அகப்பயணம்

Wednesday, February 28, 2007

சமஸ்கிருதமும் மெடிக்கல் காலேஜும்

கன்ஸ் என்பவர் அழகாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்: "1932 வரை மருத்துவக்கல்லூரியில் சேர வேண்டுமானால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி (Rule). இது
எதற்கு? யார் இதனால் பயன் பெறுவார்கள்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். தினம் தினம் தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி தன் மகனுக்கு சமஸ்கிருதம் சொல்லித்தர
முடியுமா? அதே போல் ஒரு செருப்பு தைக்கும் ஆள், தன் மகளுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தர முடியுமா? ஆனால் சமஸ்கிருத அர்ச்சகர் தன் பிள்ளைகளுக்கு எளிதாக சொல்லித் தரமுடியும். அர்ச்சகர்கள் அனைவரும் பிராமணர்கள். இப்பொழுது புரிந்ததா? இதுவும் Reservation, But in reverse."


சிறிது சிந்திக்கலாம்.சென்னை மருத்துவ கல்லூரியில் இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டது 1842 இல். முதல் மருத்துவர்கள் வந்தது 1852 இல். தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது 1907 இல் மருத்துவராக பட்டம் பெற்றது 1912 இல். மேலும் மெடிக்கல் கல்லூரிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலேயர்கள். இவர்களெல்லாம் சமஸ்கிருதம் படித்தார்கள், சொல்லிக்கொடுத்தார்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். (பம்பாயில் மருத்துவ கல்லூரிக்கும் சமஸ்கிருத வளர்ச்சிக்கும் பணம் கொடுத்த ஒருவர் இருக்கிறார்தான். அவரும் பொற்கொல்லர் வகுப்பை சார்ந்தவர்.)சமஸ்க்கிருதம் கூட அர்ச்சகருக்குதான் தெரிந்திருக்க வேண்டும் என்பது அபத்தம். தமிழ்நாட்டு சூழலில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வைத்தியர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்துதான் இருந்தது. உதாரணமாக வெள்ளாள வைத்திய குலத்தை சேர்ந்த சிறுதொண்டர் தமது இளம் வயதில் எவை எவற்றைப்பயின்றார் என சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.


ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால்
பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் (7.3.3 3662-3666)


புறநானூற்று காலத்தில் யானைப்பாகர்கள் கூட சமஸ்கிருதத்தை யானையை பழக்க பயன்படுத்தினார்கள் என சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு. திருவிதாங்கூர் சாதீயம் தலைவிரித்தாடிய இடம். நிழலுக்கும் காற்றுக்கும் தீட்டு என்று சாதிப் பேய் பேயாட்டம் போட்ட இடம். ஆனால் அங்கு கூட சமஸ்கிருதம் படிக்க ஏழை எளிய தாழ்த்தப்பட்ட நாணுவுக்கு முடிந்தது. அது யார் நாணு என்கிறீர்களா? அதுதான் ஸ்ரீ நாராயண குரு சுவாமிகள். ஈழவர் சமுதாயம் எத்தனை தாழ்த்தப்பட்டு அடங்கி கிடந்தது. அவர்களுக்கே கூட சமஸ்கிருதம் படிக்க முடிந்தது. அவருக்கு சமஸ்கிருதம் படிப்பித்தவர் யார் அந்தணரா? இல்லை. தொடக்க சம்ஸ்கிருதத்தை அவர் கற்றது (அமர கோச நிகண்டு உட்பட) செம்பழந்தி பிள்ளையிடம். பின்னர் சமஸ்கிருத மேல்பாடம் கற்றது கும்மம்பிளி ராமன் பிள்ளை ஆசானிடம் (1877-1881). சாதீயம் தலைவிரித்தாடிய கேரளத்தில் மிக எளிதாக வறியதொரு குடும்பத்தில் பிறந்த நாராயணகுருவுக்கு 1870களில் சமஸ்கிருதம் கற்க முடிந்ததென்றால்...அதுவும் அந்தணரல்லாதவரிடமிருந்து கற்க முடிந்ததென்றால் ...1920களில் எவ்வளவோ நிலை நன்றாக இருந்திருக்கும் போது ஏன் முடியாது?


பொய்கள் பிரச்சாரங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை போராளிகளான ஸ்ரீ நாராயணகுருவும் அய்யன் காளியும் ஐயா வைகுண்டரும் ஆக்கப்பூர்வமான முழு விடுதலைக்கு வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வெறும் வெறுப்பில் பிதற்றி பொய் பேசி அதற்கு சமுதாய நீதி முலாம் பூசுகிறவர்கள் பூசிக்கொண்டிருக்கட்டும்

Monday, February 26, 2007

சுவர்க்க...சாரி சுவனத்துக்கு போக இந்தியாவில் தடை!

"சவூதி அரேபியா! இஸ்லாத்தை தன் மார்க்கமாக ஏற்ற தேசம். ஏக இறைவனின் மறையான குரானையும் அந்த இறைவனின் நபியான முகமதுவின் (சல்) சுன்னாவையுமே சட்டமாக கொண்ட நாடு!...அரசு இஸ்லாமை பாதுகாக்கிறது. அதன் ஷரியத்தை அரசு செயல்படுத்துகிறது. அரசு மக்களை நல்லது செய்ய ஆணையிடுகிறது. தீயதை விலக்க ஆணையிடுகிறது. இறை அழைப்பின் பெயரில் தனது கடமையை அரசு செய்கிறது." நீங்கள் இப்போது படித்தது சவூதி அரேபியாவின் சட்டத்தினை குறித்த சவூதி அரசின் வெளியீட்டிலிருந்து. இஸ்லாமின் இரு மிக முக்கிய மசூதிகளை தன்னில் கொண்ட அரசு சவூதி. இந்த இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும். இஸ்லாம் என்றாலே சமத்துவம் என்று பிரச்சார ஜல்லி அடிப்பார்கள். அப்படியென்றால் "The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? குலப்பரம்பரையில் வரும் அரசருக்கு குடிமக்கள் குரான் சொல்லுவது போல கட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவது எத்துவாளித்தனமல்லவா? முகமது கார்ட்டூனை விட இது அல்லவா குரானை மிகவும் அவமதிக்கிற விசயம். இதற்காக இஸ்லாமிய இளஞ்சிங்கங்கள் சீறி எழ வேண்டாமா? சவூதியில் வேலைபார்க்கிற சுவனத்துக்கு பிரியமாக இருக்கிற ஆசாமிகள் இதற்காக ஷகீத் ஆகவும் தயங்காமல் களம் இறங்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டால் அதெல்லாம் பாசிச இந்துத்வ வெறியனின் கேள்வியாக போய் விடும். எனவே அப்படியெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. விசயத்துக்கு வருகிறேன்.


பார்ப்பன இந்துத்வ வெறியர்கள் இன்னமும் இந்திய அரசு இயந்திரத்தில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு இந்திய பணிப்பெண்கள் போய் உய்வுறும் வாய்ப்பை இல்லாமல் ஆக்குவார்களோ? நமது இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை குறித்து என்ன கதை விடுகிறார்கள் பாருங்கள். பிப்ரவரி
25 தேதி போட்ட தினகரன் பேப்பரில் சொல்லுகிற செய்தியை பாருங்கள்:


இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது தொடர்பாக அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன.பல பெண்கள் வெளியில் சொல்ல அச்சப்பட்டு அரபு நாடுகளில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதர்களின் அவசர கூட்டம் அண்மையில் நடந்தது. அக்கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வீட்டுவேலைக்கு பெண்களை அனுப்புவதற்கு தடை விதிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 40 வயதுக்கு குறைவான பெண்களை அரபு நாடுகளுக்கு வீட்டுவேலைகளுக்கு அனுப்ப தடை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கும் இதே கொடுமைதான். இதையடுத்து வீட்டுவேலைக்கு பெண்களை அனுப்ப தடை விதிக்க இந்திய தூதரகம் தீர்மானித்துள்ளது.

(நன்றி தினகரன்: 25-பெப்ரவரி-2006)


நிச்சயமாக இது பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்கும். இல்லையா? இல்லைன்னா வயசு வித்தியாசம் இல்லாம பாலியல் கொடுமை செய்யப்படுறதுனால இது காமத்தால் விளைந்ததல்ல அப்படீன்னு வயசு வித்தியாசம் அட்டகாசமாக இருக்கிற கலியாணங்களுக்கு சொல்ற அதே சால்ஜாப்பை சொல்லப்போறிங்களா தெரியலையே


நல்லா இருங்கடே!

Friday, February 23, 2007

ஜிகாத் 2007: குமரி மாவட்டம்

1998 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் உருளை வடிவ பொருளை எடுத்த அஸ்ரலி என்ற சிறுவன் அது வெடித்து சிதறியதில் படுகாயம்
அடைந்தான். இது குறித்து புதுக்கடை போலிஸிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கல்லான் விளையில் நடந்த சோதனையில் 45-க்கும் மேற்பட்ட
தேங்காய் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 6 மீனவர்களை போலிஸ் கைது செய்தனர். ஆனால் பொதுமக்கள்
இந்த விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் கூறி போராட்டம் நடத்தினர். எனவே இந்த
வழக்கை அரசு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டியதாயிற்று. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சிதம்பரநாதன் தலைமையில் தொடங்கிய விசாரணை இன்ஸ்பெக்டர் சந்திரன்
தலைமையில் தொடர்ந்தது. இதில் தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த பஷீர், ஆசிக், மைதீன் குஞ்சு, மீரான் பிள்ளை, அபுபக்கர், சர்புதீன், தாசின், அன்வர் சாதிக்,
ஷாபாகீர், அமீர் ஆகியோர்தான் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் அவை கேரளத்திலிருந்து கடத்திவரப்பட்டதும் தெரியவந்தது. மேலும் பயங்கரவாதக்
கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அன்வர் சாதிக், ஷாபாகீர், சமீர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர். மற்ற 7
பேரை போலிஸ் கைது செய்தது. இதில் வெளிநாட்டில் பதுங்கியிருந்த 3 பேரும் பின்னர் கைதானார்கள். 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு
கூறப்பட்டது. குழித்துறை கோர்ட் நீதிபதி கிருஷ்ணவேணி 10 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கினார். இந்த பயங்கரவாதிகளில் இருவர் அஇஅதிமுகவில் பதவி வகிக்கின்றனர்


கைது செய்யப்பட்ட வெடிகுண்டு பயங்கரவாதிகள் நீதிமன்றத்திற்கு வந்த காட்சி: நன்றி தினகரன்:24-பிப்ரவரி-2007

மசூதியில் அம்மன் சிலை

அவ்வப்போது பழமையான மசூதிகள் புனரமைக்கப்படும் போது அதன் சுவர்களில் அல்லது படிக்கட்டுகளிலிருந்து இந்து விக்கிரகங்கள் கிடைப்பது ஒன்றும் அதிசயம் கிடையாது. லேட்டஸ்டாக கிடைத்தது கர்நாடக குல்பர்காவில்.


குல்பர்கா: மசூதி இடத்தில் தோண்டும் போது, அம்மன் சிலைகள் கிடைத் துள்ளன. இதனால், குல்பர்கா மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது.


குல்பர்கா மாவட்டத்தில் உள்ள அப்சல்பூர் தாலுகாவில் உள்ள மலாபாட் சின்சோலி கிராமம். இங்குள்ள மசூதி இடத்தில், சுற்றுச்சுவர் கட்டுவதற்காக, தோண்டும் பணி நடந்தது. அப்போது, பூமியில் இருந்து அம்மன் சிலை கிடைத்தது. தொடர்ந்து தோண்டும் போது, இன்னும் சில அம்மன் சிலைகள் கிடைத்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு சிலைகள் கிடைத்ததை அடுத்து இன்னும் பதட்டம் அதிகரித்தது. அந்த நிலையில் போலீசார் அங்கு வந்துவிட்டனர். உடனே, தோண்டும் பணியை நிறுத்தி விட்டனர். நகராட்சி உயர் அதிகாரிகளும் வந்துவிட்டதால், பணியை நிறுத்திவிட்டு, அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் வந்து, ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த இடத்தை உடனே, அகழ்வாராய்ச்சி துறை கையகப்படுத்த வேண்டும். அங்கு தொடர்ந்து தோண்ட வேண்டும். அப்போதுதான், பழங்கால சிலைகள் இன்னும் கிடைக்கலாம். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கலாம். அதனால், அகழ்வாராய்ச்சி சிறப்பு வாய்ந்த விஷயம் என்பதால், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நிடவடிக்கை எடுக்கும்படி, உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இப்போதைக்கு போலீசார், அந்தப் பகுதியில் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர். பதட்டம் தணிந்ததும், பேச்சு நிடத்தி, தோண்டும் பணியை மீண்டும் தொடருவது பற்றி கடிவு செய்யப்படும் என்றும் தெஙூகிறது.
(நன்றி: தினமலர் : 20-2-2007 உரல்:http://www.dinamalar.com/2007feb20/events_ind7.asp)


மறைந்த வரலாற்றறிஞர் சீதாராம் கோயல் இந்து கோவில்களுக்கு நிகழ்ந்தது என்ன என்பது குறித்து இரண்டு பாகங்கள் கொண்ட நூலை உருவாக்கியுள்ளார். முதல் பாகம் கோவில்கள் உடைப்பதில் இஸ்லாத்தின் இறையியலை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு பேசுகிறது. இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் வாக்குமூலங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஆகும்.


Thursday, February 22, 2007

பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து

சிறில் அலெக்ஸின் பதிவில் ஜடாயுவும் சிறில் அலெக்ஸுமாக ஒரு அழகிய உரையாடலை தொடங்கியுள்ளார்கள். சித்தாந்த வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பாலும் பண்பாலும் பாலங்கள் எழுப்ப முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்நிலையில் புகழ் பெற்ற இறையியல் சிந்தனையாளர் ஆலன் வாட்ஸின் ' Beyond Theology - The Art of Godmanship ' எனும் நூலினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த பதிவு.


ஆலன் வாட்ஸ் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர். கிறிஸ்தவ இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆயின் அவர் பெற்றிருக்கும் பிரபலம் 'கிழக்கத்திய ' ஞான மரபுகளை (வேதாந்தம், ஸென் மற்றும் தாவோ) குறித்த அவர் எழுத்துகளுக்காகவும் விரிவுரைகளுக்காகவும் ஆகும். மேற்கின் மனம் கடந்த நூற்றாண்டில் குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பின் பெரும் கடைதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தன் ஆன்மிக ஊன்றுகோலாக பல 'கிழக்கத்திய ' மதிப்பீடுகளை உள்வாங்கியது. நிறுவன திருச்சபைகளுக்கு அப்பாலான ஒரு ஆன்மிக வாழ்விற்கான மதிப்பீடுகளை மேற்கத்திய அறிவுலகச் சட்டகம் வழியே வாங்க அது முயன்றது. அம்முயற்சியின் ஒரு முன்னோடியாக ஆலன் வாட்ஸ் அறியப்படுகிறார். இயற்கை, இறை, மானுடம் ஆகியவற்றிற்கிடையேயான உறவுகளில் கிறிஸ்தவ இறையியல் 'கிழக்கத்திய ' தர்மங்களிடமிருந்து சில ஆன்ம பார்வைகளை பெற்றுதான் ஆழமடைய முடியும் என்பது ஆலன் வாட்ஸின் துணிவு. கிறிஸ்தவ இறையியல் பல நூற்றாண்டுகளாக 'கிழக்கத்திய ' தர்ம மரபுகளை அறிந்திருந்தாலும் அவற்றுடனான உரையாடலை கிறிஸ்தவ சபைகள் ஒரு மேல்படியிலிருந்து தான் நிகழ்த்தியுள்ளன. இன்றும் அந்நிலையே தொடர்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் உண்டு. இந்த சூழலில்தான் ஆலன் வாட்ஸ் கிறிஸ்தவ இறையியலின் பரிணாம வருங்காலம் ஆசிய தர்ம மரபுகளிலேயே இருப்பதை காட்டுகிறார். 'இறையியலுக்கு அப்பால் ' எனும் அவரது சிறிய நூல் முக்கியமான ஒன்று.தமது நூலில் கிறிஸ்தவ இறையியலின் முக்கிய, மைய அங்கங்களான கடவுளும் சைத்தானும் ஒரு நாடக மேடையின் இரு நடிகர்களென தன்னுரையில் கூறுகிறார் வாட்ஸ். அப்படியானால் வாட்ஸ் யார்? அந்நாடகத்தில் வரும் நகைச்சுவையாளன் என தம்மை அறிமுகப்படுத்துகிறார். மனிதனின் தனித்தன்மைக்கு யூதேய-கிறிஸ்தவ இறையியல் முக்கியத்துவம் அளித்துள்ளது. உன்னுள் உறையும் உன் தனித்தன்மை படைப்பாளன் உனக்கு அருளியது. அதை நீ உன் வாழ்வில் எத்தனை நன்றாக பயன்படுத்தினாய் என்பது கிறிஸ்தவ இறையியலில் முக்கிய கேள்வி. யூத இறையியலாளரான மார்ட்டின் பூபர் ஒருமுறை கூறினார், 'இறுதி தீர்ப்பின் போது இறைவன் என்னிடம் நீ ஏன் எலிசா போல நடக்கவில்லை என்றோ அல்லது ஏன் மோசே போல நடக்கவில்லை என்றோ கேட்கப் போவது இல்லை. மாறாக நீ ஏன் மார்ட்டின் பூபர் போல நடக்கவில்லை என்றுதான் கேட்பான். ' 'ஏதுமற்ற மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட நீ உன் படைப்பாளன் கண் முன் எவ்வளவு உன்னதமானவன் என நேசிக்கப்படுகிறாய் தெரியுமா ? இந்த நேசத்திற்கு நீ உன்னை தகுதியுடையவன் ஆக்கிக் கொள்ள வேண்டாமா ? ' எனும் கேள்வியே மேற்கின் இறையியலில் மிகப்பெரும் இயங்கு சக்தியாக விளங்குகிறது. சுற்றுச்சூழலுடன் இணைந்த தனித்தன்மைகளுக்கு அப்பால் பின்னி பிணைந்த மானுடத்தை கிறிஸ்தவ இறையியல் உணர இதுவே தடைகல்லாகவும் விளங்குகிறது என்கிறார் வாட்ஸ். இந்து மற்றும் புத்த மரபுகளில் இவ்வுண்மை இயல்பாகவே காணக்கிடைக்கும் ஒன்று. இந்நிலையில் கிறிஸ்தவ இறையியல் ஐரோப்பிய, யூத மற்றும் இஸ்லாமிய பின்புலத்தில் எவ்விதம் பொருந்துகிறதோ அவ்விதமல்ல பாரத சீன ஞான மரபுகளின் பின்புலத்தில் பொருந்துவது. எனில் எவ்வாறு ? ராபர்ட் த நொபிலி பாரத சூழலில் வேத உபநிடதங்கள் 'பழைய ஏற்பாட்டிற்கு ' பதிலியாக்கப்பட வேண்டும் என்றார். அதாவது இந்து மதத்தின் ஆன்மிக தேவையின் வெளிப்பாடாக வேத உபநிடதங்கள், அதன் பூர்த்தியாக கிறிஸ்தவ நற்செய்தி. பல இந்திய கிறிஸ்தவ இறையியலாளர்கள் இந்த முறையை பின்பற்றுவதை காணலாம். வாட்ஸ் இம்முறையிலான இணைப்பை மறுக்கிறார். (பக். 16) ஏன் ? கிறிஸ்தவம் காணும் பிரபஞ்சமல்ல இந்துமதம் காணும் பிரபஞ்சம். இறை இயற்கையே இரண்டிற்கும் மாறுபடுகிறது. 'வாக்களிக்கப்பட்ட மெசையாவின் ' பூர்த்தியாக கிறிஸ்தவ மத நம்பிக்கையை முன்னிறுத்த முடிவது போல, 'தத்வமஸி 'யின் பூர்த்தியாக கிறிஸ்தவ மத நம்பிக்கையை முன்னிறுத்த முடியாதென்பதே இதன் காரணமாகும். கிறிஸ்தவ இறையியலின் பெரும் குறையாக வாட்ஸ் காண்பது அதன் நேரடிபொருள் கொள்ளும் தன்மையையே. 'கிறிஸ்தவ இறைநூலுக்கு விளக்கமளித்தவர்கள் கவிஞர்களல்ல வழக்கறிஞர்கள். எனவேதான் இந்த நேரடிபொருள் கொள்ளும் தன்மை இறையியல் சித்தாந்தமாயிற்று. ஆனால் இந்து ஞான மரபின் பின்புலத்தில் கிறிஸ்தவ இறையியலின் பெரும் சுவர்க்கமும் மீளா நரகமும், அதன் அனைத்து அழகுடனும் கோரத்துடனும் ஒரு பெரும் நாடகத்தன்மையுடன் விளங்க முடியும்.' (பக் 21-22) சில முக்கிய வேறுபாடுகளை வாட்ஸ் இவ்விடத்தில் காட்டுகிறார். இந்து பிரபஞ்ச உற்பத்தி ஒரு நடன அசைவு; கிறிஸ்தவ இறைவனோ பெரும் குயவன். மேற்கில் ஒருவன் தன்னை கடவுள் என்றால் உடனே கேட்கப்படும் இறையியல் எதிர்வினை 'அட எப்படி ஐயா உலகை தாங்கள் 7 நாட்களில் படைத்தீர்கள் ? ' என்பதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒருவன் தன்னை கடவுள் என்றால், 'ஆகா இறுதியில் உணர்ந்துவிட்டார்கள் வணக்கங்கள் ' என்பதாக இருக்கும். வாட்ஸ் ' அதி-இறையியல் ' (meta-theology) எனும் பதத்தை புகுத்துகிறார்.கிறிஸ்தவத்தின் புராண கதையாடலிலும் சரி, இறையியல் மரபுகளிலும் சரி அவை அனைத்தும் மாயை மற்றும் லீலை ஆகிய கண்ணோட்டத்தில் காணப்படுகையில் அவை ஆன்ம சாதனைக்கான பாதையாக மாறுவதை வாட்ஸ் தொடர்ந்து காட்டுகிறார். வேடிக்கை கலந்த நடை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை உண்மையில் இறைவன் அல்லது பிரபஞ்ச நாடகம் உண்மையில் வேடிக்கையான ஒன்றுதான். பிரபஞ்ச நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடாக கிறிஸ்தவ இறையியலை அவர் காண்கிறார். ஏசுகிறிஸ்து சிலுவையில் நம் பாவங்களுக்காக மரித்தார் என்பது உண்மையில் தனியான ஆளுமைகளுடன் தனித்தன்மையுடன் நினைத்துப்பார்க்கையில் இயலாத ஒரு காரியமாகிறது. அது (நிறுவன திருச்சபையின் மைய இறையியலில் விளங்குவது போல) வரலாற்று ரீதியிலான உண்மை என கருதப்படும் போது இன்னமும் இயலாத முரணாகிவிடுகிறது. ஆனால் இந்த முரணே மிக அதிகமான அழுத்தத்தை கிறிஸ்தவ தர்க்கத்திற்கு அளித்து ஒரு தருணத்தில் அது முறிகிறது. தனித்துவ ஆளுமை வரலாற்று உண்மை எல்லாம் மறைய சாதனையாளன் உண்மையை அடைகிறான். 'தத்வமஸி ' நோக்கிய பயணமற்ற பயணத்திற்கான 'கோன் ' (Koan) ஆக கிறிஸ்தவ இறையியலின் தன்மை மாறிவிடுகிறது. பின்னர் 'ஸதோரி'(Satori). உதாரணமாக மத்தேயு 24:23-27 இல் இரண்டாம் வருகை குறித்த ஏசுவின் வார்த்தைகளில் இதுவரை கிறிஸ்தவ திருச்சபைகளின் இறையியலாளர்கள் கண்டிராத புதிய பொருளினை நாம் காண முடிகிறது. இங்கு மெசையாவின் இரண்டாம் வருகை புறமும் அகமும் இல்லாததோர் வெளியில் 'மின்னலை ஒப்ப ' வருவதாக கூறப்படுவது ஸென் பயிற்சிகளின் இறுதியில் அல்லது இடையே திடீரென நிகழும் பிரக்ஞயின் திறப்பாக இருக்க கூடும்! (பக் 159-160)


