டுரை என்ற முத்திரையுடன் பொய்களை நம் காதில் பூவாய்ச்சுற்ற
  பூங்காவுக்கான கட்டுரை ரெடிதான்".


திருப்பதி திருமலை தேவஸ்தானம் செய்து வரும் கல்வி-சமுதாயப்பணிகள்:


 • Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled
 • Sri Venkateswara Poor Home (இது தொழுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சையும் உணவு- உறையுளும் வழங்கும் சேவை இல்லம்)
 • Sri Venkateswara Bala Mandir
 • Sri Venkateswara Institute of Medical Sciences
 • Sri Venkateswara School for the Deaf
 • Sri Venkateswara Training Centre for the Handicapped
 • Conservation of Water and Forests - Haritha Project
 • SV Higher Secondary School, Vellore
 • SV High School, Tirupati
 • SP Girls High School, Tirupati
 • SGS High School, Tirupati
 • SV Oriental High School, Tirupati
 • SKRS (EM) High School, Tirupati
 • SV High School, Tirumala
 • SV Elementary School, Tirupati
 • SKS Elementary School, Thatithopu
 • SV Elementary School, Tirumala
 • SV Elementary School, Tirumala

இக்கடிதத்தை எழுதிய திரு.அருணகிரி திண்ணையில் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில:

மௌலானா முகமது அலி : 3

ஈசா நபியும் மகாத்மாவும்

1923 இல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகமது அலி தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய மௌலானா கூறினார்:
"பலர் மகாத்மாவின் போதனைகளையும் அண்மைக்காலத்தின் அவர் மேற்கொண்டுள்ள வேதனை தரும் நோன்புகளையும் ஈசா [ஏசு] நபியுடன் (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒப்பிட்டு பேசுகின்றனர். ஈசா நபி (அவர் மீது அமைதி நிலவுவதாக) அவரது காலத்தில் தேர்ந்தெடுத்த சமுதாய சீர்திருத்தத்திற்கான ஆயுதம் துன்பத்தின் மூலம் ஆற்றல் பெறுவதாகும், அதிகாரத்தை இதய சுத்தியால் எதிர்கொள்வதாகும்...அது மகாத்மா காந்திக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். ஆனால் நமது காலத்தில் வாழும் ஈசா நபியினை (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒத்த மனிதரை சிறை செய்வதென்பதோ ஒரு கிறிஸ்தவ அரசுக்கு விதிக்கப்பட்டிருந்தது ("வெட்கம் வெட்கம்" -கூட்டம்) ...யூதேய தேசத்தில் ஈசா நபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) கால கட்டத்தை போன்றே இன்றைய இந்துஸ்தானமும் விளங்குகிறது. ஈஸாநபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) செயல்முறைகளைப் போன்றே மகாத்மா காந்தியின் முறைகளும் அமைந்துள்ளன."
மகாத்மா காந்திக்கு ஜே எனும் கோஷத்துடன் அந்த அழகிய உரை முடிந்தது.1


27 ஜனவரி 1924 இல் உடல் நிலை மிக மோசமாக இருந்த மகாத்மா காந்தியை காண வந்தார் ஷௌகத் அலி. அப்போது அவர் குனிந்து மகாத்மா காந்தியின் கால்களை
மறைத்திருந்த துணியை நீக்கி அவரது பாதங்களை முத்தமிட்டார். காணும் யாவரையும் நெகிழ வைக்கும் காட்சியாக அமைந்திருந்தது அது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஷௌகத்
அலியும் முகமது அலியும். உடன் ஹக்கீம் அஜ்மல் கானும் வந்திருந்தார். துணியால் மூடியிருந்த மகாத்மாவின் பாதத்தை துணியை விலக்காமலே முகமது அலி முத்தமிட்டார்.
அமைதியாக அமர்ந்திருந்த அவரது முகத்தில் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.2


ஜூன் 1924 இல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். தான் நடந்து வந்த பாதையின் கடுமையை அவர் விவரித்த போது அதனைக்
கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ந்து விட்டனர். இறுதியில் இந்தக் கடுமையான காலகட்டத்தில் தம்மோடு தம் துணையாக நடந்து வந்தவர் ஷௌகத் அலி எனக்
குறிப்பிட்டார்.3 இந்த உரையில் ஒரு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏற்கனவே மகாத்மா காந்தியின் சில செயல்களை விமர்சித்து பேசியிருந்தார். அந்த விமர்ச்சனத்தை குறிப்பிட்ட மகாத்மா காந்தி அந்த உரை தம் இதயத்தை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மகாத்மாவின் உரை முடிந்த உடனே காங்கிரஸ் மேடையில் அமர்ந்திருந்த தலைவர் மௌலானா முகமது அலி முழு கமிட்டியின் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி கண்ணீர் வழிந்தோட காந்திஜியின் கால்களில் விழுந்து வணங்கினார்.4


காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி

"விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத..."


கிலாபத் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழ் 'இன்ஸாப்'. இந்த இதழ் மௌலானா முகமது அலி மகாத்மா காந்தியை 'மகாத்மா' எனக் குறிப்பிடுவது குறித்தும் அவரை ஈசா நபி என முஸ்லீம்கள் நம்புகிற ஏசுவுடன் ஒப்பிடுவது குறித்தும் கடுமையாக தாக்கி எழுதியது.

"சுவாமி, மகாத்மா என்றெல்லாம் கூறுவதற்கு பொருள் என்ன? சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?" 51924 இல் ஹக்கீம் அஜ்மல் கான் நடத்திய யுனானி கல்லூரியில் காந்திஜி சிறையிலிருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாட நடந்த நிகழ்ச்சி இந்த சர்ச்சை வெளிப்படையாக
வெடித்தது. அந்த விழாவில் ஒரு இந்து மாணவன் மகாத்மாவை ஏசுவுடன் ஒப்பிடவே இஸ்லாமிய மாணவர்கள் அதனை தம் மதத்திற்கு செய்யப்பட்ட இழிவாகவே எடுத்துக்கொண்டு அவனை உதைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.6


'இன்ஸாப்' மற்றும் கிலாபத் இயக்கவாதிகளாலேயே தமது சமய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் மௌலானா முகமது அலி 1924 இல் மூன்று கிலாபத் பொதுக்கூட்டங்களில் (அலிகார், அஜ்மிர், லக்னோ) மகாத்மா காந்தியை விமர்சித்ததை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்கலாம்:

"அந்த விமர்சனம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திரு.காந்தியிடம் பெரு மதிப்பு வைத்திருந்த திரு. முகமது அலி காந்தியைக் குறித்து அத்தனை மோசமான தயவு தாட்சண்யமற்ற வார்த்தைகளை அவ்வாறு கூறிடுவார் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.அமினாபாத் பூங்காவில் லக்னோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மௌலானா முகமது அலியிடம் அவர் காந்தி குறித்து கூறிய விஷயங்கள் உண்மைதானா என மீண்டும் கேட்கப்பட்டது. திரு.முகமது அலி எவ்வித தயக்கமும் மன உறுத்தலும் இன்றி பதிலளித்தார்: "ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்." 7

இது குறித்து சுவாமி சிரத்தானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மௌலானா மூகமது அலி மீண்டும் குறிப்பிட்டார்: "...நான் இஸ்லாமே கடவுளின் மிக உயர்ந்த கொடை எனக் கருதுவதால் மகாத்மாஜியின் மீதுள்ள அன்பினால் நான் அல்லாவிடம் அல்லா மகாத்மாவின் ஆன்மாவை இஸ்லாமினால் ஒளியுறச் செய்திட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்."8


இறுதியாக மகாத்மா காந்தியே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின்
மதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார்.9


டிசம்பர் 1924: மகாத்மா காந்தியிடம் காங்கிரஸ் தலைமை பதவிக்கான பொறுப்பினை ஒப்படைக்கிறார் முகமது அலி. மேடையில் வலது பக்கம் நிற்பவர்களில் முதலில் நிற்பவர் ஷௌகத் அலி. இடம் பெல்காம்


டிசம்பர் 31 1924 முஸ்லீம் லீக் வருடாந்திர மாநாட்டில் மகாத்மா காந்தி உரையாற்றுகிறார். அமர்ந்திருப்பவர்கள்: முகமது அலி, டாக்டர்.கிச்லு, முகமது அலி ஜின்னா, சரோஜினி நாயுடு, ஷௌகத் அலிநபி என நம்பப்படும் முகமது என்ன கூறுகிறார்?

