அகப்பயணம்

Monday, April 30, 2007

தலையில்லாத கிருஷ்ணன்

வன்முறை தாக்குதல்கள் தற்காலிகமாக நின்று போனாலும் கூட இந்துக்கள் மீதான பிறவித தாக்குதல்கள் தொடர்ந்த படியே இருந்தன. அவ்வப்போது ஒதுக்குப்புறமான கிராமங்களில் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன. கொல்லங்கோடு குமரி மாவட்டத்தின் மேற்கில் இருக்கும் ஒரு சிற்றூர். அந்த இடம் அடுத்த கலவரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கும் கடலோரத்தில் அம்மன் கோவில் அமைந்திருந்தது. அங்குள்ள ஜீஸஸ் ஆர்ட்ஸ் எனும் நிறுவனம் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. ஊரைச் சுற்றியிருக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து அனுப்புவது இந்த நிறுவனத்தின் வழக்கம். இந்து தெய்வங்களின் படங்களே அனுப்பப்படும். ஆனால் என்ன அதில் தெய்வத்தின் தலை மட்டும் வெட்டப்பட்டு ஒரு விவிலிய வசனமும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக உள்ளூர் கோவில் பூசாரிகளுக்கு இந்த படங்கள் அனுப்பப்படும். மனது புண்படும் இந்துக்களுக்கு பேசத்தான் ஏதும் நாதி கிடையாதே. அவமானத்தை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். நாராயணசாமி கோவில் பூசாரி மாதவன் பணிக்கருக்கு இதே போல தலைவெட்டப்பட்ட ஒரு கிருஷ்ணன் படத்தை அனுப்பியது ஜீஸஸ் ஆர்ட்ஸ். மலையாளத்தில் 'புருஷோத்தமனின் தலை இயேசு கிறிஸ்து' (கொரிந்தியர் 11:3) என்று எழுதியிருக்கிறார், உண்மையில் அந்த வசனம்: ஒவ்வொரு புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் என்று வரும். சாதாரண இந்துக்களிடம் அவர்களுடைய வேதங்களை குறித்த அறிவின்மையை பயன்படுத்திக்கொண்டும் தங்கள் மறைநூலை பிரச்சாரத்துக்கு தகுந்தபடி பேசிக்கொண்டும் நடக்கும் கிறிஸ்தவ பிரச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு இது. இந்த வாழ்த்து அட்டையின் மறுபுறம் "ஏசுவால் அன்றி வேறொருவராலும் இரட்ச்சிப்பு இல்லை" என எழுதப்பட்டிருந்தது. சுருக்கமாக கொல்லங்கோட்டில் வெறுப்பியல் பிரச்சாரம் களைகட்டியது. விரைவில் நடக்கப்போகும் வெறியாட்டத்துக்கு அது கட்டியம் கூறியது.

கிருஷ்ணன் கோவில் பூசாரிக்கு வாழ்த்து அட்டை: ஜீஸஸ் ஆர்ட்ஸின் மத நல்லிணக்க முயற்சி

(தொடரும்)

Sunday, April 29, 2007

வெடித்தது மண்டைக்காட்டு கலவரம்

துப்பாக்கி சூட்டினைத் தொடர்ந்து மிகவும் மோசமான முறையில் இந்துக்களை விமர்சிக்கும் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் கன்னியாகுமரி மாவட்டமெங்கும்
விநியோகிக்கப்பட்டன. கடற்கரையோர கிராமங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். ஆங்காங்கே இந்துக்கள் பிடிக்கப்பட்டு கிறிஸ்தவ வெறியூட்டப்பட்ட மீனவர்களால் கடலில்
கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். முதல் சுற்று தாக்குதலில் இந்துக்கள் பல கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டு தென்னந்தோப்புகள், அரசு பள்ளிகள் போன்றவற்றில்
அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் வாழ்ந்தனர்.

ஈத்தாமொழியில் கிறிஸ்தவர்களால் சூறையாடப்பட்ட இந்து வீடு


இறையுமன்துறை கிராமத்திலிருந்து வீடு வாசல்கள் கிறிஸ்தவர்களால் சூறையாடப்பட்டு துரத்தப்பட்ட இந்துக்கள் தென்னந்தோப்பில் அகதிகளாக வாழ்ந்த
காட்சி


திரு,தங்கையா நாடார்

கிறிஸ்தவர்களால் கடலில் எறியப்பட்டு காவல்துறையால் மீட்கப்பட்ட 70 (1982 இல்) வயது முதியவர் ஈசந்தங்கு கிராமத்தை சார்ந்த தங்கையா நாடார். 19-3-1982 அன்று இவரை
மீட்டவர் துணை போலிஸ் கண்காணிப்பாளர் திரு.சங்கரநாராயணன்.

பைங்குளம் கிராமம் அரசு பள்ளிக்கூடத்தில் அகதிகளாக அடித்துவிரட்டப்பட்ட இந்துக்கள் (இங்கு 800 இந்துக்கள் அகதிகளாக வாழ்ந்தனர்)


கிறிஸ்தவர்களால் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் ஒன்று. வேணுகோபால் கமிசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது:
நடுவூர்கன்னக்குறிச்சி, ஈசாந்தெங்கு , ஈத்தாமொழி, நைனாபுதூர்,மணவாளபுரம் ஆகிய பல ஊர்களில் இந்துக்கள் தாக்கப்பட்டு சொந்த ஊரையும் வீட்டையும் விட்டு உயிரைக்காப்பாற்ற
விரட்டப்பட்டனர். பொதுவாக தாக்குதல்கள் இரவில் செய்யப்பட்டன. இந்துக்கள் இரவில் வாய்க்கால்கள், சாக்கடைகளில் கூட குடும்பத்துடன் பதுங்கி விடியற்காலைகளில்
இந்துக்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு அகதிகளாக சென்றனர். அன்றைய தேதியில் இந்துக்களுக்கு என்று கேட்க நாதியில்லை என்பதுதான் யதார்த்த நிலை. தவத்திரு
குன்றக்குடி அடிகளார் பாதிக்கப்பட்ட இந்து கிராமங்களை பார்வையிடாமல் நேராக மண்டைக்காட்டுக்கு சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கிறிஸ்தவ பிசப் ஆரோக்கியசாமியுடன் இணைந்து கூறினார்: "இந்துக்கள் தாராளமாக கடலில் குளிக்கலாம் என இதோ ஆரோக்கியசாமி அனுமதி வழங்குகிறார்." ஆரோக்கியசாமி யார்
கடலில் குளிக்க இந்துக்களுக்கு அனுமதி வழங்க? என பொருமியவாறு ஒரு இந்து "என்றால் ஆதினம் அவர்களே குளித்து ஆரம்பித்து வைக்கலாமே" என்றார். தவத்திரு அடிகளார்
புன்னகைத்தபடியே "என்னிடம் டவலும் மாற்று உடுப்புகளும் இல்லை அதனால் பிறகு பார்க்கலாம்" என்றபடி நழுவினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரிய சைவக்குடும்பத்தினர் பலர் மனம் நொந்து தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு கண்டன கடிதங்கள் எழுதினர்.

உயிரோடு கணவனை பறிகொடுத்த கோவில்விளை அய்யப்பன் நாடார் அவர்களின் மனைவி

ஈத்தாமொழியில் அந்த காலகட்டத்தில் இந்து இயக்கங்கள் ஏதும் பெரிய அளவில் கிடையாது. கிராம முன்னேற்றத்துக்காக மகரிஷி மகேஷ் யோகி அமைப்பின் தையல் வகுப்பு பள்ளி
இருந்தது. கிறிஸ்தவர்களால் இது அடித்து நொறுக்கப்பட்டது. தையல் மிஷின்கள் எரிக்கப்பட்டன. விவசாய குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்டபோது மூன்று பசுக்கள் உட்பட முழு வீடும் அடியோடு தரைமட்டமானது. கீரிவிளை ராமகிருஷ்ணன் நாடார், ஈத்தாமொழி சுந்தரம் , மணவாளபுரம் செல்லத்துரை நாடார், தேரிவிளை பால்நாடார் பனவிளை சுயம்பு நாடார் சாமாதானபுரம் தேரடி மாடன், கோவில்விளை அய்யப்பன் ஆகியோர் கிறிஸ்தவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள். இதில் பால்நாடார், சுயம்பு நாடார் ஆகியோர் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர் என்பதனை விசாரிக்க சென்ற காவல்துறை கண்காணிப்பாளரை மீனவ கிராமத்துக்குள்ளேயே விடாமல் அடித்து துரத்தினர். இந்நிலையில் இந்துக்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை நகருக்குள் கொண்டு வருவதென்பது முடியாமல் போனது. பள்ளம் எனும் மீனவர் கிராமத்தில் இந்துக்கள் இதுவரை கண்டிராத வேகத்துடன் பதிலடி கொடுத்தனர். மண்டைக்காட்டு கலவரத்தின் முற்றுப்புள்ளியாக அதுவே அமைந்தது. இந்துக்களினை எதிர்க்க வன்முறை சரியான ஆயுதம் ஆகும் காலம் இன்னமும் வரவில்லை என கிறிஸ்தவ பாதிரிகள் முடிவு செய்தார்கள். இந்துக்களிடம் சமாதான பேச்சு
வார்த்தைக்கு முன்வந்தார்கள். விரைவில் சமாதானமும் ஏற்பட்டது. ஆனால் இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஆங்காங்கே தொடர்ந்த படிதான் இருந்தன. ஆனால் குமரி
மாவட்ட இந்துக்கள் ஒரு நல்ல பாடத்தை படித்தனர் அன்றைக்கு. வலிமையே வாழ்வு.
(தொடரும்)

Saturday, April 28, 2007

மண்டைக்காட்டு கலவர குருசடி

மண்டைக்காடு கலவரத்தைக் குறித்து இப்படி பொய்கள் பரப்பப்படுவதில் மா.சி ஒரு சிறிய கருவிதான். உதாரணமாக 2006 இல் திண்ணை பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் ஒரு நபர் எழுதினார்: "...அவர்கள் புதன்கிழமை தோறும் நடத்தும் பூசை வேளையில் சர்ச்சை நோக்கி ஒலிபெருக்கி ஒன்று திருப்பப்பட்டு இரைச்சல் அதிகமாய்ப் பாடல் ஒலித்தது இந்துத் தரப்பிலிருந்து. சத்தத்தைக் குறக்கச் சொல்லும் வேண்டுகோளை வல்லாந்திரமாய் மறுத்த தரப்பு கலவர விதையை ஊன்றியது."



கலவரத்துக்கு தூண்டுகோலாக பகவதி அம்மன் ஆராட்டு பாதையில் அரசு ஆணையை மீறி அமைக்கப்பட்ட குருசடி

இதுதான் முழுப்பொய் என்பது. உண்மையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து கணிசமான தூரம் தள்ளி இருக்கிறது புதூர் சர்ச். ஆனால் வேண்டுமென்றே இந்துக்கள் ஆராட்டுக்கு வரும் பாதையில் 1971 இல் கட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் குருசடி இது. இந்த குருசடி தவிர, ஊருக்குள் தள்ளி புதூர் சர்ச் இருக்கிறது. இந்த குருசடி ஏற்கனவே கூறியது போல அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகும். எனவே இந்த குருசடியை வழிபாட்டு தலம் எனக் கூறுவது மிசிநரி தொண்டரடிபொடிகளால் மட்டுமே இயலக்கூடிய விசமத்தனமன்றி வேறில்லை. 1982 இல் இது மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்பீக்கர் கட்டப்பட்டு கிறிஸ்தவ பிரச்சாரம் ஒலிப்பரப்பப்பட்டது. மண்டைக்காட்டு அம்மன் கோவில் வரும் பக்தர்களிடம் கிறிஸ்தவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இது சச்சரவை ஏற்படுத்தியது. இறுதியில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்ட போது மோதல் வெடித்தது. மணவாளக்குறிச்சி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கூறிய வாக்குமூலம் விசயத்தை தெளிவாக்குகிறது:
'மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். நேர் எதிர்த்தாற் போல் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமம் இருக்கிறது. வரும் பக்தர்கள் முதலில் கடலில் குளித்துவிட்டு பின்னர் ஏவிஎம் கால்வாயிலும் குளிப்பது வழக்கம். கொஞ்சநாளாவே இந்து கிறிஸ்தவர் தகராறு இருந்துகிட்டுருக்குது. இந்துக்கள் கடலில் குளிப்பது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு விருப்பம் இல்லை. சம்பவம் நடந்த ராத்திரி 8 மணி இருக்கும். மண்டைக்காடு புதூர் கிராமத்திலிருந்து சுமார் 3000 பேர் கூட்டமாக வந்து கோயிலுக்கு வந்த பக்தர்களை தாக்கினாங்க. கடைகளை சூறையாடினாங்க. காவலுக்கு நின்னுட்டிருந்த போலிஸ்காரங்க, நானு, ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 23 பேர் காயமடைஞ்சோம். நிலைமை சமாளிக்கமுடியாமல் போகவே துப்பாக்கி பிரயோகம் நடந்தது. 6 பேர் செத்து போனாங்க. 15 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரில அனுமதிக்கப்பட்டிருக்காங்க.'