ஒரு சமயத்தின் சடங்குகள் அதன் பிரபஞ்சநோக்கினை காட்டுவதாக அமைவன. பைசாண்டியத்திலும் ரோமையிலும் வளர்ந்த கிறிஸ்தவத்தின் சடங்குகள் ஒரு தீவிர ஒழுங்கின் மிகக்கட்டுப்பாடான தராதரங்கள் நிறைந்த அமைப்பினை வெளிக்காட்டுவதாக அமைகிறது. நகரங்களின் அரசமைப்பிலிருந்து பெறப்பட்டது கிறிஸ்தவ பிரபஞ்ச நோக்கும் சடங்குகளும் என்கிறார் வாட்ஸ் (அவரது மற்றொரு புகழ்பெற்ற நூலான 'Nature, Man and Woman ' இல் இப்பிரச்சனையின் ஆழ வேருக்கு போகிறார்.) ஆனால் ஏசுவோ உயிரியக்க உறவுகளை (Organic) தன் மெய்யியலில் வலியுறுத்தியதாக கூறுகிறார். 'பாசிலிக்காவின் தேவ ஆராதனையில் ஆராதனை பீடமே சிம்மாசனம். ஏசு அப்பெரு மாளிகையின் இறுதியில் சுவரில் முதுகு சாய்த்து, பின்னாலிருந்து எதிரிகள் வராதபடிக்கு, நிற்க அவரது கவனமிகு காவலாளிகளாக மற்றோர் நிற்க அரசவையில் அந்த ஆராதனையில் பங்கேற்பார். ' (பக் 161-162) அடுத்ததாக பாலியல் உறவுகளுக்கு கிறிஸ்தவ இறையியலில் கிடைக்கும் இடத்தை கிறிஸ்தவத்தின் இறை-பிரபஞ்ச-மானுட உறவு குறித்த பார்வைகளின் நீட்சியாக காண்கிறார் வாட்ஸ். உடலுறவு விளைவும் பிரம்மச்சரியமும் எதிர் எதிரானவை எனும் மாயையின் முழுமையான வெளிப்பாடு கிறிஸ்தவ இறையியல் எனும் வாட்ஸ் இது பல தேவையற்ற சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும், குற்ற உணர்வையும் கிறிஸ்தவ ஆன்மிகவியலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்கிறார். 'வார்த்தை உடலானது குறித்து கிறிஸ்தவம் பூரணமாக உணர வேண்டுமெனில் உடலுறவின், உடலுறவு விழைவின் ஆத்மிக இயற்கை ஏற்கப்பட வேண்டும் ' என்கிறார் வாட்ஸ் (பக். 189) .யூத கிறிஸ்தவ இஸ்லாமிய மரபுகளில் வந்த ஞானிகள் தம் அகத்தேடலை ஒரு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் விதத்தில் உருவாக்க முடியவில்லை என்கிறார் வாட்ஸ். இதில் இஸ்லாமிய மற்றும் யூத ஞான மரபுகள் குறித்து வாட்ஸ் கூறியதை ஏற்க முடியவில்லை. ஏனெனில் யூதர்கள் தங்களுக்கென சுதந்திரமாக ஒரு சமுதாயத்தில் தம் ஆன்மிக வாழ்வின் விகசிப்பை காண முடியவில்லை. என்ற போதிலும் கபாலா எனும் ஞான மரபு மிக நன்றாகவே அச்சமூகத்தில் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிலும் போப் போன்ற முழுமையான ஆன்ம அதிகாரம் பெற்ற பேரரசராக கலீபா விளங்கியதில்லை. பலவித ஸுஃபி ஞான மரபுகள் வளர்ந்துள்ளன. அவை மத நிறுவனத்தன்மை கொண்ட மெளல்விகளால் ஒடுக்கப்பட்டாலும் வாட்ஸ் கூறும் அகப்பயணத்தின் வரைபடத்தையும், பரிசோதனைகளையும் (பாரத சீன ஞான மரபுகளுக்கு கிடைத்த சுதந்திரத்துடன் இல்லையெனினும், எனவே அவற்றின் சாதனைகள் இன்னமும் மதிப்புடன் உணரப்பட வேண்டியவை) பதிவு செய்து வைத்துள்ளன. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ நிறுவன சமயங்கள் கடும் யூத வெறுப்பினை தம் இறையியலில் கொண்டிருந்த போதிலும் இஸ்லாமிய ஸூஃபி- யூத கபாலா உறவு செழுமையாக இருந்தது.ஆலன் வாட்ஸ் வெளிப்படையாகவே கூறுவது போல இந்நூல் முழுவதுமே இந்து பார்வையில் கிறிஸ்தவ இறையியல் அடையவேண்டிய மாற்றங்களை கூறுகிறது. ராபர்ட் த நோபிலி முதல் இன்றைய கிறிஸ்தவ திருச்சபையின் மைய இறையியலாளர்கள் இந்து தருமத்தையும் பிற ஆசிய ஞான மரபுகளையும் காணும் பார்வையை தலைகீழாக மாற்றிப்போடுவதில் இந்நூலின் விளைவு அபாரமானதாக உள்ளது. கிறிஸ்தவத்தை இந்திய மயமாக்குகிறோம் என்று 'இந்திய மயமாக்கப்பட்ட ' கோக் விளம்பரங்களின் இறையியல் சமான முயற்சிகளை காட்டி வருகின்றன கிறிஸ்தவ சபைகள். ஆனால் அவை உண்மையில் தம்மில் அடைய வேண்டிய மாற்றங்களை இந்நூல் கூறுகிறது. இந்து தேசியவாதியும் வரலாற்றறிஞருமான திரு.சீதாராம் கோயல் அவர்களும் இந்து சிந்தனையாளரான ராம் ஸ்வரூப்பும் கிறிஸ்தவம் என்னதான் வெளிப்புற இந்து சின்னங்களை போட்டுக்கொண்டாலும் சில உள்ளார்ந்த மதிப்பீடுகளை தம் இறையியலில் கொண்டிருக்கும் வரை இந்து ஞான மரபின் முழுமையை கிறிஸ்தவத்துடன் இணைக்க முடியாதெனக் கூறினர். கிறிஸ்தவத்தின் இப்பண்பு 'பிடிவாதம் கொண்ட ஆன்மிக தனித்துவம் ' என்றும் இது நாஸிகளின் சித்தாந்தத்திற்கு ஒப்ப உள்ளது என்றும் ஆலன் வாட்ஸ் கூறுகிறார். (பக். 151) இப்பண்பே கிறிஸ்தவத்தின் மதமாற்ற போக்குக்கு மூலவிதை. கிறிஸ்தவம் தான் ஆழப்பட அதனை இழந்தாக வேண்டியது அவசியம். கார்டினல் ராட்ஸிங்கர்* போன்றவர்களின் மதவெறி வத்திகானின் மிக உயர்ந்த பீடங்களில் செல்லுபடியாகும் இந்நாளில், கத்தோலிக்க சபை தன் மத்தியகால இறுகிய இறையியலில் மூழ்கி திளைக்கும் இந்நாளில், ஆலன் வாட்ஸின் இந்நூலில் கூறப்படும் கருத்துகள் ஏற்கப்படுவது கடினம்தான். ஆனால் ஒரு சிறிய குழுவாக கிறிஸ்தவ வேதாந்திகள் இல்லாமலில்லை. பாரதத்தில் ஜோஸப் புலகென்னல், மறைந்த அந்தோணி தி மெல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எனினும், இன்று வேதாந்த கிறிஸ்து உயிர்த்தெழ, ரோம சாம்ராஜ்யாதிபதிகளால் சிலுவையிலறையப்படுகிறது உண்மைக் கிறிஸ்துவின் தேகம்.


நூலிலிருந்து:


'மேற்கத்திய உளவியல் தன் 'சொந்த ' மனதின் நனவிலித்தன்மைகளை கண்டுபிடிப்பதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பாரதிய மற்றும் சீன ஞானிகள் பிரக்ஞையை நனவின் தளத்தின் எல்லைகளுக்கு அப்பாலுமான இயக்கங்களை உட்கொள்ளும் விதத்தில் விரிவடையவும் ஆழப்படுத்தவுமான பரிசோதனைகளை வடிவமைத்துவிட்டனர். யூத, இஸ்லாமிய கிறிஸ்தவ மரபுகளிலும் ஞானிகள் ஆன்மிக பயிற்சிகள் மூலம் பிரக்ஞையை விரிவடைய செய்து உயர் அனுபவங்களில் திளைத்துள்ளனர் எனினும், அம்மரபுகளில் அகப்பயணத்தின் 'புவியியலை ' ஹிந்து மற்றும் பெளத்த மரபுகளைப் போல கவனமாகவும் விரிவாகவும் பயிலவில்லை. மாறாக மேற்கத்திய மரபுகளில் மனிதனின் ஆன்மா, உயிர் ஆகியவை குறித்த அறிதல் குழப்பமாகவே உள்ளது.


இத்தகைய பரிசோதனைகளிலிருந்துதான் பாரதிய ஞானிகளும் சீன ஞானிகளும் மானுடத்தின் ஆழத்திற்கும் (ஆன்மா) பிரபஞ்சத்தின் ஆழத்திற்கும் (பிரம்மம்) இருக்கும் ஒருமையையும் தொடர்ச்சியையும் உணர்ந்தனர். மாறாக யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய பாரம்பரியங்களில் இத்தகைய பரிசோதனை போக்கு இல்லை என்பது மாத்திரமல்ல, அத்தகைய பரிசோதனை போக்கின் எழுச்சி வன்முறைக்கொடுமையால் அடக்கி ஒடுக்கப்பட்டது. எனவேதான் மேற்கத்திய இறையியலின் பிரபஞ்ச நோக்கு வெளிப்படுத்தப்பட்ட புனித நூல்களைச் சார்ந்திருக்கின்றதே ஒழிய பரிசோதனைகளைச் சார்ந்ததாக இல்லை. இன்றைக்கும் மிகவும் பரந்த மனம் படைத்தவர்களாக கருதப்படும் புரோட்டஸ்டண்ட் இறையியலாளர்கள் கூட 'விவிலியம் கூறுவது படி ' என்பதை ஏதோ விவிலியத்தை எழுதியவர்களுக்கு சத்தியத்தை மற்ற காலங்களிலும் மற்ற கலாச்சாரத்தினராலும் அறிய முடிந்ததை விட, நம்மால் அறிய முடிந்ததைக் காட்டிலும் கூடுதலாக அறிய முடிந்தது எனும் பொருளுடன் பயன்படுத்துவதை காணலாம். விவிலியத்தின் பிரபஞ்ச பார்வையோ ஒரு சர்வாதிகார ஏக அரசனின் ஆட்சியாக உலகை காண்கிறது. பரிசோதனை மூலம் அறியப்பட முடிந்த பிரபஞ்ச தரிசனமே இன்று ஏற்கதக்கதாக உள்ளது. ' (பக். 204-206)Alan Watts, 'Beyond Theology-The Art of Godmanship ' Vintage Books NY,1973. இந்திய விலை (1998) Rs 145/-
*திண்ணையில் இந்த நூல் ஆகஸ்ட் 2 2003 இல் வெளியானது. அப்போது கார்டினல் ராட்சிங்கர் கார்டினலாக இருந்தார். பதினாறாம் ஆசிர்வாதப்பர் எனும் போப் பெனிடிக்ட் 16 ஆகிவிடவில்லை.

Wednesday, February 21, 2007

கடவுள் என்று ஒன்றிருந்தால் ...

குலங்கள் பார்த்து தலைமை எழ
வேற்று மதங்கள் மக்கள் மண்ணில் அழ
இல்லங்கள் தோறும் இழவு விழ
வஹீ இறங்கியதென சொல்லி அடி
அது ஏக இறையென கும்மியடி


எங்கு பார்த்தாலும் இரத்த நெடி
மருத்துவ மனையிலும் ஜிகாதி வெடி
கேட்டால் சமத்துவ முகமூடி
இந்த மோசடிக்கும் உண்டு சிங்கியடி
அதற்கு பெயர்தான் மிதக்கும் வெளி


பிலாலும் மால்கமும் கதை உண்டு
சூடானிய அடிமைக்கு எது உண்டு.
வங்க தேச தலித்தோ நிலமிழந்து
ஆனால் எதையும் உணரா எருமைத்தோல்
தோழர் மிதக்கிற வெளிக்குண்டு


பிலாலுக்கும் மால்கமுக்கும் அப்பால் கோரமுகம்:இஸ்லாமிய சூடானில் இருந்து தப்பிய அடிமைகள்

பிலாலும் மால்கமும் பிரச்சாரம்
ஆனால் திரைமறைவில் யதார்த்தம்
இடி அமீனுக்கு சௌகரியம்
செய்யும் சவூதிய வகாபியிசம்


பங்களாதேஷில் படுகொலைகள் ஏனோ
உங்கள் காதுகளில் விழலையே
பௌத்தம் குறித்து கூச்சலிட்டாலும்
சிட்டகாங்க் அழுகை கேட்கலையே
பாலஸ்தீனுக்கு கொட்டிய வெங்காய கண்ணீர்
வங்க தலித்துக்கு கிடைக்கலியே


பிலாலுக்கும் மால்கமுக்கும் அப்பால் கோரமுகம்: இஸ்லாமியரால் நிலமிழந்து அகதிகளாக வங்க தேச பௌத்த சக்மாக்கள் திரிபுராவில்


1971 இல் பாகிஸ்தானிய இராணுவம் வங்க பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய மத அங்கீகாரம் அளித்த மௌலானா ஃபஸ்லூல் கரீம்

ஏக இறைக்கு மனித இரை
கூட்டிக்கொடுக்கும் மிதக்கும் வெளி
கேட்டால் சமத்துவ சால்ஜாப்பு
ஆனால் அதுவும் கிழிஞ்சு நாளாச்சு


மால்கம் பார்த்த சவூதி நாடகத்தின்
பின்னறை அவலம் காணலையே
சவூதி மன்னன் காரில் பயணித்த
அவருக்கு உண்மை தெரியலையே


அடிமை முறை இன்னும் நிலவும்
சவூதி வகாபி பாங்கொலியாம்
சமத்துவம் சொல்லி அழைக்கிறதாம்
சவூதி செண்ட் மணக்க வரும்
மிதக்கும் வெளிதான் ஏஜெண்டாம்


பாங்கொலி கேட்கும் தேசங்களில்
இனத்தூய்மையின் பெயராலே
நீதிக்கு வழியே இல்லாமல்
அழியும் 'தாழ்ந்த' இனங்களடா
ஆனால் அது குறித்து சிறிதும்
ஆசனவாய் புழு உறுத்தலும் கூட
இல்லாமல் அமைதி காக்கும் அகில உம்மா


கொன்றவனுக்காக ஆர்ப்பாட்டம்
எங்கள் நகர வீதிகளில்
வன்முறை குத்தாட்டம்
ஆனால்
செத்த சிறு குர்தீஷ் குழந்தைகளுக்கோ
கிடைத்தது எல்லாம் பெரு மௌனம்
கேட்டால் பிலால் கதை சமத்துவமாம்
விட்டால் ஒசாமா மகாத்மாவாம்


பிலாலுக்கும் மால்கமுக்கும் அப்பால் கோரமுகம்: குர்தீஷ் மக்களின் அவல வாழ்க்கை

ஆமடா! இங்கு பிரச்சனைகள்
உண்டு உண்டு ஏராளம்.
மனு போட்டு கிடைக்காத தெருக்கள் உண்டு
இங்கு சாதி சண்டையும் கூட உண்டு
ஆனாலும் நீதிக்கு வழி உண்டு


நீதி தடுப்பவன் எவன் என்று
சிறிதே சிந்தித்துப் பார்த்தால்
அடடா நாறுது சவூதி செண்ட்
அங்கே நிற்பான் வகாபி ஏஜெண்ட்டு


திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த
பன்றியின் கட்சி எந்த கட்சி
மனைவியை தாசி என சொன்ன ஈவேரா
அவனது ஈன வழியே வந்த கட்சி


பீகாரில் தலித்தின் கால் எரித்த
கீழ்த்தரத்தின் கட்சி எந்த கட்சி
கோத்ராவில் எரிந்தது விபத்தென
ஜிகாதிக்கு சொரிந்து விட்டவன்
எவனோ அவன் கட்சி


பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் கட்சி எம்பி சகபூதினால் கால்கள் எரியூட்டப்பட்ட தலித்

செத்த நாலு தலித்தின் பிணம்
சத்தமில்லாமல் எரிஞ்சாச்சு
கொன்னவன் ஜிகாதி என தெரிஞ்சால்
தலித் தலைவர் என சொல்பவர்
பேச்சு வெளியே வாராது.


மனுவை குப்பையில் போட்டாச்சு
விவேக ஜோதியை எடுத்தாச்சு
என்றே களத்தில் இறங்கி பணி செய்யும்
நல்லவர் இங்கே பலர் உண்டு


திண்ணியத்தில் மலம் தின்ன வைத்தான்
ஈவேரா வழி வந்த கட்சிகாரன்
ஆனால் எத்தனை எத்தனை கழிவறைகள்
தலித்துகளுக்கு கட்டிய கரங்கள் எமக்குண்டு.


அம்பேத்கருக்கு மனு மேல் என்று பேசும்
மடையன் இங்கில்லை.
இருந்தால் அதட்டி தட்டி வைப்போம்
முட்டிக்கு முட்டி பெயர்த்தெடுப்ப்போம்


சரியில்லாத ஷரியத்தா?
அண்ணல் அம்பேத்கர் சட்டமா?
வெட்டொன்று துண்டிரண்டாய்
சொல்ல வாயும் வக்குமுண்டோ
சொல்ல முடியுமா மிதக்கிற வெளிகளுக்கு
அல்லது வளி விடும் ஓசையும் செல்லாமல்
வார்த்தைகளுக்கு பின் ஒளிவாரா?


கடவுள் என்று ஒன்றிருந்தால்
அது
கடுவாமூர்த்தி விடு வாதையாகவும் இருக்கட்டும்
பூதலம் கண்ட சாத்தனாகவும் இருக்கட்டும்
நடுக்காட்டு எசக்கி அம்மனாகவும் இருக்கட்டும்
பிரம்மமாகவும் இருக்கட்டும்
புனிதப்போர் விளிக்கும் மனித இரத்தவெறி கொண்ட
பாலைவன கற்பனைகள்
எம் சோதரர் விடுதலைக்கு தேவையில்லை.