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அறிவிக்கிறார்கள்:
....அப்போது நபி (ஸல்) அவர்கள் " அதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணமடைகிறவர் சொர்க்கம் புகுவார்" என்றார். நான் (ஜிப்ரீலிடம்) "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?" என்று கேட்டேன். அவர் "(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுவார்)" என்று பதிலளித்தார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)10

[தொடரும்]

 • 1. காகிநாடா காங்கிரஸ் மாநாட்டு தலைமை உரை, 1923
 • 2. மகாதேவ் தேசாய் 'Day to day with Gandhi' பாகம்-3 பக். 315-16, பாகம்-4 பக்.21
 • 3. மகாத்மா காந்தி, 'Collected Works' 24:334-40
 • 4. மகாதேவ் தேசாய், பாகம்-4 பக்.96
 • 5. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: பாபா சாகேப் அம்பேத்கர், 'Thoughts on Pakistan' (அத்தியாயம் 12)
 • 6. அதே நூல் அதே அத்தியாயம்.
 • 7. அதே நூல் அதே அத்தியாயம்.
 • 8. மகாத்மா காந்தி, 'Collected Works' 23:பிற்சேர்க்கை
 • 9. மகாத்மா காந்தி, 'Collected Works' 26:214
 • 10. இந்த கதீஸ் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை: இப்னு கலாம் ரசூல் எழுதிய 'வெற்றி யாருக்கு' (சுவனப்பாதை -மாத இதழ் 2:2) : நன்றி: திரு.நேசகுமார்

Wednesday, December 20, 2006

ஆடியோ, வீடியோ எல்ஐஸி மற்றும் சச்சார்

சாமி சத்தியமா வர முடியாதுன்னுதான் நினைச்சேன். ஆனால் இழுத்துவுட்டுட்டாங்கையா. இழுத்துவுட்டுட்டாங்க. சச்சார் கமிட்டி பத்தி விவரமா பின்னாடி எழுதுறேன். நேரம் கிடைச்சா. இந்த காஃபீருக்கு நேரம் கிடைக்ககூடாதுன்னு இப்பவே துஆ பண்ணுங்க ஈமான் உள்ளவங்க.


காலையில் ஆட்டோ வில் வந்து இறங்கினார் அந்த பெயர் சொல்ல விரும்பாத இஸ்லாமிய சகோதரர் ரொம்ப நல்லவருங்க. சகோதரர் என்று சொன்னாலும் என் தந்தையார் வயதிருக்கும். கண்ணியமானவர். பேசும் போது குரல் அப்படி அமைதியாக இருக்கும் ஆற்றொழுக்காக வட்டார தமிழில் வார்த்தைகள் மென்மையாக வரும். என் எழுத்துக்களிலும் என் சமுதாய பார்வைகளிலும் மிகவும் அக்கறை காட்டுபவர் அவர். "என்ன சச்சார் கமிட்டி பத்தியா எழுதப்போற சரி அதுக்கு முன்னாடி இத கொஞ்சம் படி அப்படீன்னு நீட்டினாரு ஒரு புத்தகத்தை. 'இது என்ன பாய் புது குண்டு?' அப்படீன்னு நினைச்சபடியே வாங்கி பார்த்தேன். அப்பேரு 'குர்ஆனின் குரல்'. ஆசிரியர் அல்ஹாஜ் அ.முஹம்மது அஷ்ரப் அலி. செப்டம்பர் 1987 வெளியிட்டதுங்க. அதில் 25 இலிருந்து 32 ஆம் பக்கம் வரை கேள்வி பதிலுங்க. மார்க்க சம்பந்தமான கேள்விகள். அப்படீன்னு. சரி எதுக்கு பார்க்க சொல்றாருன்னு அவர் மார்க்கர் வச்சிருந்த பக்கங்களை பார்த்தேங்க. இதோ:


 • 10. கேள்வி: ஆடியோ கேஸட்களில் இஸ்லாமிய பக்தி பாடல்கள், ஹிந்து கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் பல மொழிகளின் சினிமா பாடல்களை பதிவு செய்து கொடுக்கும் கடை வைத்து நடத்தலாமா? (அல்ஹஸா - கே.எம். ஷாஜகான்)
  பதில்: பாவத்திற்கு துணை போகக் கூடாது என்ற அடிப்படையில் ஆடியோகேஸட் பதிவு கடை வைக்கக் கூடாது.
 • 19.கேள்வி: L.I.C பியர்லெஸ் போன்ற சிறுசேமிப்பு ஆயுள் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முஸ்லீம்கள் ஏஜெண்டுகளாக செயல்படலாமா? (பெரியகலையம்புதூர், கே.எஸ்.ஷர்புதீன்)
  பதில்: வட்டித்தொழில் தாரளமாக இவற்றில் நடைபெறுகின்றது. எனவே கூடாது.
 • 20.கேள்வி: என் நண்பர் ஒருவர் வீடியோ படம் காட்டி சம்பாதிக்கிறார். கூடுமா? (சவூதி அரேபியா, இஸ்மாயில் ஏ.சலாம்)
  பதில்: கூடாது.

தமிழனுக்கு பொருத்தமான மதம் இஸ்லாம் - ஈவெரா

"எல்.ஐஸி ஏஜெண்டாக முடியாது, ஆடியோவீடியொ கடை வைக்கமுடியாது. இன்னும் என்னென்னல்லாம், முடியாது அப்படீன்னு மார்க்க பெயரை சொல்லி இவனுக உரிமையை பறிச்சது யாரு? முதல்ல இவனுக கேட்க வேண்டிய உரிமை சிந்திக்கிற உரிமை தம்பி. இதெல்லாம் இவனுகளை யாரு தடுத்தானுவோ? படைச்சவனுக்கு தெரியும் யாருன்னு. ஆனா பழியை அடுத்தவன் மேல போடுவானுகோ. இப்பங்கூட போலியோ மருந்து சாப்பிட பத்வா போடுவானுகோ. அப்புறம் பத்துவருசம் கழிச்சி போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைங்கள்ல அதிகம் இசுலாமியர் இருக்க காரணம் ஆர்.எஸ்.எஸ் சதி அப்படீம்பானுங்கோ." என்று கூறியபடி இன்னமும் சில நூல்களை கொடுத்துவிட்டு போனார் அந்த நல்ல இனிய இசுலாமிய முதியவர். ஆட்டோ மறையும் வரை வழியனுப்பிவிட்டு வந்து அவர் தந்த நூல்களை பார்தேன். சே இந்த நேரம் பார்த்து நமக்கு நெட்ல எழுத நேரம் இல்லாம போச்சே என நினைத்து நொந்து கொண்டே.ன். அந்த நூல்களிலிருந்து சுவாரசியமான செய்திகள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

தமிழ்நாடு: இந்து விரோதிகளின் சொர்க்கம்?

திருவனந்தபுரம் அருகே வட்டியூர்காவு என்னும் இடத்தில் கிருஷ்ணகுமார் என்ற பிஜு(24) எனும் RSS தொண்டர் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு திரும்பும் வேளையில் மூன்று கம்யூனிஸ்டுகள் அவரை வெட்டிக்கொன்றனர். பின்னர் இவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பியோடி களியக்காவிளையில் ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்தனர். அவர்களை கேரள போலிஸ் சுற்றிவளைத்து பிடித்தனர். கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மாநிலத்தை விட இந்து விரோத பயங்கரவாதிகளுக்கு முக ஆட்சி செய்யும் தமிழ்நாடு பாதுகாப்பான இடமாக தோன்றியிருக்கிறது போல. (நன்றி: மாலை மலர் நாகர்கோவில்: 5-டிசம்பர்-2006)

[இரத்ததானம் செய்துவிட்டு வந்தவரை வெடிகுண்டு வீசி கொல்லுவதுதான் வர்க்க போராட்டம் போல? கேட்டால் முரண்பாட்டியக்கவியல், பொருள்முதல்வாதம், வரலாற்று இயக்கத்தில் வர்க்க விரோதிகளை இல்லாமல் ஆக்கி வரலாற்றை முன்னோக்கிய பாதைக்கு வளர்தெடுப்பது என்று சித்தாந்த இருட்டை கொண்டு மனிதத்துவம் இல்லாத ஓட்டையை அடைப்பார்கள் இந்த மானுடமிழந்த மார்க்சியக் கும்பல்.]

பொண்ணு ஏம்லே அடிமையாகமாட்டா?