மேலும் புதூர் கத்தோலிக்க பங்கின் பூசாரி செபாஸ்டியன் பெர்னாண்டோகாவல்துறை அதிகாரி தன்னிடம் ஸ்பீக்கர் சத்தத்தைக் குறைக்கக் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார். மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நீராட போகும் பாதையில் குருசடி கட்டுவார்களாம். சரியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள குருசடியில் திருவிழா நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு 'பூசை ' நடத்துவார்களாம். இத்தனையும் பதிவான பிறகு ஒரு இருபது வருடத்தில் ஒரு மிசிநரி தொண்டரடிபொடியும் இதர மதச்சார்பற்றதுகளுமாக இதனை அப்படியே 'உல்டா ' பண்ணி பிரச்சாரமும் பண்ணுவார்களாம். எப்படி இருக்கிறது மதச்சார்பின்மையின் உண்மை லட்சணம்!

(தொடரும்)

மா.சிவகுமாரின் அவதூறுகளுக்கு நன்றி

திரு.சிவகுமார் மண்டைக்காட்டு கலவரம் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் குறித்தும் பல பொய்களை எழுதி வந்தார். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சொன்ன பொய்களை தோலுரித்து
காட்டிவந்தேன். இறுதியில் வழக்கம் போல ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவம் என்பது பிறப்படிப்படையிலான வர்ண அமைப்புதான். தாழ்த்தப்பட்டவனை அடித்தளத்திலேயே
வைத்திருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம் என்று பிரச்சார பொய் சேற்றினை எவ்வித ஆதாரமும் இல்லாமல் எறிந்து விட்டு போகிறார். இது குறித்து இறுதியில் சில
கேள்விகளையும் அன்னார் எழுப்பியுள்ளார். இந்த அபவாத+அறிவின்மை நிரம்பிய கேள்விகளும் கூட ஒருவிதத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மையான தன்மை குறித்து மக்கள் அறிந்திட ஒரு நல்ல வாய்ப்பினை தந்துள்ளது. அவ்விதத்தில் அவருக்கு நன்றிகளை கூறிக்கொண்டு அவரது கேள்விகளையும் அபவாதங்களையும் அவற்றின் பொருளின்மையையும் காணலாம்:

மா.சி கூறுகிறார்:
'சமஸ்கிருதம்தான் தேவ மொழி, எல்லா இந்துத்துவா வழி செல்பவர்களுக்கும் பொது மொழி' என்றால் அது நிச்சயமாக என் வழி இல்லை...வை அனைத்திலுமே வருணசிரம தர்மத்தை வளர்க்கும், ஒரே மொழியை நிலைநாட்டச் செய்யும், ரு சிறு ஆதிக்க குழுவினரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் குறிக்கோளில்தான் இந்துத்துவா இயக்கங்கள்
செய்லபடுகின்றன என்பது என்னுடைய கருத்து"

எனது பதில்:
சமஸ்கிருதம் தேவமொழி என கூறவில்லை. இந்த தேசத்தின் மொழி எனக் கூறுகிறோம். அதுவும் ஏதோ இந்துத்துவ வாதிகள் மட்டும் சொல்லும் விசயம் கிடையாது. அனைத்து
தேசியவாதிகளும் கூறும் விசயம்தான். ஸ்ரீ நாராயணகுரு அய்யன் காளி போன்ற ஆன்மிக பெரியவர்கள் மற்றும் சமூக போராளிகள் அந்த மொழியினை படிப்பதன் அவசியத்தை
கூறியுள்ளனர். அண்ணல் அம்பேத்கரும் சுவாமி விவேகானந்தரும் கூறியுள்ளனர். சமஸ்கிருதம் இந்த தேசத்தில் அனைவரும் சொந்தம் கொண்டாட முடிந்த ஆனால் ஒருவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத ஒரு மொழி என்ற முறையில் அதன் கலாச்சார ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் புலப்படும். அதன் ஆதிகவி வேடரான வால்மீகி முனிவர். அதன் ஆகச்சிறந்த மகாகவி சூத்திரனான காளிதாசன். மீனவப்பெண்ணின் மகனான வியாசபகவானே அம்மொழியில் மறைகளை தொகுத்தளித்தவர். மறைந்த குடியரசு தலைவர்
கே.ஆர்.நாராயணன் சமஸ்கிருதத்தை "பாரத தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடையாளமாகவும் அதனை போஷிப்பதாகவும் விளங்கும் மொழி" என சமஸ்கிருதத்தை கூறினார். 'தி சண்டே
ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகைக்கு 11-செப்டம்பர் 1949 அன்று கொடுத்த பேட்டியில் அண்ணல் அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என
கூறியுள்ளார். இதே கருத்தை அவர் பாராளுமன்றத்திலும் 10-செப்டம்பர் 1949 அன்று நடந்த 'அகில இந்திய ஷெல்யூல்ட் வகுப்பு பெடரேஷனின்' எக்ஸிக்யூட்டிவ் கமிட்டியிலும்
தெரிவித்தார். எனவே ஏதோ சமஸ்கிருதம் ஒரு கூட்டத்திற்கு அல்லது ஒரு சாதிக்கு சொந்தமானது எனும் எண்ணம் தவறானது. சமுதாய ஏற்றம் பெறவும் நமது தருமத்தின் மறைகளை நலிவுற்ற மக்கள் படித்து அதில் சாதியம் இல்லை என்பதனை உணரவும் சமஸ்கிருத அறிவு அவர்களுக்கு தேவை. சாதியம் அழிய சமஸ்கிருதம் உதவும். இது ஸ்வாமி விவேகானந்தரின் கருத்தாகும். கூசாமல் பொய் அளந்த மா.சியின் கருத்தை விட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்கள் நிச்சயமாக பின்பற்ற தக்கதாகும்.

மா.சி கேட்கிறார்:
"தீண்டாமை ஒழிப்பின் போது இந்து மகாசபையின் நிலை என்ன? கோயில்களில் அனைத்து சாதியினரும் பூசாரி ஆகலாம் என்பது குறித்து இந்துத்துவா இயக்கங்களின் நிலைப்பாடு
என்ன?"
எனது பதில்:
இதைப்போல ஒரு கீழ்த்தரமான வெத்து rhetoric கேள்வியை நீங்கள் காண்பது கடினம். ஆனால் மா.சியின் குணத்துக்கு இது ஒன்றும் அயலான விசயம் கிடையாது. சரி வரலாற்றை பார்ப்போம்.


1: 1928 இல் ரத்னகிரியில் ரத்னகிரியை விட்டு வெளியே செல்லக்கூடாது மற்றும் அரசியலில் ஈடுபடக்கூடாது எனும் நிபந்தனைகளுடன் காவலில் வைக்கப்பட்ட வீர சாவர்க்கர்
மாவட்ட மாஜிஸ்டிரேட்டுக்கு மேல்சாதியினர் மகர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்காமல் இருப்பதை எதிர்த்து கடிதம் எழுதுகிறார்.
2: அண்ணல் அம்பேத்கரின் காலாராம் சத்தியாகிரகத்துக்கு ரத்னகிரிக்கு வெளியே செல்ல தடைசெய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் வீர சாவர்க்கர் ஆதரவு தெரிவித்தார். தனக்கு
ரத்னகிரியை விட்டு வெளியே செல்ல தடை இல்லாத பட்சத்தில் தானே அம்பேத்கரின் இந்த சத்தியாகிரகத்தில் முதல் ஆளாக கைது ஆகியிருப்பேன் என அவர் எழுதிய கடிதமும்
கோவில் தலித்துகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என அவர் எழுப்பிய கோரிக்கையும் அண்ணல் அம்பேத்கர் தன் 'ஜனதா' பத்திரிகையில் வெளியிண்ட்டார். (9 மார்ச் 1931).
3: அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் பினவருமாறு குறிப்பிடுகிறார்: "இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது."
4: அண்ணல் அம்பேத்கரின் 'ஜனதா' சிறப்பு பதிப்பில் தலித்துகளுக்காக சாவர்க்கர் செய்யும் சேவைகளை குறிப்பிட்டு அவரை 'புத்தருக்கு ஒப்பான பெரியவர்' என கட்டுரை
வெளிவருகிறது (ஜனதா, ஏப்ரல் 1933 சிறப்பு பதிப்பு பக்.2)
5: கேரளத்தில் தலித்துகளின் மேம்பாட்டிற்காக ஆரிய சமாஜம், இந்து மகாசபை மற்றும் இந்து கேரளமிஷன் ஆகியவை ஆற்றும் பணிகளை கேட்டு மகிழ்ந்து பாராட்டுகிறார் ஒப்பற்ற
கேரள தலித் தலைவர் அய்யன் காளி.
6: 1933 இல் பம்பாய் மாநகர தேர்தலில் தனது வேட்பாளராக தலித்தை இந்துமகாசபா நிறுத்துகிறது. இவருக்கு எதிராக காங்கிரஸ் மேல்சாதி இந்துவை நிறுத்துகிறது.
7: 1969 இல் உடுப்பி விஸ்வஹிந்துபரிஷத் மாநாட்டில் முக்கிய இந்து சமய துறவிகள் : வேதாந்த-பௌத்த-ஜைன-சீக்கிய மரபினைச் சார்ந்த அனைவரும் - சமுதாய நடைமுறைகளில் சாதியத்தையும் தீண்டாமையையும் அறவே ஒழிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் ஒரு பேட்டியில் குருஜி கோல்வல்கர் கூறுகிறார்: "சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் சமமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். சமயச்சடங்குகள், கோவில் வழிபாடு, வேதக்கல்வி -சுருக்கமாக சொன்னால் அனைத்து சமுதாய சமய விஷயங்களிலும்- சமமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். இந்து சமுதாயத்தில் சாதியம் ஒழிய இதுவே ஒரே வழி."

8: பிராம்மணர்களுக்கு மட்டுமே உரிமையாக கருதப்பட்ட கர்மகாண்டங்களை இடஒதுக்கீட்டுடன் அனைத்து சாதியினரும் கற்க வழிவகுக்கிறார் முரளி மனோகர் ஜோஷி. இந்த பட்டம் பெற்ற எவரும் புரோகிதராகவும் அர்ச்சகராகவும் பணியாற்ற முடியும்.
9: 2005 மகரசங்கராந்தி பீகாரின் புகழ்பெற்ற பிகித சிவ ஆலயத்தில் தலித் அர்ச்சகராக நியமிக்கப்படுகிறார்,

10: தேசிய ஷெட்யூல்ட் வகுப்பினர் கமிசனின் சேர்மனாக சிறப்புற பணியாற்றிய தலித் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்களாக இருந்தவர்கள். அகில உலக இந்து மாநாட்டில்
விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக உரையாற்றியவர் தலித் வேத அறிஞரான முனைவர். பிஜோய் சங்கர சாஸ்திரி ஆவார்.

11. புகழ்பெற்ற தலித் எழுத்தாளரும் தலித் தலைவருமான நாமதேவ தாஸல் ஆர்,எஸ்.எஸ் தலைவரை சந்தித்து சங்க நூலை வெளியிடுகிறார். சாதியத்தை அழிக்கவும் தேசிய சமரச
உணர்வினை மேம்படுத்தவும் தாம் ஆர்.எஸ்.எஸ் மேடைக்கு வந்திருப்பதாக அவர் கூறுகிறார். சங்க அமைப்பான சமரஸ்தா மஞ்ச்சின் செயல்பாடுகள் மேலும் பரவவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் புகழ்பெற்ற இந்து கோவில்களில் பாரதமெங்கும் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.
12: ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்விசேவை நிறுவனமான வித்யாபாரதி 13500 கல்விநிறுவனங்களை நடத்துகிறது. இதில் 94 சதவிகிதம் தலித் பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் அன்றாடக்கூலி தொழிலாளர்கள் போன்றவர்களின் குழந்தைகள். அண்மையில் இந்த பள்ளிகள் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பழைய மாணவர்களின் கூட்டம் பங்களூரில் நடந்தது. அதில் கூலித்தொழிலாளர்களின் மைந்தனாக வித்யா பாரதி முலம் இன்று மருத்துவராக உயர்ந்திருக்கும் டாக்டர். நரேந்திரன் அவரும் சேவா காரியங்களில் ஈடுபட்டு தலித் பகுதிகளில் சேவை செய்வதாக உளம் நெகிழ கூறினார். இதுபோல எத்தனை எத்தனையோ கூறலாம்.


ஆனால் என்ன நமது சிவகுமாருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா?என்றாலும் மா.சியின் போலித்தனத்தை பார்த்து வரும் எரிச்சலுக்கு மேலாக அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.
இல்லாவிட்டால் இதை எழுதியிருக்க மாட்டேன் அல்லவா. நன்றி மா.சி.