Monday, February 19, 2007

நாசியும் ஏசுவும்

அனானி ஒருவர் வருத்தப்பட்டிருந்தார். நான் ஏசுவை ஹிட்லருடன் காட்டி அவமானம் செய்துவிட்டதாக. எனக்கும் வருத்தமாக போய்விட்டது. எனவே நான் அந்த படத்தை அவரது மன/மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுத்துவிட்டேன். ஆனால் பெர்லினில் ஒரு சர்ச் இருக்கிறது. ஒரு 70 ஆண்டுகளுக்கும் மேலான இந்த சர்ச் நாசி அமைப்பின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ளது. இந்த சர்ச்சில் உள்ள மர சிற்பங்கள் அன்றைய நாசி அரசின் மகோன்னதத்தை காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன. ஹிட்லரின் சிற்பமும் இருந்தது. ஆனால் நாசிகளின் தோல்விக்கு பிறகு அகற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கும் இந்த சர்ச்சில் ஏசு நாசி ஸ்டார்ம்ட்ரூப்பருடன் இணைந்து அருள் பாலிக்கிறார். 1932 களில் ஜெர்மானிய நாசி கிறிஸ்தவர்கள் நாசி அமைப்பான 'ஸ்டார்ம் ட்ரூப்பர்ஸ் ஃபார் ஜீஸஸ்' (Storm troopers for Jesus) இல் இணைந்திருந்தனர். 'புனிதர்' அடால்ப்பும் சர்ச்சுக்குள். இதோ அந்த சர்ச்சும் அந்த சிற்பமும். Feeling offensive, My dear Anon?பிறந்த குழந்தைகளுக்கு கிறிஸ்தவ முழுக்கு அளிக்கும் அமைப்பில் ஹிட்லரின் 'திரு'வுருவ சிலை


சர்ச்சுக்குள் நாசி சிலைகள் இது ஒரு அழகா?
ஸ்வஸ்திக்கின் மேலே படர்ந்த சிலுவையின் இருளா?

(கண்ணுக்குள் நூறு விதமாய் இது ஒரு கனவா...மெட்டில் வாசித்துக்கொள்ளவும். சமஸ்கிருத ஸ்லோகங்கள் வரும் இடத்தில் வேண்டுமென்றால் Mea Culpa Mea Culpa Mea Maxima Culpa சொல்லிக்கொள்ளலாம்.)

Sunday, February 18, 2007

ஜிகாத் : 2007

அண்மையில் தமிழ்நாடு எங்கும் சுவர்களில் 'பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்கிற பெயரில் ஒரு அமைப்பு வலிமையான இந்தியாவை படைக்க போவதாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. 'அல்லாவின் திருப்பெயரால்' என்று வேறு காணப்பட்டது. ஏதோ தேசபக்தி கொண்ட முஸ்லீம்கள் அப்துல்கலாம் போன்றவர்களின் முன்னுதாரணத்தால் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றுதானே தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது ஜிகாதிகளை தென்னகத்தில் (தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா) ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்கான Popular front ஆகும். இந்த இயக்கம் வெளிப்படையாகவே ஒரு காஷ்மிர் பிரிவினைவாத கும்பலின் கொடியை தமது கொடி என்று கூறி தமிழ்நாட்டில் பறக்கவிட்டுள்ளனர். அந்த பிரிவினைவாத கும்பலான ஜே.கே.எல்.எப் பயங்கரவாத அமைப்பு தனது கொடிக்கு கொடுத்துள்ள விளக்கம்: பச்சை நிறம் இஸ்லாத்தை குறிப்பதாம். சிவப்பு இரத்தத்தை - வன்முறை மூலம் சிந்த வேண்டிய எதிரிகளின் இரத்தத்தையும் சேர்த்து - குறிப்பதாம். வெள்ளை சிறுபான்மையினரை குறிப்பதாம். இந்த கொடியைத்தான் இந்த 'பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா' கும்பல் தமது கொடியாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள். ஆனால் காவல் துறையின் உளவுப்பிரிவு இந்த அமைப்பின் உண்மை முகத்தை நன்றாகக் காட்டியுள்ளது. வட இந்தியாவை போலவே தென்னிந்தியாவிலும் பயங்கரவாத செயல்களை வளர்க்க ஜிகாதிகள் திட்டமிட்டுள்ளது பலமுறை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


காஷ்மிர் பயங்கரவாத அமைப்பின் கொடியை தங்கள் கொடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்றியுள்ளது புதிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு


காஷ்மிர் பயங்கரவாத அமைப்பின் இணையதளத்தில் அந்த கொடி
தடை செய்யப்பட்ட அமைப்பான சிமியின் தலைவர்களால் தொடங்கப்பட்ட புதிய இஸ்லாமிய அமைப்பு குறித்த Q பிராஞ்ச் போலிஸ் எச்சரிக்கை

நன்றி : தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்

புனித சிலுவையின் நாசி கொலைக்களம்

ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு குறித்த கட்டுரை இது.


passion4

மெல்கிப்சன்

அண்மையில் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் திரைப்படம் மெல் கிப்சனின் 'Passion of Christ '. 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இது கிறிஸ்துவின் பாடுகளை காட்டுகிறது. குறிப்பாக ஈஸ்டர் காலங்களில் இந்த 'கிறிஸ்துவின் பாடுகள் ' மிகவும் முக்கியமான விஷயமாக ஐரோப்பிய மக்களிடையே இன்றும் விளங்குகிறது. (எங்கள் வட்டாரங்களில் சிலுவைபாடு என்பார்கள்.) இந்திய கிறிஸ்தவர்களிடையேயும் இச்சமயங்களில் பல இடங்களில் கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் நாடகங்கள், ஒலி-ஒளி காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் நடைபெறும். 'அஞ்ஞானிகளான ' இந்துக்களுக்கு கிறிஸ்துவின் 'அன்பினை ' கொண்டுசெல்ல பல பின்தங்கிய வறுமைப்பட்ட கிராமங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே இத்திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. பொதுவாக பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட 'ஜீஸஸ் ஆஃப் நாஸரேத்'லிருந்து
எடுக்கப்பட்ட 'பாடு ' காட்சிகள் காட்டப்படும். இப்போது மெல் கிப்சன் புண்ணியத்தில் கணினி வரைகலை உதவியுடன் வெகு யதார்த்தமாக நம்பகத்தன்மை வெகு அதிகமாக
அதிகரிக்கப்பட்ட ஏசுவின் சிலுவைபாடுகளை அஞ்ஞானிகள் கண்டு ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தையும் சதையும் புசித்து தங்கள் பாவங்களை கழுவிக்கொள்ளலாம். மெல்கிப்சன்
ஏற்கனவே உலகெங்கிலுமுள்ள எவாஞ்சலிஸ்ட்களுக்கு -குறிப்பாக டெலி-எவாஞ்சலிஸ்ட்களுக்கு- இத்திரைப்படத்தை பயன்படுத்தி ஆன்ம அறுவடைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக இதற்கு பெருத்த பலன் இருக்கும். ஏனெனில் இத்தகைய ஒரு ஏசுவின் சிலுவைபாடு திரைசித்திரம்தான் கல்லூரி மாணவன் பாபி ஜிண்டால் தன் ஆன்மாவை கத்தோலிக்க சபைக்கு விற்க வழிவகுத்தது. மட்டுமா ? 'இந்துக்களும் முஸ்லீம்களும் அமெரிக்காவில் எந்த ஒரு அரசு பதவியும் வகிக்க தகுதியற்றவர்கள் ' என்று கூறியவரால் உருவாக்கப்பட்ட 'கிறிஸ்டியன் கொயலிஷன் ' எனும் அடிப்படைவாத அரசியல் அமைப்பின் நட்சத்திர வானொலி பேச்சாளராகவும் பாபி ஜிண்டால் உருவாக வழி வகுக்கவும் செய்தது.


christ

மெல்கிப்சனின் வன்முறைக்காட்சிகளும் யூத வெறுப்பியலை நியாயப்படுத்தும் காட்சிகளும் நிரம்பிய ஏசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகள் இந்திய திரையரங்கங்களில் திரையிடப்படும் முன்
இந்த சிலுவைபாடு நாடகங்கள் நடந்து வந்திருக்கும் இரத்தம் தோய்ந்த நடைபாடுகளை காண்போம். இந்த இரத்தமும் யூத இரத்தம்தான். ஆனால் ஏசு போல வரலாறா கற்பனையா
என அறியப்படாத ஒரு யூதனின் இரத்தமல்ல. மாறாக பல கோடி யூதர்களின் இரத்தம்; யூத குழந்தைகள் மற்றும் பெண்களின் இரத்தம்.அன்பின் பெயரால் தன்னை பிரகடனப்
படுத்தியதாகக் கூறப்படும் தெய்வத்தின் பெயரில் மானுடத்தின் வரலாற்றிலேயே நினைத்துப்பார்க்க முடியாத அளவு நடத்தப்பட்ட கொடுமைகளின் இரத்தம் தோய்ந்த பாதை இந்த
சிலுவைபாடுகளின் பாதை.
auschwitz1

ஆஸ்ட்விட்ச் கொலைக்களம்: ஏசு அழைக்கிறார்?


ஜெர்மனியில் நாஸிகளின் உதயத்திற்கு பலகாலம் முன்பே அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்த சிலுவைபாடு நாடகங்கள்தான். சாம்பல் புதன் அதனைத் தொடர்ந்து பின் புனித வெள்ளி தொடர்ந்து ஈஸ்டர் வரையிலான காலங்களில் இந்த நாடகம் போடப்படும். அதைத் தொடர்ந்து வெடிக்கும் யூதர்களுக்கான உள்ளூர் 'தீர்வுகள் '. நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூதர்களும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் 'பரிசுத்த நற்செய்தி 'யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும். இந்த நாடகங்களில் பொதுமக்களின் பிரக்ஞையில் மிகத்தெளிவாக யூதர்கள் மீதான வெறுப்பிற்கான இறையியல் காரணங்கள் பதிந்துவிடும். பவாரியாவில் ஒபரம்மெர்கவ் (Oberammergau) கிராமத்தில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.


passion3

யூத எதிர்ப்பு சூறையாடல்களுக்கு உத்வேகம் அளித்தன ஏசுவின் பாடு நாடகங்கள்

1663 இல் ஏற்பட்ட பிளேக்கிலிருந்து இந்த கிராமம் அதிசயமாக காப்பாற்றப்பட்டதால் அதற்கு நன்றிக்கடனாக 1664 -இலிருந்தே இந்த சிலுவைப்பாடு நாடகம் நடத்தப்படுவதாக
வட்டாரக்கதைகள் கூறுகின்றன. ஆனால் வரலாற்றறிஞரான ஜேம்ஸ் ஷெப்பிரொ இந்த கதை வெறும் கதைதான் என்றும் இதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும்
கூறுகிறார். ஆனால் இந்த நாடகம் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றது. அந்த கிராமத்துக்கு நல்ல வருவாயைத் தேடித்தந்தது. ஆனால் இந்த நாடகத்தின் முக்கிய அம்சமாக
விளங்கியது அதன் யூத வெறுப்புணர்ச்சிதான். 'கிரிஸ்டல் இரவு ' என்கிற யூதர்கள் தேடிப்பிடித்து செய்யப்பட்ட கொலைத்தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஒபரம்மெர்கவ் ஏசுபாடுகள் நாடக நடிகர்கள்தான். 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதல்களை நடத்திய இளம் நாசிகளை வழி நடத்தி சென்ற ஆண்டன் பெரிசிங்கர், இசையாளர் மேக்ஸ் மேயரை அவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்கி 'புகழை 'ச் சம்பாதித்துக் கொண்டான். 1947 இல் நாசி-எதிர்ப்பு நீதி மன்றத்தால் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட இவனே ஒபரம்மெர்கவ் ஏசுபாடுகள் நாடகத்தில் ஏசுவாக நடிக்க 1950- இலிலும், 1960-இலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டான். 1970 இல் இவன் இந்த நாடகத்தின் இயக்குநராகவே பணியாற்றினான். இந்த நாடகத்தின் பார்வையாளர்களில் முக்கியமான ஒருவன் அடால்ப் ஹிட்லர். அவன் இந்த நாடகத்தை இருமுறை பார்த்தான்(1930,1934). 1934 இல் இந்த நாடகத்தில் நடித்த அனைவருமே நாசிகள் அல்லது நாசி ஆதரவாளர்கள். யூதாசாக நடித்தவர் மட்டுமே யூத வெறுப்பிற்கு எதிராக பகிரங்க குரல் எழுப்பியவர். முதன்முறை பார்த்தபோதே இந்த நாடகம் ஹிட்லரை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஏசுவின் சிலுவை பாடுகளை நாசி கருத்தியலை பரப்புவதற்கான மிகச்சிறந்த கருவி என அவன் புகழ்ந்துரைத்தான்.

ஒபரம்மெர்கவ்வின் அருகிலேயே உள்ள நாசிகளின் தாசெவ் (Dachau) அடிமை முகாம் சிலுவைபாடுகளின் இருண்ட பரிமாணத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது. 1988 இல் சில கத்தோலிக்க பாதிரிகளின் முயற்சியால் நாடகத்தின் யூத வெறுப்பியல் குறைக்கப்பட்டதாக் உலகிற்கு காட்டப்பட்டது. ஆனால் ஷெப்பிரொ இந்த நாடகத்தின் 1999 வருட தயாரிப்பினை நியோ நாசிக்கள் பயன்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 2000-ஆம் ஆண்டு காட்டப்பட்ட இந்த நாடகத்தில் யூத வெறுப்பு இல்லாதிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.


dachau

தாசெவ் வதைமுகாம் : மீட்கப்பட்ட யூதர்கள்

நாசிகளால் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட மனிதகுலத்திற்கே எதிரான கொடுங்குற்றம் வெளியான பின் யூத வெறுப்பியல் வெளிப்படையாக பேசப்பட முடியாது
போயிற்று. அதன் பின்னரும் கூட கத்தோலிக்க சடங்குகளில் யூத வெறுப்பு வெளிப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திகான் கவுன்சிலுக்கு (1960) பின் அது சிறிதே குறைந்தது. இந்த
கவுன்சிலில் கத்தோலிக்க திருச்சபை, 'திருச்சபைக்கு வெளியே மீட்பு உண்டு ' மற்றும் 'யூதர்கள் மீதான மீட்பரின் இரத்த சாபம் தவறு ' என்பதான பிரகடனங்களை செய்தது. ஆனாலும் கத்தோலிக்க உட்-பிரிவுகள் சில இரண்டாம் வத்திகான் கவுன்சிலை ஏற்கவில்லை. அந்த உட்பிரிவுகளில் மெல்கிப்சன் சார்ந்திருக்கும் கத்தோலிக்க பிரிவும் ஒன்று. மெல் கிப்சன் இப்பிரிவின் தீவிர உறுப்பினர். ஆனால் இன்று வத்திகானின் தலைமைபீடமான போப்பாண்டவரே இரண்டாம் வத்திகான் கவுன்சிலிலிருந்து பின்னகர்ந்து 'கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே மானுடத்துக்கு மீட்பு கிடையாது ' என அறிவித்துவிட்டார். (அதாவது மகாத்மா காந்திக்கு நரகம்; மெல்கிப்சனுக்கு சுவர்க்கம்). யூதர்களுக்கு எதிராக மத்தேயு 'நற்செய்தி'யிலுள்ள 'இரத்த சாப ' கட்டுக்கதையை பயன்படுத்த சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் திருச்சபை தயங்காது என்பதற்கான சான்று 2001 இல் கிடைத்தது. மே, 2001 இல் போப் ஜான்பால்-II சிரியாவிற்கு சென்றார். அங்கு போப் ஜான்பாலுக்கு மரியாதை வரவேற்பு அளிக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் சிரியாவின் அதிபரான பஷார் அசாத் போப்பின் முன்னிலையிலேயே யூதர்களை ஏசுவைக் கொன்றவர்கள் என்றும் இசுலாமியர்களால் நபி என்று நம்பப்படுகிற முகமதுவை கொலை செய்ய முயன்றவர்கள் என்றும் கூறி அவர்களை எதிர்க்க வேண்டிய இறையியல் கடமையை உணர்த்தினார். இரண்டாம் உலகப்போருக்கும், ஆறுமில்லியன் யூதர்களின் படுகொலைக்கும் பின்னர் உலக தலைவர்களின் மேடை ஒன்றில் மிகவெளிப்படையாக யூதர்கள் மீது 'இரத்த சாப' குற்றம் மூலம் அரசியல் எதிர்ப்புணர்வை உருவாக்க முயன்ற பேச்சு இதுவேயாகும். இப்பேச்சு முழுவதையும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக ஏற்றுக்கொண்ட போப் அப்போது மேடையில் இருந்தபடி அமைதிகாத்தார் என்பது மட்டுமல்ல, பின்னர் பஷார் அசாத்தை அவரது அமைதிக்கான முயற்சிக்காக பாராட்டவும் செய்தார். உலகெங்குமுள்ள யூத மற்றும் மதச்சார்பற்ற மானுட நேய அமைப்புகள் இதற்காக கண்டனம் தெரிவித்ததுடன் போப்பை தன் சிரிய சுற்றுப்பயணத்தை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தன. ஆனால் போப் அவற்றையெல்லாம் முழுமையாக புறக்கணித்து தன் சிரிய சுற்றுப்பயணத்தை எவ்வித தடங்கலுமின்றி முடித்துக்கொண்டார்.

இதே போப்தான் பெத்லகேம் நகரத்துக்குள் ஒரு மூலையில் ஒரு மசூதியை கட்ட இஸ்ரேலிய அரசு முஸ்லீம்களுக்கு அனுமதி அளித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான வத்திகானின் உறவையே முறித்துவிடுவதாக கூக்குரல் எழுப்பியவர். (இயேசு வளர்ந்ததாக நம்பப்படும் நகரமான பெத்லகேம் நகருக்குள் மசூதி கட்டினால் பெத்லகேமின் புனிதம் கெட்டுவிடுமாம்!) யூத வெறுப்பியலின் இறையியல் அடிப்படைக்கான அங்கீகாரத்தை கத்தோலிக்க தலைமைபீடம் வழங்கிவிட்ட பின் இஸ்ரேலில் இன்று பாலஸ்தீனியர்கள் என அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபிய மக்களுக்கும் இஸ்ரேலியருக்குமான மோதல்களில் இந்த கிறிஸ்தவ கட்டுக்கதை பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.


உதாரணமாக அண்மையில் வெளிவந்த கத்தோலிக்க இத்தாலியின் பிரபல பத்திரிகையான 'ல ஸ்டாம்பா ' இஸ்ரேலிய டாங்கி ஒன்றினைக் காட்டி அதனருகே குழந்தை வடிவ ஏசு
'என்னை நீ மீண்டும் கொல்ல வேண்டுமா ? ' என கூறுவது போல கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இத்தகைய கேலிசித்திரங்கள் நாசி இதழ்களில்தான் வரமுடியும். இத்தகைய சூழலில்தான் மெல்கிப்சனின் திரைச்சித்திரத்தில் இடம் பெறும் யூதர்கள் மேலான 'இரத்தசாபக் ' கட்டுக்கதையை வரலாற்று உண்மையாக உலகெங்கும் காட்டும் காட்சிகள் முக்கியத்துவமடைகின்றன.


யூத வெறுப்பியலின் இறையியல் சிலுவையில் தொடங்குகிறது

யூத வெறுப்பியலுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய அமைப்பான Anti Defamation League (ADL) மெல்கிப்சனின் திரைப்படத்தை மக்களுக்கு திரையிடப்படுமுன் பார்த்தது. அந்த
அமைப்பின் இயக்குநர் ஆபிரகாம் பாக்ஸ்மான் 'இப்படம் அதன் இப்போதைய நிலையில் வெளியிடப்பட்டால் வெறுப்பு, மதவெறி மற்றும் யூத-எதிர்ப்பு ஆகியவற்றையே பரப்புவதாக
இருக்கும். ' என கூறுகிறார். தனக்கு யூத எதிர்ப்பு ஏதுமில்லை என மெல் கிப்சன் மறுத்துள்ளார். ஆனால் அவர் பெருமையாக கிறிஸ்தவ மததலைமைப் பீடங்களிடமும், கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்களிடமும் தெரிவித்துள்ள தகவல்கள் அவரது கூற்றினை பொய்ப்பிக்கின்றன. திரைக்கதை மற்றும் வசனம் நற்செய்திகள் தவிர அக்ரிதாவின் மேரி மற்றும் ஆனி காத்தரைன் எம்ரிச் எனும் இரு கத்தோலிக்க பெண் துறவிகளின் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றும் எனவே வரலாற்றுத்தன்மை உடையவை என்றும் மெல்கிப்சன் கூறியுள்ளார். ஆனால் இந்த இரு பெண் துறவிகளுமே யூதர்களை கடுமையாக வெறுத்தவர்கள். யூதர்கள் கிறிஸ்தவ குழந்தைகளைக் கொன்று மதச்சடங்குகள் செய்வதான பொய்களை கூட எழுதத்துணிந்தவர்கள். எனவே ADL அமைப்பினர் இந்த திரைப்படத்தை வெறுப்பியல் வெறியை உருவாக்கும் திரைப்படம் எனக் கூறுவது சிறிதும் தவறல்ல. இரண்டாம் உலகப்போருக்கு முன் ஐரோப்பிய பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் துரு பிடித்த பழைய ஆணிகளைக் காட்டி 'இது என்ன தெரியுமா குழந்தைகளே! இதுதான் நம் மீட்பரான ஏசுவை சிலுவையில் அறைய யூதர்கள் பயன்படுத்திய ஆணி ' என்பார்கள். மாணவர்கள் ஆணியை பார்க்க மாட்டார்கள். வகுப்பறையிலிருக்கும் சக யூத மாணவர்களை ஏதோ அவர்கள்தான் இவர்களது 'மீட்பரை'க் கொன்றுவிட்டு இப்போது வகுப்புக்கு வந்திருப்பது போல பார்ப்பார்கள். இத்தகைய 'சிலுவைபாடு ' ஆணிகளை இரண்டாம் உலகப்போருக்கு பின் காண்பது வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. இப்போது மெல்கிப்சனின் 'புண்ணியத்தில் ' அத்தகைய ஆணிகள் விற்பனை வெகுவாக கூட ஆரம்பித்துள்ளதாம். (தன் ஒரே குமாரனின் இரத்தத்தால் நம் பாவங்களையெல்லாம் கழுவி, அவ்வாறு கழுவாத அஞ்ஞானிகளுக்கு நித்ய நரக நெருப்பை அளிக்க தயாராக இருக்கும் அன்பே வடிவான வானக தந்தையின் சுவர்க்கத்தில் மெல்கிப்சனுக்கு இப்போதே 'Presidential Suite ' முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.)