கணவன் படுக்கைக்கு கூப்பிட்டால் உடனே வரவேண்டியது பெண்ணின் கடமை. அப்படி அவள் மறுத்தால் வானவர்கள் அவளை சபிப்பார்கள். அவள் எங்காவது புறப்பட்டிருந்தால் கூட கணவன் படுக்கைக்கு அழைத்தால் வரவேண்டியதுதான். இப்படி யாராவது சொல்லியிருந்தார் என வைத்துக்கொள்வோம். அதை தமிழ் சமுதாயமோ அல்லது மற்ற இந்துக்களோ பின்பற்றியிருந்தார்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல என்றாலும் கூட அத்தகைய பழக்கவழக்கங்களை இந்து சீர்திருத்த வாதிகளே எதிர்த்துவிட்டார்கள் என்றாலும் கூட அவை எத்தனை முறை மேற்கோள் காட்டப்படும். எத்தனை பேராசிரியர்கள் மீண்டும் மீண்டும் அதனை எடுத்து நம்முன் வைப்பார்கள்.சரி அதை விடுங்கள். இத்தகைய மேற்கோள்களை ஒரு இந்து பழமைவாத கும்பல் மிகுந்த பொருட்செலவில் அச்சடித்து விநியோகம் செய்தால்? தங்கள் மத-சடங்கில் இணையாத திருமணத்தினால் பிறந்த பச்சிளம் குழந்தையை பாவ பிறவி என ஒரு மத பத்திரிகை கூறுகிறது என வைத்துக்கொள்வோம்...அப்படிபட்ட பத்திரிகை நவீன தமிழ்நாட்டில் வெளிவந்திடுமா? நிச்சயம் முடியாதுதானே. இப்படி பெண்ணடிமைத்தனத்திற்கும் மானுடத்தன்மையற்ற கொடூரத்துக்கும் இந்த நவீன காலத்திலும் துணை போகும் ஒரு மதத்தை தமிழ் மக்களுக்கு ஏற்ற மதம் என்று ஒரு நபர் கூறினால், "அப்படி பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கிற மனுவாதி யாருக்கும் பகுத்தறிவு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அப்படி சொல்ல தைரியம் வராது." என்றுதானே கூறுகிறீர்கள்?

சில சாம்பிள்கள்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் தமது மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வரமறுத்து அவள் மீது அவர் கோபத்துடன் இரவைக் கழிப்பாரானால் அவளை வானவர்கள் விடியும்வரை சபிக்கிறார்கள்." (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் மனைவியைத் தமது படுக்கைக்கு அழைப்பாரானால் அவள் உடனடியாக ஏற்க வேண்டும். அவள் ஒட்டகத்துடைய அம்பாரத்தின் மீது அமர்ந்திருந்தாலும் சரியே!" (முஸ்னது அல்பஸ்ஸார்)


இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?

இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது 'முஸ்லீம் முரசு' இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த 'பகுத்தறிவு' யார் தெரியுமா?
M.காஜா நஜ்முத்தீன், துபாய்.
கேள்வி: வெளிநாட்டிலுள்ள தன்மனைவியை இந்நாட்டிலுள்ள கணவர் தலாக் சொல்லாமலேயே அவரது அந்த மனைவி வேறொரு கணவனை மணந்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள். இந்த திருமணமும் இந்தப்பிறப்பும் ஏற்கத்தக்கதா?


ஒழுக்கத்தையும் வாழ்வின் நெறி முறைகளையும் இம்மியும் பிசகாமல் ஒவ்வொரு துறையிலும் பகுத்துத் தொகுத்து விரிக்கப்பட்டிருப்பது இஸ்லாத்தில் மட்டுமே. எனவே இங்கு ஆளுக்கு ஒரு நீதி இடத்திற்கு ஒரு சட்டம் என்றில்லை. நீங்கள் குறிப்பிடும் ஆணும் பெண்ணும் முஸ்லீமாக இருப்பின் நிச்சயமாக அந்தப் பெண்ணின் மறுமணமும் குழந்தையின் பிறப்பும் ஒழுக்கமுடையதாகவோ ஹலாலானதாகவோ ஏற்கப்படமாட்டாது. அந்தப் பெண் செய்தது முழுக்க முழுக்க விபச்சாரமே. அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.போலி பகுத்தறிவு இரட்டை வேட ஆசாமி: ஈவேரா

"தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது" கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, 'பெண் விடுதலை போராளி' என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்...பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?

Tuesday, December 19, 2006

இந்து வாழ்வுரிமை தமிழ்நாடு 2006 [2]


 • ஏன் கொலையுண்டார் குமார் பாண்டியன்? (தினகரன் -நெல்லைபதிப்பு 19-டிசம்பர்-2006, நெல்லை மாலை மலர் 19/12/2006, தினதந்தி நெல்லை பதிப்பு 19/12/2006)


  குமார் பாண்டியனை வெட்டியபோது அருகிலிருந்தவர் அவரது நண்பர் சேகர். இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குமார் பாண்டியனை தாக்கியவர்கள் 'நீ தானே மசூதி கட்ட தடை
  செய்கிறாய்? ஆம்புலன்ஸ் வாங்க ஏற்பாடு செய்கிறாய் என்றுக் கூறிக் கொண்டு குமார் பாண்டியன் தலை மற்றும் உடலில் சரமாரியாக வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இந்த கொலை
  தொடர்பாக தென்காசி வடகரையைச் சார்ந்த அப்துல்லா (வயது 28) தென்காசி மீரான் மகன் ஹனிபா (வயது 24) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவதாக
  சேக் மீரான் மகன் சுலைமான் என்பவனை போலீஸ் தேடி வருகின்றனர். இந்தக்கொலையில் சில முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதும் அவர்கள் பண உதவி செய்ததும்
  தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொழில் அதிபருக்கு இந்த கொலையில் முக்கிய பங்கு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். அவரை கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம்
  நடத்திய மக்கள் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
  பாரத அன்னைக்கு வாழ்வை பலிதானம் அளித்த குமார் பாண்டியன்


  கோழைத்தனமான படுகொலையை கண்டித்து சங்கரன் கோவிலில் திரளாக திரண்டு மறியல் செய்த பொதுமக்கள்


  மகனை இழந்து தவிக்கும் தந்தைக்கு ஆறுதல் சொல்லும் பொன்.இராதாகிருஷ்ணன்.

  இந்நிலையில் தினகரன் நாளேடு சில செய்திகளை தந்துள்ளது:


  தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தின் எதிரில் உள்ள சன்னிதி பஜாரில் உள்ள தொழுகையிடத்தை ஒரு மசூதியாக மாற்ற முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் இதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் தென்காசியைச் சேர்ந்த தொழில் அதிபர் ரகுமான் பாட்சா என்பவர் குமார் பாண்டியனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் குமார் பாண்டியன் தமது எதிர்ப்பில் தெளிவாக இருந்துள்ளார். இந்நிலையில் குமார் பாண்டியனின் உறவினரான சுப்பிரமணியன் காவல்துறைக்கு கொடுத்த புகாரில் குமார் பாண்டியன் இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் வாங்க ஏற்பாடு செய்திருந்தது பிடிக்காததும் அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார்.

 • கேட்பாரற்ற இராசாத்துபுரம் இந்துக்களின் வாழ்வுரிமை (நன்றி: 'புதுவை சரவணன்', விஜயபாரதம் : 28-04-2006)

  மேல்விசாரம் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள நகரம். இது பேரூராட்சியாக இருந்தது. 2005 இல் நகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த நகராட்சியில் 25000க்கும்
  மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் மேல்விசாரமும் 10000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரமும் உள்ளன. ஆனால் ஒரே நகராட்சியில் உள்ள இந்த இரண்டு
  ஊர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு சொர்க்கத்துக்கும் நரகத்துக்குமான வேறுபாடு.

  மேல்விசாரம்: (முஸ்லீம் பெரும்பான்மை)

  • 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினமும் கிடைக்கும் நல்ல குடிநீர்
  • அனைத்து தெருக்களும் காங்கிரீட் சாலைகள்
  • சோடியம் விளக்குகள்
  • தோல் தொழிற்சாலை அதிபர்கள் பீடி கம்பெனி முதலாளிகள்


  (இடது: இஸ்லாமியர் வாழும் பகுதி) (வலது: இந்துக்கள் வாழும் பகுதி) மேல்விசாரம் நகராட்சி

  இராசாத்துபுரம் (இந்து பெரும்பான்மை)

  தோல் தொழிற்சாலை கழிவுநீர் இராசாத்துபுரம் நீரில் கலக்கும் காட்சி


  • கழிவுநீர் கலக்கும் இடத்தில் போட்ட போர்வெல் நீர் இரண்டு நாளுக்கு ஒருமுறை விநியோகம்
  • கழிவுநீர் தெரு நடுவே பாயும் தெருக்கள்
  • பல தெருக்களில் சாதாரண ட்யூப் லைட் கூட கிடையாது.