Friday, April 27, 2007

சில அமர சித்திர கதைகள்-1

உபநிடதக் கதைகள்:




இந்த அமர்சித்திரக்கதை பின்வரும் அழகிய உபநிடதக்கதைகளை கூறுகிறது:

  • 1. சுவேதகேது ஆத்மஞானம் பெறும் கதை. இக்கதையிலேயே 'தத்வமஸி' எனும் மகா வாக்கியம் வருகிறது. (சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து)
  • 2. ரைகவன் எனும் ஆத்மஞானியான வண்டி இழுப்பவரிடம் அரசனான ஜனஸுருதி பணிந்து ஞானம் பெறும் கதை.(சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து)
  • 3. வெற்றியால் மமதை அடைந்த தேவர்களுக்கு உண்மையில் அவர்களுக்கு வெற்றியை அளித்ததும் பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களுக்கு ஆதாரமாக விளங்குவதும் பிரம்மமே என சக்தி உமாவாக வந்து உணர்த்திய கதை. (கேனோபநிடதத்திலிருந்து)
  • 4. வயது முதிர்ந்த முனிவர்களுக்கு வேதத்தின் உண்மைப் பொருளை ஒரு இளம் பிரம்மச்சாரி உணர்த்தும் கதை (சாந்தோக்ய உபநிடதத்திலிருந்து)

இக்கதைகள் அனைத்துமே ஆத்மஞானம், சமுதாய ஒற்றுமை, ஆன்ம நேய சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றினை நம் மனதில் பதிய வைக்கக்கூடியதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பாரதக்குழந்தைக்கும் இந்த அமர்சித்திரக்கதை தனது பாரம்பரிய சிறப்பினை விளக்குகிறது.
நூலிலிருந்து சில காட்சிகள்:

எங்கும் நிறைந்த ஆன்ம சத்தியத்தை ஆலவிதைகளை கொண்டு ஸ்வேதகேதுவுக்கு முனிவர் விளக்குகிறார்


வண்டி இழுக்கும் ரைகவரின் தேஜஸை புகழுகின்றன அன்னங்கள். இதனை கேட்கிறான் மன்னன் ஜனசுருதி


மன்னன் ஏன் இந்த வண்டி இழுப்பவரிடம் தம்மை அனுப்புகிறார் என அதிசயிக்கின்றனர் சேவகர்.




செல்வங்களை அளித்து ஞானத்தைக்கோரும் மன்னனிடம் ஞானம் விற்பனைக்கல்ல என கடிந்து அனுப்புகிறார் ரைகவர்.


மன்னன் ரைகவர் காலில் பணிந்து ஞானத்தைக் கோரி பெறுகிறார்.


வீர சிவாஜி கதைகள் (சிறப்பு பதிப்பு)



மராட்டியத்தில் ஹிந்தவ சுவராஜ்யம் கண்ட மாமன்னர் சக்கரவர்த்தி வீர சிவாஜி. இவர் குறித்து வரலாற்றாசிரியர்கள் மட்டுமல்ல வட்டாரக்கதைகளும் பாடும்
புகழ்மாலைகள் எண்ணிலடங்கா. வீர சிவாஜி குறித்து ஏற்கனவே வெளிவந்திருந்த மூன்று அமர்சித்திரக்கதைகளின் தொகுப்பு இந்த சிறப்பு பதிப்பு. இதில் முதல் கதை
வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறு. இரண்டாம் கதை அவர் குறித்த நாட்டார் கதைகளின் தொகுப்பு. இதில் மாற்று மத பெண்ணை தன் தாயாக சகோதரியாக
சிவாஜி பாவித்த சிறப்பு, ஒரு பால்காரியின் தாய்ப்பாசத்தினால் கோட்டை பாதுகாக்கப்பட்ட கதை போன்ற கதைகள் இடம் பெறுகின்றன. சிம்மக்கட் கோட்டையை
அன்னியரிடமிருந்து மீட்க தன்னுயிரை தியாகம் செய்த வீர சிவாஜியின் உயிர் தோழர் தானாஜியின் கதை அடுத்ததாக உள்ளது. நாட்டுப்பற்று, மானுட நேயம்,
தருமத்தின் மீது அன்பு, கடமை உணர்வு ஆகியவை குழந்தைகளுக்கு ஊட்டப்பட இந்த நூல் மிகவும் உதவும்.
நூலிலிருந்து சில காட்சிகள்:



கொடுமைகள் செய்த அப்சல்கானை மரியாதையுடன் புதைக்க சிவாஜி உத்தரவிடுகிறார்




பிறர் மனை நோக்கா பேராண்மை காட்டிய இந்து சுவாராஜ்ய ஸ்தாபகர் வீர சிவாஜி

Thursday, April 26, 2007

கலவர சர்ச்சுகளின் வாஸ்து சாஸ்திரம்

குமரிமாவட்ட மதமோதல்களின் காரணிகள்
மா.சிவகுமார் பொய் சொல்வதில் ஒரு தேர்ந்த வித்தகர் என்றால் அவருக்கு ஜால்ரா போடுகிறவர்கள் வெறும் வித்தகர்களாக இல்லை நச்சுத்தன்மை வாய்ந்த Batman-காமிக்ஸ் வில்லத்தனமான 'ஜோ'க்கர்களாக இருக்கின்றனர். மக்கள் மனதில் மேரி மாதாவும் மண்டைக்காட்டு பகவதியும் சகோதரிகளாகத்தான் வாழ்ந்தார்கள் என்பதாக ஜோ என்பவர் எழுதியிருந்தார். இதில் பொதிந்திருப்பது ஒரு குரூரமான ஸிக் ஜோக். மண்டைக்காடு மட்டுமல்ல கொல்லங்கோட்டிலும் பகவதி அம்மன் கோவில் உண்டு. கன்னியாகுமரி பகவதி அம்மன் தொடங்கி மேற்கு கடற்கரையோரமாக சென்றால் கடற்கரையோர தேவி சேத்திரங்களை தரிசிக்க முடியும். மண்டைக்காட்டம்மனுடன் இணைந்த மற்றொரு அம்மன் கல்லியம்மன் என்றும் கலியாணத்தம்மன் என்றும் அழைக்கப்படுகிற மற்றொரு பகவதி. கடலாடி வந்த அம்மன் கல்லியம்மன் மலையாடி வந்தாள் மண்டைக்காட்டம்மா என்றும் மக்களிடையே பேச்சு வழக்கும் உண்டு. இருவருமே சகோதரிகள் என்பது ஐதீகம். கடலாடும் மீனவர்களின் குலதெய்வமாகவும் காக்கும் அன்னையாகவும் விளங்கியவள் இந்த தேவி. இரு அம்மனையும் அனைத்து மக்களும் வழிபட்டு வந்தனர். ஆனால் மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட போது இந்த கோவிலும் அம்மன் சிலையும் அந்த நாள் வரை அதனை வழிபட்ட மக்களாலேயே அடித்துடைத்து அழிக்கப்பட்டது. அங்கே கிறிஸ்தவ ஆலயம் எழுப்பப்பட்டது. இதனை குறித்து 'புனித' சேவியரே ரோமாபுரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்: "அவர்களது ஞான ஸ்நானத்திற்கு பிறகு புதிய கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது மனைவிகளையும் குடும்பத்தவரையும் அழைத்துக்கொண்டு வந்து ஞான ஸ்நானம் பெறுவார்கள். அனைவரும் ஞானஸ்நானம் பெற்ற பிறகு நான் அவர்களது கோவில்களை உடைக்க உத்தரவிடுவேன். அவர்களது சிலைகள் அடித்து நொறுக்கப்படும். தாங்கள் வழிபட்ட கடவுள்களின் சிலைகளை அவர்களே தங்கள் கைகளால் அடித்து நொறுக்கிய போது எனது மனம் அடைந்த பேரானந்தத்தை உங்களுக்கு என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது." (ஜனவரி 27 1545 எழுதிய கடிதம்) ஆக இன்றைக்கும் வயது மூத்த இந்துக்கள் அங்கு அம்மன் கோவில் இருந்த நினைவினை தங்கள் மூப்பர்களிடமிருந்து பெற்று தக்க வைத்துள்ளார்கள். எனவே இன்று புதூர் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் இருக்கும் இடத்தினை பார்த்து அவர்கள் தாம் இழந்த அம்மனை - மண்டைக்காட்டு பகவதியின் சகோதரியை வேதனையுடன் நினைவு கூர்வர். இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு இந்துக்களின் வேதனையை வேடிக்கையாக திரித்து ஜோ எழுதுகிறார் 'மக்கள் மனதில் மேரிமாதாவும் மண்டைக்காட்டு பகவதி அம்மனும் சகோதரிகளாக வாழ்ந்தார்கள்' என்று. சத்திய-சந்தர்கள்!


இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலேயே தங்கள் வழிபாட்டுத்தலங்களை வேண்டுமென்றே கட்டுவதும் அதன் மூலம் கலவரம் உண்டாக்குவதும் கிறிஸ்த மிசிநரிகள் திட்டமிட்டு செய்துவரும் பல்லாண்டுகால விசமத்தனமாகும். இந்த வழிபாட்டுரிமை மீறலை, வெளிநாட்டு பண உதவியுடன் செய்யப்படும் இந்த பட்டவர்த்தனமான ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் இந்துக்கள். இதனால் தொடர்ந்து மதமோதல்கள் ஏற்பட்டு வந்த சூழலில் அரசாங்கமே கூட ஒரு சமயத்தவரின் ஆலயத்துக்கு அருகில் பிற சமயத்தவர் தங்கள் வழிபாட்டுத்தலங்களை கட்டுவதோ அல்லது பிரச்சாரங்களை செய்வதோ கூடாது என ஆணை பிறப்பித்தது. (GO Ms.No 2 4-1-1948 Dis.No 968/48) ஆனால் இந்த அரசு ஆணைகளை துளியும் சட்டை செய்யாமல் இந்துக்கள் மண்டைக்காட்டம்மனை ஆராட்டுக்கு எடுத்து செல்லும் பாதையில் குருசடி 1971 இல் உருவாக்கப்பட்டது. அதிலிருந்தே சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் நிலை ஏற்பட்டது. ஆனால் இது மண்டைக்காட்டுக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல. குமரிமாவட்டமெங்கும் இந்த பிரச்சனை இருந்தது. உதாரணமாக தக்கலை மாவட்டம் கரைக்கண்டார்கோணத்தில் 1978 ஆம் ஆண்டு (அன்றைய மதிப்பீட்டில்) பல இலட்சம் செலவில் ஒரு பிரம்மாண்ட கத்தோலிக்க சர்ச் கட்டப்படவிருந்தது. இதற்கு உள்ளூர் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். (ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி எல்லாம் அப்போது அங்கு கிடையாது. உள்ளூர் இந்துக்கள் அவ்வளவுதான்) இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அதனைக் குறித்து விசாரிக்க கல்குளம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். 4-1-1978 (B2 4269077) தாசில்தார் ஆர்.டி.ஓவுக்கு அனுப்பிய அறிக்கை மிசிநரிகள் தங்கள் சர்ச்சகளை கட்ட தேர்ந்தெடுக்கும் கலவர-வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக்குகிறது:
"The site proposed for the construction of the Church at Manali (Karaikandarkonam) is on the southernside of Manali-Mekkamandapam road and at the distance of 50 feet from the main road...My enquiry reveals that the inhabitants of the locality are predominantly Hindus. There are places of worship for them like Narayanaswamy Temple at a distance of 150 feet and a Esakiamman temple at a distance of 250 feet from the proposed site. There is a place of worship for Esakkiamman just opposite to the proposed site which is only at a distance of 15 feet. There are Puja ceremonies every Tues day and Friday every week. A portion of the proposed site is covered by Temple Mayanam which are claimed to be Hindu ancestors' tombs living near and around the place selected for the Church site."


இந்த கிறிஸ்தவ மிசிநரி அடாவடித்தனத்தின் விளைவாக வகுப்பு மோதல்களை உருவாக்கும் விதத்தில் அதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வேறு சில கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் (சபை பாகுபாடு இல்லாமல்) இவை:


  • வில்லுக்குறி ரோடோர இந்து கோவிலுக்கு எதிரே குருசடி
  • அதங்கோடு மாயகிருஸ்ணசாமி கோவிலுக்கு எதிரே பெந்தகோஸ்தே ஜெபப்பிரை
  • கொன்னக்குடிவிளை பூர்விக இந்து கோவிலுக்கு எதிரே சர்ச்

இப்படி எத்தனை எத்தனையோ!