போண்டியஸ் பைலட் தன் கரங்களை கழுவியதன் மூலம் ஒரு கற்பனையா அல்லது உண்மையா என நாம் அறியமுடியாத இயேசு எனும் யூதரின் இரத்தப்பழியிலிருந்து விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் வரலாறு முழுக்க கோடிக்கணக்கான மக்களின் இரத்தப்பழியிலிருந்து சிலுவைபாடு சித்தரிப்புகள் அத்தனை எளிதாக தப்பிவிடமுடியாது - அது மெல்கிப்சன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் சிலுவைப்பாடானாலும் கூட.

passion5


பின்குறிப்பு:


கிறிஸ்தவ இறையியலின் மையத்திலிருந்து விலக மறுக்கும் யூத-வெறுப்பு இன்று உலகெங்கிலும் விவாதிக்கப்படுவது போல கிறிஸ்தவத்தின் விக்கிரக ஆராதனை எதிர்ப்பில் இருக்கும்
இறையியல் வன்முறையின் வரலாற்று விளைவுகள் விவாதிக்கப்படவில்லை. உதாரணமாக உலகிலேயே மிக நீண்டகால புனிதவிசாரணை எனும் கொடுமை எந்த ஐரோப்பிய மண்ணிலும்
நடத்தப்படவில்லை மாறாக பாரதத்தின் கொங்கண கடற்கரையோர பிரதேசங்களில்தான் நடத்தப்பட்டது. எனினும் புனிதவிசாரணை குறித்த வரலாற்றுச்சித்திரம் ஐரோப்பாவில் நடந்த
புனித விசாரணைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
பயன்படுத்தப்பட்ட நூல்கள்:


 • ஜேம்ஸ் ஷெப்பிரொ, Oberammergau: (The Troubling Story of the World's Most Famous Passion Play), Little Brown, UK 2000.
 • டேனியல் ஜோனா கோல்ட்கேகன், A MORAL RECKONING, Borzoi, USA 2002.
 • ப்ளோரிடா-ஹோலோகாஸ்ட்-மியூசியத்தின் இணையதளம்: www.flholocaustmuseum.org/history_wing/antisemitism/arts/passion_plays.cfm

திண்ணை.காம் இதமில் 2004 மார்ச்சில் வந்த கட்டுரை

Friday, February 16, 2007

மகா சிவராத்திரி


ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது.
பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர்.
மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர்,
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள்.

குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை மாறிடும்.
காலமும் வெளியும் கூட ஏதோ ஓர் பெரும் பிரக்ஞையில் ஏற்படும் ஸ்வரகதிகளென தோன்றும்.
இயற்பியலாளனின் அகம் விரிந்து அறிவியல் கவிதையாக இசைக்கப்படும் அந்த அபூர்வ தருணத்தில் பிரபஞ்ச இயக்கத்தின் அழகனைத்தும் சேர்ந்திலங்கும் குறியீடாக அவன் நடராஜ மூர்த்தியை காண்கிறான்.


ஆகா! உன்னதமான பிரபஞ்சம் முழுவதும் தழுவும் இயக்கத்தின் உணர்வு உள்ளெளும் பேறு பெற்ற ஒரு மாபெரும் மனிதர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சிவபெருமானின் நடனத்தின் ஒரு வீச்சாகவே அல்லவா உணர முடியும்! இதோ கேளூங்கள்:
"பூமியில் எங்கு சென்றாலும் ஓர் அசைவும் உயிர்ப்பும் உள்ளது. தோற்றத்தில் ஜடமாக இருக்கும் பாறைகள், உலோகம், மரம், களிமண்...எல்லாவற்றுக்குள்ளும் உள்ளார்ந்த இயக்கம் உண்டு. அணுக்கருவை எலக்ட்ரான்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ...திடப்பொருளாகக் காணப்படும் எல்லாவற்றுக்குள்ளும் அதிவேக இயக்கம் உள்ளது. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் சிவபெருமானின் அற்புத நடனத்தைப் போலவே அமைந்துள்ளது."
சொன்னவர் நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.அனந்த குமாரசாமியின் சிவதாண்டவம் குறித்த வார்த்தைகள் அழியாப்புகழுடையவை:
சிவதாண்டவம் அறிவியல், சமயம் மற்றும் கலை ஆகியவற்றின் இணைப்பு ஆகும்.
சிருஷ்டியின் இரவில் இயற்கை அசைவற்று உள்ளது.
சிவ சங்கல்பம் இல்லாமல் அது நடனமிட முடியாது. சிவபெருமான் தனது ஆனந்தத்துவத்தில் எழுகிறார். அந்த நடனம் ஜட இயற்கையை விழித்தெழ வைக்கும் நாத அலைகளை உருவாக்குகிறது. ஆகா! இயற்கையும் சிவபெருமானைச் சுற்றிச் சுழன்று அவரது மகோன்னதத்தைக் காட்டும் விதமாக நடனமாடுகிறது.
இது கவிதை அத்துடன் இது அறிவியல்

அணு உட்துகள்கள் இயற்பியலாளர் ப்ரிட்ஜாப் காப்ரா 'தாவோ ஆஃப் பிஸிக்ஸி'ல் கூறுகிறார்:

"சிருஷ்டியும் அழிவும் லயத்துஅன் வெளிப்படுவது என்பது பருவக்காலங்களின் சுழற்சியிலும் உயிர்களின் ஜனன-மரணத்திலும் மட்டுமல்ல, ஜடப்பொருண்மையின் அடிப்படைத்தன்மையிலேயே அந்த லயம் உள்ளது என்பதனை நவீன இயற்பியல் நமக்கு காட்டியுள்ளது.
நவீன இயற்பியலாளருக்கு
சிவ தாண்டவம் என்பது
அணுவுக்கு உள்ளே இருக்கும்
துகள்களின் தாண்டவமே ஆகும்.

...பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாரத கலைஞர்கள் சிவதாண்டவத்தினை செப்புத்திருமேனி விக்கிரங்களாக வடித்தனர்.
இன்று நவீன இயற்பியலாளர்கள் மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் பிரபஞ்ச தாண்டவத்தின் இயக்கங்களை பதிவு செய்கின்றனர்.
(சிவ பெருமானின்) பிரபஞ்ச தாண்டவ உருவகம்
பழமையான தொன்மத்தையும்,
ஆன்மிக கலையையும்,
நவீன இயற்பியலையும்
ஒருங்கிணைக்கிறது."

அணுவுக்குள் இயக்கத்தைக் கண்ட இயற்பியலாளருக்கு சிவதாண்டவம் உள்மனதில் உதயமாயிற்று என்றால் பிரபஞ்சவியலாளருக்கு எவ்வித எண்ணம் ஏற்பட்டது?
கார்ல்சாகன் தனது 'காஸ்மாஸ்' எனும் நூலில் கூறுகிறார்:
"ஒவ்வொரு பிரபஞ்ச சுழலுக்கு முன்னருமாக அண்ட சராசரங்களும் உதயமாவதை மிக அழகிய உன்னதமான வடிவி காட்டுவது பிரபஞ்ச தாண்டவ வடிவமாகும். நடனங்களின் தலைவனான நடராஜராக சிவபெருமான் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். அவரது வலது மேல் கரத்தில் உள்ள டமரு சிருஷ்டியின் நாதத்தை காட்டுகிறது. இடது மேல்கரத்தில் சுழலும் நெருப்பு ஜுவாலைகள் உள்ளன. அது இப்போது முகிழ்த்தெழும் புதிய பிரபஞ்சமும் காலத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் அழிந்துவிடும் என்பதனைக் காட்டுகிறது. இந்த அழகிய விக்கிரகத்தை நவீன வானவியலின் தரிசனங்களின் ஒருவித முன்-அறிதலாக (premonition) நான் காண்கிறேன்."இயற்பியலாளர்கள் மட்டுமல்ல மனவியலாளர்களும் கூட மனதின் அக பிரபஞ்சத்தில் சிவ தாண்டவத்தை உணர்கின்றனர். அறிவியல் சிறுபிள்ளைத்தனமான மத நம்பிக்கைகளை சிதறடிக்கிறது. அத்தருணம் சிவதாண்டவத்தின் ஒரு பகுதியாக வாழ்வு மாறுவது எத்தகையதோர் புத்துணர்ச்சியுடன் வாழ்வையும் பிரபஞ்சத்தையும் காணும் வலுவினை நமக்கு தருகிறது! விலையனூர் ராமசந்திரன் இன்றைய தேதியில் பிரக்ஞை குறித்த ஆராய்ச்சியாளர்களில் மிகச்சிறந்தவராக கருதப்படுபவர். அவர் கூறுகிறார்: "(ஆன்மிக உணர்வுக்கு அருகில் அறிவியலாளன் வரும் தருணங்களில்) பரிணாமமும் ஒன்றாகும். ஏனெனில் கால வெளி குறித்து ஒரு தெளிவினை உங்களுக்கு அளிக்கிறது. ஒரு பெரும் பயணத்தில் ஒரு பகுதியாக உங்களை உணர்ந்திட வழி வகுக்கிறது. இதையே மூளையினை ஆராயும் அறிவியல் புலங்களுக்கும் கூறலாம். இந்த புரட்சியில் மனதினும் உடலினும் வேறாக ஆவி ஒன்று இருப்பதாக கூறும் பார்வையினை விட வேண்டியதாயிற்று. உண்மையில் இக்கருத்து அச்சமூட்டுவதல்ல மாறாக விடுதலை உணர்வளிப்பதாகும். நீங்கள் இந்த உலகில் ஏதோ தனித்தன்மை படைத்த படைப்பு என்றும் இந்த பிரபஞ்சத்தை உங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட தனி இடத்தில் அமர்ந்துகொண்டு பார்க்கிறவர் என்றும் நினைத்துக்கொண்டு இருந்தால் உங்கள் அழிவு ஏற்க முடியாத துன்பமாகிறது. மாறாக நீங்கள் அத்தகைய தனித்தன்மை கொண்ட பார்வையாளராக இல்லாமல் சிவபெருமானின் பெரும் பிரபஞ்ச தாண்டவத்தில் நீங்கள் உண்மையிலேயே ஒரு பகுதியாக உணரும் அத்தருணம் தனில் உங்கள் மரணம் துக்ககரமான விடயமில்லை. மாறாக, இயற்கையுடன் மீண்டும் இணைந்திடும் ஒரு ஆனந்த தருணமாக உங்கள் நடனம் மாறுகிறது."


நமது முன்னோர்களும் இந்த பிரபஞ்சமளாவி ஊடுருவி நின்ற பிரம்மாண்ட இயக்கத்தினை சிவ தாண்டவமாக உணர்ந்தார்களா? அல்லது அறிவியலாளர்கள் சிலர்தான் இன்று அவ்வாறு உணர்கிறார்களா என தோன்றலாம். நிச்சயமாக மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் திருமூலருக்கும் க்வார்க்கும், க்வாசரும், சூப்பர் நோவாக்களும், பெரும் அதிர்வும், பிரபஞ்ச விரிவும், மேசானும், பாஸிட்ரானும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்திலும் அணுவின் நுண்மைக்குள்ளும் சிவ தாண்டவ் இயக்கத்தினை அவர்கள் தம் அகத்துணர்வில் உணர்ந்து அனுபவித்து அந்த சிவ இன்பத்தில் தோய்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை.


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்(கு) ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
என சொல்லும் எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகளின் வார்த்தைகளில் விரிவது இன்று அறிவியல் காட்டும் பிரபஞ்சமே அல்லவா? கார்ல் சாகனும் காப்ராவும் பத்தி பத்தியாக சிவபெருமானின் தாண்டவத்தை விவரித்ததை மாணிக்கவாசக சுவாமிகள் இரண்டே வரிகளில் கூறிவிடுகிறார் தெய்வ தமிழில் திருவண்டப்பகுதியில்.

விரி பொருள் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

திருமூலர் கூறுகிறார் பாருங்கள்:
எங்குந் திருமேனி எங்குந் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
எங்குஞ் சிவனரு டன்விளை யாட்டே (திருமந்திரம் 2721)

சிவ உணர்வு உலகெங்கும் வியாபிக்கட்டும்.
சிவ உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்தும் சுடர்விடட்டும்.
சிவ உணர்வு அமைதியையும் நன்மையையும் அனைவருக்கும் அளிக்கட்டும்.
சிவமே அனைத்தும். சிவமன்றி வேறெதுவும் இப்பிரபஞ்சத்தில் இல்லை.
சிவ தாண்டவமே அனைத்தியக்கமும்.
வண்ணத்து பூச்சியின் அசைவிலும்
அண்ட வெளியின் கருந்துளை சுழற்சியிலும்
இருதயத்தின் இயக்கத்திலும்
பரிணாம மாற்றங்களிலும்
அழிவுகளிலும் ஆக்கங்களிலும்
எங்கும் சிவதாண்டவமே.
கலங்கும் சிறு நெஞ்சும் அமைதி பெற
அம்மையப்பனாய் அரவணைக்கும் தாயுமானவன் சிவன்.
சிவபெருமானின் இரவுக்கு காண ஒரு எளிய சமர்ப்பண இருநிமிட தொகுப்பு:

ஹிட்லரும் குஜராத் பாடநூலும்


நண்பன் எனும் பதிவர் அதிசயிக்க வைக்கும் நண்பர் (சும்மா பேச்சுக்கு சொன்னேன் அந்த நல்ல மனுசனுக்கு யாராவது ஆப்பு வச்சிராதீங்கடே). ஆழமான வாசிப்பு உடைய சகோதரர். அவரது பதிவுகளை ஏற்காவிட்டாலும் கூட அதில் காணப்படும் வாதங்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும். பின்நவீனத்துவம் பேசுபவருக்கு இத்தனை தெளிவா என்று வியக்க வைக்கும். :) ஆனால் அவரது அண்மை பதிவு ஏமாற்றமடைய வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்த பதிவின் வரிகளை நண்பன் எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்லடியாரே எழுதியிருக்கலாம் அல்லது சுவனப்பிரியன் (சாரி சுவனப்பிரியன் தேவையில்லாம வம்புக்கிழுக்கிறேன்னு நினைக்காதீங்க. ஆனா உண்மை எதுன்னு கொஞ்சம் கூட ஆராயாமல் - குறைந்த பட்சம் நடுநிலைப்பள்ளி அட்லஸைக் கூட பார்க்காமல் காபா நிலநடுக்கோட்டுக்கு அருகாமையில் இருக்குதுன்னு நீங்க சொன்ன மாதிரிப்பட்ட சமாச்சாரம்தான் இதுவும்.) இன்னொரு சாரி விசயத்துக்கு வராம சூடடிக்கிற புத்திக்கு. சரி விசயத்துக்கு வாரேன். எதுவானாலும் நண்பர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அதற்கு அவரும் சரி அதன் பின்னர் நல்லடியாரும் சரி முன்-வைத்திருக்கிற ஆதாரங்களையும் பார்க்கலாம்.


ஆதாரங்களின் அணிவகுப்பு


நண்பன் ஆதார பூர்வ தொனியுடன் உரைக்கிறார்: "குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதே ஹிட்லருக்குத் தான் கூட்டமாகக் கூடி பஜன் பாடினர் என்பது பத்திரிக்கைகளில் வந்த செய்தி." அவர் மேலும் கூறுகிறார்: "அத்துடன் நாஜிக்களின் சின்னமான ஸ்வதிக்காவை தடை செய்ய ஜெர்மன் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக கூக்குரலிடும் - இந்த neo-nazi அமைப்புகளுக்கும் ஒரு நகல் அனுப்பி வையுங்கள்."


(உரல்:http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_15.html)


ஹிட்லருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூட்டமாக கூடி குஜராத்தில் பஜனை பாடினார்களா? அது செய்தியாக பத்திரிகையில் வந்துள்ளதா? உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. எனவே நான் நண்பனிடம் ஆதாரம் கேட்டேன். நண்பன் அப்போது அவர் கைவசம் இருந்த ஆதாரம் என ஒரு சுட்டியை அளித்து பின்வரும் பதிலையும் கூறியிருந்தார்.


Gulf Newsன் இந்திய செய்திப் பக்கத்தில், 2005 ஆம் ஆண்டு படித்தது. (நவம்பர் / டிசம்பர் மாதம்). பின்னர் இந்தியாவில் இருந்து வெளியாகும் ஒரு இஸ்லாமிய இதழிலும் இது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களாகி விட்டதால், இது குறித்து தேடுவதற்கும் நேரம் தேவைப் படுகிறது. ஆனால், அதைவிட, படுசுவராஸ்யமான, 'போற்றிப் புகழ்பாடுதலை' விட மோசமான குற்றச்சாட்டுகள் - குஜராத் பாட புத்தகங்களில் ஹிட்லரின் புகழ் எவ்வாறு பாடப்படுகிறது; காந்தியின் மரணம் குறித்து அந்தப் பாடபுத்தகங்கள் எவ்வாறு மௌனம் சாதிக்கின்றன என்பதைப் பற்றிய விரிவான வாதங்கள் இருக்கின்றன. அதை மறுத்தும் வாதங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை. ஆனால், மிகப் பலவீனமான, இப்படி இல்லை, அப்படி, ஏன் எங்களை மட்டும் கடிந்து கொள்கிறீர்கள் - ஸ்டாலின், மா, இவர்களின் புகழ் பாடும் சோஷலிஸ வாதிகளான, நேரு, கம்யூனிஸ்ட்கள் இவர்களையெல்லாம் ஏன் கேள்வி கேட்கவில்லை என்றெல்லாம் வாதம் போகிறது. தற்சமயத்திற்கு இவற்றைப் படித்துப் பாருங்கள். நான் வாசித்த செய்தியை (Gulf Newsn பழைய செய்தித் தாள் / அந்த இஸ்லாமிய இதழ் கிடைக்குமா என முயற்சிக்கிறேன்.)


அவர் கொடுத்த சுட்டி: http://www.dialognow.org/node/view/1148


பழைய நண்பர் நல்லடியார் பிரசன்னமாகி என்னை ஒரு பிடி பிடித்தார்:


2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மோடி அரசிற்குட்பட்ட குஜராத் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட பாடபுத்தகங்களில் ஹிட்லரைப் புகழ்ந்து எழுதப்பட்ட பாடங்களை நீக்கச் சொல்லியதற்கு முரளி மனோஹர் ஜோஷி (டடீண்டு அல்ல!:-) அவற்றில் தவறேதுமில்லை என்று பாராளுமன்றத்தில் கூறினார்.
http://www.indowindow.net/akhbar/article.php?article=107&category=7&issue=17
http://humanrightsindia.blogspot.com/2005/11/government-acts-but-just-not-enough.html
சங்பரிவார கல்வியாளர்களின் ஹிட்லர் ஆதவுக்கும் அவற்றை பள்ளிப்பாடங்களில் புகழ்ந்து எழுதியதற்கும் இந்திய இஸ்ரேல் தூதரகம் எதிர்ப்புகளைத் தெரிவித்தையும் நீல்கண்டன் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிடலர் அபிமானம் பற்றி நீலகண்டன் உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறாரா?


ஒரு அனானி தோன்றி பிபிசி உரல் ஒன்றை அளித்தார்: http://news.bbc.co.uk/2/hi/south_asia/4711475.stm


வலுவான ஆதாரங்கள் தான் இல்லையா?

ஆதாரங்களை உண்மையுடன் உரசிப் பார்ப்போம்


நண்பன் கூறும் சுட்டி ஒரு விவாத இழையுடையது. அதில் கபீர் என்பவர் கூறுகிறார்: "Modi had extolled the virtues of Hitler and glory of Nazism in Gujarati text books." இதற்கு படேல் என்பவர் பதிலளிக்கையில்: ""Modi had extolled the virtues of Hitler and glory of Nazism in Gujarati text books. At the commencement of the current academic year he quietly dropped all such laudatory references in the new editions without any fuss." என்று கபீர் காட்டிய அதே செய்தி குறிப்பிடுவதாக கூறுகிறார். (இருவருமே செய்தியின் மூலத்தை தந்ததாக தெரியவில்லை). அடுத்ததாக கபீர் பாடநூலின் பகுதியை முன்வைக்கிறார்:"You will find it interesting to read Chapter 6. "Be Vishvayuddho Vacchenun Vishva" and therein, pages: 63 to 68 dealing with Fascism, Nazism, Mussolini and Hitler." (ஆனால் என்ன எனக்கு இதை படிக்கும் போது ஒரு வருத்தம் நண்பன் வார்த்தையை கூட கபீரிடமா கடன் வாங்க வேண்டும்? அங்கும் வருகிறது 'ஹிட்லர்-பஜன்'. ஆர்,எஸ்,எஸ் காரர்கள் கூடி செய்வதாக அல்ல மோடியின் குஜராத் பாடநூல் செய்வதாக.)