  • வறுமையின் பிடியில் வாழும் கூலித்தொழிலாளர்கள் பீடித்தொழிலாளர்கள்


  இராசாத்துபுரம் ஒரு தனி வருவாய் கிராமம். இந்த கிராமத்திற்கென தனியாக கிராம நிர்வாக அதிகாரியும் இருக்கிறார். மக்கட் தொகையும் 10,000க்கும் அதிகமாக இருக்கிறது.
  எனவே தங்கள் ஊரை ஒரு தனி ஊராட்சியாக அறிவித்தால் தங்கள் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முடியும் என கூறுகிறார்கள். மேல்விசாரம் நகராட்சியில் தீர்மானங்கள்
  கூட உருதுவில் நிறைவேற்றப்படுகின்றனவாம். இந்த ஊர் மக்கள். இராசாத்துபுரத்தில் ஆண்களும் பெண்களும் பீடி சுற்றுகிறார்கள். "நாங்கள் முஸ்லீம்களை நம்பி பிழைப்பு நடத்த
  வேண்டி உள்ளது. எனவே அவர்களை எங்களால் எதிர்க்க முடியாது 8000 பேர் வன்னியர் இருக்கிறோம் எனவே பாட்டாளி மக்கள் கட்சி உதவுவார்கள் என நினைத்தோம். ஆனால்
  அவர்களும் முஸ்லீம் வாக்குகளுக்காக எங்களை கைவிட்டு விட்டனர்" என்கிறார்கள் வன்னிய இளைஞர்கள். முன்பு நூறுக்கும் அதிகமான இந்துக்கள் மேல்விசாரத்தில் இருந்ததாகவும்
  அது இன்று கணிசமாக குறைந்து 10 ஆகிவிட்டதாகவும் இதே போல தங்கள் ஊரிலும் இந்துக்கள் துரத்தப்பட திட்டமிட்டு காரியங்கள் நடப்பதாகவும் 70 வயது மேற்பட்ட
  முதியவர்கள் வருத்தத்துடன் கூறினர். வாலாஜா பகுதியில் உள்ள பிரபல பத்திரிகை நிருபர்களிடம் அப்பாவியாக புதுவை சரவணன் நீங்கள் மேல்விசாரம் சென்றிருக்கிறீர்களா என்றால் மேலும் கீழும் ஏற இறங்க பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் அங்கே எப்படி போனீங்க என்றார்களாம். மேல் விசாரம் - இராசாத்துபுரம் குறித்து செய்தி வந்தால் அந்த பத்திரிகைகளை புறக்கணிக்க ஜமாத் உத்தரவு இருப்பதால் பொதுவாக பத்திரிகையாளர்கள் வெளியே நின்று நகர சபை தலைவர் சொல்வதை அப்படியே போட்டுவிட்டு விலகிவிடுவார்களாம். தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு நிலம் கூட இன்று சாதிக்பாட்சா நகர் ஆகிவிட்டதாம்.  நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது இராசாத்துபுரம் ஊராட்சியாக்க அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து மக்கள் வைத்த தட்டி

  இப்போது இந்த மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரங்களை காப்பாற்ற போரிடுகிறார்கள். காஷ்மீர் அகதிகளுக்கும் இராசாத்துபுரம் இந்துக்களுக்கும் அதிகம் வேறுபாடில்லை.
  மேல்விசாரம் நகராட்சியின் 18 வார்டுகளில் 14 வார்டுகள் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரத்திலும் 4 வார்டுகள் மட்டுமே இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரத்தில் உள்ளன. இந்த நான்கு வார்டுகளுக்கும் தேர்தலை இம்முறை இவ்வூர் மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்வுரிமை இழந்து தவிக்கும் தமிழ் இந்துக்களின் மனித உரிமைகளுக்கு குரல்
  கொடுக்க அரசியல் கட்சி எதுவுமே முன்வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 • விடுதலை நாளல்ல சைத்தானின் நாள் : காந்தி கிராமத்தில் மதப்பிரச்சாரம் (குமுதம் ரிப்போர்ட்டர் 24-8-2006)

  2006 ஆகஸ்ட் 15 தேதியன்று அதிகாலை ஆறு மணிக்கு கரூர் காந்தி கிராமம் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளைக் குறிவைத்து கரூர் சி.எஸ்.ஐ துதி மண்டபத்தில்
  இயங்கிவரும் முழு இரவு ஜெப ஐக்கிய சபையைச் சேர்ந்தவர்கள் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள். 'மதம் மாறுங்கள் இல்லையேல் மரிப்பீர்கள்' என கதவுகளை தட்டி எழுப்பி கூறி மக்களை கடுப்பேற்றியிருக்கிறார்கள். சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தை கொண்டாட தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை அணுகி இது சுதந்திர தினமல்ல கொண்டாடாதீர்கள் என கூற அந்த இளைஞர்கள் காலையிலேயே கடுப்பேற்றாதீர்கள் என கூறி விரட்டியிருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து கிளம்பிய அவர்கள் காந்தி கிராமத்தின் இன்னொரு பகுதிக்கு சென்று தங்களுடைய விஷமத்தனமான பிரச்சாரங்களை தொடர்ந்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்தமாக காந்தி கிராம மக்களை கொதிப்படைய செய்திருக்கிறது. அவர்கள் இந்த கும்பலை சூழந்துக்கொண்டு இந்த பிரச்சாரத்தை நிறுத்த சொல்லியிருக்கிறார்கள். அதற்கு "இது எங்களது உரிமை. உங்களை சாத்தான் ஆண்டு கொண்டிருக்கிறான். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கடைசி காலத்தில் கஷ்டமான காலத்தில் இருக்கிறீர்கள். விரைவில் பெரிய துன்பங்களுக்கு ஆளாகப்போகிறீர்கள். எங்கள் தேவனிடம் நம்பிக்கை வையுங்கள்" என அவர்களிடமே மதப்பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு போலிஸ் வந்து இரு தரப்பினரிடமும் புகார்களை வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்கள்.

 • 11 வயது சிறுவனுக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் இயங்கும் மாதா இல்லத்தில் வார்டன் செய்த கொடுமை. (குமுதம் ரிப்போர்ட்டர் 24-8-2006)

  நவீன்குமார் சுகந்தி என்பவரின் மகன். அவரது தந்தை நாகராஜ். பெற்றோரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். கோவை காந்திபுரம் டிபார்ட்மெண்ட்
  ஸ்டோ ரில் பணி புரியும் சுகந்தி வறுமை சூழலால் தம் மகனை காரமடை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாதா காப்பகம் எனும் இல்லத்தில் தங்கி படிக்க வைத்திருக்கிறார்.
  கோவையில் உள்ள முக்கிய கிறிஸ்தவ தேவாலயத்தில் இயங்கிவரும் சிறார் காப்பகம் இது. நவீனின் பாட்டி பார்க்க வந்த போது காப்பக வார்டன் இம்மானுவேல் தம்பி இன்றைக்கு
  பார்க்க முடியாது நாளைக்கு வாங்க என்றிருக்கிறார். மறுநாள் சுகந்தியுடன் நவீனின் பாட்டி வந்து கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற போது வந்த சிறுவனின் முகம் அப்படி வீங்கி
  இருந்ததை கண்டு அதிர்ந்துவிட்டனர் பாட்டியும் தாயும். வார்டன் இம்மானுவேல் தம்பி சர்வ சதாரணமாக பையன் கீழே விழுந்துவிட்டான் என்று சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு வந்து
  குளிர் சுரத்தில் நடுங்கிய சிறுவன் இரவில் 'ஐயோ அடிக்காதீங்க' என அலறியிருக்கிறான். தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றதும் பார்த்ததுமே இது போலீஸ் கேஸ் என்று
  சொல்லி விட்டார்கள். பிறகு விசாரித்ததில் பையனை இம்மானுவேல் தம்பி கொடூரமாக அடித்ததும் தலையை சுவறில் மோதியதும் ஐந்து நாட்கள் ரூமில் அடைத்து போட்டு அடித்ததும் வெளிவந்திருக்கின்றன. வெளியே சொன்னால் தொலைத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். நவீன்குமாரின் தாய் நிருபரிடம் பேசியபோது, தான் கவனிக்கமுடியாத சூழ்நிலையில் பையனை நல்ல இடம் என்று நினைத்து சேர்த்ததாகவும் ஆனால் இத்துடன் தப்பியதே புண்ணியம் எனவும் கண் கலங்க கூறியிருக்கிறார். இம்மானுவேல் தம்பியை கைது செய்த காரமடை போலிஸ் "அவன் சைகோ மாதிரி தெரியலை. பையன் பொய் பேசியதால அடித்தேன் அப்படிங்கிறான். காப்பகத்தில் மற்ற சிறுவர்களும் சின்ன விஷயத்திலும் அவன் ரொம்ப கண்டிப்பு என சொல்லுதுக. அதனால அவன்கிட்ட ஆரம்பகட்ட விசாரணையை மட்டும் முடிச்சுட்டு ரிமாண்ட் செஞ்சுட்டோம். அங்கிருந்த சிறுவர்களை அவங்கவங்க வீடுகளில் உறவினர் கிட்ட சேர்த்துட்டோம்." என்றனர். இந்து ஆலய சொத்துக்களை தனது அசுர பிடியில் வைத்து ஆண்டு அனுபவிக்கும் அரசு, கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில், கோவில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊருக்கு ஒரு நலிவுற்ற இந்து சமுதாய சிறார் காப்பகங்களை நவீன வசதிகளுடன் கட்டி அங்கு நல்ல காப்பளார்களாக இந்து இளைஞர்களை யுவதிகளை நியமித்திருந்தால் இந்த கொடுமையை இச்சிறுவன் அனுபவிக்க வேண்டி வந்திருக்குமா?