[மண்டைக்காடு கலவரங்கம்: பின்னணியும் உண்மையும் இன்னும் வரும்]

Monday, April 23, 2007

மண்டைக்காடு கலவரத்தின் முன்னோடி நிகழ்ச்சிகள்

மா.சிவகுமார் போன்றவர்கள் அன்றைய குமரிமாவட்ட சூழல் குறித்து சொல்லும் பொய்களுக்கு அப்பால் எவ்விதத்தில் அன்றைய இந்துக்கள் குமரிமாவட்டத்தில் வாழ்ந்தார்கள், குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து வசதி குறைவான தாழ்த்தப்பட்ட சமுதாய இந்துக்கள், மதம்மாற மறுத்தபோது எத்தகைய அவமானத்துக்கும் வன்முறைக்கும் ஆளானர்கள் என்பதன் வலியை உணருவது மிகவும் கடினம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். கோகட் கலவரத்தில் இஸ்லாமியர்கள் இந்து பெண்களுக்கு செய்த படுபாதக செயல்களை அறிந்தபோது "இந்துக்களிடம் முஸ்லீம்களை நம்புங்கள் என்றேனே இனி இந்துக்களுக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்." என கண்ணீர் விட்டார் மகாத்மா காந்தி. ஆனால் இதோ நம் இணைய 'காந்தியவாதி' கூறுகிறார்: "என்னிடம் பேசும் பாகிஸ்தானி நன்றாக சிரிக்கிறான். அப்போது நான் ஏன் பாகிஸ்தானி இந்துக்களூக்காக கவலைப்பட வேண்டும்?"
1982 இல் மண்டைக்காட்டில் நிகழ்ந்த கலவரத்துக்கு பல நிகழ்ச்சிகள் அதற்கு முன்னரே கட்டியம் கூற ஆரம்பித்துவிட்டன. குமரி மாவட்ட காவல்துறைகளில் இந்துக்கள் தங்கள் வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதை கூறும் புகார்கள் குவிந்திருந்தன. இவை இயக்கம் சார்ந்த இந்துக்களால் அளிக்கப்பட்டவை அல்ல. இவை சாதாரண இந்துக்கள் தமது மதத்தினை பின்பற்ற முடியாத அளவில் தாக்கப்பட்ட போது அவமானப்படுத்தப்பட்ட போது அளித்த அவல சான்றிதழ்கள். இவர்கள் எவருமே 1982க்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பினையே கேள்விப்பட்டதில்லை. இந்துக்களுக்கு என்று பேச ஒரு அமைப்பு இருக்கிறது என்று தெரியாதவர்கள். மேலும் இந்த புகார்களை கொடுத்தவர்கள் மேல்சாதி என அழைக்கப்படுபவர்கள் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள். தாக்கப்பட்ட கோவில்கள், உடைத்தெறியப்பட்ட வழிபாட்டுத்தலங்களின் பூசாரித்துவம் பிராம்மணர்களுடையதும் இல்லை. ஆனால் இவைதான் மதமாற்றத்துக்கு தடையாக கிறிஸ்தவ மிசிநரிகளால் கண்டறியப்பட்டன. 'பிற மத கோவில்கள் நாசமடைந்து உண்மைத்தேவனான ஏசுவின் வழிபாட்டுத்தலமே செழித்தோங்க வேண்டும்' என்கிற முன்னணி கிறிஸ்தவ பிரச்சாரகனின் வார்த்தைகளை செயல்படுத்த முற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பில் ஒரு சிறிய துளி (proverbial tip of the ice berg) நீங்கள் கீழே காண இருக்கும் பட்டியல்:
12-1-1980: மருதூர்குறிச்சி சாஸ்தா கோவில் (தேவசம்போர்டுடன் இணைக்கப்பட்டது) கணபதி, நாகர் சிலைகள் உடைப்பு
1980-டிசம்பர்: நாராயணசாமி கோவில் திருவிழாவில் கல்லெறி தாக்குதல்
8-1-1981: காப்பிக்காட்டுவிளை மயிலாடும் பாறை நாகர் சிலைகள் உடைக்கப்பட்டு சிலுவை நடப்பட்டது. பின்னர் ஊர்மக்கள் அந்த சிலுவையை அமைதியாக மாற்றிவிட்டு நாகர்சிலைகளை மீள் பிரதிஷ்டை செய்தனர்,
21-1-1981: வில்லுக்குறி பஞ்சாயத்து பாறையடிக்கிராமம்: பத்திரக்காளி அம்மன் கோவில் திருவிழா நடக்கக்கூடாது என கிறிஸ்தவர்கள் எடுத்துச்சென்ற பொருட்களை கிறிஸ்தவர்களிடம் சமாதானம் பேசி அன்று காவல்துறை மீட்டது.
7-2-1981: கண்ணமங்கலம் கிராமம் கிருஷ்ணன் கோவில் பிள்ளையார் சிலை உடைப்பு
13-2-1981: குழித்துறை கல்லுக்கட்டி: கோவில் கிருஷ்ண விக்கிரகம் உடைப்பு
8-12-1981: பருத்திக்காட்டுவிளை கண்ணப்பச்சி கோவில் கச்சேரி மேடை தாக்குதல்: (MDI 1199 என்கிற காரில் வந்த கிறிஸ்தவர்கள் தலைமை தாங்க தாக்குதல்)
26-12-1981: வழிக்கலம்பாட்டு சிற்றூரில் வாழும் 50 சிறுபான்மை இந்து குடும்பங்கள் விரட்டியடிப்பு
27-12-1981: போலிஸ் பாதுகாப்புடன் இந்துக்கள் மீண்டும் ஊருக்குள் வந்த போது போலிஸ் முன்னாலேயே இந்துக்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையே நிலமை சரியாகும் வரை ஊருக்குள் வரவேண்டாம் என அறிவுரை கூறிய அவலநிலை.
26-12-1981 : மருவூர்க்கோணம் சாஸ்தாகோவில் நாகர் திருவுருவங்கள் உடைப்பு
ஒசரவிளை தலித் காலனியில் மதம்மாற மறுத்த தலித் பெண்மணி திருமதி வனவாள் அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அளித்த மனுவில் கூறுகிறார்:
"குளத்தில் குளிக்கும் போது தொல்லை தருகிறார்கள். வீட்டு வாசலில் கோலம் போடுவது கல்லெறிகிறார்கள். கிறிஸ்தவர்கள் கூட்டு பஜனை பாடி வரும் போது வீட்டு முன்னால் நின்று உரக்க கத்தி தொல்லை தருகிறார்கள். என் குழந்தைகள் வெளியே செல்லும்போதும் தொல்லை தருகிறார்கள்." இது 1982 ஜனவரியில் அளிக்கப்பட்டது. அதே ஆண்டு சுண்டபற்றி விளை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி தங்கராஜ் பள்ளியில் பைபிள் விநியோகம் செய்ததற்காக மாற்றம் பெறுகிறார்.

இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அடிவாங்கி மானமிழந்து இந்து என சொல்லவே வெட்கி மதமாறாவிட்டால் மானமுடைய வாழ்க்கை இல்லை எனும் நிலையில் குமரிமாவட்ட இந்து தள்ளப்பட்டான். நாகர்கோவில் டவுணுக்குள் மேல்சாதி இந்துக்கள் சிலருக்கு இந்த வலி புரியாது போவதில் அதிசயமில்லை. மூன்று வேளை சாப்பாடும், தன் பாதுகாப்புக்காக வேறொருவன் எங்கோ அடிபடும் சூழலும் அமைந்திருக்கும் போது காந்தியம் பேசலாம். கிறிஸ்தவ வெறியனால் ஆடையிழந்து பகவதி சரணம் என ஓடி தற்கொலைக்கு முயற்சித்த பெண் தன் தாயாராகவோ சகோதரியாகவோ இல்லாத நிலையில் வசதியாக சாய்ந்து கொண்டு காந்தியம் பேசலாம். தன் சொந்த முன்னோருக்கு படைத்த படையலை "பேய்க்கு வச்சத சாப்பிடமாட்டேன்" என பாதிரி மூளைச்சலவையால் தன் மகள் கூற அதிர்ந்து நிற்கும் தலித் தந்தையாக ஒருவர் இல்லாத போது போலி-காந்தியம் தாராளமாக பேசலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட இந்துவுக்கு -நேற்றுவரை தன் சமயத்தவராலேயே தாழ்த்தப்பட்டு இன்று பிற சமயத்தவரால் தாக்கப்படும் இந்துவுக்கு- அன்றும் இன்றும் ஆதரவு அளித்த சக்தியின் பெயர் இந்துத்துவம்.

இது குறித்து மேலும் எழுதுவேன்

மார்க்சிய காரிருளில் ரஷியாவுக்கு ஒளி அளித்த இந்து தருமம்

ஒரு காலத்தில் எங்கள் பள்ளிக்கூடத்தில் நியூ செஞ்சரிகாரர்கள் புத்தக கண்காட்சி போடுவார்கள். மிகவும் மலிவாக பலதுறை அறிவியல் குறித்த புத்தகங்கள் கிடைக்கும். அவற்றில் நான் வாங்கிய நூல்கள் பெரும்பாலானவை மிர் பதிப்பகத்தார் புத்தகங்கள். அதிலெல்லாம் முன்னுரையில் எப்படி மார்க்சியம் அறிவியலாளர்களை வழி நடத்தி செல்கிறது என்பதைக் குறித்து போட்டிருக்கும். அது போலவே என் தந்தையாரின் சேகரிப்பில் இருந்த சோவியத் இலக்கிய நூல்களை வாசிக்க ஆரம்பித்த போது அதிலும் எப்படி மார்க்சியம் படைப்பாளிகளுக்கு ஊக்க ஒளி அளிக்கிறது என விவரிக்கப்பட்டிருந்தது. 1988களில் எங்கள் வீட்டுக்கு வரும் சோவியத் இதழ்களில் ஒரு மாற்றம் தெரிய ஆரம்பித்தது. மார்க்சியம் அல்லாத இன்ன பிற ஒளிகளும் ரஷிய கலைஞர்களையும் அறிவியலாளர்களையும் வழிநடத்தியிருக்கிறது என்கிற சமாச்சாரம் புலப்பட்டது அப்போதுதான். அத்துடன் கூட மார்க்சியம் ஒரு அழிவு சித்தாந்தமாக விளங்கியிருக்கக் கூடும் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரலானது.


க்ளாஸ்னாஸ்ட்டும் பெரிஸ்தோரோக்காவும் சோவியத் மாயா பிம்பத்தை சிறிது சிறிதாக கிழிக்க ஆரம்பித்தன. அங்கு தெரிய ஆரம்பித்த நிஜங்கள் பிரச்சார பிம்பங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டன. சோவியத் யூனியனின் அரசு இயந்திரமும் அதன் வேர்கள் பதித்திருந்த சித்தாந்த படுகையும் மானுடத்தினை சிநேகிப்பவை அல்ல என்பது தெளிவாயிற்று. சித்தாந்த எதிர்ப்புடைய அறிவியலாளர்களும் இலக்கிய படைப்பாளிகளும் மிகக் கொடூரமாக களையெடுக்கப்பட்டிருப்பது ஆவண ஆதாரங்களுடன் வெளிப்பட ஆரம்பித்தது. குடும்பங்கள் கொலைச் செய்யப் பட்டிருப்பதுவும், நாசிகளுக்கு இணையான நாசி முகாம்களை விட அதிக எண்ணிக்கையும் திறமையும் வாய்ந்த சைபீரிய அடிமை முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதுவும், லட்சக் கணக்கான மக்களை துடைத்தெடுத்த பஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மார்க்சிய காரிருளில் ரஷ்ய கலை மற்றும் அறிவியல் புலங்களைச் சார்ந்த சில மிகச் சிறந்த மிக உயர்ந்த படைப்பாளிகளுக்கு பாரதிய மரபின் தாக்கமும் வழிகாட்டுதலும் இருந்தது என்னும் அதிசயமான உண்மையும் வெளிப்பட்டது. எந்த மரபினை கார்ல் மார்க்ஸ் 'குரங்கையும் பசுவையும் வணங்கும் காட்டுமிராண்டி நிலைக்கு மனிதர்களை கீழே தள்ளிய பண்பாடு ' என குறிப்பிட்டாரோ அந்த மரபின் ஞான ஒளிக் கீற்றுகள் (மார்க்சியம் உருவாக்கிய உயிர் உறிஞ்சும் சோவியத் அரசின் காலத்தில்) ரஷிய அறிவியலாளர்களுள் மிகச்சிறந்தவர்களுக்கு சமய சஞ்சீவினி யாயிற்று.



உதாரணமாக விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி (1863-1945). பூமி ஓர் அதி-உயிர் செயலாக்கமாக விளங்குவதை முதன்முதலாக புவிவேதியியல் மூலம் அவதானித்தவர் இவரே. உயிர் கோளத்தின் புவியியல் தாக்கங்கள் அனைத்து வரையறை கோடுகளையும் தாண்டி இயைந்தியங்குவதை முதன்முதலாக ஆய்வுகள் மூலம் நிறுவியவரும் இவரே. தன் கால அறிவியலின் சாத்திய கூறுகளை மீறிய தொலை நோக்கு பார்வை அவருக்கு இருந்தது. தெயில் தி சார்டினின் 'நியூஸ்பியர் ' '(கூட்டு)மன கோளம் ' (noosphere) எனும் கருத்தாக்கத்தை அறிவியலாளரிடையே இவரே பிரபலப்படுத்தினார். இன்றைய உயிரியல் மற்றும் சுற்றுப்புற சூழலியலில் முக்கிய கருதுகோளாக அறியப்படும் 'கயா' (Gaia) கோட்பாட்டின் முன்னோடியாக விளங்கியவர் அவரே. அக்டோ பர் கலகத்துக்கு 3 வருடங்களுக்கு பின் 1920 இல் அவரது நாள் குறிப்பில் பின் வருமாறு எழுதினார்,
'வாஷ்ரோவின் படைப்பில் நான் தெளிவாக (கீவ்வின் ஜில்யாரோவ்ஸ்கியினை வாசிக்கும் போது உணர்வது போலவே) பாரதிய தத்துவ மரபு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என கருதுகிறேன். இறை மற்றும் ஆத்மா குறித்த வினாக்களை பொறுத்தவரையில் யூத கிறிஸ்தவ மரபுகளை ஒட்டிய நம் சிந்தனைகளைக் காட்டிலும் இந்துக்களின் தத்துவ சமய அறிவு நமக்கு அதிக தெளிவு தரும். '
மீண்டும் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் மானுடத்திற்கு வேத உபநிஷதங்களின் முக்கியத்துவம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்,
'இக்கடிதத்துடன் நான் வியக்கத்தக்க ரிக் வேத ஸ்லோகம் ஒன்றினை அனுப்புகிறேன். டெய்சனின் சந்தத்துடனான மொழிபெயர்ப்பு. மூலத்துடன் அம் மொழிபெயர்ப்பு ஒத்துள்ளதாகவே கருதுகிறேன்.இது ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் சாக்ரட்டாஸ் மற்றும் அனைத்து கிரேக்க அறிவியல் தத்துவங்களும் தோன்றுவதற்கு வெகு பல காலமுன்னே வாழ்ந்த ஒரு கவியின் வார்த்தைகள். ஆனால் இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் அவை ஒலிப்பதை பாருங்கள். நித்தியத்துவத்துக்குள் எகிறிப் பாய்வதாகவே இந்த ஸ்லோகத்தை நான் உணர்கிறேன். ஏனெனில் (பிரபஞ்சத்தின்) சிருஷ்டி கர்த்தரின் இருப்பு அல்லது தேவை குறித்து கேள்வி எழுப்புவதை பாருங்கள். (அதே சமயம்) பிரபஞ்ச இருப்பின் வேர்கள் பிறப்பும் இறப்புமற்ற அறிந்து விளக்கவொண்ணாத தன்மையுடன் உணரப்படுகின்றன, இதயத்தின் தேடலில் அன்பின் உணர்வில். '
ரஷியவியலாளர் அலெக்சாண்டர் சென்கிவிச்சின் வார்த்தைகளில்: 'உலக மக்கள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களின் மனிதத்துவத்தை உயர்த்தும் மதிப்பீடுகளை காக்கும் ஆற்றலை பழம் பாரதிய ஞான மரபினை அறிதல் மூலம் பெற முடியும் என வெர்னாட்ஸ்கி குறிப்பிட்டார்.' தனது வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் வெர்னாட்ஸ்கி சுவாமி விவேகானந்தரின் நூல்களில் ஆழ்ந்துவிட்டார்.