சரி அடுத்ததாக நல்லடியார் கொடுக்கும் சுட்டிகளுக்கு செல்லலாம்:
http://www.indowindow.net/akhbar/article.php?article=107&category=7&issue=17
இந்த சுட்டி அக்பார் எனும் தெற்காசிய அமைப்பின் இணையத்திலிருந்து இருந்து. இதில் கொடுக்கப்பட்டுள்ளது பின்வருமாறு:
The social science textbook for Class X showers praise on the Nazi chief. The section on "Internal achievements of Nazism" does not even cursorily mention the Holocaust and the extermination of Jews. It dismisses the mass killings in one sentence: "Hitler adopted a policy of opposition towards the Jews and advocated the supremacy of the German race." The section begins by stating, "Hitler lent dignity and prestige to the German government within a short time by establishing a strong administrative set-up." Then, it credits the Fuehrer with a string of achievements. "Hitler adopted a new economic policy - brought prosperity to Germany - began efforts for eradication of unemployment. Made untiring efforts to make Germany self-reliant within one decade. Instilled a spirit of adventure into the common people. But in doing so led to extreme nationalism and caused the Second World War." Mussolini, the same textbook states, " established a strong, stable government in Italy. He made Italy prosperous and powerful. All the institutions of the state functioned according to the tenets of fascism". There are no critical comments either about fascism or Mussolini. When the textbooks were brought to the notice of a parliamentary committee a couple of years ago, it reacted strongly, saying these sections paint a "frighteningly uncritical picture of fascism and Nazism. There has been no mention of the extermination of six million Jews." The Gujarat government, however, sent a letter stating its disagreement with the parliamentary committee's observations.


இதற்கு பெயர்தான் பாதி உண்மை பாதி பொய் எனவே முழு புளூகு என்பது.


இதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள். மோடி ஏதோ இருந்து குஜராத்தின் பத்தாம் வகுப்பு வரலாற்று பாடநூல்களை எழுதியது போல கபீர் என்பவர் கூறுவதை கவனியுங்கள். 'ஹிட்லரின் நற்குணங்களையும்' (virtues of Hitler) நாஸியிஸத்தின் மகிமையையும் (glory of Nazism) மோடி பாராட்டுகிறாராம். எங்கே? எந்த பக்கத்தில்?


பத்தாம் வகுப்பின் இந்த பாடத்தின் பெயர்: இரண்டு உலகப்போர்களுக்கிடையே உலகம். இது ஆறாவது பாடம். இப்பாடத்தின் தொடக்கத்திலேயே இப்பாடம் ஜனநாயகத்தை உயர்த்தி பேசி சர்வாதிகாரத்தை தாழ்த்தி பேசிவிடுகிறது.


"ஐரோப்பாவில் சர்வாதிகாரமும் கம்யூனிசமும் ஜனநாயக அமைப்பினைக்காட்டிலும் தம்மை உயர்ந்தவையாக காட்டமுயன்றன. ஆனால் ஐரோப்பாவில் இரண்டு நாடுகள், -இங்கிலாந்தும் பிரான்ஸும்- சர்வாதிகாரம் மற்றும் கம்யூனிச எழுச்சிக்கு எதிரான அரணாக இருந்தன. போரின் பின்விளைவுகள் இந்நாட்டு பொருளாதாரங்களை பலவீனமடைய செய்த போதிலும் அவை ஜனநாயகத்தில் ஸ்திரமாக இருந்தன. அவை இந்த உலகுக்கு வலிமையான ஜனநாயகம் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ளமுடியும் என காட்டின. இப்போது நாம் ஐரோப்பாவில் சர்வாதிகாரிகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் காணலாம்." (பத்தாம் வகுப்பு நூல்: பக் 66)
ஆக திரு.நண்பன் அளித்திருக்கும் இழையின் முழு ஜல்லிகளூக்கு அப்பால் குஜராத் பாடநூலின் நோக்கம் சர்வாதிகாரத்தை புகழுவது அன்று மாறாக ஜனநாயகம் சர்வாதிகாரத்தை காட்டிலும் அதிக வலு வாய்ந்தது என்பதனை நிரூபிப்பதே. இந்த குரல் பாடநூல் முழுக்க இடையூடுவதை நோக்கலாம். உதாரணமாக 'நாஸி கட்சி மக்களிடையே இருந்த பொருளாதார ரீதியான அதிருப்திகளை பயன்படுத்திக்கொண்டது.' (பக்.69) மேலும் "நாசி கட்சி சர்வதேச கம்யூனிச தத்த்துவங்களுக்கு எதிராக இருந்தது. முதலாளிகள் கம்யூனிசம் குறித்த அச்சத்தால் நாசிகளை ஆதரித்தனர்" (பக். 69) ஆக இந்த பக்கம் முழுவதும் எவ்வாறு நாசிகள் மக்களின் அச்சங்களை பயன்படுத்திக்கொண்டனர் என்பதனை காட்டுகிறது. அடுத்ததாக 'ஹிட்லர் சுப்ரிமோ' எனும் சிறு தலைப்பு வருகிறது. இது எவ்வாறு ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினான் என்பதனை விளக்குகிறதே அல்லாமல் ஹிட்லரின் புகழினை பாடவில்லை. "1934 இல் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் இறந்தார். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை விட்டுவிட்டு ஹிட்லர் தானே ஜனாதிபதியானான்" (பக். 71)


ஹிட்லர் சுப்ரிமோ எனும் பாடப்பகுதி : இது ஹிட்லரை சுப்ரிமோ என புகழ்பாடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் இது எப்படி ஹிட்லர் முறையில்லாமல் ஜெர்மனியின் தலைவன்-சுப்ரிமோ ஆனான் என்பதனை விளக்குகிறது


அடுத்ததாக நாசி தத்துவம் விளக்கப்படுகிறது: இதுவும் நாசியிசத்தை புகழவில்லை. ஆரிய இனமேன்மை வாதம், பாடநூல்களில் ஹிட்லர் புகழ்பாடப்பட்டது, ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகின்றன. மேலும் மக்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டது குறித்து கூறப்படுகிறது. (பக். 71) பின்னர் "60 இலட்சம் யூதர்களின் உயிர்களை வாயு அறைக்குள் பறித்த கொடுமையான மனிதத்தன்மையற்ற செயல் செய்யப்பட்டது என குறிப்பிடுகிறது. மேலும் நாசி தத்துவமே இரண்டாம் உலகப்போர் உருவாக காரணமாக இருந்தது. (பக்.71) என்றும் குறிப்பிடுகிறது. இதற்கு பின்னர் நாசிகள் தொடக்கக்காலத்தில் ஜெர்மனியில் செய்த நிர்வாக சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் இந்த பாராவிலும் இறுதியில் நாசிகளே உலகப்போருக்கு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. இப்போது மேலே நல்லடியார் கொடுத்துள்ள செய்தியின் பொய்யை பாருங்கள். "பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் நூல் 'நாசிகளின் உள்நாட்டு சாதனைகள்' என்ற தலைப்பின் கீழ் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது குறித்து சிறு குறிப்பு கூட கொடுக்கவில்லை"
(The social science textbook for Class X showers praise on the Nazi chief. The section on "Internal achievements of Nazism" does not even cursorily mention the Holocaust and the extermination of Jews. It dismisses the mass killings in one sentence: "Hitler adopted a policy of opposition towards the Jews and advocated the supremacy of the German race.")

ஆனால் அதே பக்கத்தில் மேலே குறிப்பிட்ட பாரா தொடங்குவதற்கு முந்தைய வாக்கியமே 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது குறித்துதான். அதுவும் மிகக்கடுமையாக நாசிகளை சாடும் வாக்கியமாக அமைந்துள்ளது. ஆக, இதுதான் நேர்மையின் இலட்சணமாக இருக்கிறது.

இது எப்படி இருக்கு?'நாசிகளின் உள்நாட்டு சாதனைகள்' என்ற தலைப்பின் கீழ் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது குறித்து சிறு குறிப்பு கூட கொடுக்கவில்லை: உண்மைதான்


ஏனென்றால் அதற்கு முந்தைய பாராவில் 60 இலட்சம் யூதர்களை கொன்றது மனிதத்தன்மையற்ற கொடூரசெயல் எனக் குறிப்பிடப்படுகிறது.


இதே பாடநூலில் 77 ஆவது பக்கத்தை எடுத்துக்கொள்வோம் அது என்ன சொல்கிறது? ஹிட்லரிய முசோலினிய தேசியவாதங்களை புகழ்கிறதா? இல்லை மாறாக, அது கூறுகிறது:

"ஜெர்மனி இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் தேசியமானது அதீத இராணுவத்தன்மை கொண்டதாக இருந்தது. பழிவாங்கும் உணர்ச்சி, வெறி மற்றும் வெறுப்பு ஆகியவை இம்மக்களின் மனதில் உருவாகிவிட்டிருந்தன. வெர்சைல்லீஸ் உடன்படிக்கையில் ஜெர்மனிக்கு மிகு அநியாயம் இழைக்கப்பட்டிருந்தது, அவ்வாறே இத்தாலியும் அவமதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக முஸோலினியின் பாசிச கட்சியும் ஹிட்லரின் நாசி கட்சியும் இந்நாடுகளில் அதிகாரத்தை கைப்பற்றி தக்க வைத்துக்கொள்வதற்காக குறுகிய, இராணுவவாத தேசியத்தை மக்களிடம் பரப்பி தமது பேராதிக்க கொள்கைகளை பரப்ப முயன்றனர்." (பக்.77)


இனி பிபிசி தொடுப்பு சொல்வது என்ன என்று பார்க்கலாம்: "...A Jesuit priest and social activist, Cedric Prakash, says the books contain more than 300 factual errors and make little mention of the holocaust....In the chapter entitled "Internal achievements of Nazism," one textbook quoted by AFP states: "Hitler lent dignity and prestige to the German government within a short time, establishing a strong administrative set-up."
அதே அரைகுறை பொய்கள்.


சரி இதே அளவுகோலை நாம் தமிழ்நாட்டு பாடநூலுக்கு அளிப்போம். இதே போல பிய்த்து பிடுங்கி போடுவோம். எப்படி தேருகிறது என்று பார்ப்போம். தமிழ்நாடு பாடநூல் கழகம் (Tamil Nadu Textbook corporation) வெளியிட்டுள்ள 10 ஆம் வகுப்பு 'History and Civics" நூலில் இருந்து. இந்த தமிழ்நாட்டு பாடநூல் நிறுவன வரலாற்று நூலின் ஆக்கியோர் குழு தலைவி அருட்.சகோதரி மேரி சகாரியா. முதல்வர் ரோசரி M.H.S.S.
இதில் முஸோலினி குறித்து கூறப் பட்டுள்ளதை பாருங்கள்.


இந்த நூல் 2006 இல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது


இப்போது நண்பன் என்ன சொல்லுவார்? மோடிக்கு பயன்படுத்திய அதே அளவுகோலை பயன்படுத்தி திமுக காரர்கள் முஸோலினி-பஜனை பாடுவதாக கூறுவாரா? அல்லது நண்பனின் பின்-நவீனத்துவ அளவுகோல்கள் மோடிக்கும் மு.க.வுக்கும் மாறுமா?
ஆக ஹிட்லரின் கொள்கைக்கு 'மோடியின்' பாடநூல் கொடுக்கும் அடைமொழிகள் என்ன?


 • மனிதத்தன்மையற்றது (பக்.71)
 • கொடூரமானது (பக். 71)
 • சாம்ராஜ்ஜிய விஸ்தீகரிப்பு நோக்கம் கொண்ட பேராசைத்தன்மை கொண்டது (பக் 74)
 • வெறி பிடித்தது (பக். 77)
 • வெறுப்பு கொண்டது (பக். 77)
 • குறுகியத்தன்மை கொண்டது (பக். 77)

ஆக இந்த பாடத்தின் போக்கு இவ்வாறு அமைந்துள்ளது: சர்வாதிகாரிகள் அன்று நிலவிய நிச்சயமற்ற தன்மையையும் மக்களின் அச்சத்தையும் பயன்படுத்தி அரசதிகாரத்தை பிடித்தனர். தொடக்கத்தில் சில சாதனைகளை செய்தனர். ஆனால் தேசத்தை அவர்கள் அழிவுப்பாதையில் அழைத்துச் சென்றனர். இதில் சர்வாதிகாரிகளின் சாதனையை சொல்லும் பாராவை மட்டும் காட்டி, அவர்களை குறை சொல்லும்பகுதிகளை தவிர்த்து அது இல்லாதது போல பிரச்சாரம் செய்வது எத்தகைய இழிந்த பொய்! இத்தகைய முழுமையாக நாசி, பாசிச அமைப்புகளை கண்டிக்கும் பாடநூலில் ஒரே ஒரு பாராவை எடுத்து அதனை வைத்து செய்யும் பிரச்சாரத்துக்கு பெயர் என்ன நண்பன்? இத்தகைய பிரச்சாரம் தங்களுக்கு உகந்ததல்ல என்பது நான் உங்கள் மீது கொண்டுள்ள மதிப்பின், உங்களைக் குறித்த பிம்பத்தின் அடிப்படையில் எனக்கு எழும் எண்ணம். மற்றபடி தொடர்ந்து குஜராத்தில் நாசிகளுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் செயல்படுவதாக நீங்கள் கூறிக்கொள்ளலாம். அது உங்கள் சுதந்திரம்.

Wednesday, February 14, 2007

டீச்சர் இவன் என்னை கிள்றான்

தெளிவாகவே சொல்கிறேன் இது ஏதோ ஒரு பதிவர் குறித்து கிடையாது. திருவாளர். 'திரு'வைக் குறித்த பதிவுதான் இது. இன்னும் சொல்ல போனால் அன்னாரின் நேர்மையைக் (திருவோட நேர்மை அப்படீங்கிறது சூடான ஐஸ்க்ரீம் அப்படீங்கிற மாதிரு ஒரு விஷயம் இது) குறித்த பதிவு. இப்போது திரு பகன்றிருக்கிறார்: "டீச்சர் இவன் என்னை கிள்றான்' ஒண்ணாங்கிளாயில் கேட்க வேண்டிய குரலை தமிழ்மண திரட்டியில் கேட்க வேண்டியிருப்பது தலை எழுத்து. சரி அப்படி என்ன விசயம்.


அன்னார் சொல்கிறார்: "பார்ப்பனீயம் செய்த கொடுங்கோன்மையை எனது வலைப்பதிவில் பதிவு செய்வதால் கடந்த சில நாட்களாக ஒருவர் தனது வலைப்பதிவில் தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார். அய்யாவழி, அய்யன்காளி, திருவிதாங்கூரில் பார்ப்பனீய, இந்துத்துவ கொடுங்கோன்மை பற்றிய எனது கட்டுரைகளுக்கு எதிர்கட்டுரை என்ற பெயரில் charecter assasination செய்வதை மட்டுமே குறிக்கோளாக இருக்கிற இவர்களுக்கு பதில் சொல்தில்லை. அதே வேளை தனிப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறேன்."


ஐயா காமெடி பண்றீங்க சாமி!
எப்படி நான் character assasination செய்தேனாம்! அய்யா வைகுண்டரை குறித்து திருவாளர். கேரக்டர் சொன்ன தகவல்களில் மறைத்த தகவல்கள் என்ன? அவர் அய்யா வழியே இந்து தருமத்திலிருந்து புறம்பானது என்றாரே எதன் அடிப்படையில்? அய்யா வைகுண்டர் மதமாற்றத்தினை எதிர்த்தாரே அதை குறித்து கூறினாரா? அய்யா வைகுண்டருக்கு எதிராக கிறிஸ்தவமிசிநரிகள் பொய் பிரச்சாரம் செய்தார்களே அதனை கூறினாரா? அய்யா வைகுண்டர் நால்வேத மறைபொருளாக தன்னைக் கூறியதை கூறினாரா? அல்லது அய்யா வைகுண்டர் வழியில் சாதீய தீமையை இந்து புராண அரக்கர்களுடன் ஒப்பிட்டு கூறப்படுவதை கூறினாரா? இத்தனையும் மறைத்து திரித்து கூறிக்கொண்டிருப்பவரை நான் நேர்மையற்றவர் என்று கூட கூறவில்லை 'எனது பார்வையில் நேர்மையற்றவர்' என்று கூறியவுடன் ரோசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது மனுசனுக்கு,
சாப்பாட்டில் சோடியம் க்ளோரைட் சேர்க்கிறவராக இருந்தால் என்ன செய்திருக்க வேணும்? அரவிந்தன் நீலகண்டன் சொல்வது பொய். அய்யா வைகுண்டர் அப்படியெல்லாம் சொல்லவில்லை என நிரூபித்திருக்க வேண்டியதுதானே. சரி அதுதான் போகட்டும் குறைந்த பட்சம் அரவிந்தன் நீலகண்டன் சாதீய கொடுமைகளை மறைத்து அவர் மதமாற்றத்தை எதிர்ப்பதை மட்டும்தான் பிரதானப்படுத்தியிருக்கிறானா? இதோ நான் எழுதியிருப்பதை பாருங்கள். மேல்சாதி கொடுமைகளை சொல்லுமிடத்து:
'மோளுக்குழிக்குள் மொகுமொகனவே புழுக்கள்
தோளு வழி புழுக்கள் தூணி மிகச் சொரியும்
அட்டை மிதக்கும் அரிய தேள் மிதக்கும்
விட்ட நரகு மிகுவாய் புழு மிதக்கும்
நாற்ற துறைகள் நரகத் துறை போலே' இருந்த சிறையில் அன்புருவான ஐயாவை சித்திரவதை செய்தனர்.
'குண்டியிலே குத்தி குனியவிடுவானொருத்தன்
நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்
சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று
வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி'
எல்லாம் ஐயாவை கொடுமை செய்தனர் சாதி வெறி பிடித்த மிருகங்கள்.
என்றுதான் கூறியிருக்கிறேன். இதில் எங்கையா இருக்கிறது பார்ப்பனீயமோ இதர ஈயங்களோ?


சரி அய்யன் காளி விசயம் எப்படி?
அய்யன் காளிக்கு ஒரு நாயர் அன்றைய சூழலில் தன் சொந்த சாதியினரையும் எதிர்த்து நிலம் கொடுக்கிறாரே அது குறித்து ஏன் திரு சொல்லாமல் விட்டார். அய்யன்காளி குறித்த எனது கட்டுரையை பார்க்கவும். அதில் சமுதாய நல்லிணக்க தரவுகளையும் மறைத்திடவில்லை. அது போலவே சாதீயக் கொடுமைகளையும் மறைத்திடவில்லை. ஏன் டாக்டர் மிச்சேல் போன்றவர்களின் நல்-உளத்தையும் தீரத்தையும் கூட மறைத்திடவில்லை. ஆனால் திருவின் நேர்மை எப்படிப்பட்டது? இத்தனைக்கும் நான் மேலேகூறிய செய்தி திரு தந்துள்ள அம்பேத்கர் இணையதளத்தில் உண்டு. (சுட்டியை உரலை தராமல் அம்பேத்கர் இணையதளம் என பொத்தாம் பொதுவாக தந்திருந்தார் திரு. நேர்மை ஐயா நேர்மை. சின்ன சின்ன விசயத்தில் கூட நேர்மை வழிந்து ஓடுகிறது.
"Ayyan had a benevolent landlord in Govinda Pillai. The landlord cleared jungles to make fields with the help of Ayyan. Later he gifted a small plot to Ayyan. Land owned by a Pulayan created unease among the landed. Ayyankali grew up to be a tall, well built and handsome young man. He was known for his physical prowess and proficiency in martial arts. He was playing football with children of his age when the ball kicked by Ayyankali fell on the roof of a Nair house. The Nair warned him not to play with upper caste young men."
(http://www.ambedkar.org/books/AYYAN-KALI.htm)
இதில் ஒரு விசயத்தை விட்டு மற்றொரு விசயத்தை மட்டும் சொல்லுகிற புத்திக்கு பெயர் என்ன நேர்மையா? நேர்மையின்மையா?


 • இது நேர்மையாளர் திருவின் பதிவு அய்யா வைகுண்டர் குறித்து:
 • http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_23.html
 • இது பாசிச பொய்யன் அரவிந்தன் நீலகண்டனின் பதிவு அய்யா வைகுண்டர் குறித்து:
 • http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_116947475031872823.html
 • இது திருவாளர் நேர்மையின் ஓநாய் அழுகை பதிவு :
 • இங்கே
 • இது தனிமனித தாக்குதல்களும் கேரக்டர் அசாசினேஷனும் கொண்ட பாசிச அரவிந்தனின் பதில் பதிவு:
 • இங்கே
 • இது அய்யன் காளி குறித்து திருவாளர் நேர்மையின் பதிவு
 • இங்கே
 • இது பாசிச அரவிந்தனின் பதிவு அய்யன் காளி குறித்து:
 • இங்கே

இரண்டில் எதில் தரவுகள் அதிகம் எதில் வெறும் வெற்று தாக்குதல்களும் பிரச்சார வெத்து வேட்டுத்தனமும் அதிகம் என்பதனை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.


ஆக நான் சொல்றது என்னன்னா திரு மாதிரி 'நேர்மையான' ஆசாமிங்க கொஞ்சம் விசயங்கள நல்லா தெரிஞ்சிகிட்டு பிறகு பதிவு போடுறது நலம். இல்லன்னா கேள்வி கேக்கத்தான் செய்வோம். கேள்வி காட்டமாத்தான் இருக்கும். பிறகு திருதிருன்னு முழிச்சு கிட்டு தமிழ்மணத்துல போயி 'டீச்சர் டீச்சர் இவன் என்ன கிள்றான் டீச்சர் இவன் என்ன நுள்றான் டீச்சர்' அப்படீன்னு ஒண்ணாங்கிளாயி பசங்கள விட கேவலமா நிக்க வேண்டியிருக்கும். கொஞ்சமெல்லாம் வளர டிரை பண்ணுங்களேன் சார்.