Monday, December 18, 2006

தமிழ்நாட்டில் இந்து வாழ்வுரிமை - 2006


கடந்த சில காலமாக இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்,வெறுப்பியல் சம்பவங்கள், இந்துக்களின் பாதுகாப்பின்மை ஆகியவை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. திமுக அரசின் இந்து விரோத மனப்பான்மை மற்றும் இந்து விரோத
போலி-மதச்சார்பின்மை அரசியலின் இயல்பும் இந்த வன்-கொடுமைகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்க காரணமாகியுள்ளது. பல இடங்களில் இந்துக்கள் மீது
பண வலிமையால் மதமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை இந்துக்கள் கட்சி வேறுபாடின்றி எதிர்த்துள்ளனர். இந்த செய்திகளின் தொகுப்பே இது. என்னிடம்
கிடைத்த தகவல்களின் ஒழுங்கு படுத்தப்படாத தொகுப்பு இது. இது முழுமையான தொகுப்பு அல்ல. பொதுவாக இந்துக்களில் அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்வுரிமைக்கு
பாதுகாப்பற்ற சூழலை உணருகின்றனர்.


 • இந்து இநளைஞர்கள் மர்மமான முறையில் மரணம்: முன்னாள் அமைச்சர் குமுறல்

  மர்மமாக மரணமடைந்த நீலகண்டனும் முருகனும்

  தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் கறம்பக்குடி மற்றும் ஆவணம் கைகாட்டி கிராமங்களைச் சார்ந்த இரு இந்து இளைஞர்கள் நீலகண்டனும் முருகனும் ஆவணம் அப்துல்
  அஜீஸ் என்பவர் இல்ல திருமணத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற போது அங்கே மர்மமான முறையில் மரணமடைந்தனர். இந்த இளைஞர்களின் மரணத்தில் ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த மக்களை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். (நக்கீரன் 29-11-2006)

 • இந்து முன்னணி தலைவர் வெட்டிக்கொலை.
  நெல்லை மாவட்டம் தென்காசி மலையான் குளத்தைச் சார்ந்த சொர்ண தேவர் மகன் குமார பாண்டியன். இவர் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக இருந்துவந்தார்.
  17-டிசம்பர்-2006 இரவு அவர் வீட்டுப்பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

 • குமரி மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி. 'தீ வைத்து எரிப்போம்' என மிரட்டல் [மாலை மலர்: 18-12-2006 : நாகர்கோவில் பதிப்பு]
  பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி. 17-டிசம்பர்-2006 அன்று இரவு குளச்சல் துறைமுகம் சந்திப்பில் சென்று கொண்டிருந்த காரை ஒரு கும்பல்
  மறித்தது. ஒருவன் காரின் பின்பக்கத்தை தாக்கி உடைத்தான். 'குளச்சல் பஸ் நிலைய பொது கூட்டத்தில் நம்மை தாக்கி பேசியவன் இவர் தான். இவரை எரித்து கொல்லவேண்டும்
  என ஒருவன் ஆவேசமாக கூறினான். அவருடன் கார்டிரைவரும் மகேஷ் என்பவரும் இருந்தனர். எனவே அந்த கும்பலில் இருந்து எம்.ஆர்.காந்தி ஒரு வழியாக தப்பினார். இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி விசாரணை நடத்தி வருகிறார்.
 • இந்துக்களை தாக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இயங்குகிறதா அரசு? [ஜூலை-செப்டம்பர் 2006]

  பொதுவாகவே திமுக அரசு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவானதாக கருத்து இருப்பதால் காவல்துறையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்க
  ஆரம்பித்துள்ளன. ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியை கைது செய்ய போன காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். (தினகரன் ஜூலை 20
  2006)மேலைப்பாளயத்தைச் சார்ந்த அல் உம்மா பயங்கரவாதியை பிடிக்கச்சென்ற ஏட்டு ஏசுதாசன் தாக்கப்பட்டார். கருங்குளம் துரைப்பாண்டி என்ற இந்துவை தாக்கி கொள்ளை
  அடித்த கும்பலை சேர்ந்தவன் காடைஹாஜா. இவன் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவன், இவன் மீது கொலை அடிதடி போன்ற பலவழக்குகள் உள்ளன. இவன்
  இருப்பது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஏட்டினை அவன் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டான். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

  தினகரன் நெல்லை பதிப்பு ஜூலை 20 2006

  தினமலர் 23-ஜூலை-2006 வெளிவந்த செய்தியின் படி ஜூலை 2006 அன்று கோவையில் முக்கிய இடங்களைத் தகர்க்கவும் இந்து இயக்கத்தலைவர்களை கொலை செய்யவும்
  திட்டமிட்டிருந்த சதித்திட்டம் ஒன்றை கோவை காவல்துறையினர் கண்டுபிடித்து முறியடித்ததாக செய்திகள் வெளியாயின. கையெறி குண்டு (பெரிய சைஸ், வெங்காய வெடி
  போன்றது), 400 கிராம் பொட்டாசியம் குளோரைட் மிக்சர், கண்ணாடி துகள்கள், இரு சக்கர வாகனங்களுக்கான "பேரிங்' பால்சுகள், இரு பைப் குண்டுகள் பதுக்கி
  வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் கரன்சின்ஹா, சட்டம்&ஒழுங்கு துணைக்கமிஷனர் சண்முகவேல் தலைமையிலான
  போலீசார் இரவோடு இரவாக ஆத்துப்பாலம், கரும்புக்கடை, கோட்டைமேடு, போத்தனும்ர் பகுதிகளில் உள்ள சந்தேகத்திற்குரிய வீடுகளை சோதனையிட்டனர். இதில், தீவிரவாத
  கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் மாலிக் பாஷா, ஆருண் பாஷா, கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டைச் சேர்ந்த சம்சுதீன், ரவி(எ) திப்பு சுல்தான், ரகுமான் ஆகியோர்
  பிடிபட்டனர். கோவை மாநிகர "மேப்', இந்து இயக்க நிர்வாகிகளை பற்றிய குறிப்புகள், சில நோட்டீஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேப்பில் எட்டு இடங்கள் பேனாவால்
  வட்டமிடப்பட்டிருந்தன. இந்த இடங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
  இது குறித்த மற்றொரு செய்தி:

  ஆனால் இதனையடுத்து உதவி நுண்ணறிவுப்பிரிவு இரத்தினசபாபதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
  இது குறித்த மற்றொரு செய்தி:

  மட்டுமல்ல, காவல்துறையினர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர். யாரை காப்பாற்ற செயல்படுகிறது திமுக அரசு? என்கிற கேள்வி எழுந்துள்ளது.  இதே திமுக அரசின் முந்தைய ஆட்சியின் போது (1998 இல்) நடந்த இஸ்லாமிய பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர் என்பதும்
  அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு அறிக்கைகளை உதாசீனப்படுத்தியதாலேயே இவை நடந்தேறின என பரவலான கருத்து நிலவுவதும்
  குறிப்பிடத்தக்கவை. இவை இந்துக்களிடையே அச்ச உணர்வையும் பாதுகாப்பற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. திமுக அரசு அனைத்து தளங்களிலும் அனைத்து தரப்பு
  இந்துக்களுக்கும் எதிரான தன்மையுடனேயே இயங்குகிறது என்னும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சங்கரன்கோவில் இந்து முன்னணி தலைவர் கொலை, ஏறக்குறைய அதே
  நேரத்தில் குமரி மாவட்ட பாஜக தலைவர் கொலை முயற்சி, புதுக்கோட்டை இந்து இளைஞர்கள் கொலை ஆகியவை ஜிகாதி அமைப்புகள் 1990-98களில் நடத்திய அதே
  கொலைவெறி தாக்குதல்களை மீண்டும் தைரியத்துடன் தொடங்கிவிட்டதையும், இதற்கு இன்றைய அரசுகளின் போக்கு துணை போகும் சூழலை உருவாக்கியுள்ளதையும் காட்டுகிறது.
 • மதுரை சிறையில் இந்து கைதியை இஸ்லாமிய பயங்கரவாத கைதிகள் தாக்குதல் (தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் 26-11-2006)

  பயங்கரவாதி இமாம் அலியின் கூட்டாளி கைதிகள் ஆறு பேர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டனர். இவர்கள் மற்ற கைதிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டமையால்
  இந்த நடவடிக்கையை சிறை அதிகாரிகள் எடுக்க வேண்டிவந்தது. முருகானந்தம் எனும் ஆயுள் கைதி இவர்களால் தாக்கப்பட்டார். சககைதிகளை மட்டுமல்லாது சிறை
  ஊழியர்களையும் இந்த பயங்கரவாத இஸ்லாமிய கைதிகள் தாக்குவது வழக்கம். சிறை DIG எஸ்ரா இந்த மாதிரி விரைவாக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் அவசியமானவை
  என தெரிவித்தார்.

 • இந்து கோவில் உடைப்பு [23-11-2006 : தினகரன் குமரி மாவட்ட பதிப்பு]
  சுசீந்திரத்தை அடுத்த இரவிபுதூரில் செல்லப்ப பிள்ளை என்பவரின் குடும்ப கோவில் பத்ரகாளி அம்மன் கோவில். மர்ம நபர்களால் இக்கோவிலின் படிக்கட்டுகள் கோவில் கதவு
  ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன. இதே கோவிலில் இரண்டுமாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் புகுந்து சேதப்படுத்தி கொள்ளை அடித்திருந்தனர். அடிக்கடி இக்கோவில் குறி
  வைத்து தாக்கப்படுவது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  உடைக்கப்பட்ட இந்து கோவில்

 • ஜெபகூடம் விவகாரம் : வெள்ளமோடியில் சத்தியாகிரகம் [குமரி மாவட்டம் : தினகரன் குமரிமாவட்ட பதிப்பு டிசம்பர்-18-2006]

  ஜெபகூடத்துக்கு எதிராக மக்கள் சத்தியாகிரகம்

  குளச்சல் டிச.18: வெள்ளமோடியில் ஜெபகூடத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். வெள்ளமோடி முந்திரி ஆலை ரோட்டில் பாப்ரிஸ்ட் காம்பவுண்ட் பெயரில் ஒரு
  கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் கடந்த 2 மாதங்களாக கிறிஸ்தவ ஜெபக்கூடம் இயங்கி வருகிறது. தேங்காய் கொப்பரை தயாரிக்க என அனுமதி பெற்ற கட்டிடத்தில்
  ஜெபக்கூடம் நடத்துவதாக அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 • மாணவர்களிடையே மதத்தை பரப்பும் நோட்டீஸ் : தினமலர் : 9-3-2006 மதுரை பதிப்பு

  தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் நடந்து வருகையில் வத்தலகுண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் இப்பள்ளியின்
  பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களான சந்திரசேகர், செல்வம், தவராஜ் ஆகியோர் இந்நோட்டீசை விநியோகித்துள்ளனர். இது குறித்து காவல்துறையிடம்
  புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் மோகன் அருணாசலம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மதத்தை பரப்பும் விதமாக
  செயல்பட்ட இந்த ஆசிரியர் மூவரையும் டிஸ்மிஸ் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது. இம்மூவரின் நடவடிக்கையை கண்காணிக்கத் தவறிய தலைமையாசிரியர் மீது முதன்மை கல்வி
  அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது.

 • இந்துக்கள் வாழும் கிராமத்தில் மதமாற்ற அமைப்பு : மக்கள் எதிர்ப்பு (துக்ளக், 20-12-2006)

  கிராமப்புறங்களில் நூதனமுறையில் மதமாற்றம் செய்யும் முயற்சி நடப்பதாக கோவை மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
  இடையார் பாளையம், சின்னகுயிலி, லட்சுமி நாயக்கன் பாளையம், செலக்கரிச்சல், அக்கநாயக்கன் பாளையம், வடவள்ளி, வேலப்பநாயக்கன் பாளையம் ஆகிய கிராமங்களை சார்ந்த
  மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய மனுவில் வெளிநாட்டு உதவியுடன் இடையர்பாளையம் போதகம் பட்டி பகுதியில் கிறிஸ்தவ
  மத பிரச்சார அமைப்பு நிறுவனம் அமைய உள்ளதாகவும் இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கிறிஸ்தவ மதப்பிரச்சார அமைப்பினால் அப்பகுதி அமைதி கெட வாய்ப்பு
  உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக என பல்வேறுகட்சியினரும் கூட கிறிஸ்தவ மதப்பிரச்சார அமைப்பு இங்கு அமைவதை
  விரும்பவில்லை என கூறியுள்ளனர். மக்கள் எதிர்ப்பினை அடுத்து கிறிஸ்தவ மத பிரச்சார அமைப்பு அடிக்கல் அகற்றப்பட்டுள்ளது என்றாலும் வாரம் தோறும் கிராம வாரியாக அங்கு
  அத்தகைய அமைப்பு வருவதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என கிராம மக்கள் கட்சி பேதமின்றி முடிவு செய்துள்ளனர்.

Saturday, December 16, 2006

கிறிஸ்துமஸ் மர்மத்தொடர் 1

ஒரு கிறிஸ்துமஸ் மர்மத்தொடர்-1


ஊடகங்களில் ரஜ்னீஷ் என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். 1980களில் ஓஷோ டைம்ஸ் 'ரஜ்னீஷ்' என ஒரு நியூஸ் லெட்டராக
இது வந்த போதே அவர் எங்கள் வட்டாரத்தில் பரிச்சயப்பட்டிருந்தார். இன்னமும் அந்த பழைய பிரதிகள் இருக்கின்றன. அப்போதைய இந்து தரும எதிர்ப்பாளர்களுக்கு ரஜ்னீஷ் சந்திர
மோகன்/ஆச்சார்ய ரஜ்னீஷ்/பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்/ஓஷோ இந்து தருமத்தை சாட நல்ல வாய்ப்பாக இருந்தார். ராணி முதல் ப்ரண்ட்லைன் வரை இந்த தாக்குதல் நடந்தது. துக்ளக்
சோ ரஜ்னீஷை 'மோசடி ஆசாமி' என்றார். குமுதம் அரசு கேள்வி-பதில்களில் ரஜ்னீஷ் மொழிகளும் அவரது கதைகளும் சில சமயங்களில் பெயர் சொல்லியும் சொல்லாமலும்
பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் அவரை கிண்டலாக நினைவூட்டும் விதத்தில் 'ஆச்சார்ய பூனேஷ்' என்கிற 'போலி சாமியார்' வைத்து ஒரு சித்திர கதையும் வெளியிட குமுதம் மறக்கவில்லை. இல்-லஸ்ட்-ரேட்டட் வீக்லி அவரது கம்யூன் நிர்வாண படங்களை தேடிப்பிடித்து போட்டது. 1980களில் வெளிவந்த 'சயின்ஸ் இன் யுஎஸ்எஸார்' எனும் சோவியத் பத்திரிகை எழுதியது: சி.ஐ.ஏ கையாளாக விளங்கி பின்னால் சி.ஐ.ஏயால் வெளித்தள்ளப்பட்ட ரஜ்னீஷின் நூல்களுக்கு டெல்லி நூல் கண்காட்சியில் எவ்வித ஈர்ப்பும் இல்லை.