நாஸிகளின் படைகள் சோவியத் யூனியனை தாக்கிய போது மார்க்சியம் படையெடுப்பாளனை எதிர்க்க ரஷியர்களுக்கு வலுவூட்டவில்லை. யதார்த்த நிலைகளை அறியாத ஸ்டாலின் செம்படையினை வேண்டிய அளவு நவீனப்படுத்தவில்லை. மேலும் நாஸிகள் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தன் நண்பர்கள் என்றே ஸ்டாலின் நம்பினார். எனவே நாஸி படையெடுப்பின் போது ரஷ்யர்கள் மார்க்சியத்தின் மீது இகழ்ச்சியான வெறுப்படைந்ததில் வியப்பில்லை. அப்போது அவர்களுக்கு வீறு ஊட்டியது ரஷ்ய தேசியவாதம் தான்.


அதே சமயத்தில்தான் புகழ்பெற்ற ரஷ்ய இந்தியவியலாளரான அலெக்ஸி பாரான்னிக்கோவ், துளசி தாஸ் மகராஜின் புனித ராம சரித மானஸை ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார். ராம காதையின் ஞானமும் தன் மக்களின் அதர்மத்துக்கு எதிரான போராட்டமும் அவருக்கு எத்தகைய உத்வேகத்தை அளித்திருக்கும் என கூற வேண்டியதில்லை. பல ரஷிய கவிஞர்களும் கலைஞர்களும் பாரதிய ஞான மரபினை தம் போராட்டங்கள் நிறைந்த கடின வாழ்க்கையில் ஆறுதலும் உத்வேகமும் அளிக்கும் தாயாக பார்த்தனர். குறிப்பாக ஸ்டாலினின் களையெடுப்புக் காலத்தில் பாரதாம்பிகை வலியால் துடித்தேங்கும் ரஷியர்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் ஜகத்ஜனனியாகவே விளங்கினாள்.


நிகோலாய் குமிலோவ் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ரஷிய கவிஞர்களில் ஒருவர். கைது செய்யப்பட்டு மார்க்சிய களையெடுப்பில் 1921 இல் கொல்லப்பட்டவர்.



'பாரத பூமி எனும் புனித அற்புதம்
என் மனதெங்கும் ஞான வெள்ளத்தை நிரப்புகிறது '

என பாடினார் அவர். தன் 'தொல் நினைவு ' (Protomemory) எனும் பாடலில் அவர் தன்னை தன் முந்தைய பிறவியில் பாரத அன்னையின் புத்திரனாகவே கருதுகிறார்.



அமரவெல்லா இயக்க ஓவியக் கலைஞர்கள்

ரஷிய ஓவிய இயக்கங்களில் 'அமரவெல்லா'(Amaravella) இயக்கம் முக்கியமானது. சோவியத்களால் மிகவும் முயன்றும் இவ்வியக்கத்தின் படைப்பாக்கத்தின் கழுத்தை நெறிக்க முடியவில்லை. அக்டோ பர் கலகத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி இவ்வியக்கம் மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டு வந்தது. எனினும் 1917க்கு பின் ஓவிய கண்காட்சிகள் முழுமையாக தடைப்படுத்தப்பட்டன. 'அனுமதிக்கப்பட்ட ' புலங்களிலேயே ஓவியங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பது தீட்டப்பட்ட ஓவியங்களும் ஓவியர்களும் சூரிய ஒளியையும் பொதுமக்கள் கண்களையும் சந்திக்க முன் நிபந்தனையாக இருந்தது. 1960களின் இறுதியில்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் சில கண்காட்சிகள் அனுமதிக்கப்பட்டன. 1980 களின் இறுதியில்தான் முழுமையான தடை நீக்கம் இவ்வோவியங்களுக்கு வழங்கப்பட்டது. அமரவெல்லா ஓவிய இயக்கத்தை உருவாக்கிய பத்தேயேவ் (1891-1971) பிரபஞ்ச வெளியால் மிகவும் கவரப்பட்டவர். பிரக்ஞையே அனைத்துமாகிறது என கருதிய இவர் ஓவியத்தை பரிபூரணத்துவம் நோக்கி ஓவியனை நகர்த்தும் ஆன்மீக சாதனையாகவே கருதினார். கியூபிஸத்தை மிகவும் வரவேற்றார் எனினும் தன் தனித்துவத்தை கைவிடவில்லை.

பத்தேயேவின் ஓவியம்: மற்றொரு கிரகத்தின் பிரகாசிக்கும் வான் மண்டலம்

1917 இல் அவர் பின்வருமாறு எழுதினார்: 'கியூபிஸம், உயர்த்துவம், பாரதிய யோகம், நவீன அறிவியல் தரும் பார்வை இவை அனைத்தும் நம்மை பிரபஞ்சம் தழுவிய ஆன்ம உணர்வு நோக்கி நகர்த்துகின்றன.' பத்தேயேவின் முக்கிய சீடர் தனது பதினேழாவது வயதில் அவருடன் இணைந்த சிம்ர்னோவ். பின்னர் 1920களில் ருனா எனும் புனைப்பெயர் உடைய ப்ஷிசெட்காயா எனும் பெண் ஓவியரும் இணைந்தார். பாரதிய ஞான மரபில் பெரும் ஆர்வம் கொண்டவர் இவர்.

இச்சிறிய வட்டத்துடன் தொடர்பு கொண்ட மற்றொரு ஓவியர் ரோயிரிச். 1926 இல் சிமர்னோவ் ரோயிரிச்சை சந்தித்தார். பாரதத்தின் ஆன்ம ஞான மரபுகளில் தாம் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதை ரோயிரிச்சின் மனைவியான எலெனா ரோயிரிச்சிடம் சிமர்னோவ் தெரிவித்தார். இந்த சந்திப்பினை தொடர்ந்து 'அமரவெல்லா ' இயக்கத்தின் வழிகாட்டியாக 'ஜீவிக்கும் தர்மத்தின் போதனை' எனும் பிரம்ம ஞான நூல் பயன்பட்டது. ஓவியம் மூலம் 'பிரம்மத்தின் சுவாச லயமாக பிரபஞ்சத்தின் இருப்பை உணர்தல்' என்பதே இந்த இயக்கத்தின் அடிநாதமாயிற்று. இச்சிறு வட்டம் தம் ஓவிய நெருப்பினை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டியதாயிற்று. பாட்டாளி வர்க்க சுவர்க்க பூமியில் பத்தேயேவ் கொடுமையான வறுமை வாட்ட இறந்தார். இத்தனைக்கும் அமரவெல்லா ஓவியங்களுக்கு வெளிநாடுகளில் பெரும் மதிப்பு இருந்தது. 1919 இல் ரோயிரிச் 64 கவிதைகள் அடங்கிய தொகுப்பினை , மோர்யாவின் மலர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டார். ரோயிரிச்சின் ஆன்மிக உட்பயணத்தின் வெளிப்பாடுகளாக அவை அமைந்தன. இரினா கார்ட்டன் ரோயிரிச்சின் ஆன்மிக கருத்தியல் குறித்து பின்வருமாறு கூறுகிறார்,

'ஆதி அந்தமற்ற பிரபஞ்சமாக கணக்கற்ற சுழற்சிகளில் வெளிப்பட்டு அழியும், பருப்பொருட்களிலும் செயலாக்கங்களிலும் துடிக்கும் இறை சக்தி எனும் இந்து தத்துவமே அவரது ஆன்மீகத்தின் அடிப்படை'



நிகோலஸ் ரோயிரிச்

ரோயிரிச் தன் கவிதை ஒன்றில் கூறுகிறார்,
'சகோதரா நிலையற்ற மாற்றங்களை
கைவிட்டு வா
நேரமிருக்காது பின் நமக்கு
நம் சிந்தனைகள் மாறா பெரும் பொருளை பற்றி நிற்க
நித்தியத்துவத்தை நோக்கி செல்ல'


விரைவில் ஸ்டாலினிய களையெடுப்பு தொடங்கியது. நித்தியத்துவத்தின் அமர தேசமாம் பாரதத்தை ரோயிரிச் கண்டடைந்தார். ரோயிரிச்சின் பெரும் சாதனையில் ஒன்று அமெரிக்காவில் அவரால் உருவாக்கப்பட்டு 1935 இல் அமெரிக்க சார்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ரோயிரிச் ஒப்பந்தம். போர் காலங்களில் பகை நாடுகளின் அறிவாலயங்கள் மற்றும் கலாச்சாரச் சின்னங்களை தாக்குவதில்லை எனும் இந்த ஒப்பந்தம் இன்று உலக நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாரதத்தினை தன் நிரந்தர தாயகமாக மாற்றிக் கொண்ட ரோயிரிச் தன்னால் உருவாக்கப்பட்ட யோக முறைக்கு அக்னி யோகம் என வேத தெய்வத்தின் பெயரினை அளித்தார். முக்கடலும் சூழ தாமரையின் இதழொப்பும் நிலப்பரப்பில் அமர்ந்து வானோர் தொழுதேத்தும் பெண் தெய்வத்தினை ஜகன்மாதாவாக கண்டார் ரோயிரிச். கீழே ரோயிரிச்சின் சில ஓவியங்கள்:


கிருஷ்ணர்


அர்ஜுனர்


இமாலயத்தின் மகா ஆன்மா


தாமரை


ஜகத்ஜனனி (Mother of the world)



ரஷிய அறிவியல் புனைகதைகளின் பிதாமகரும் உலகப்புகழ் பெற்ற தொல்லுயிரியலாளருமான இவான் அந்தோனோவிச் யெஃபிரமோவ் (1907-1972) அதிகார வட்ட மார்க்சிய இலக்கிய விமர்சகர்களின் கண்டனதிற்கு ஆளானவர். அழகியலுக்கு உயிரியல் வேர்கள் இருக்கலாம் எனும் இவரது கருத்து சோவியத் மார்க்சிய இலக்கிய விமர்சகர்களால் 'வக்கிரம் கொண்டது' என கருதப்பட்டது. வேதகால பாரதமும் கிறித்தவம் வெல்லாத 'பாகன் ' (Pagan) ரஷியாவும் அவரது இரு பெரும் காதல்கள். உலகப்புகழ் பெற்ற ரஷிய அறிவியல் புனை நாவலான 'அண்ட்ரோமிடா காலக்ஸி 'யில் மனித குலம் முதன் முதலாக நட்சத்திர மண்டலங்களுக்கிடையேயான விண்கலனை அனுப்புகிறது. அக்கலத்தின் பெயர் 'தந்த்ரா '! அவர் பாரதத்திற்கு ஒருமுறை கூட வந்ததில்லை எனினும் அதன் ஆலயங்கள் குறித்து மிக தெளிவான அறிவுடன் இருந்தார். சமஸ்கிருத புலமையும் பெளத்தம் குறித்த தெளிவான அறிவும் அவர் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்தவை. மார்க்சிய, பின்நவீனத்துவ சித்தாந்தங்கள் போன்றவையோ ஓடும் நதியில் தோன்றி மறையும் காற்றுக்குமிழை ஒத்தவை. பாரதத்தின் வேதாந்த ஞான மரபோ வற்றாத ஜீவ நதியாக காலம் காலமாக வாழ்வளிக்கிறது கங்கையையும் வோல்காவையும் போல உலகனைத்துக்கும் ஒளியாக.


பயன்படுத்தப்பட்டவை:

1. Soviet Literature (No.8 (497),1989) 'A pilgrimage to the world of immortal images ', அலெக்சாண்டர் சென்கிவிச் மூல ரஷிய கட்டுரையின் ஆங்கில மொழி பெயர்ப்பு: அலெக்சாண்டர் மிக்கேய்வ்.
2. Science in the USSR, (No. 2 March-April,1990), 'The Amaravella Group ', பேரா.D.போஸ்பொலோவ்.
3. Science in the USSR, (No.4 July-August,1990), 'The Yeferemov Phenomenon ', ஐ.சோரிச்.
4. http://www.roerich.org

(இக்கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திண்ணையில் வெளியானது. தற்போது சிறிது அதிக தகவல்களுடனும் ஓவியங்களுடனும் வெளியிடப்படுகிறது.)