Tuesday, February 13, 2007

டோண்டு அவர்களுக்கு - மன்னித்துக்கொள்ளுங்கள்

ஊரிலிருந்து வந்தவுடன் நான் அறிந்து கொண்டது திரு. டோண்டு அவர்களின் அறிவிப்புதான். நன்றி டோண்டு. உங்கள் பதிவில் பின்னூட்டம் தடை செய்யப் பட்டிருந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். இதோ தனிப்பதிவாக என் மன்னிப்பை உங்களிடம் கேட்க அது வழி வகுத்துவிட்டது. தான் எடுத்த நிலைபாடு சரி என்று அனைவரும் எதிர்க்கும் போது நின்று வாதிட மனத்திண்மை வேண்டும். அத்தகைய மனத்திண்மை கொண்ட ஒருவர் தனது நிலைபாடு தவறு அல்லது சமுதாய நலன் கருதி தமது நிலைப்பாட்டிலிருந்து மாறுகிறேன் என்று கூறிட அதைவிட அதிகமாக மனத்திண்மையும், நேர்மையும் வேண்டும். ஐயா தோண்டு உங்கள் முன் நான் தலைகுனிந்து நிற்கிறேன். உங்களைப் போன்ற பெரியவர் (ஆனால் மனதால் என்றும் இளைஞர்) முன் எத்தகைய கடுமையான வசை சொற்களை பேசிவிட்டேன். ஒட்டுமொத்த இந்து சமுதாய நலன் கருதியே நான் அவ்வாறு பேசினேன் என்றாலும் தங்கள் மனதினை நிச்சயமாக புண்படுத்தியிருப்பேன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கொள்ள இயலாது. எத்தகைய நல்லவரை, பண்பட்ட மனது கொண்டவரை புண்படுத்தியிருக்கிறேன் என்பது ஆழமான வருத்தத்தையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் சமுதாய அக்கறைக்கு தாள் பணிகிறேன். தங்களிடம் எனது ஆத்திர பதிவிற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆக மொத்தம் இறுதியில்இந்துத்வ உணர்வே சாதீயத்தை அழிக்க முடியும் என்பதனை நீங்கள் பதிவுலகிற்கு நிரூபித்துவிட்டீர்கள். ஐயா நீங்கள் என்றென்றும் என் மனதில் உயர்ந்து நிற்பீர்கள்.

Sunday, February 11, 2007

அய்யன் காளி :இந்து சமுதாய சிற்பி

1863 ஆகஸ்ட் 23 அன்று பிறந்த அய்யன் காளி சிறுவயது முதலே இந்து தருமத்தின் கோட்பாடுகளில் தோய்ந்தவர் ஆவார். அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை நிலங்களை சீர் படுத்தியதற்காக அய்யன் காளிக்கு ஒரு சிறிய நிலம் வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒருநாள் அய்யன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து அய்யன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட அய்யன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார். தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமுதாய விடுதலை பெறும் போராளியாக உருவெடுத்தார் அய்யன் காளி. இதற்காகவே அவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவை இந்து புராணங்களிலை ஆய்ந்து அதில் சமுதாய விடுதலைக்கான தரவுகளை வடித்தெடுத்து உருவாக்கப்பட்டதாகும். உதாரணமாக கக்கல ரிஷி நாடகம், அரிசந்திர நாடகம், வள்ளி-சுப்பிரமணியர் திருமணம் ஆகிய நாடகங்கள் இவற்றில் அடங்கும். இவற்றினை நாடெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடத்தி கட்டுக்கடங்காத விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அய்யன் காளி.
அப்போது சதானந்த சுவாமிகள் சாதீயக்கொடுமைகளுக்கு எதிராக போராடி வந்த துறவி ஆவார். பூர்வாசிரமத்தில் நாயர் குடும்பத்தைச் சார்ந்தவர் அவர். சதானந்த சுவாமியின் உரையினை அய்யன்காளியின் தாய்வழி உறவினரான தாமஸ் வாத்தியார் கிழக்கே கோட்டையில் கேட்டார் (திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் முன்னால் இருக்கும் கோட்டைக்கு கிழக்கே கோட்டை என பெயர்) இந்த உரையினை அவர் அய்யன் காளியிடம் கூறினார். 1904 இல் சதானந்த சுவாமிகள் இந்து எழுச்சி மாநாடு ஒன்றை நடத்தினார். தாமஸ் வாத்தியார் தான் யார் என வெளிப்படுத்தாமலே இந்த மாநாட்டில் முழுமையாக இருந்தார். ஒருவேளை சுவாமிகள் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அக்கறை கொண்டவரா என பார்க்கக்கூட அவர் எண்ணியிருக்கலாம். அவர் சதானந்த சுவாமிகளால் கவரப்பட்டார். பின்னர் அவர் அய்யன் காளியிடம் துறவியை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே தாமஸ் வாத்தியார், நாடாங்கோடு ஹென்றி, மூலக்கோணம் ஹாரிஸ் மற்றும் கறுப்பு தாமஸ் வாத்தியார் (அய்யன் காளியின் உறவினர் வெளுப்பு தாமஸ் வாத்தியார்) ஆகியோர் இணைந்து ஏற்கனவே சாதீயத்திற்கு எதிராக இயக்கம் நடத்தி வந்தனர். இவர்கள் வெங்ஙனூருக்கு சுவாமிகளை அழைத்தனர். சுவாமியும் வெங்ஙனூர் சென்றார். சுவாமிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து அவர்களின் தலைவர் உருவாக வேண்டும் என அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் எழுத்தறிவு பெற்றவராக இருக்கவேணும் என்றும் சுவாமிகள் அபிப்பிராயப்பட்டார். இதனால் தைவிளாகத்து காளி என்பவர் தலைவரானார். ஆனால் விரைவில் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தைவிளாகத்து காளியால் இயலவில்லை. படிப்பறிவற்றவரெனினும் முழு ஆளுமையுடன் தம் ஒரு சொல்லில் கூட்டத்தை ஒழுங்கடைய செய்த அய்யன் காளியை சுவாமிகள் சின்ன காளி என்றும் தைவிளாகத்து காளியை பெரிய காளி என்றும் தலைமைப்பொறுப்புகளில் நியமித்தார். விரைவில் இந்து எழுச்சி மாநாடு அங்கு நடைபெற்ற அதே இடத்தில் சால்வேசன் ஆர்மி காரர்கள் கன்வென்ஷனை நிகழ்த்தினார்கள். அங்கு வந்த கர்னல் கிளாரா கேஸ் என்கிற ஆங்கிலேய பெண்மணி அய்யன்காளியை மதம் மாற்ற தீவிரமாக முயன்றார். அம்மையாரின் அனைத்து வாதங்களையும் ஆசையூட்டும் பேச்சுக்களையும் அமைதியாக செவி மடுத்த அய்யன் காளி இந்து த்ருமத்திலிருந்து விலக முடியாது என தெரிவித்துவிட்டார். இந்துவாக நிலைத்து நின்று இந்து அற உணர்வினை சமுதாயத்தில் தட்டி எழுப்பி தமது சமுதாயத்தினருக்கு உரிமைகளை வாங்கிதருவதாக முடிவெடுத்தார் மாவீரன் அய்யன் காளி. அம்மையாரின் நிர்பந்தங்கள் ஆசையூட்டும் பேச்சுக்கள் அனைத்தும் அய்யன் காளியின் அற சங்கல்பத்தின் முன் தோற்று மண்ணைக் கவ்வின. வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சாதீயம் பேசும் இந்துக்களே சிறிது செவிமடுங்கள். காலங்களுக்கு அப்பால் அமரனாக நின்று நமக்கு அறத்தினை போதிக்கும் இம்மாவீர காவியத்தின் அற உரையை உணருங்கள். இந்து தருமம் எனும் சுவர்க்கமதில் உறைந்திருந்த சமூக நீதி எனும் கங்கையை சாம்பலினும் கீழாகி சாதியத்தில் சிக்குண்டிருந்த இந்து சமுதாயத்தில் ஓட வைத்த இந்த பகீரதனின் கால் தூசிகளை திருமண்ணாக திருநீறாக நம் நெற்றியில் இட்டுக்கொள்வோம் வாருங்கள். சாதீயத்தால் கொடுமைப்பட்டு அதனை வேரறுக்க களமிறங்கிய அய்யன் காளி அதே சாதீயத்தால் அன்னிய மதமாற்றிகள் தம் சமுதாயத்தினருக்கு செய்யும் கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்தார். இந்நிகழ்ச்சி நடந்த மறுநாளே அவர் ஸ்ரீ மூலம் திருநாளுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்தார். தம்மை கிறிஸ்தவ மதத்தில் சேர்க்க நடத்தப்பட்ட தீவிர முயற்சிகளை அதில் விவரித்த அய்யன் காளி மதமாற்றத்தால் தமது சமுதாயம் அருகி வருகின்றதென்றும் எனவே கட்டாய மதமாற்றம் நடந்திடக்கூடாதென்றும் கோரினார். இதனை தொடர்ந்து மகராஜா கட்டாய மதமாற்றம் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். பிரம்மானுஷ்ட மடம் எனும் அமைப்பு அய்யன் காளியாலும் சதானந்த சுவாமிகளாலும் தொடங்கப்பட்டது. கருப்பு நிற தாழ்த்தப்பட்ட மக்களை மகாராஜா பார்க்கக்கூட கூடாது எனும் கீழ்த்தர தடையை விஜயதசமி நாளன்று அய்யன் காளி மீறினார். மேல்சாதி என தம்மை அழைத்துக் கொண்ட வெறியர்களின் தாக்குதல்களுக்கு அய்யன் காளியும் அவரது படையினரும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில் சிலர் சதானந்த சுவாமிகளின் பூர்வாசிரம சாதியை எப்படியோ தெரிந்து கொண்டனர். அதன் அடிப்படையில் அவரிடம் அவரது சாதீய எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக நூறு கேள்விக் கணைகளை தயார் செய்து மிகவும் சாதுரியமாக கேள்வி கேட்கும் ஒரு தூதனிடம் கொடுத்து அவரை பதிலளிக்க அனுப்பினர். சதானந்த சுவாமிகள் செயல் வீரரே அன்றி வக்கணையாக பேசுவதிலும் அடுக்கு மொழிகளை உதிர்ப்பதிலும் வல்லவர் அல்லர். அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, 'தீய நோக்கத்துடன் ஒரு பத்திரிகையாளன் சாதுரியமாக கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரு துறவி பதில் கூற வேண்டிய அவசியமில்லை' என கூறி அனுப்பிவிட்டார்.

பிரம்மானுஷ்ட மடத்தினால் அய்யன் காளிக்கும் அவரது தோழர்களுக்கும் சுவாமிகளின் ஊக்கம் கிடைத்தது. அதே நேரத்தில் கிறிஸ்தவர்களின் தொல்லை வளர்ந்தது. குறிப்பாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கையில் விவிலியத்தை ஏந்தியவாறு இவர்களை பார்த்து 'மடப் புலையா' 'மடப் புலைச்சி' என கேலி செய்து வந்தனர். பார்த்தார் அய்யன் காளி. மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் மீள்-அணைத்து ஏற்றெடுக்கும் ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டும் என அவர்கள் சுவாமி சதானந்தரிடம் வேண்டினர். அவருடன் ஆலோசித்தனர். அவரது ஆசியுடன் மடத்திலிருந்து வெளியேறி ஸ்ரீ நாராயண குரு, டாக்டர்.பல்பு, மகாகவி குமாரன் ஆசான், நீதிபதி கோவிந்த்ன் ஆகியோரை அணுகினார். ஸ்ரீ நாரயணகுருதேவர் ஸ்ரீ நாராயண தர்மபரிபாலன யோகம் தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'சாது ஜன பரிபாலன சங்கம்' தொடங்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும் அந்த விடுமுறை நாளில் சங்க சேவையில் மக்கள் ஈடுபட வேண்டுமென்றும் கூறினார் அய்யன் காளி. இதற்கிடையில் 1896 தொடங்கி நடைபெற்ற ஈழவரின் கல்வி கோரிக்கை 1905 இ வி.பி.மாதவ நாயர் மூலம் மெய்ப்பட்டது. சாதி வெறியர்கள் ஈழவர் பள்ளிகளை சூறையாடிய போதிலும் பலர் இப்போராட்டத்தில் சாதி வரம்புகளை மீறி தம் சக-இந்து சகோதரர்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை மானுட உரிமைகளுக்காக ஒருங்கிணைந்தனர். திருவிதாங்கூர் முழுவதும் பரவிய நாயர்-ஈழவர் கலவர காலகட்டத்தில் தான் சிவிராமன் பிள்ளை - காவாலம் நீலகண்ட பிள்ளை போன்றவர்கள் தலைமையில் ஈழவ-நாயர் நல்லிணக்க முயற்சிகளும் தீவிரமடைந்தன. இத்தருணத்தில் கல்வி அதிகாரி டாக்டர் மிச்சேலின் தீரமான செய்கைகளை குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரது வாகனமே தீயிட்டு கொளுத்தப்பட்டும் கூட, சாதியின் அடிப்படையில் பள்ளிகளில் எவருக்கும் இடங்கள் மறுக்கப்படக் கூடாது என்பதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டவர் அவரே ஆவார். இந்நிலையில் திருவிதாங்கூர் திவானாக பி.ராஜ கோபாலாச்சாரி எனும் அந்தணர் பதவியேற்றார். இந்த காலகட்டத்தில்தான் சாது ஜனபரிபாலன சங்கம் புலையர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வேண்டுமென்று அவரிடம் கோரிக்கை வைத்தது. அய்யன் காளி மகள் வழி பேரன் அபிமன்யு பி.ராஜ கோபாலாச்சாரியாரை 'தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மதித்த அரிய மனிதர்களுள் ஒருவர்' என்கிறார். அவர் அய்யன் காளியிடம் இரண்டு வருடங்களூக்கு முன்னரே 1907 இலேயே அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதகமாக இந்த விசயத்தில் தீர்ப்பு அளித்திருப்பதைக் கூறினார். ஆனால் நடைமுறையில் பள்ளிகளை அணுகிய போது நிலையோ வேறாக இருந்தது. 'புலையர் குழந்தைகள் படித்தால் எங்கள் வயல்களில் யார் வேலை செய்வார்கள்?' என இறுமாப்புடன் பதிலளித்தன தங்களை மேல்சாதி எனக் கருதிக்கொண்ட அந்த மிருகங்கள். 'எங்கள் குழந்தைகள் கல்வி கற்க முடியாதென்றால் உங்கள் வயல்களில் நாங்கள் வேலை பார்க்க முடியாது' என்றார் அய்யன் காளி. ஜமீன்தார்கள் வேலை செய்ய மறுத்து அறப்போராட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்களை தண்டித்தனர். கொடூரமாக தண்டித்தனர். பற்களை உடைப்பது முதல் சாட்டையடிகள் என்ன சூடு போடுவதென்ன என கொடுமைகள் அரங்கேறின. அதிகார வர்க்கம் வேலை நிறுத்தம் செய்யும் விவசாய தொழிலாளர் மீது நடவடிக்கை எடுக்க திவானை அணுகியது, ஆனால் திவான் பி.ராஜ கோபாலாச்சாரியார் மறுத்துவிட்டார். அன்னை காளியும் நம் சோதரர் மேல் கடைக்கண் வைத்தாள். அய்யன்காளி படை களமிறங்கியது. தொழிலாளர் மீதான வன்முறை நின்றது. ஆனால் எத்தனை நாள் ஏழைத் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் செய்வர்? அதிர்ஷ்டவசமாக கடலோர மீனவர் கை கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் மேல்சாதி காரர்களுக்கும் வலி புரிய ஆரம்பித்தது. 1916 இல் இது குறித்து அய்யன் காளி நினைவு ஓர்கையில் சொல்லுவார், 'ஒரு புலையர் பெண் செய்த வேலையை அட 6 நாயர் ஆண்கள் சேர்ந்து செய்யமுடியவில்லையே!' இந்நிலையில் புலையருக்கு சாதகமாக ஒரு கல்வி அறிக்கையை மார்ச் 1 1910 இல் டாக்டர் மிச்சேலும் ராஜ கோபாலாச்சாரியாரும் இணைந்து வெளியிட்டனர்.உடனடியாக தாக்குதல் வெளியாயிற்று, இம்முறை தாக்குதலில் ஈடுபட்டவர் முன்பு சுவாமி சதானந்தருக்கு எதிராக கேள்விக்கணைகளை வித்தாரமாக உருவாக்கிய அதே ஆசாமிதான். அவர் யார் தெரியுமா? கேரளாவின் முதல் மார்க்சியவாதியும் காரல் மார்க்ஸ்ஸின் சரிதத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவருமான சுதேசாபிமானி ஆசிரியர் கெ.ராமகிருஷ்ணபிள்ளைதான். இந்த முற்போக்கு புண்ணியவான் எழுதினார்: "இது குதிரையையும் எருமையையும் ஒரே நுகத்தில் பூட்டுவதைப் போன்றதாகும்."

புலையர் சமுதாய அக்கறையில் ஈடுபாடு கொண்ட மற்றொருவர் பி.கெ.கோவிந்தன் பிள்ளை. இவரும் பி.ராஜகோபாலாச்சாரியாருமாக இணைந்து புலையர்களுக்கு பட்டா செய்து தர வேண்டிய நிலத்தை குறித்து ஆலோசனை செய்தனர். கோவிந்தன் பிள்ளையே அந்த பட்டா நிலத்தை தயாரிக்க ஏற்பாடாயிற்று. புலையர்களுக்கு இன்னமும் கல்வி பள்ளிகளில் மறுக்கப்படுவது, புலையர்கள் வாழும் இடங்களிலேயே இரவு கல்விக்கூடங்களை ஏற்படுத்துவது. மருத்துவமனைகளில் புலையர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள் பெயரளவிலேயே இருப்பது என புலையர் சமுதாய பிரச்சனைகளை உணர்ச்சி ததும்ப ஆதார பூர்வமாக பேசினார் கோவிந்தன் பிள்ளை. பிப்ரவரி 13 1911 இல் கோவிந்தபிள்ளை எனும் அந்த 'மேல்-சாதி' மனிதர் புலையர்களின் ஊனோடு கலந்து உணர்ச்சிகளில் உருகி பேசியது இன்றைக்கும் புலையர்களால் மட்டுமல்ல அவர்களைப் போன்றே சாதீய விலங்குகளால் விலங்கு பிணிக்கப்பட்ட அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்கு முக்கிய குரலாகக் கருதப்படுகிறது. இறுதியாக தமது பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார் கோவிந்தன் பிள்ளை. இச்சபையில் தாம் பேசுவதைக் காட்டிலும் புலையர் சமுதயத்தை சார்ந்த ஒருவரே தம் நிலைகளை விளக்குவதே தகுந்தது எனவும் எனவே அதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் கூறினார். கனத்த மௌனம் நிலவியது அங்கே. திவான் ராஜகோபாலாச்சாரியார் இது குறித்து சபையினை கேட்டார். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திவானை காண அய்யன் காளி சென்றார். ஆனால் திவானின் காவலாளிகள் அவரை உள்ளே விட மறுத்தனர். திவானுக்கு ஒரு தந்தி அனுப்பினார் அய்யன் காளி. அய்யன் காளியை கூப்பிடனுப்பிய திவான் அவர் வந்ததும் முதலில் காவலாளிகளை மன்னிப்பு கேட்க செய்தார். ஸ்ரீ மூலம் மக்கள் சபைக்கு புலையர் பிரதிநிதியாக அய்யன் காளி நியமிக்கப்படுவது குறித்து பேச்சு நடந்தது. அய்யன்காளி மன நிறைவுடன் திரும்பினார்.

1911 டிசம்பர் 5: "சாது ஜனபரிபாலன சங்கத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய அய்யன்காளி திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் மக்கள் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்" என அரசாங்க கெசட்டில் அறிக்கை வெளியானது. அய்யன் காளி தம் சமுதாய மக்களின் பல நலன்களுக்காக குரல் கொடுத்தார். அய்யன் காளி ஆற்றிய உரைகளை அடுத்த பதிவில் கூறிடுவேன். படிப்பறிவற்றவராக அய்யன்காளி இருக்கலாம் ஆனால் சமுதாய துன்பத்தை தானேற்றவர் இதயத்தில் வேத தருமத்தின் வாக் தேவதையே ஆட்சி செய்கிறாள். கிரௌஞ்ச பட்சிகளுக்காக இளகிய மனவேதனை வேடனை ஆதிகவியாக்கியது. அய்யன் காளியோ பட்சிகளுக்காக அல்ல ஆறறிவு படைத்தும் சக-மனிதரை மாக்களாக நடத்துகிற ஒரு சமுதாய அமைப்பையே அல்லவா கண்டு வேதனித்தார். எனவே கல்வியறிவுகளுக்கு அப்பாலானதோர் இதயத்தின் நல்லறிவு அவரது வார்த்தைகளுக்கு ஆற்றல் அளித்தது. 1913, 1914 ஆம் ஆண்டுகளில் அய்யன் காளியை தவிர சரதன் சாலமன், வெள்ளிக்கர சோதி ஆகியோரும் அய்யன்காளியின் முயற்சியால் நியமிக்கப்பட்டனர். சரதன் சாலமன் புலைய கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே பிரதிநிதி என்பது போல நடந்துகொண்டார். அபிமன்யுவின் வார்த்தைகளில், '1913 இல் அய்யன்காளியின் பரிந்துரையின் பேரில் சரதன் சாலமன் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பிந்தைய நடவடிக்கைகள் புலையக்கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக அமைந்தன. அச்செயல் அய்யன் காளிக்குச் சற்றும் பிடிக்கவில்லை.' சபையிலேயே அவரது கருத்து சாது ஜனபரிபாலன சங்கத்துக்கு எதிரானது என அய்யன் காளி தெரிவித்தார்.