எங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓஷோ (அப்போது பகவான் ரஜ்னீஷ்) படம் இருந்தது என் நண்பர்கள் மத்தியில் பெரும் ஸ்காண்டலாக பேசப்பட்டது (செக்ஸ் சாமியார் படத்தை அவுங்க வீட்ல வச்சுருக்காங்கடா). ஆனால் ரஜ்னீஷ் தாத்தா இப்போது அமைப்பு அங்கீகாரம் பெற்றுவிட்டார். காலம்தான் எப்படி மாறுகிறது!பின்னால் கோவை ஞானி ஓஷோவின் ஈர்ப்பு சக்தியில் மார்க்சியத்தின் உள்ளொளி இருப்பது போல எழுதுகிற ஒரு காலம் வரும் என 1980களில் என்னிடம் யாராவது சொன்னால் நம்பியிருப்பேனா? அல்லது நோன்பு கஞ்சிக்கும் மதவாக்கு வங்கிக்கும் கையேந்தும் மு.க தனது மஞ்சள் துண்டு பகுத்தறிவுக்கு ஓஷோவை துணைக்கு அழைப்பார் என்றால்? இது குறித்து விரிவாக பின்னால் எப்போதாவது! அமெரிக்காவை அந்த கிழி-கிழித்தவர் பெயரில் வரும் டைம்ஸின் பின்னட்டையில் கொக்கோகோலா விளம்பரம்! 'பழைய நினைப்புடா பேராண்டி' என எங்கோ போய்விட்டேனா சரி விஷயத்துக்கு வருகிறேன்.


1995 டிசம்பர் ஓஷோ டைம்ஸில் ஒரு செய்தி வெளியானது. ஏசு உண்மையில் ஜெஸிக்கா என்கிற பெண் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருப்பதாக. அந்த ஜெஸிக்கா ஒரு
ஹிந்து-பௌத்த மரபுகளின் அம்சங்கள் கொண்ட போதனைகளை கற்பித்த ஞான பெண்மணி எனவும் அவரது போதனை தோல் சுருள்கள் (scrolls) கிடைத்திருப்பதாகவும் அந்த செய்தி
கூறியது. பின்னர் ஒரு சில செய்தி தாள்களில் இதே செய்தி வந்தது.


ஏசு ஒரு பெண்! ஜீசஸ் உண்மையில் ஜெஸிக்கா?


பிறகுதான் 'ஓஷோ டைம்ஸ்' அந்த செய்தி ஒரு பகடியாக உருவாக்கப்பட்டது என்று வெளியிட்டது. அத்துடன் ஆனால் ஜெஸிக்கா ஏன் ஒரு வரலாற்று சாத்தியமாகவே இருக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. சுவாமி சைதன்ய கீர்த்தி ஆசிரியராக இருந்த காலம் அது. விஷயம் என்னவென்றால் அந்த டிசம்பர் இதழிலேயே இது ஒரு பகடி என்பதை ஓஷோடைம்ஸ் சூசகமாக தெரிவித்திருந்தது. குழந்தை ஏசுவின் பழைய ஓவியத்தில் ஒரு நவீன பெண்கள் காலணி தொங்குவதை பாருங்கள். என்றாலும் ஊடகங்கள் ஒரு மிகமுக்கியமான ஆங்கில நாளேடு உட்பட இந்த விஷயத்தை செய்தியாக ஓஷோ டைம்ஸிலிருந்து எடுத்து வெளியிட்டதில் ஏமாந்துதான் போயிருந்தன.
இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்! 'ஜீஸஸ் உண்மையில் ஜெஸிக்கா என்ற பெண்' என்கிற 'உண்மையை' கண்டடைந்தாக ஓஷோ டைம்ஸில் வெளிவந்தது ஒரு கற்பனையான ஹார்வார்ட் பேராசிரியர் (டாக்டர் ராச்சேல் மெயர்ஸன்) பத்து வருடங்களுக்கு பின்னால் ராபர்ட் லாங்டன் என்கிற ஹார்வர்ட் பேராசிரியர் பாத்திரத்தை வைத்துதான் ஒரு கலக்கு கலக்கினார் டான் ப்ரவுன்.


சரி...ஏசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் உண்மையில் உண்டா? ஏசு கதையின் உள்ளே இருக்கும் தொன்ம முடிச்சுகள் கட்டவிழ கட்டவிழ உள்ளே இருக்கும்
வெற்றிடம் நம்மை திகைக்க வைக்கிறது. இன்று வரை ஏசு வாழ்ந்தார் என்பதற்கு எவ்வித அகழ்வாராய்ச்சி ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல. அந்த அகழ்வாராய்ச்சி ஆதாரங்களை உருவாக்கிட கிறிஸ்தவ சபைகளில் புராதனமானதும் பூதாகாரமானதுமான கத்தோலிக்க சபை முதல் இன்றைய எவாஞ்சலிஸ்ட்கள் வரை இடையறாது முயன்று வருகின்றனர். ஆனால் அவை தொடர்ந்து அறிவியலால் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை. இதில் லேட்டஸ்டாக ஓன்றை விவரித்தால் ஏசுவுக்கு அகழ்வாராய்ச்சி ஆதாரம் உருவாக்குவதில் எப்படிப்பட்ட தீவிரத்துடன் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.'யாகோவ் பார் யோஸூப் அகுதி தி யெஷூவா' 'ஏசுவின் சகோதரன் ஜோசப்பின் மகன் ஜேம்ஸ், ' என தெள்ளத்தெளிவாக வலமிருந்து இடமாக ஓடிய அராமிக் எழுத்துக்கள்
பொறிக்கப்பட்ட வாசகம் அடங்கிய சுண்ணாம்புக்கல் பெட்டி பெரும் பரபரப்பை வரலாற்றாசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஒன்றே கால் அடி அகலமும் இரண்டரை அடி நீளமும் கொண்ட அந்த பெட்டி எலும்புகள் போடும் பெட்டி. யூதர்கள் இறந்தவர்களை குகையறை அடக்கதலங்களில் வைப்பர். ஓர் ஆண்டு கழிந்ததும் எலும்புகளை எடுத்து இத்தகைய பெட்டிகளில் போட்டு வைத்துவிட்டு அந்த அடக்கதலத்தை பிறருக்கு பயன்படுத்துவர். (செல்வந்தர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.) அக்டோபர் 2002 இல் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியது இயற்கைதான். ஏனெனில் ஏறத்தாழ ஏசு வாழ்ந்து சிலுவையில் அறைபட்டதாகக் கூறப்பட்ட காலத்தை மிக ஒட்டியதாக இந்த எலும்புப்பெட்டியின் (ossuary என்பார்கள்) காலம் கணிக்கப்பட்டது.


ஏசுவின் சகோதரனின் எலும்புப் பெட்டி?ஏசுவின் சகோதரன் ஜோசப்பின் மகன் ஜேம்ஸ்


Biblical Archaeology Review எனும் ஆராய்ச்சி இதழில் நவம்பர்/டிசம்பர் 2002 இல் இது வெளிவந்தது என்றாலும் இதற்கான தளம் வெகுமுன்னதாகவே உருவாக்கப்பட்டுவிட்டது.
அதே ஆண்டு மார்ச் இல் வெளியான நூலான 'The brother of Jesus' இந்த 'கண்டுபிடிப்பை'க் குறித்து கூறுகிறது. இதன் ஆசிரியரான பென் விதரிங்க்டன் கெண்ட்டூகியில் உள்ள அஸ்பரி தியாலாஜிக்கல் செமினரி (கிறிஸ்தவ மத கல்விசாலையில்) 'புதிய ஏற்பாடு' விரிவுரையாளராவார். இதனைக் கண்டுபிடித்தவர் ஆந்த்ரே லிம்ரே என்கிற பழங்கால எழுத்துக்களினை ஆராய்ச்சி செய்பவர் ஆவார். இவர் இந்த 'கண்டுபிடிப்பை' எந்த அகழ்வாராய்ச்சி களத்திலும் நிகழ்த்திடவில்லை. மாறாக அதனை பழங்கால கலைப்பொருட்களை சேகரிக்கும் ஒரு தனிப்பட்ட நபரிடம் இருந்து வாங்கியிருந்தார். அந்த நபருக்கு 30 வருடங்களுக்கு முன்னால் தம்மிடம் இதனை விற்றவரின் பெயரோ அடையாளங்களோ நினைவு இல்லாமல் போயிற்றாம். இஸ்ரேலிய நிலவியல் வல்லுநர்களால் இந்த பெட்டியின் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் என கணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜான் காப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தொல்-எழுத்து ஆய்வாளர் கையில் மக்கார்தர் இந்த அராமிய எழுத்துருவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தன்மையுடன் இருப்பதாக சான்று வழங்கினார். இந்த விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் 'நேஷனல் ஜியாக்ராபிக்' கூட தனது 2003 ஏப்ரல் செய்தியில் இந்த பெட்டி வல்லுநர்களால் ஏற்கப்படும் நிலைக்கு அருகாமையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது. அதே நேரத்தில்தான் ஐயங்கள் மெதுவாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன.