Sunday, April 22, 2007

ஏசுதாஸ் குருவாயூர் கோவில் விவகாரம்



இந்துத்துவத்தின் நிலைபாடு என்ன?


சில நாட்களுக்கு முன்னால் நண்பன் என்பவர் ஒரு பதிவை போட்டிருந்தார். நான் ஒரிசாவில் ஒரு அமெரிக்கர் நுழைந்ததற்காக பூரி ஜகன்னாதர் ஆலய நிர்வாகத்தின் தவறான எதிர்வினையை சவூதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருந்ததற்கு ஏதோ நான் ஒரிசாவில் நிகழ்ந்ததை ஏற்றுக்கொண்டதாக திரித்து கூறி 'இதுதான் இந்துத்துவம்' எனக்கூறி இருந்தார். ஆனால் பழமைவாதிகளின் நிலைப்பாட்டுடன் இந்துத்துவத்தை குழப்புவது பொதுவாகவே நண்பன் முதல் மா.சிவகுமார் போன்ற பெரிய மனிதர்களுக்கு கைவைந்த கலை. இதோ இப்போது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது ஏசுதாஸின் பெயரை வைத்து மற்றொரு லீலை. இந்துத்துவத்தின் நிலைப்பாட்டிற்கு பிறகு வருகிறேன் அதற்கு முன்னர் என்னுடைய நிலைப்பாட்டினை தெளிவாக்கிவிடுகிறேன்.


காங்கிரஸ் ஓடுகாலி கருணாகரனை கோவிலுக்குள் விட்டு பாவம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் குருவாயூர் தேவஸ்தானம் ஏசுதாஸை உள்ளே விட்டால் (...உள்ளே விட்டால் என்ன விட்டால்..நியாயப்படி இந்துக்கள் ஒருங்கிணைந்து ஏசுதாஸை தோளில் தூக்கி குருவாயூர் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்பேன்) செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம். இதையே மீரா ஜாஸ்மின் விசயத்திலும் கூறுவேன். இந்துக்களுக்கு துரோகம் செய்த ஜெயலலிதாவை கோவிலுக்குள் விட்டு பாவம் செய்வதைக்காட்டிலும் நமது தருமத்தின் மீது இத்தனை பாசம் கொண்ட உண்மையான இறையன்பு கொண்ட மீரா ஜாஸ்மின் போன்றவர்களை கோவிலுக்குள் விடுவதால் புண்ணியம் சேரும். (ஜாஸ்மின் மேரி ஜோஸப்பாக இருந்து மீரா ஜாஸ்மினாக மாறிய மீரா ஜாஸ்மினுக்கு எதிராக கோவில் நிர்வாகம் எடுத்த நிலைப்பாட்டினை எதிர்க்கும் இந்துக்களின் ஆன்லைன் விண்ணப்பம் இங்கே உள்ளது: http://www.petitiononline.com/4meera/petition.html)


சரி இனி இந்துத்துவத்தின் நிலைபாடு என்ன? ஏப்ரலில் இந்த பிரச்சனை வருவதற்கு முன்னரே ஜனவரியிலேயே பாஜக ஏசுதாசை குருவாயூர் கோவிலுக்குள் விட வேண்டும் என கூறிவிட்டது!

Labels: , ,

Saturday, April 21, 2007

மண்டைகாடு கலவரமும் மதமாற்ற மோசடியும்

இக்கட்டுரையை எழுதிய நீதியரசர்(ஓய்வு) வேணுகோபால் மண்டைக்காடு கலவரத்தை விசாரிக்க தமிழக அரசு அமைத்த விசாரணை கமிசனுக்கு தலைமை வகித்தவர். திராவிட கழக பின்னணியும் கொண்டவர்.


மண்டைகாடு கலவரங்கள் குறித்த எனது தலைமையிலான விசாரணைக்குழு மதமாற்றங்களை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது. அண்மையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்து (பின்னர் அரசியல் நிர்பந்தங்களால் நீக்கிவிட்ட) கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தினை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள (அன்றைய) விசாரணைக்குழு மதமாற்றத் தடைச்சட்டத்தினை பரிந்துரை செய்யுமாறு தூண்டிய பின்புலத்தையும் சூழலையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


ஒரு சிறுபான்மை சமுதாயம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மை ஆகும் போது அது ஆக்கிரமிப்புத்தன்மையுடனும் வன்மைத்தன்மையுடனும் (millitant), இறுமாப்புடனும் இயங்க ஆரம்பிக்கிறது. அது தனது ஆற்றலை மாநாடுகள் மூலமும் பேரணிகள் மூலமும் காட்ட முனைகிறது. கிறிஸ்தவர்கள் கன்னியாகுமரி 'கன்னி மேரி ' எனவும், நாகர்கோவில் 'நாதர் காயல் ' எனவும் பெயர் மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். இது பெரும்பான்மை சமுதாயத்திற்கு வருத்தத்தையும், நம்பிக்கையின்மையையும், ஐயப்பாட்டையும் உண்டாக்கிற்று இதன் விளைவாக வகுப்புவாத சூழல் உருவாயிற்று. இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. இவ்விசயத்தை ஒவ்வோர் பிரச்சனையாக அணுகலாம்.


அ) அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 ஆவது பிரிவு வழங்கும் ஒருவருக்கு தமது மதத்தினை பரப்பும் உரிமை என்பது கிறிஸ்தவ மிசினரிகளால், இந்து மதத்தினையும் அதன் தேவ-தேவியரையும் வன்முறைத்தனமாக சிறுமைப்படுத்துவதற்கும், இந்து மதத்தினை தவறாக சித்தரிப்பதற்கும் என்பதான மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வழக்கமாக தொடங்கப்பட்டு, சீரழிக்கப்பட்டது (degenerated). இது அதே அளவு மோசமான எதிர்வினைகளை -கிறிஸ்தவ மதத்தின் மீதாக படுமோசமான தாக்குதல் பிரச்சாரத்தை- இந்துக்களிடமிருந்து உருவாக்கியது. இது தொடர்ந்து ஒருவர் மற்றவரது வழிபாட்டு தலங்களை தாக்கவும், அழிக்கவும், அவமானப்படுத்தவும் செய்வதாக வெளியிட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து வெளிப்படையான தாக்குதல்களாகவும் சவால்களாகவும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உருமாறியது. இதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தம் மதத்தினரை வன்முறை கலவரங்களுக்குத் தூண்டும், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இரு மதத்தினரிடையேயும் புழங்கலாயின. மிக மோசமான வார்த்தைகளால் மாற்று மதத்தினரைத் திட்டும் சுவரொட்டிகள் கன்னியாகுமரியில் ஆரம்பித்து இரு சமுதாயத்தினராலும் கட்டுக்கடங்காத ஆவேசத்துடன் தடுப்பாரற்று ஒட்டப்பட்டுவந்தன. இது கடந்த இருவருடங்களாகவே நடைபெற்று வந்து இறுதியில் மிகமோசமான வகுப்புவாத கலவரமாக பெருமளவு வன்முறையுடனும் சூறையாடலுடனும் வெடித்தது.


ஆ. அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் நடந்தது என்பது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அறியப்படாத ஒரு நிகழ்ச்சியாகும். சொத்துக்கள் (வீடுகள், கடைகள், துணிக்கடைகள், தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள்) மிகக்கடுமையாக சூறையாடப்பட்டன. கல்வி நிறுவனங்கள், கான்வெண்ட்கள், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், இந்து ஆலயங்கள் ஆகியவை வன்முறையின் இலக்குகளாயின. கல்லறைத் தோட்டங்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை. வன்முறைக்கெல்லாம் உச்சகட்டமாக மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். இதெல்லாம் மதத்தின் பெயரால் நடந்ததென்பதுதான் கொடுமையான விசயம். சில கிராமங்களில் கிணறுகள் பெட்ரோல், டாசல், மோசமான இரசாயனம் ஊற்றப்பட்டு அதன் நீர் பயன்படுத்தப்பட முடியாமல் ஆனது. பல கிராமங்களில் மக்கள் வசிக்க தலையின் மீதோரு கூரையும் இல்லாத பரிதாபநிலையில் இருந்தனர். வெட்டவெளியில் பொங்கித்தின்றவாறு இருந்த மக்களை பார்க்கவே கொடுமையாக இருந்தது. இக்கொடுமையின் தீவிரத்தன்மையும் வீச்சும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். கிறிஸ்தவர்கள் தங்கள் இழப்புகளை ஒரு கோடி எனக் கணக்கிட்டிருந்தனர். பள்ளந்துறை கிராமத்தில் மட்டுமே கிறிஸ்தவர்கள் ஒன்றரை - இரண்டு கோடி ரூபாய் இழப்பினை சந்தித்திருக்கலாம். மாவட்ட ஆட்சியர் எடுத்த மறுவாழ்வு சீரமைப்பு முயற்சிகளின் மொத்த செலவு பத்து இலட்சம் ரூபாய் ஆகும். கிறிஸ்தவர்கள் தரப்பில் உயிரிழப்பு பத்து ஆகும். இந்துக்கள் தரப்பில் பதினொன்று ஆகும். இரு பக்கங்களிலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் பெரியதாகும். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். அவர்கள் திரும்பவே இல்லை. இருமுறை போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும் மக்கள் உயிரிழந்தனர்.


இ.விசாரணைக் குழு 161 சாட்சியங்களையும், பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட 323 காட்சிப்பொருட்களையும், ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தரப்பினரால் 16 வழக்கறிஞர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட பல வாதங்களையும் ஆராய்ந்த பின்னர் மிகத்தெளிவாக கன்னியாகுமரி மாவட்ட கலவரங்களுக்கு மூலவேர் காரணமாக இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றியமையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுமே காரணம் என தெளிவாக கண்டுரைத்தது. சட்ட ஒழுங்கினைக் கட்டிக்காப்பது மாநில அரசின் பொறுப்பாகும். அரசாங்கம் ஒரு மானுட சோக நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் போது கைகட்டி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாகாது. வருங்காலத்தில் இத்தகைய விரும்பத்தகாத வன்முறைச்சம்பவங்கள் நடக்காமலிருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்ய விசாரணைக் குழு கேட்கப்பட்டபோது, அக்கேள்வி விசாரணைக் குழுவினால் கீழ்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது:


பாகிஸ்தான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகியவை கிறிஸ்தவ மிசினரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்றியுள்ளன. இஸ்ரேல் மதமாற்றத்தினை தடைசெய்துள்ளது. சுவிட்சர்லாந்து ஏசுசபையினரை தடைசெய்துள்ளது. கொலம்பியாவில் கத்தோலிக்கர்களை கத்தோலிக்கரல்லாதவர்கள் மதமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் பெரும்பான்மையாக உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சமுதாய அமைதியையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் குலைப்பதாக காரணம் காட்டி மிசினரிகளின் மதமாற்ற வேலைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. வெனிசூலா அரசாங்கம் மெதாடிஸ்ட் கிறிஸ்தவ சபையினை தடை செய்து மிசினரிகளை வெளியேற்றியுள்ளது. ஸயர் (Zaire) அரசாங்கம் ஆப்பிரிக்க தனித்தன்மையை காப்பாற்ற மிசினரி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தோனேசியாவில் மதத்தினை பரப்பும் உரிமை அளிக்கப்பட்டு அது வகுப்பு ஒற்றுமைக்கு இடராக இருந்த காரணத்தால், இந்தோனேசிய அரசாங்கம் மதமாற்றங்களைத் தடை செய்து மிசினரி நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உலகமெங்கும் இத்தகைய போக்கு காணப்படும் போது இந்த நாட்டில் எவாஞ்சலிக்கல் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சமாக நாம் செய்யக்கூடியது பெருத்த மதமாற்றங்களையும் (mass conversions), மோசடி முயற்சிகள் மூலமும் சட்டவிரோத செயல்பாடுகள் மூலமும் நடக்கும் மதமாற்றங்களை தடைசெய்யலாம்.


திரு. பாலகிருஷ்ணன், ஹிந்துக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், தாம் எழுத்துருவாக சமர்ப்பித்த அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை பெருக்கம் மதமாற்றம் மூலம் நிகழ்வதாகவும் அது மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விசாரணைக் குழுவின் முன்னால் பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை கிறிஸ்தவ மிசினரிகள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகளைக் காட்டுகின்றன. 'கிறிஸ்தவ மிசினரிகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணைக் குழு அறிக்கை: மத்திய பிரதேசம் ', 'கிறிஸ்தவம்: ஒரு அரசியல் பிரச்சினை ' (மேஜர் வேதாந்தம்), விவேகானந்த கேந்திர பிரகாஷனால் வெளியிடப்பட்ட 'கிறிஸ்தவம் ஒரு விமர்சனப் பார்வை ' ஆகியவை இதனை தெளிவாக்குகின்றன. இவை எல்லாம் இந்த நாட்டிலே நடக்கும் மதமாற்றங்கள் நம்பிக்கை, உறுதிப்பாடு, மனமாற்றம், இறை அனுபவம் ஆகியவற்றாலெல்லாம் ஏற்படுகிற மாற்றங்கள் அல்ல என்பதை தெளிவாக்குகின்றன. மாறாக, ஹரிஜனங்கள் மற்றும் வனவாசிகளின் மதமாற்றம் என்பது பெருமளவில் தூண்டுதல், கட்டாயப்படுத்தல், பொருளாதார ஆசைகாட்டல், வசதி வாய்ப்புகளால் ஆசைகாட்டல் ஆகியவை மூலம் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே இலஞ்சத்திற்கே நிகரானவை.