1912 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் அய்யன்காளி நுழைந்தார். மேல்சாதி மிருகங்களுடன் இம்முறை இஸ்லாமிய வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் ஆதி சக்தி அருளுடன் அணிதிரண்ட அய்யன் காளி சேனை இந்த சாதி மத வெறி பிடித்த கும்பலை ஓட ஓட விரட்டியது. அதன் பின்னர் அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் மீண்டும் பள்ளி உரிமைகள் கிடைக்காமல் போயின. அய்யன் காளி மனம் சோர்ந்த நிலை அடைந்த போது அவரது அகக்கண்ணில் அவரது குரு சுவாமி சதானந்தர் தோன்றினார். "உரிமைகளை யாரும் கூப்பிட்டு கொடுக்க மாட்டார்கள் நாம் அவற்றை தேடி சென்றடைய வேணும்" எனும் அவரது அமுத மொழி அய்யன்காளிக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அர்ஜுனன் காண்டீபத்தை மீண்டும் உறுதியாக பிடித்தான். புலைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளிகளுக்குள் ஏறினார் அய்யன் காளி. சாதீய மிருகங்கள் தாக்கின. பதிலடி அளித்தார் காளி. கலவரங்கள் வெடித்தன. 1914 இல் கல்வித்துறை தம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என பார்க்கலாயிற்று. புலையக்குழந்தைகள் நுழையும் பள்ளிகளில் மேல்சாதிகுழந்தைகள் கூட்டமாக வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து மிச்சல் வெளியேறும் குழந்தைகளின் தக்க காரணங்கள் இருந்தால் ஆவணப்படுத்துமாறு தலைமையாசிரியர்களைப் பணித்தார். இந்நிலையில் சோதனையை சாதனையாக்கிட முடிவெடுத்தார் அய்யன் காளி. 1905 இல் அவர் ஏற்கனவே நிறுவிய பள்ளிக்கு இப்போது அரசு அங்கீகாரம் பெறப்பட்டது. அடுத்து தகுந்த ஆசிரியரை தேடி அலைந்தனர்.பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் முன்வந்தார். 'ஹரி ஸ்ரீ ஓம்' என தொடங்கியதுதான் தாமதம் வெறி பிடித்த ஈன ஜன்மங்கள் பள்ளியை தாக்கின. அன்று இரவு பள்ளி தீக்கிரையானது. ஆனால் அய்யன்காளி ஓய்ந்துவிடவில்லை. விளைவாக பள்ளிகள் பல இடங்களில் எழுந்தன.

அடுத்ததாக முக்கியமானது கல் நகை அணியும் வழக்கத்தினை கைவிட்டு நல்நகைகள் அணிய வைத்ததே ஆகும். இதுகுறித்து அய்யன் காளி நடத்திய பிரச்சார கூட்டங்களில் மேல்சாதி ஈனர் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்தனர் அய்யன் காளி படையினர். பெரும் கலவரங்கள் எங்கும் பெருகின. இந்நிலையில் நாயர் சர்வீஸ் சொசைட்டி முற்போக்கு எண்ணம் கொண்ட அமைப்பாகும். அது அய்யன் காளியுடன் இணங்கி வந்தது. இதன் மூலம் சமுதாய நல்லிணக்கத்தை உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் ஏற்படுத்தினார் அய்யன்காளி.நாயர் சர்வீன் ஸொசைட்டி தலைவர்களில் ஒருவரான சங்ஙனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை தலைமையியேற்க நடத்தப்பட்ட சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பரமேஸ்வரன் பிள்ளை அறிவித்தார், "திரு,.அய்யன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்." அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப்பட்டன. பெரிநாடு கலவரத்தால் ஏற்பட்ட வழக்குகளை அய்யன் காளி பொருளாதார நெருக்கடிக்களுக்கிடையே நடத்தி நல்லபடியாக முடித்தார்.

ஆனால் போக வேண்டிய தூரமோ ரொம்ப இருந்தது. தீண்டாமையையும் வறுமையையும் பயன்படுத்தி மதமாற்றங்கள் தொடர்ந்தன. மீண்டும் இப்பிரச்சனையை எழுப்பினார் அய்யன் காளி.

இதோ ஸ்ரீ மூலம் மக்கள் சபையில் அய்யன்காளியின் குரலைக் கேளுங்கள்: "மிருகங்களை விட கேவலமான விதத்தில் நடத்தப்படும் புலையர் மக்கள் கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறினால் இக்கொடுமைகள் சட்டென்று அகன்று விடுகின்றன. தற்போது நிலவி வரும் தீண்டாமைக்கு எந்த தெய்வ நம்பிக்கையையும் ஆதாரமாகக் கொண்டதல்ல. எனது இனத்தவர்களுக்கு வீடோ பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்கு செய்வதை விட கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும் கோயில்களும் நிர்மாணித்து தரவேண்டும். நீதி மன்றம் போன்ற அரசாங்க அலுவலகங்களில் சில புலையர்களையேனும் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். புலையக்குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிதரும் ஆசிரியர்களுக்கு ஊக்க தொகை வழங்கவேண்டும்.

திவான்: பொது வழிபாட்டு கூடங்கள் நிர்மாணிப்பது அரசாங்க திட்ட வரம்புக்குள் இல்லை. மதமாற்றம் சம்பந்தமாக அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது. (1923 மார்ச் 21)

எத்தகைய தற்கொலை போக்கு இந்து சமுதாயத்திற்கு பாருங்கள்.

சாதுஜனபரிபாலன சங்கம் நன்றாகவே வளர்ந்து வந்தது. 1930 ஆண்டுவிழாவில் வி.எஸ்.சுப்பிரமணிய அய்யர் அக்கூட்டத்தில் தலைமை தாங்கினார். அய்யன் காளியின் வரவேற்புரை எந்த உண்மையான இந்துவுக்கும் கண்ணில் நீரை வரவழைக்கும். அதனையும் பின்னர் எழுதுகிறேன். அய்யன் காளிக்கு மிகவும் பிடித்த சங்க பிரார்த்தனை பாடல்களில் ஒன்றினை கீழே தருகிறேன். இன்றும் முதிய சகாக்கள் இதனை பாடுவதுண்டு

ஆனந்த சின்மயா ஜோதி ரூப மூர்த்தியே ஆனந்த சின்மயா
அழகிய பாத மலர்களை வணங்குகிறோம் ஸ்ரீ ராம கிருஷ்ணா
ஆனந்த சின்மய தேவா
மாதாவும் நீயே பிதாவும் நீயே சுற்றமும் நட்பும் நீயே தேவா
...
இனி அய்யன் காளி வாழ்க்கை நிகழ்ச்சிகளை சுருக்கமாக கூறிவிடுகிறேன். பேருந்துக்கு நேரமாகிறது என்பதால். ஊர்போய் வந்து விரிவாக எழுதுகிறேன் இந்துமகாசபையின் சாதீய எதிர்ப்பை ஆதரித்தார் அய்யன் காளி.
1933 : கோவில் நுழைவு பிரகடனம்.
1937 ஜனவரி 14 வெங்ஙானூர் வந்து மகாத்மா காந்தி அய்யன் காளியை சந்தித்தார்.
1939 இல் அய்யன் காளிக்கு கொடுப்புனா மக்கள் வரவேற்பு
அய்யன் காளியின்மகளின் கணவர் டி.டி.கேசவன் சாஸ்திரி ஆவார். இவர் பெரும் சமஸ்கிருத பண்டிதரும் ஆவர்.
இக்காலகட்டத்தில் அய்யன் காளி ஆஸ்துமாவால் நோயுற்று தளர்ந்தார். இப்போது கிறிஸ்தவ மிசிநரிகள் தம் கைவரிசையை காட்டினர். ஜான் ஜோசப் என்கிறவரையும் ஜானஜோஷ்வா என்பவரையும் வைத்து அய்யன் காளிக்கு போட்டியாக கிறிஸ்தவ புலையர்களை அதிகாரிகளாக கொண்டு செறுமன் சபை ஒன்றை கூட்டினார்கள். இந்து புலையர்களை சாது ஜனபரிபாலன சங்கத்திலிருந்து விலகி இதில் வந்து சேர ஆசை காட்டினர். ஜான் ஜோசப் இதன் செயலாளர். ஆபிரகாம் ஐசக் என்பவர் தலைவர். உடல் தளர்ந்து சோர்ந்த நிலையில் அய்யன் காளி மௌனமாக இருந்தார். இதனை எதிர்த்து கேசவன் சாஸ்திரி, டிவி தேவன், ஆரன்முள பிகெதாஸ் ஆகியோர் இந்த நயவஞ்சகத்தனத்தை எதிர்த்தனர், இதன் விளைவாக கிறிஸ்தவ சதியை முறியடிக்க தனது இயக்கவாரிசாக அய்யன்காளி தேர்ந்தெடுத்த கேசவன் சாஸ்திரியால் உருவானதுதான் சமஸ்த கேரள புலையர் மகாசபை.

1941 ஜுன் 18 இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் தலித் போராளியும் இந்து சமுதாய சிற்பியுமான அய்யன் காளி.

Saturday, February 10, 2007

இரமணர், ஸென், தாவோ அத்துடன் காபா


நம்முடைய மூளையில் 300 பில்லியன் (300,000,000,000) நியூரான்கள் உள்ளதென்கிறார்கள் மூளை ஆராய்ச்சியாளர்கள். நமது பால்வெளி விண்மீன் மண்டலத்திலிருக்கும்
விண்மீன்களின் எண்ணிக்கையும் இதுதான் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த தற்செயலான ஒற்றுமைக்கு அப்பால் நரம்புகளின் செயல்பாடுகளை ஆராயலாம்.
மூளையின் செயல்பாடுகளைக் குறித்த நமது பார்வை கடந்த சில பத்தாண்டுகளில் அபரிமிதமாக மாறி வந்துள்ளது. மூளையின் செயல்பாட்டினை கணினியின் செயல்பாட்டுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராயும் போக்கு 1940களிலிருந்து 1980கள் வரை நரம்பியல் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர்களிடம் கனமாக வளர்ந்திருந்தது. 1981 இல் ஒரு ஆராய்ச்சியாளர் இந்த பார்வை மாற்றத்தினைப் பிரகடனப்படுத்தினார். ஸ்காட் கெல்ஸோ மூளையின் இயக்கமும் மனதின் இயற்கையும் பரிணமிக்கும் நேர்கோட்டுத்தன்மையற்ற இயக்கவியல் (non-linear dynamics) மூலமாக முழுமையாக விளக்கப்படலாம் என்று கூறியது அப்போது மூளை ஆராய்ச்சியாளர்களிடையே அடிப்படை பார்வை மாற்றத்திற்கான ஆரம்ப அதிர்வினை
ஏற்படுத்தியது. ஏற்கனவே சிறு ஆராய்ச்சியாளர் குழுக்களில் மட்டுமாக பேசப்பட்டு வந்த மற்றொரு போக்கு மெதுவாக ஆனால் உறுதியாக 1990களில் மேலெழ ஆரம்பித்தது.

ஸ்காட் கெல்ஸோ

அதாவது புலன்கள் மூலமாக பெறப்படும் உள்ளீடு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு தலைமை கேந்திரத்தில் பதியப்பட்டும் பதப்படுத்தப்பட்டும் (processed). பின்னர் செய்கை வெளியீடுகள்
மீண்டும் நரம்பு மண்டலம் மூலமாக தசைகளுக்கும் உடலின் அவயங்களுக்கும் வரும். இப்பார்வையில் இருக்கும் 'கணினி மாதிரித்தன்மை' மாற ஆரம்பித்தது. மாறாக உள்ளீடு பெறுதலும் சரி வெளிப்படும் செய்கைகளும் சரி, நரம்புகளுள் அலையாக பரவி பரிணமிக்கும் மற்றோர் பார்வை வளர ஆரம்பித்தது. இத்தகைய பார்வை மாற்றங்களும் மற்றும் அத்துடன் இணைந்த ஆராய்ச்சி பாதை மாற்றங்களும் உருவாவது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் மூளையின் 'கணினி மாதிரி' ஒரு வெற்றிகர அறிவியல் பார்வையாக அறியப்பட்டிருந்த நேரத்தில் முழுக்க முழுக்க மற்றொரு பார்வை மாற்றம் ஏற்படுவது என்பது எளிதானதல்ல. நரம்புகள் மூலமாக மின்-துடிப்புகளில் சமிக்ஞைகள் செல்வதென்னவோ உண்மைதான். ஆனால் அந்த 'சமிக்ஞைகள்' கடத்தப்படும் மின்-துடிப்பில் எங்கு அடங்கியுள்ளன?

மின்-துடிப்பின் ஆற்றலில்? மேலெழும் மின்-துடிப்பின் உயரத்தில்? நொடிக்கு எத்தனை மின்-துடிப்புகள் எழுகின்றன என்பதன் அடிப்படையில்? மூளைக்கு கொண்டு செல்லப்படும்
செய்தியும் அதிலிருந்து கிடைக்கும் பதில்களும் - ஒரு நியூரானின் மின்-துடிப்பு செயல்பாட்டில் எங்கு ஒளிந்திருக்கிறது? தெளிவான விடை. இன்னமும் கிடைத்திடாத கேள்வி இது.

ஒரு தெளிந்த நீர்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்நீர்நிலையின் பரப்பில் சிறு கல் ஒன்றை எறியுங்கள். வட்டக் கோலங்களாக அலைகள் பரவுகின்றன. பின் அவை
கரைகளை அடைந்து எதிராக பரவுகின்றன. இப்போது பல கல்கள் அந்த நீர்நிலையில் விழுகின்றன. இவை அனைத்தும் நீரலைகளில் சிக்கலான கோலங்களை உருவாக்குகின்றன.
இந்நீர்நிலையின் நீர் இந்தக்கோலங்களை நினைவில் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். இத்தகையதோர் இயக்க அமைப்பாகத்தான்
மூளையின் செயலாக்கத்தை அறிந்திட சில மூளை ஆராய்ச்சியாளர்கள் முயல்கின்றனர். இவர்கள் இயக்கவாதிகள் (dynamicists) என்றழைக்கப்படுகின்றனர். பொதுவாக
நரம்பியலாளர்களுக்கு இவர்களது கணிதம் சார்ந்த (குறிப்பாக chaos) அணுகுமுறை சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் மூளையின் செயல்பாடு 'கீழேயிருந்து' உள்ளீடுகளை பெற்று 'மேலே' கொடுத்து, மூளையின் 'உயர் கேந்திரங்களில்' அவை பகுப்பாயப்பட்டு பின்னர் மீண்டும் அங்கிருந்து இயக்க
எதிர்வினைகளுக்கான உத்தரவுகளை 'கீழே' கொண்டு செல்லும் என்கிறபழைய மூளை செயல்பாட்டு பார்வை கடந்த பத்தாண்டுகளாக மாற ஆரம்பித்துள்ளது. பல தளங்களில்
பரிணமித்து பரவும் செயல்பாடாக மூளையின் இயக்கத்தினை காட்டும் ஆராய்ச்சி தாள்கள் வெளியாகியுள்ளன.டேவிட் லியோபோல்ட்


நிக்கோஸ் லோகோதெடிஸ்

அத்தகைய ஆராய்ச்சிகளில் ஒன்று டேவிட் லியோபோல்ட் (Leopold) மற்றும் நிக்கோஸ் லோகோதெடிஸ் (Logothetis) ஆகியோரது. 1996 இன் நேச்சர் இதழில் அவர்களது
ஆய்வுகளின் முடிவொன்று வெளிவந்திருந்தது. ஸ்டீரியோஸ்கோப் மூலம் குரங்குகளுக்கு ஒவ்வொரு கண்ணுக்கும் வெவ்வேறு பிம்பங்கள் காட்டப்பட்டன. இத்தகைய முரண் சூழலில்
பார்வை ஒரு பிம்பத்தினை முழுமையாக தவிர்த்து மற்றதை மட்டும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும். ஆக, இச்சோதனைக்கு ஆளாக்கப்படும் குரங்கு ஒரு பிம்பத்தை மட்டுமே நனவுணர்வில் நன்கு உணரும். மூளை குறித்த பழைய பார்வையில் இந்த ஒரு பிம்ப தேர்வினை நடத்திடும் வேலையை நரம்புகள் அளிக்கும் புலன் உள்ளீட்டினை நேரடியாக பெறும் கார்ட்டெக்ஸ் பகுதியின் செல்கள் செய்வதில்லை. அவை எல்லாம் மூளையின் 'உயர்' பகுதிகளில் நடக்கிற விஷயமாகும். ஆனால் லியோபோல்ட் & லோகோதெடிஸ் அறிந்ததென்னவென்றால் கார்ட்டெக்ஸ் பகுதியிலேயே நரம்புகளின் மின்னோட்டப் பாய்ச்சலில் ஐந்தில் ஒரு பங்கு குரங்கு எந்த பிம்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதோ அதனைப் பொறுத்து அமைகிறது என்பதாகும். ஆதாவது 'கீழ்'நிலையிலேயே தேர்வு பரிணமிக்க ஆரம்பித்துவிட்டது.


இக்கண்டுபிடிப்புகள் பரிணமித்து முகிழ்த்தெழும் செயலிக்க அடிப்படையில் ஒரு உயிரின் அறிதலும் நடத்தையும் அமைவதையும் மூளையின் இயக்கம் கணித்தியங்குவதைக் காட்டிலும் முகிழ்ச்சியின் (emergence) அடிப்படையில் அமைவதையும் உறுதிப்படுத்துவதை உற்சாகத்துடன் சுட்டிக்காட்டுகிறார் கெல்ஸோ.


மிக மிக அடிப்படை பார்வையில் மூளையினை ஆராயும் அனைத்து கோட்பாடுகளையும் இருவகையாக பிரிக்க முடியும் என்கிறார் கெல்ஸோ. இப்பார்வையில் மூளை முழுவதும்
ஒருங்கிணைந்து ஒரு கருவியாக செயல்படுவதாகக் காணலாம் அல்லது மூளையின் ஒவ்வோர் பகுதியும் மிகுந்த தனித்தன்மையுடன் ஒவ்வொரு செயலுக்குமென பிரிக்கப்பட்டு
இயங்குவதாகவும் காணலாம். 'அதுவா இதுவா' எனில் இரண்டுமே உண்மை என நெய்ல்ஸ் போர் பிறிதொரு தருணத்தில் கூறியது போல கூறுவது எளிதுதான். ஆனால்
இக்கோணத்தில், மூளையின் இயக்கத்தை அறிய பயன்படுத்துகையில் புதிய பார்வை தேவைப்படுகிறது.


எந்த ஒரு குறிப்பிட்ட புலனுணர்வும் மூளையின் வெவ்வேறு இடங்களில் உள்ள பல தனித்தனி நியூரானிய பாதைகளின் ஒத்திசைவினை பொறுத்தே முழுமையான புலன்-உள்ளீடாகப் பெறப்படுகிறது. மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அதிர்வெண்களில் ஏற்படும் அதிர்வியக்கங்களை (oscillations) ஒத்திசைவடையச் செய்வதில் நியூரானிய மின்னதிர்வுகளுக்கு பங்கிருக்கலாம். உதாரணமாக, ஒரே சாய்மானமுள்ள ஒளி பிம்பங்கள் ஒரே திசையில் நகர வைப்பதை காணும் பூனைகளின் மூளைகளில் வெவ்வேறு பகுதிகளில் - ஏன் இரண்டு மூளைக்கோளங்களில் உள்ள இருவேறு ஒற்றை நியூரான்களில் கூட- 40 ஹெர்ட்ஸ் எனப்படும் காமா அதிர்வுவரிசை (Gama frequency) அதிர்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மின்னதிர்வுகளின் பலமானது நியூரான்களிடையே உமிழப்படும் வேதிப்பொருட்களுடன் தொடர்புடையது. (இந்த நியூரான்களிடையே உமிழப்படும் வேதிப்பொருட்களில் ஒரே ஒரு
மூலக்கூறின் முக்கியத்துவத்தை மட்டும் ஒரு உதாரணமாக நாம் பின்னர் காண இருக்கிறோம்.) இவ்வேதிப்பொருட்களோ பல உயிர்வேதி-வலையமைப்புகளூடாக (Bio-chemical webs) உருவாக்கப்படுவன. இவையும் தன்னியக்கத்தால் கட்டுப்படும் feedback தன்மை கொண்டவை. ஆக ஒத்த இயக்கத்தன்மை கொண்ட பலதள செயல்பாடுகளும் மூளையில் இயங்குகின்றன.கெல்ஸோ அடுத்ததாகச் சுட்டிக்காட்டும் மற்றோர் பார்வை கோணம் - அதி-ஸ்திரத்தன்மை (metastability). மூளையின் பகுதிகள் தனித்தியங்கும் சுதந்திரத்தன்மையையும் அதற்கு
நேர்மாறானதெனக் கருதத்தக்க ஒருங்கிணைந்தியங்கும் தன்மையையும் வெளிப்படுத்துவதை இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார். மூளையின் மூலமான அறிதல் எப்போது முகிழ்கிறதென்றால், இந்த ஸ்திரத்தன்மையும், நெகிழ்வுத்தன்மையும் இணைந்த அதி-ஸ்திரத்தன்மையில் உருவான அமைவாக(system) மூளை இயங்குவதால்தான் என்கிறார் கெல்ஸோ. இத்தகைய எதிர்-எதிர் தன்மைகளின் இயக்க ஒற்றுமையினை பிரபஞ்சத்தின் அடிப்படையாக காணும் தன்மை, பாரத மற்றும் சீன ஞான மரபுகளில் (உதாரணமாக யின்-யாங், சிவ-சக்தி) அடிப்படையான போக்காகும். ஒத்திசைவுக்கான சமன்பாடு மூன்று குணாம்சங்களைக் கொண்டதாகும்.