இஸ்ரேலிய அரசு இதனைத் தொடர்ந்து இரண்டு வல்லுநர் குழுக்களை அமைத்தது. ஒன்று எழுத்துருவின் தன்மையையும் எழுத்து நடையையும் ஆராய்ந்து அதன் பழமையை
கணக்கிடுவதற்கு மற்றொன்று அந்த எழுத்துக்களின் மீது படர்ந்துள்ள மென்படலத்தை ஆராய்ந்து அதன் காலத்தை கணிக்க. ஜூன் 17 2003 இல் இஸ்ரேலிய அகழ்வாராய்ச்சி
அறிஞர்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் தெள்ளத்தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது இந்த 'ஏசு பகுதி ஒரு போலி' என்பதுதான் அது.
அந்த அறிக்கையின் முடிவு கூறியது:

"The ossuary itself is undoubtedly genuine; the well-executed and formal first part of the inscription is a holographic original by a literate (and wealthy) survivor of Jacob bar Yosef, probably sometime during the Herodian period. The second part of the inscription bears the hallmarks of a fraudulent later addition, probably around the 3rd or 4th centuries, and is questionable to say the least."
இந்த பெட்டி 2000 ஆண்டுகள் பழமையுடையதாக இருப்பினும் அதில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பின்னால் சேர்க்கப்பட்டவை - அந்தகால எழுத்துக்களின் நகலாக உருவாக்கப்பட்டவை என அந்த முடிவு கூறியது.


இந்த மோசடி வேலை மிகத்திறமையாக மேற்கொள்ளப்பட்டதாகும். உதாரணமாக இந்த பெட்டியில் இருக்கும் 'ஜோசப்பின் மகன் ஜேம்ஸ்' என்பது உண்மையாகவே இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்ததுதான். அக்காலத்திற்கே உரிய வெட்டுத்தடங்கள், வளைவு செங்குத்தாக அமைதல் ஆகியவை உள்ளதுடன் வாக்கியம்
முடிவடைவதைக் காட்டும் தாழ்த்தி நீளப்படுத்திவிடப்பட்டுள்ள வாக்கிய முற்றெழுத்தையும் காணலாம்.


உண்மையான எழுத்துக்கள்: ஜோசப் பகுதி


பொய்யான எழுத்துக்கள்: ஏசு பகுதி

ஆனால் அதற்கு பின்னர் 'ஏசுவின் சகோதரன்' எனும் எழுத்துக்கள் சரியான உயரங்கள் இல்லாதிருப்பதுடன் வளைவுகள் செம்மையான வளைவுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளதைக்
காணலாம். அத்துடன் எழுத்துருக்களின் ஏற்ற இறக்கம் சரியான முறையில் இல்லை என்பதையும் காணலாம். வாக்கிய முற்றெழுத்து எவ்வித முற்றெழுத்து தன்மையும்
இல்லாதிருப்பதையும் காணலாம். ஆனால் இத்தனை கூர்ந்து ஆராய்ச்சியாளர்கள் இதனை வெளிப்படுத்தியிராவிட்டால், நம்பிக்கையால் தூண்டப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட இதனை
ஏசுவின் சகோதரனின் எலும்புப்பெட்டி என்பதற்கான ஆதாரமாக கொள்ள தயாராகிவிட்டனர் என்பதனைக் காணவும்.


இதனை ஆந்த்ரேக்கு விற்ற ஓடட் கோலன் ஏற்கனவே கலைப்பொருட்கள் வரலாற்று தொடர்பான பொருட்களை அருங்காட்சியகங்களுக்கு விற்பதில் தகிடுதத்தம் செய்துள்ளவர்
என்பதனை எரிக் மெயர்ஸ் எனும் அகழ்வாராய்ச்சியாளர் வெளிப்படுத்தினார். தொடர்ந்து கோலனின் இடத்தில் இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பல
போர்ஜரி வரலாற்றுப்பொருட்கள் வெளிவந்தன.


துரின் துணி முதல் எலும்புப் பெட்டி வரையாக இந்த தொடர்ச்சியான மோசடி வேலைகள் ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருவதை நாம் கவனிக்கலாம். ஏசுவின் வாழ்க்கைக்கு
வரலாற்று ஆதாரம் தேடவேண்டிய அவசியம் கிறிஸ்தவத்தின் தொடக்ககால வரலாற்றிலிருந்தே இருக்கிறது. ஏன்? இந்த தீவிர வேட்கை? எந்த பற்றாக்குறையை தீர்க்க
நூற்றாண்டுகளாக தொடரும் இந்த மோசடி வேலைகளின் அணிவகுப்பு? இதற்கான விடைகளை இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.


அதற்கு முன்னால் கீழே இருக்கும் 'தோமையார் (தாமஸ்) கையால் செதுக்கப்பட்டதாக' கத்தோலிக்க சபை பிரம்மாண்ட விளம்பரத்துடன் முன்வைக்கும் இந்த சிலுவையை பாருங்கள்.
அதில் இருக்கும் தெளிவான பிற்கால தமிழர் கலைத் தாக்கத்தினையும், தோமையார் சர்ச்சின் இன்றைய பகுதியிலிருந்து 1960களில் கிடைத்த சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் துறை அறிக்கையையும் பாருங்கள். ஏசுவின் எலும்பு பெட்டி போன்ற நேர்த்தியான மோசடிகளை உருவாக்கியவர்களுக்கு இந்தியா போன்ற நாடுகளில் மத்தியகாலத்திற்கு அப்பாலான சிற்பங்களை கூசாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு செல்வது அப்படி ஒன்றும் கடினமான விசயமில்லைதான்!


2000 ஆண்டு பழமையான சிலுவையா இது?

கிறிஸ்தவ வழிபாட்டில் சிலுவை என்பது வழிபாட்டு சின்னமாக ஏற்கப்பட்டதே இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் தான். அதற்கு முன்னதாக சிலுவை வழிபாடு பாகன் மதங்களில்
சூரியவழிபாட்டு சின்னமாக இருந்தது. இந்த சின்னத்தை கிறிஸ்தவத்தில் இணைத்தது ரோம சர்வாதிகாரி கான்ஸ்டண்டைன்தான். ஆக பரங்கிமலையை தாமஸ் மவுண்ட் என
அழைக்கும் பிரகிருதிகள் 2000 வருடத்திற்கு முந்தைய சிலுவை என கூசாமல் கூறும் சிலுவையை சர்வதேச வரலாற்றாசிரியர்கள் முன்னால் வைத்தால் கதை கந்தலாகிவிடும்.
மிகத்தெளிவான மத்திய கால ஐரோப்பிய தாக்கம் கொண்ட சிலுவை அதைச் சுற்றி பிற்கால தமிழர் கலைத் தாக்கம் கொண்ட அலங்கார சுற்று - இதனை 2000 வருடங்களுக்கு
முன்னர் தோமையார் வடிவமைத்தார் என்றால் கேட்டுக்கொண்டு தலையாட்ட எல்லோரும் என்ன இளிச்சவாய் இந்துக்களா?

தொல்பொருள் ஆராய்ச்சி மையப் பதிவேடு 1967 பக்.242
[தொடரும்]


அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!


 • நேஷனல் ஜியாகிராபிக், 2003 ஏப்ரல், Jesus' Brother's "Bone Box" Closer to Being Authenticated
 • நேஷனல் ஜியாகிராபிக், 2003 ஜூன், "Jesus Box" Is a Fake, Israeli Experts Rule,
 • நெடுஞ்சேரலாதன், 'பிருங்கிமலை கிறிஸ்தவர்களின் மோசடி', விஜயபாரதம் 22-12-2006
 • டாக்டர் ரோசே அல்ட்மான், Official Report on the James Ossuary: இஸ்ரேலிய பழம்பொருள் மைய அறிவியலாளர் அளித்த இந்த முழு அறிக்கையையும் படிக்க சொடுக்கவும்:
  இங்கே
 • இங்கே நேஷனல் ஜியாகிராபிக்
 • இங்கே நேஷனல் ஜியாகிராபிக்