தனி நபரின் மதமாற்றம் என்பது ஒரு விதிவிலக்கே அன்றி வழக்கமல்ல. கடந்த காலங்களில் நடந்த மதமாற்றங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயக் சூழலில் மக்கள் மதமாற்றங்களைக் குறித்து விழிப்படைந்துவிட்டார்கள். இந்துக்களை மற்ற மதங்களுக்கு மாற்ற முயற்சிப்பது சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும்.


இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் இந்துக்களை கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாற்ற முயற்சிப்பது வட்டார பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும், அமைப்புகளையும் குலைக்கும். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் ஆளுமைகளை இழக்கிறார்கள். அது பாரம்பரியத்தில் பிடிப்பில்லாததோர் பிளவினை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. அது சமுதாய அமைப்பினை சிதைத்து கலாச்சார மோதல்களையும், சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளையும், நிலவிவரும் வகுப்பு சமரசத்தையும் குலைக்கிறது. மதமாற்றங்கள் விரிசல்களையும், ஆத்திரத்தையும் உருவாக்கி நியாயமாகவோ அநியாயமாகவோ வகுப்பு-விரோத உணர்ச்சிகளை வளர்க்க வழி கோலுகிறது. இத்தகைய மதமாற்றங்கள் பெருமளவில் நடக்கும் போது கிறிஸ்தவ ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என இந்துக்கள் அஞ்சுகின்றனர். எனவேதான் தேசப்பிதா காந்திஜி 'மதமாற்றம் அது நடக்கும் இடங்களில் ஒரு ஆன்மிகத்தன்மையுடன் நடைபெறவில்லை. அவை வசதிகளுக்காக நடைபெறுகின்றன ' என கூறினார். ஒருமுறை அவர் கூறினார், 'எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்ற முயற்சிகள் அனைத்தையும் தடை செய்வேன். '. இந்து குடும்பங்களுக்குள் ஒரு மிசினரி வருவதென்பது குடும்ப வாழ்க்கையில் கலகத்தையும், ஆடைகள் நடை உடை பாவனைகள் உணவு வழக்கங்கள் ஆகிய அனைத்திலும் ஒரு குழப்பத்தையும் உருவாக்குவதாகும்.


மகாத்மாவின் மதமாற்றங்களை தடுக்கும் கனவு மத்தியபிரதேச அரசினால் நனவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரிசாவும் அதனை பின்பற்றியுள்ளது. இந்த மதமாற்றத் தடைச்சட்டங்களின் சட்டரீதியில் செல்லுமா என்பது உச்ச நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டது (புனித ஸ்டெயின்ஸ் vs மத்திய பிரசேதம் AIR 1977 Supreme Court 908 at 911) உச்ச நீதி மன்றம் மதத்தினை பரப்பும் அதிகாரமானது மதமாற்றத்திற்கான அதிகாரம் இல்லை எனக்கூறி ஒரிசா மற்றும் மத்தியபிரதேச சட்டங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகும் எனக் கூறிவிட்டது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்துக்களின் மீள்-மதமாற்ற முயற்சிகளால் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர். பெருமளவு மதமாற்றங்களே பெருமளவு மீள்-மதமாற்றங்களுக்கு வகை செய்துள்ளன. இந்துக்கள் மீண்டும் மதமாற்றம் செய்வதில் கொண்டிருந்த மனத்தடையினை நீக்கிக் கொண்டுவிட்டு அம்முயற்சிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழலில் ஒரு மதமாற்றத்தடை சட்டத்தின் அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது மீண்டும் நடக்காது என்பதற்கு எவ்வித உறுதியும் கிடையாது. மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் சுவரில் எழுதப்பட்ட எச்சரிக்கையாக இருப்பதை அரசாங்கம் கவனிக்காமல் இருக்கலாகாது. பிரச்சனையை தடுப்பதே பிரச்சனையை தீர்ப்பதைக்காட்டிலும் புத்திசாலித்தனமாகும். அரசாங்கம் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படவில்லை எனக் கூறமுடியாது. அது அனைத்து விளைவுகளையும் எதிர்பார்த்து மதமாற்றங்களை தடைசெய்ய ஒரு சட்டத்தினை கொண்டு வந்தே தீரவேண்டும்.


  • (Necessity and validity of an Act banning conversion : Dr. (Retd) Justice Venu Gopal)
  • (இக்கட்டுரை முதலில்

    திண்ணை.காம்

    இணைய இதழில் வெளியிடப்பட்டது)

Thursday, April 19, 2007

பாசிசம் பராக் பதிவர்களே உசார்

இதோ கீழே இருக்கும் கேள்விகளை ஒரு அனானி என் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அதை வெளியிட்டதற்காக தமிழ்மணம் என்னை நீக்கியுள்ளது. தமிழ்மணம் போன்ற இனவெறி, ஆபாசம் மற்றும் பாசிசம் ஆகியவை கொண்ட ஒரு திரட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது எனக்கு மகிழ்ச்சியே. ஹெயில் தமிழ்மணம் என கை நீட்டி முழக்கி கருத்து சுதந்திரத்தையும் தனிநபர் பாதுகாப்பையும் முகமறியாத ஒரு பாசிச கும்பலுக்கு தாரை வார்த்துக்கொடுக்க நான் ஆளில்லை. எனவே நண்பர்களே புதிதாக தமிழ்மணத்தில் சேரும் பதிவருக்கு அனானியின் கீழ்காணும் ஐயப்பாடுகளை குறித்து சுட்டி அளியுங்கள்.


//Anonymous said...
அரவிந்தன்

உங்களது இந்தப் பதிவை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் ஆனால் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை. மீண்டும் கேட்க்கிறேன்



1. தார்மீக அடிப்படை நண்பர்கள் என்பவர் யார் யார் ?

2. தார்மீக நண்பர்கள் அடிப்படையில் பாலபாரதி ரவுடிக் கும்பலுக்கு எந்த விதமான தகவல்கள் அளிக்கப் பட்டன?

3. அமெரிக்க நீதித்துறை மூலமாக வந்தால் தருவீர்களா ? பாதிக்கப் பட்ட எந்த பதிவரும் அமெரிக்க போலீசை அணுக முடியும்.

4. தமிழ் மணத்தின் கருவிப் பட்டை எந்த எந்த தகவல்களை ரகசியமாக சேமிக்கிறது, பின்னூட்டம் இடுபவர்களின் ஐ பி போன்ற தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேமிக்கிறதா? இதற்கும் பதில் இல்லையென்றால் அமெரிக்க போலீஸின் உதவி நாடப் படும்

5. மிரட்டல் செய்த ப்ளாக் மெயில் செய்த நபர்களை முகமூடி கேள்வி கேட்டால் காசிக்கு கோபம் ஏன் வருகிறது ? இருவருக்கும் என்ன கள்ள உறவு ?

6. தமிழ் மண நிர்வாகிகளில் பலரும் இதற்கு முன்பாக பல பெயர்களில் மிரட்டல் ஆபாசம் முதலிய வேலைகளைச் செய்து வந்தவ்ர்களா இல்லையா?


தமிழ் மணத்தில் சேர்ந்திருக்கும் பதிவர்கள் உடனடியாக தமிழ் மணத்தின் ஸ்கிரிப்டை நீக்குவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது இல்லையென்றால் ப்ளாக்மெயில் ரவுடிகளால் புத்தகக் கடைகளில் வைத்து மிரட்டப் படுவீர்கள். வலைப் பதிவர் கூட்டங்களில் உங்கள் பேச்சும் போட்டோவும் ரகசியமாக ரெக்கார்ட் செய்யப் படும் ஆபத்தும் உள்ளது. மொத்தத்தில் உங்கள் உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் இதில் சேவதன் மூலம் இழக்க நேரிடும்
மேலும் கேள்விகள் வரும் //

Wednesday, April 18, 2007

போலி காந்திய பொய்களும் கலவர-காரண உண்மைகளும்

மா.சிவகுமாரின் ஆதாரமற்ற பொய்கள் எனக்கு சிறிது அதிர்ச்சியூட்டின. 1982 இல் நடந்த மண்டைகாடு கலவரம் ஏதோ ஆர்.எஸ்.எஸ்ஸால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக அவர் எழுதியிருக்கிறார். இதற்கு ஜோவும் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதே போன்ற கருத்துகள் ஏறக்குறைய ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் திண்ணையில் கூறப்பட்ட போது நான் எதிர்த்து எழுதியது நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் காந்தியின் பெயரை சொல்லி தனக்கு கண்ணியத்தை ஏற்படுத்தி தன்னை காந்தியவாதியாக சுய-முத்திரை அளித்துக்கொள்ளும் ஒரு நபர் இவ்வாறு கூறியுள்ளது காந்தியம் என்பது எப்படி முகமூடியாக பயன்படுகிறது என்பதனைத்தான் காட்டுகிறது. காந்திஜி மதமாற்றத்தை எதிர்த்தார் என்றால் அவர் ஏதோ திண்டில் சாய்ந்துகொண்டு கூறிய பதில் அல்ல அது. கிறிஸ்தவ மிசிநரிகளின் அயோக்கியத்தனத்தை முழுமையாக பார்த்து கூறிய விசயம் அது.


இனி குமரி மாவட்டம் மத-கலவர பூமியான விசயத்துக்கும் வருவோம். மாசிவகுமார் தனது மானங்கெட்ட பொய்யை கூறுகிறார்: அதாவது வர்ணாசிரமம் இங்கு வேரூன்றி கிறிஸ்தவசமூக சேவைகளுக்கு துணை போனதாம். ஆனால் உண்மை என்னவென்றால் மன்னராட்சி சமுதாயமாக அன்று விளங்கிய திருவிதாங்கூரில் அரசியல் காரணங்களுக்காக கீழ்த்தரமாக சாதீய வெறி பிடித்து நாடார் சாதியினரை மிதித்தவர்கள் யார் என்றால் சூத்திரராக இருந்த நாயர் மற்றும் வேளாளர் ஆவர். அதாவது ரவிகுல வலங்கை ஷத்திரியரான நாடார்கள் கீழே தள்ளப்பட்டு அவர்கள் மீது ஏறி இருந்தவர்கள் சூத்திரர்கள். அது போலவே துளு பிராமணர்களும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆக, வர்ணாசிரமம் அல்ல இங்கே காரணம் சாதிய வெறியும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் காரணமாக இருந்தது. இந்நிலையில் சமுதாயத்தில் அனைத்து சாதியினரும் ஏற்றம் பெறவும் மதமாற்றிகளின் நச்சு முயற்சிகளை வேரோடு கலியறுக்கவும் ஒரு அவதார புருஷன் தோன்றினார் இந்த புண்ணிய தட்சிணபதியிலே. அவர்தானடா எங்கள் அய்யா வைகுண்டர். கேடுகெட்ட சாதிவெறியர்கள் ஒருபுறம், சாதிய சாக்கடையில் உருவாகிய கொசுக்களென அன்னிய மதமாற்றிகள் மறுபுறம். காலனியாதிக்க மதமாற்ற ஒட்டுண்ணிகள் ஒருபுறம் சொந்த சகோதரரே சாதியின் பெயரால் நம்மை மிதித்திடும் கொடுமை மறு புறம். அப்போதுதான் சூரனை வேரறுத்த திருச்செந்தூரின் கிழக்கு கடலதனில் காவி சூரியனாக உதித்தெழுந்தார் அய்யா வைகுண்டர். தாழ்த்தப்பட்ட மக்கள் தருமத்தின் துணை கொண்டு தலை நிமிர்ந்தனர். தலைப்பாகையுடன் திருமண் சாத்திய காவிக்கொடியும் மேலெழுந்தது. சாதீயம் அழிந்தது. அழிவற்ற தரும யுகத்துக்கான சங்கொலி எழுந்தது.


இப்போது சாதியத்தை பயன்படுத்தி மதமாற்றம் செய்து வந்த மிசிநரிகள் அய்யா வைகுண்டரை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதிலேயே தெரிந்து விடும் அவர்களது 'சமூக சேவை' அரிதார இலச்சணம். மிசிநரிகளையும் இசுலாமியர்களையும் அய்யா வைகுண்டர் கடுமையாக சாடினார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் 'வர்ணாசிரமம் தலைவிரித்தாடியதாக கூறப்படும் திருவிதாங்கூர் அரசுதான் மிசிநரிகளுக்கு அளவுக்கதிகமான இடம் கொடுத்திருந்தது. நீதித்துறை ஒரு மிசிநரியிடம் ஒப்படைக்கப்பட்டு அதனை வைத்து அவன் தனியாக மதமாற்றம் செய்துகொண்டிருந்தான். சிறைகைதிகளைக் கொண்டு கோவில் குளங்களை உடைத்து கர்த்தருக்கு தேவாலயம் கட்டிக்கொண்டிருந்தான். திருவிதாங்கூர் சமஸ்தானமோ ஆடம்பர செலவுகளில் மீள்கிக்கிடந்தது. பிற்காலத்தில் எழுந்த சாதிய ஒழிப்பு சக்திகளுடன் அன்றைய இந்துத்வவாதிகள் இணைந்து செயல்பட்டதை அய்யன் காளியின் வரலாறு கூறும். சுருக்கமாக சொன்னால் மதச்சார்பின்மை என மாய்மாலம் பேசும் இன்றைய கும்பலின் அன்றைய பிரதிநிதிகள் மிசிநரிகளுடன் சிநேகிதமாக இருந்தார்கள். மிசிநரிகளை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த விடுவிக்க பாடுபட்டவர்கள் இன்று போல் அன்றும் காவி அணியினர்தாம். எனவேதான் அய்யா வைகுண்டர் காவிக்கொடியேந்தி போராடினார் அன்றே. சரி விசயத்துக்கு வருவோம்.