 • அமைவில் ஒன்றோடொன்று உறவாடும் பாகங்களிடையேயான பன்மை நிலை (heterogeneity between the interacting components),
 • பாகங்களிடையேயான இணைப்புத்தன்மையில் உள்-வெளி தாக்கங்களின் ஆற்றல் மற்றும்
 • புல அதிர்வாடல்கள் (noise or fluctuations).


இது Haken-Kelso-Bunz (HKB) மாடல் மாதிரி என அழைக்கப்படுகிறது. இயற்பியலாளர் ஹெர்மன் கேகன் என்பவரால் 20 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட முயற்சிகளின்
கனியே இது. முதன்முதலில் இயற்பியலின் அடிப்படையில், வெளிப்படையாக தோன்றும் வேறுபாடுகளின் அடிப்படை இசைவு குறித்து விளக்கிட தாவோவின் யின்-யாங்கினை
பயன்படுத்தியவர் நெயில்ஸ் போர். பரவலாக இதனை அறிவியல் உலகிலும் அறிவுலக பிரக்ஞையிலும் பிரபலப்படுத்தியவர் ப்ரிட்ஜாப் கேப்ரா. என்றாலும் மேற்கத்திய தத்துவமரபில்
அத்தனை (பிளேட்டோ அரிஸ்டாட்டில் அளவு) பேசப்படாத ஹிராக்கிளீட்டஸின் சிந்தனை வீச்சுகளில் இப்பார்வை இருக்கிறது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறார் கெல்ஸோ. இத்தகைய
கோணத்தில் அணுகப்படும் போது முன்னால் கவனிக்கத்தவறிய அல்லது புறக்கணிக்கப்பட்ட சில முடிச்சுகள் கட்டவிழ்வதை மூளை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹிராக்கிளீட்டஸ்


உதாரணமாக விரலை அசைப்பது போன்ற ஒரு செயலை செய்யும் போது மூளையின் இயக்கத்தை அறிந்திடும் ஸ்கேனர் ஆராய்ச்சிகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஸ்கேனர்கள்
முக்கியமாக மூளையில் அதிக இயக்கம் காணப்படும் அல்லது நியூரானிய இயக்கம் 'சூடு பிடிக்கும்', இரத்த ஓட்டம் அதிகரிக்கும் பகுதிகளை கண்டறியப்பயன்படும். பழைய 'கணினி
மாதிரி' பார்வையில், அத்தகைய பகுதிகளிலிருந்து அந்த உடல் செயலுக்கான 'கட்டளை' வருவதாக கொள்ளப்படும். ஆனால் முகிழ்த்து பரிணமிக்கும் செயலியக்கமாக மூளையின்
செயல்பாடு காணப்படும் போது வெறுமனே 'சூடு பிடிக்கும்' மூளைப்பகுதிகளைக் காட்டிலும் எத்தகைய இணை இயக்கங்கள் பரவலாக மூளையில் காணப்படுகின்றன என்பதனை
அறிவதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்.


பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் சிறு கை அசைவுகளைச் செய்யும் போது மூளையின் முன்பகுதியில் (prefrontal cortex) அதீத செயலியக்கம் காணப்படும் அதே நேரத்தில்
மூளையின் பின்பகுதியில் (parietal cortex) செயலியக்கம் குறைகிறது. இந்த இரு இயக்க மாறுதல்களும் எப்போதும் குறிப்பிட்ட உடலியக்கத்துடன் உடனியைந்து காணப்படுகின்றன.
பொதுவாக இத்தகைய பரிசோதனைகளில் இந்த இயக்க இசைவு கவனிக்கப்படாது போயிருக்கும் என்பதனை சுட்டிக்காட்டுகிறார் ஆராய்ச்சியாளர் கார்ல் ஃபெரிஸ்டன். மேலும் 1/20 நொடி நேரமெடுத்து இந்த இயக்க இசைவு ஏற்படுவது இந்த இயக்க இசைவு பரிணமிக்கும் ஒரு நிகழ்வு என்பதனை காட்டுவதாக கூறுகிறார் ஃபெரிஸ்டன். ஆக, செயலாக்கம் மட்டுமல்ல செயலின்மையும் இணைந்து பரிணமிப்பதாக மூளையின் இயக்கத்தினை காண்கிறோம் இப்போது.


பாகம்-2டோ பமைன் (Dopamine)

நார்எபிநெஃப்ரைன் (Norepinephrine) மற்றும் டோ பமைன் (Dopamine) ஆகியவை நியூரானிய அளவில் இயங்கும் போது அவை பொதுவான இயக்க அதிகரிப்புக்கான மூலக்கூறு
கடத்திகள். அதுபோலவே நியூரானிய அளவில் செயலின்மையின் மூலக்கூறு கடத்திகளில் ஒன்று Gamma aminobutyric acid என்கிற காபா (GABA).

Gamma aminobutyric acid என்கிற காபா (GABA)

(வேற காபாவை நினைச்சுகிட்டு இவ்வளவு நேரம் படிச்சவங்க மன்னிச்சுக்குங்க) புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும். அனைத்து புலன் உள்ளீடுகளுக்கும் ஒரே அளவில் செயல்படாமல் செயலியக்கத்தினைக் குறைப்பதில் காபாவின் பங்கு முக்கியமானது. இந்த காபா எனும் காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம், க்ளூடாமேட் (Glutamate) எனும் செயலியக்கத்தை அதிகரிக்கும் வேதிப்பொருளிலிருந்து உருவாக்கப்படுவது. இது பரிணாமத்தின் மற்றொரு அழகிய புன்னகையாகும். அல்லது மற்றொரு யின்-யாங்!மூலக்கூறுகளை உமிழும் நியூரான் சந்திப்புக்கள்

காபா மூலக்கூறுகளை உமிழும் நியூரான்கள் மொத்த நியூரான்களில் 40 விழுக்காடு என்கின்றனர் பல ஆராய்ச்சியாளர்கள். நியூரானிய சந்திப்புக்களில் (synapses) 1/3 சந்திப்புக்கள், காபா மூலக்கூறுகளை உமிழும் தன்மைத்தவை என சிலர் கணக்கிடுகின்றனர். பொதுவாக மனிதனுடனான மற்ற விலங்குகளிலும் வன்மைத்தன்மையான (aggressive) நடத்தையை கட்டுப்படுத்துதலில் காபா உமிழ் நியூரானிய சர்க்யூட்டுக்கள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. எலிகளில் நியூரானியக் குழுமங்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்களில் (nerve centers) டோ பாமைன் நேரடியாக ஊசியேற்றப்படுகையில் எலிகளில் அதீத சுறுசுறுப்பான இயக்கம் உருவாகும். அதுவே காபா கொடுக்கப்படுகையில் மட்டுப்படுகிறது. அதீத இயக்கத்தை மட்டுப்படுத்துவதில் மட்டுமின்றி அச்ச உணர்வினை நீக்குவதிலும் காபா பயன்படுகிறது. தாயற்ற குரங்குகளின் அடிப்படை அச்ச உணர்வுகளை நீக்குவதில் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிமருந்துகள் பயன்படுகின்றன. குரங்கின உறுப்பினர்களாகிய மனித இனத்தின் நாகரிக அச்ச உணர்வுகளை தணிவிப்பதிலும் காபாவினைச் சுரக்க வைக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன.

மூளையில் காபா-உயிர் வேதி வலை

பேசல் காங்கிலியா (Basal Ganglia) எனப்படும் செல் தொகுதிகள் தலாமஸின் இருமருங்கும் உள்ளன. இந்த செல் தொகுதிகளின் வேதி-கட்டமைவு டோ பாமைன்-காபா
அமைவாகும். அவை காலம் குறித்த நமது உணர்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன. டோ பாமைன் குறைந்து காபா அதிகமாகிற போது காலம் குறித்த உணர்தல் உறைநிலை
அடைகிறது. இத்தனை மன இயக்கங்களிலும் முக்கிய மூலக்கூறாக செயலாற்றும் காபா, அகப்பயிற்சிகளின் போது முக்கிய பங்குவ கிக்கும் என்பது தெளிவு.ஸென் பௌத்தத்தில் கென்ஷோ என்பதை சாசுவதமான இரண்டற்ற தன்மையின் கணநேர தரிசனவீச்சு எனலாம். இது விழிப்பு நிலையில் ஏற்படுவது. புற உலகுடன் ஏற்படும் ஒருமை
நிலை. நொடிகளுக்கு மட்டுமே நீடிப்பதும் நினைவுகளில் இனிமையாக உறைவதுமான அனுபவம். பிரக்ஞையின் சாத்தியக்கூறுகளில் மாறுபட்ட நிலையொன்றின் இருப்பினைக் காட்டி மறையும் அனுபவம் கென்ஷோ (Kensho). கென்ஷோவின் போது மூளையின் இயங்கு நிலையில் மூளையின் உள்ளுணர்வு நிலைகள் அதி உச்சத்தை தொடுகின்றன. அதே நேரத்தில் 'நான்-எனது' (I-Me-Mine என்பார்களே) எனும் அகங்கார மன அமைப்புத் திரை விலகுகிறது. தானற்ற இந்நிலை அச்சத்தினை இழக்கிறது. இந்நிலையில் புற உலகு தன்னில் நீங்காத ஒருமையின் நீட்சியாக உணரப்படுகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது?

மதுரை சொக்கப்ப நாயக்கன் தெரு 11-ம் எண் வீட்டில் 1896 ம் ஆண்டு வேங்கட ராமன் என்ற சிறுவன் இத்தகையதோர் 'மரண' நிலையை அனுபவித்ததும், பின்னர் தொடர்ந்து
அகப்பயிற்சிகள் மூலம் என்றென்றும் சாசுவதமான சுயானந்த நிலையில் நிலைத்து பகவான் ரமண மகரிஷியாக பரிணமித்ததும் நமக்கு நினைவிருக்கலாம். அகப்பயிற்சிகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருகையில் காபாவினால் ஏற்படும் அதே அடங்குத்தன்மை கொண்ட மாற்றங்கள் ஏற்படுவது பல ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதீத
உட்கவனத்துடன் விளங்கும் அகப்பயிற்சிகளில் வேறு சில உள்ளீடுகளை காபா அடைத்துவிடுகிறது. உடலிலிருந்து கிடைக்கும் புலன் உள்ளீடுகள் நின்றுவிடுகின்றன. பரீட்டல் லோப் எனும் மூளையின் சிலபகுதிகளுக்கு புலனுணர்வுகள் செல்லுவதில்லை. 'நானாக' விளங்கிய புலனுணர்வு உள்ளீடுகள் அற்றுப்போகின்றன. இந்நிலையில் நனவுணர்வுடன் இருப்பவரின் நான் எவ்வாறு இருக்கும்?

முப்பரிமாண வெளியில் நானிருப்பு அற்றுப்போகும். அதே நேரத்தில் பொதுவான புலனுணர்வுகள் மற்றோர் ('கீழ்') தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்த அனுபவ நிலையில் இருப்பவர், நம்மில் அசாதரணமான அகநிலையில் இருந்தாலும், சாதாரணமாக இயங்கிட முடியும். இந்நிலையின் கணத்துளியே கென்ஷோவிலும் செயல்படுகிறது எனலாம். தலாமஸ் எனும் பகுதி புறப்புல உணர்வுகளிலிருந்து சுயத்தினை - நம் நனவுலக இயங்குதலின் 'நான்'- உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. 1500 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்த லிம்பிக் அமைவின் ஒரு பகுதியே தலாமஸ் ஆகும். லிம்பிக் அமைவின் பிற பகுதிகள், ஹைப்போ தலாமஸ், அமைக்தாலா, ப்ட்யூட்டரி சுரப்பி மற்றும் கைப்போகாம்பஸ் என்பவை ஆகும்.* ஆக தலாமஸின் உள்ளீடுகளினை காபா தடை செய்துவிடுகிறது. முப்பரிமாண வெளியில் இயங்கும் 'நான்' ஒருவிதத்தில் தற்காலிக மரணமடைகிறது என்று கூட கூறலாம். கூடவே 'இந்த நானு'டனான மன உருவாக்கங்கள் உதிர்கின்றன. விருப்பு வெறுப்புகள் அகல்கின்றன. இந்த நான் அற்ற நிலையில் புற உலகின் அனுபவம் இங்கு கிடைக்கிறது.** ஆனால் இவை சில நிமிடங்களே நிலைத்துள்ளன. ஸென் சாதகனைப் பொறுத்தவரையில் கென்ஷோ ஒரு வீச்சு. போலித்திரை அகன்று ஒளிவீசும் சுயத்தின் முகம் கண்ட பொன் தருணம். அதன் பின்னும் நீளும் அகப்பயிற்சிகள்.


கென்ஷோ - சதோரி, பகவான் ரமணரின் மரண அனுபவம், அவற்றின் நரம்பியக்க இணைகள் நாம் கண்டோ ம். எனில் ஆன்மிக அனுபவங்கள் என்பவை மூலக்கூறுகள் நடத்தும் நடனத்தின் விளைவுதானா? காரிய-காரணங்களின் நேர் கோட்டு அம்புகளுக்கு அப்பாலான இயக்கமே மூளையில் நடைபெறும் இயக்கங்கள். எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தினை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு மூளையின் 'உயர்' பகுதிகளிலன்றி 'கீழ்' நிலை நியூரானிய இயக்கங்களிலேயே தொடங்குகிறது என்பதனை முன்பு கண்டோ ம். அகப்பயிற்சிகளிலும் இதே வித இயக்கச் செயல்பாடுகள் இருக்குமெனில் எங்கு தொடக்கம் எங்கு முடிவென கணித்திடலில் எவ்வித பொருள் இருக்கக்கூடும்? காபாவின் சுரப்பும், க்ளூடாமேட் உற்பத்தியும் தொடங்கிட அல்லது நின்றிட மூளையின் 'உயர் கேந்திரத்திலிருந்து' கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என பழைய 'தலைமை செயலக' பார்வை கூறிடும். ஆனால், உடலெங்குமாக பரவிப் பரிணமித்து முகிழ்த்தெழுந்து முடிவில் ஆயிரமாயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாக மலர்ந்திடும் அனுபவத்தின் நரம்பியக்கம் இன்னமும் பல்லாயிரம் இயங்கியல் மர்மங்களை தம்முள் கொண்டுள்ளது.


இன்று ஆன்மிக அனுபவங்கள் அதற்கான தேடல்கள் அவற்றின் அக-புற உண்மைத்தன்மைகளை அறிதல் இத்தகைய அனுபவங்களின் நரம்பியல் மற்றும் பரிணாம காரணிகளை தேடுதல் ஆகியவை இணைந்து உருவாகியுள்ள புதிய புலம் Neurotheology-நியூரானிய இறையியல். தியான அனுபவங்களின் போது காபா உமிழும் நியூரானிய பகுதிகளின் ஒத்திசைவு இயக்கங்கள் (குறிப்பாக பேசல் காங்கிளியா) ஆராயப்படுவது, அக அனுபவங்களின் நியூரானிய-இணைகளை மேலும் அறிந்திட வழிவகுக்கும்.


குறிப்புகள்:


 • * (தலாமஸில் காபாவின் இயக்கநிலை என்பதற்கு ஒரு பரிணாம பின்புலமும் உள்ளது. பொதுவாக பாலூட்டிகளில் காபா செயல்பாடு பாலூட்டிகளல்லாத விலங்குகளைக் காட்டிலும்
  இருமடங்கு அதிகமாக உள்ளது.)

 • **சுவாரசியமான விஷயமென்னவென்றால் இறைதூது அடிப்படையிலான அனுபவங்கள் - உதாரணமாக அச்சமூட்டும்படியாக கபிரியேல் போன்ற இறைதூதனின் இருப்பினை உணர்வது போன்றவை- பரிசோதனை சாலைகளில் மீள்-உருவாக்கப்பட்ட போது (உ-ம்: பெர்சிங்கர் பரிசோதனைகள்) இதே லிம்பிக் அமைவின் (Limbic system) ஒரு பகுதியான அமைக்தாலாவே இயக்க உச்சம் அடைந்ததென்பது கவனிக்கத்தக்கது. இந்திய-சீனவியலாளரும் அரசியல் விமர்சகருமான கொயன்ராட் எல்ஸ்ட்,இது குறித்து (வஹீ எனும் இறையாவேச நிலையின் நரம்பியல் காரணிகள் குறித்து) எழுதிய கட்டுரை நேசகுமாரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  (பார்க்க: http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nesakumar1&taid=1)

 • இருவித சமய அனுபவங்களில் (தியான-யோக பயிற்சிகள் சார்ந்த அக-இறை அனுபவங்கள்: inner spiritual experiences , இறைதூது சமயங்களின் தீர்க்கதரிசிகளின் புற-இறை வெளிப்பாடுகள்:prophetic revelations) நேரெதிர் அமைவுகளின் முகிழ்வெழுச்சி மூலக்கூற்றளவிலான இயக்கங்களிலிருந்தே மேலெழும்புகின்றன. ஆழமான நரம்பியல் ஆராய்ச்சிகளின் மூலம் இறை அனுபவங்கள் பகுத்தாயப்படுவது விரிவான அளவில் வரும் நாள்களில் சாத்தியமாகலாம்.

 • இன்று மிகவும் பரவலாக அறியப்படும் மன-இலகுவாக்கும் யோகா பயிற்சி முறைகளில் ஒன்று ஆழ்நிலை தியானம். இதனை பயில்பவர்களின் ப்ட்யூட்டரி ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள் காபாவினால் ஏற்படலாம் என்கிறது 2000 இல் வெளியான ஒரு ஆய்வுத்தாள்: (Elias AN, Guich S, Wilson AF., Ketosis with enhanced GABAergic tone promotes physiological changes in transcendental meditation. http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=PubMed&list_uids=10859661&dopt=Abstract)

 • தலாமஸில் காபாவின் செயல்பாட்டின் பரிணாமத்தன்மை குறித்த ஒரு ஆய்வுத்தாள்: http://www.cerebromente.org.br/n15/mente/evolution_intelligence.html


இக்கட்டுரை குறித்து:

இக்கட்டுரை இரு வெவ்வேறு திசைகளில் உள்ள ஆராய்ச்சி பார்வைகளை உள்ளடக்கியது. ஒன்று நேர்கோட்டுத் தன்மையற்ற இயங்கியல் மூலம் மூளையின் இயக்கத்தினை ராய்வது.
மற்றொன்று உன்னத அனுபவங்களில் ஒரு சில நரம்புகளிடையே இயங்கும் மூலக்கூறுகளின் முக்கியத்துவத்தை காண்பது. முந்தையது பெரும்பாலும் ஸ்காட் கெல்ஸோவின்
ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இக்கட்டுரையின் இப்பகுதியை எழுத தூண்டியது ஜான் மக்ரோனின் 'Wild minds' எனும் கட்டுரையாகும். 13-டிசம்பர் 1997 ஑New
Scientistஒ இல் வெளியான இக்கட்டுரையின் அடிப்படையிலேயே 'காபா:...' கட்டுரையின் முற்பகுதி பெருமளவு அமைக்கப்பட்டுள்ளது.


பிற்பகுதி கொலராடோ பல்கலைக்கழகத்தின் நியூராலஜி பேராசிரியர் ஜேம்ஸ் ஆஸ்டின் எனும் ஸென் சாதகரின் ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டிலும்
பொது அம்சம் எதுவெனில், இயக்கவியல் தொடர்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கும். இத்தகையதோர் முன்னேற்றத்தினை கிரிகாரி பேட்ஸன் முன்னறிவித்திருந்தார் என்றே
தோன்றுகிறது. குறிப்பாக கேப்ராவுடனான அவரது உரையாடல்களில். ('Uncommon Wisdom' (ப்ளமிங்கோ,1988) பக்.86-87.) கேப்ரா பின்னாட்களில் எழுதிய 'Web of life' இல்
கெல்ஸோவின் பார்வையுடன் பெருமளவு இணக்கமுடைய வரேலா மற்றும் மத்துரானாவின் பிரக்ஞை குறித்த பார்வைகளை விளக்குகிறார். ப்ரிகோகைனின் சுயமுகிழ்த்தெழும் தன்மை
கொண்ட அமைவுகள் என்பதும் இத்துடன் தொடர்புடையதே ஆகும். ஜேம்ஸ் ஆஸ்டினின் 'Zen and Brain' MITயால் வெளியிடப்பட்டதாகும் (1998). காபா மற்றும் கென்ஷோ குறித்து பக்.208-210 மற்றும் பக்.610 இல் காணவும். (தன்னுணர்வு/ப்ரக்ஞை) நிலைகள் மொட்டவிழும் இயல்பு கொண்டவையாகவும் மன-உடலியக்கவியல்கள் பரிணாமமடைவதாகவும் கூறுகிறார் ஆஸ்டின்.(பக்.450) இக்கட்டுரையில் காபா குறித்து கூறப்பட்டுள்ளவை அனைத்தும் இந்நூலின் அடிப்படையில் அமைந்தவையே ஆகும். • ஸ்காட் கெல்ஸோ, The Complementary Nature of Coordination Dynamics: Self-organization and Agency, Nonlinear Phenomena in Complex Systems (2002).
 • ஸ்காட் கெல்ஸோ, "The Complementary Nature of Coordination Dynamics: Toward a Science of the In-Between", (In R.R. McDaniel & D.J. Driebe (Eds.) Uncertainty
  and Surprise in Complex Systems. Berlin, Heidelberg. Springer (2005))
 • நேரெதிர் கூறுகளின் ஒருங்கிணைந்த தன்மை குறித்த கெல்ஸோவின் இணையதளம்: www.thecomplementarynature.com.