அய்யா வைகுண்டர் குறித்து அவரது இயக்கம் தோன்றிய நாள் முதல் மிசிநரிகள் ஓலமிட்டு வருகின்றனர் என்பதனை அறிவோம். 1980களில் கூட இந்த நிலை மாறிடவில்லை. இங்கே நீங்கள் காண்பது அய்யா வைகுண்டர் குறித்து இரண்டு ரூபாய்க்கு வெளியிடப்பட்ட ஒரு நூல்.இந்த நூலை எழுதியவர் 'அருள்திரு' வே ஜீவராஜ். வெளியிட்டவர்கள் Institute of Evangelism and Research என்பவர்கள், நாகர்கோவில் கன்கார்டியா செமினரியும் கலிபோர்னியா கிரைஸ்ட் காலேஜும் (இப்போது இது கன்கார்டியா பல்கலைக்கழகம் - மதமாற்றிகளுக்காகவே ஒரு பல்கலைக்கழகம்! http://www.cui.edu/) இணைந்து உருவாக்கிய அமைப்பு.

இந்த அமைப்பின் அந்நாளைய இயக்குநர் டாக்டர்.ஜே.சி.கமலியேல் எழுதிய 'Forward' இல் குறிப்பிடுவதை பாருங்கள்...
"கடந்த ஆறு வருடங்களில் கோவில்கள், சமய இயக்கங்கள், சமூகங்கள் ஆகியவை குறித்து 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை இந்த அமைப்பு பாதகர்கள், செமிநரி மாணவர்கள், மூலமாக வெளியிட்டுள்ளது. ... இந்த அமைப்பு சமூக சமய இயக்கங்கள் குறித்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். அத்தகைய ஆராய்ச்சியினை மேற்கொள்ள இந்த நூல் ஒரூ தூண்டுகோலாக அமையும்."
ஆகா இதல்லவா சமய நல்லிணக்கத்துக்கான வழி. என்று தோன்றுகிறதல்லவா! 'அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மேற்கொள்கிறார்களாம்! அடுத்ததாக 'பேராயர் உயர்மறைத்திரு ஜி கிறிஸ்துதாஸ் எம்.ஏ.பிடி எழுதிய மதிப்புரை. இதில் அய்யா வைகுண்டரை குறித்த கிறிஸ்தவத அவதூறு பிரச்சாரம் ஏதோ நடுநிலைத்தன்மை போன்ற பாவனையுடன் புகுத்தப்படுகிறது..
"சிலர் அவர் நாராயண சுவாமியின் அவதாரம் என்றும் சிலர் அவர் ஒரு கிறிஸ்தவராக - ஆலயத்தில் கோவில் பிள்ளையாகப் பணியாற்றினார் என்றும் கூறுகின்றனர்"
எப்படி இருக்கிறது கதை? அய்யா வைகுண்டர் சிலரால் நாராயண சுவாமியின் அவதாரம் என கூறப்படவில்லை. அய்யா வழியினை அன்புக்கொடியினை ஏற்றுக்கொண்ட மக்களால் நாராயண அவதாரம் என நம்பப்படுகிறார். அதற்கொப்ப ஏதோ 'சிலர்' அவர் கிறிஸ்தவராக கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் பணியாற்றியதாக கூறவில்லை. கிறிஸ்தவ மதமாற்றிகள் தூசனையாக அவ்வாறு பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் பார்வை பாருங்கள்! நம்பிக்கையும் தூசனை பிரச்சாரமும் ஒரே தட்டில் வைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. (இது போல இந்துக்களும் அறிவியல் கண்ணோட்டத்துடன் ஏசுவை அணுகி 'சிலர் ஏசு பரிசுத்த ஆவியால் பிறந்ததாக சொல்லுகிறார்கள். சிலர் ஏசு ஒரு ரோமானிய படைவீரனுக்கு முறை தப்பி பிறந்தவர் என சொல்கிறார்கள்' என இரண்டு ரூபாய்க்கு பிரசுரம் வெளியிட்டால் மா.சிவகுமார் உட்பட அவருக்கு 'ஜோ ஜோ' என சிங்கியடிக்கிறவர்கள் உட்பட காந்திய சாமி வந்து ஆட மாட்டார்களா...ஞாபகம் இருக்கட்டும்: இந்த நூல் வெளிவந்தது 14-2-1981 அதாவது மண்டைக்காடு கலவரம் இன்னும் ஒரு வருடத்துக்கு அப்பால் இருக்கிறது.)

அடுத்ததாக நூன்முகம். ஆசிரியர் வே.ஜீவராஜ். இங்கே அறிவியல் பார்வை இத்யாதியெல்லாம் போய்விட்டது. பூனைக்குட்டி வெளியே வருகிறது.

"இந்திய தேசத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பிறசமயங்களிலிருந்து நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் சவால்களையும் முறியடித்து வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை குமரி மாவட்ட கிறிஸ்தவ மக்களூக்கு அய்யா நெறி பெரியதொரு சோதனையாக முன் நிற்கிறது. விசேசமாக நாடார் கிறிஸ்தவர்களுக்குள் இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. ...கிறிஸ்தவர்கள் விழிப்படையவேண்டும் என்பதே எனது அவா."
1980களில் அய்யா வழி - தாழ்த்தப்பட்ட இந்து சமுதாய மக்களை வாழ்விக்க வந்த அய்யா வழி இந்த மதமாற்றிக்கும்பலுக்கு சோதனையாக அதுவும் சாதாரண சோதனை இல்லை பெரிய சோதனையாக முன் நிற்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களினை வாழ்விக்க வந்த மகானைக் குறித்து அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என பெயர் பண்ணிக்கொண்டு பொய்களை, தூசனைகளை மதமாற்றிகள் பரப்புவார்களாம் அதை நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமாம்... இல்லாவிட்டால் நாங்கள் கலவரம் பண்ணுகிறோமாம். இப்படி வெட்கம் இல்லாமல் பொய் சொல்ல எதற்கையா காந்திய முகமூடி?


இந்த 'ஆராய்ச்சி நூலின்' 35-36 பக்கங்களில் அய்யா வைகுண்டர் குறித்து வழக்கமான மட்டமான கிறிஸ்தவ பிரச்சாரம் கீழ்த்தரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவர் கிறிஸ்தவ வழிபாட்டு தல ஊழியர் என்றும் பெண் வெறியர் என்றும் அவரது உடல் இறந்த பின் அழுகி நாற்றமெடுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் இந்த நூல் யாரோ ஒரு தனிப்பட்ட மதவெறியனால் வெளியிடப்படவில்லை என்பதனை நினைவு கொள்ள வேண்டும். நாகர்கோவில் கிறிஸ்தவ டயோசிசனால் வெளியிடப்பட்டது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். 1981 இல் இது வெளியிடப்பட்டது - அதாவது மண்டைக்காட்டு கலவரத்துக்கு முன்னால் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆக இந்து-கிறிஸ்தவ உறவு ஏன் சீர்குலையாது?





இதோ அந்த நூல் மேலும் கூறுகிறது:
"இனி மேலாவது நாம் 'அய்யாவழி' செயல்படுகிறவர்களினால் வரும் பேராபத்தை உணர்வது நலமானது. ஏனெனில் ஏற்கனவே கிறிஸ்தவ பெரியோர்கள் பலமுறை எச்சரித்தும் நாம் விழித்தெழ தவறிவிட்டோம். மத். 13:25 இல் மனுசர் நித்திரை பண்ணுகையில் அவன் சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டு போனான் என்று வாசிக்கிறோம். ஆகவே இன்னும் நாம் தூங்குவது கிறிஸ்தவத்திற்கு நலமாகாது....அய்யாவின் பக்தர்கள் என கூறப்படுகிறவர்களில் கல்வியறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இந்நிலையில் மக்களின் சரீரசுகத்துக்கு அடுத்தவைகளை தேடும் போது நான் தருகிறேன் என்றால் ஓடிவராத பாமரர்கள் இருக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். இவ்விதமாக பேராபத்தை விளைவிக்கக்கூடிய அய்யாவின் நெறியைச் சுற்றி அமர்ந்திருக்க கூடிய நாம் இனிமேல் விழப்போகிறவர்களையாவது தடுத்து நிறுத்த முற்படுவோம். கிறிஸ்துவுக்குள் அவர்களை கட்டி நிலைநிறுத்துவோம். அவர்களும் கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் சுதந்திரவாதிகள் ஆகட்டும்." (பக்.37-39)


இப்போது மக்கள் சிறிதே சிந்தித்து பார்க்கவேண்டும். அய்யா வைகுண்டர் மிகச்சிறந்த தத்துவ கருத்துகளை போதித்தவர். மகாத்மா காந்தி அகிம்சை என்பதனை எழுதிப்படிப்பதற்கு முன்னரே அய்யா வைகுண்டர் அகிம்சா மார்க்கமாக தம் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தின் பெரும் பங்கு அய்யா வழி மக்கள் கையிலேயே உள்ளது என்றால் அதற்கான விழிப்புணர்வு அய்யா வைகுண்டர் அருளால் ஏற்பட்டது ஆகும்.

எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே
தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
நன்றி மறவாதே நாம் பெரிதென் றெண்ணாதே
பொறுமை பெரிது பெரியோனே என் மகனே
தருமம் பெரிது தாங்கியிரு என் மகனே
எல்லோருக்கும் விளம்பி இரு என் மகனே

ஆன்மிக எழுச்சி கருத்துகளால் மக்களை வழிநடத்திய எம்மான். சாதிய வெறி பிடித்திருந்த பிராம்மணர்களையும் நாயர்களையும் கூட நல்வழிப்படுத்தி அனைத்து மக்களையும் ஒரு விந்துகொடியாக வாழவைத்த சிவத்துவத் திருமாலாம் எம்பெருமானை அன்றைக்கும் நீசசாதியினர் வெறுத்தனர் என்றால் 1981 இலும் ஒரு வெறி பிடித்த மிசிநரி எழுதும் வார்த்தைகள் 'மனுசன் தூங்கிய போது கோதுமைகளுடன் களைகளை கலந்துவிட்டு போன சத்துரு'. எத்தனை வெளிப்படையாக கூறுகிறார் ஆசிரியர் பாருங்கள்.. படிப்பறிவு குறைந்தவர்களாம், நாங்கள் சரீர சுகம் கொடுக்கிறோம் என்று சொன்னால் நம்பி வந்துவிடுவார்களாம்...(இது மிசிநரியே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் மா.சிவகுமார் நம்மிடம் கதை அளக்கிறார். அவர்கள் சோசியல் செர்வீஸ் பண்ணுனாங்கப்பா...சரிதான் நிறுத்தையா உன் கதையை.) இதுதான் இந்துக்களையும் இந்த மண் சார்ந்த ஆன்மிக இயக்கங்களையும் குறித்து கிறிஸ்தவ வெறியர்கள் 1980களில் வைத்திருந்த மன-மதிப்பீடு. இதற்கொப்ப இந்துக்கள் அடங்கி ஒடுங்கி நடக்கவில்லை என்பதுதான் கலவரங்கள் ஏற்பட காரணம். மேலே உள்ள நூல்கள் போன்றவற்றால் உசுப்பிவிடப்பட்ட கிறிஸ்தவ வெறிக்கும்பலால் 1982 இல் எரிக்கப்பட்ட அய்யா வழி கோவில் ஒன்றை கீழே காண்கிறீர்கள். இது வேணுகோபால் கமிசனுக்கும் அன்றைய எம்.ஜி.ஆர் அரசுக்கும் இந்துக்கள் சமர்ப்பித்த கோரிக்கை ஆவணத்திலிருந்து.


நாங்கள் மறந்துவிடவில்லை அந்த மாபாதகங்களை சிவக்குமார். ஆறிய புண்களை கிழித்துவிட்டீர்கள். மண்டைக்காட்டில் மார்சேலை கிழிக்கப்பட ஓடிய பெண்களில் உங்கள் குடும்பப் பெண்கள் இல்லை போலும். ஆனால் நாங்கள் அப்பாதகங்களை எங்கள் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்திருக்கிறோம். அடுத்ததாக ஆர்.சி கிறிஸ்தவர்கள் செய்த அட்டகாசங்களை ஆதாரங்களுடன் தருகிறேன். இந்த தொடரை நான் எழுதவே ஆரம்பித்திருக்க மாட்டேன். நன்றி மா.சிவகுமார். மிகவும் மோசமான நினைவுகள், பிற மத சகோதரர்களுடன் கொள்ள வேண்டிய நல்லுறவுக்காக ஓரளவு மறந்திருந்த நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளீர்கள். ஒருவிதத்தில் அதுவும் நல்லதுதான்.