ஹமீது ஜாஃப்பருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்
மதிப்பிற்குரிய சகோதரரே,
தங்கள் திண்ணை கட்டுரை உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருந்தது. முகமது கரீம் சாக்லா தமது சுயசரிதையில் தேசிய உணர்வுள்ள முஸ்லீம்கள், மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்களால் தனித்து விடப்பட்டார்கள் என்றும் மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்கள் மதவெறியை தூண்டிய இஸ்லாமியர்களையே இஸ்லாமிய தலைவர்களாக கருதி அவர்களை தாஜா செய்ய முற்பட்டதால் தேசிய உணர்வுடைய இஸ்லாமியர்கள் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே உணர்ந்தார்கள் என்றும் கூறியுள்ளார். அன்புள்ள சகோதரர் ஜாஃபர் அவர்களே இப்பிரச்சனையில் மிகச்சிறந்த துணிவான ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள தங்கள் துணிவுக்கு வணக்கங்கள். இத்தனை நேர்மையான சுய-சமுதாய விமர்சனம் என்னிடம் உண்டா என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் திண்ணை கட்டுரையை இங்கு மீண்டும் உள்ளீடாக இடுவதில் நான் பெருமை அடைகிறேன்.நாம் பல விடயங்களில் முழுக்க முழுக்க வேறுபடுகிறோம் என்பதையும் நான் அறிவேன். எனவே இங்கு இக்கட்டுரையை இட்டிருப்பதால் எனது அனைத்து கருத்துகளையும் திரு.ஜாஃப்பர் ஏற்கிறார் என்பது பொருளல்ல.
அரவிந்தன் நீலகண்டன்
இவர்கள் அறிவீனர்கள்
ஹமீது ஜாஃபர்
சானியா மிர்ஜா - ஔதருகின்ற சினிமா தாரகையுமல்ல, சின்னத் திரை சீரியலில் வரும் நட்சத்திரமுமல்ல. 110 கோடி மக்களின் ஔத வீசும் ஒரேயொரு டென்னிஸ் வீராங்கனை. இந்திய திருநாட்டிற்குப் பெருமைத் தேடி தரும் ஒரேயொரு வீர மங்கை.
அந்த பெண் விளையாட்டிற்காக அணிந்துள்ள உடையைப் பார்த்துவிட்டு பொருக்க முடியாத மார்க்க அறிஞர்கள் என்று பறைச் சாற்றிக்கொள்ளும் சிலர், அந்த உடை இஸ்லாத்திற்கு விரோத மானது, அணியக்கூடாதது, தடை செய்யப்படவேண்டியது, அப்படி இப்படி என்று ஃபத்துவா கொடுத்துள்ளார்கள் என்ற செய்தியை சன் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆயிரக்கணக்கான உள்ளங்களுடன் நானும் அதர்ச்சி அடைந்தேன்.
இவர்கள் அடிப்படைவாதிகளா? இல்லை இல்லை, இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கவந்த அறிவீனர்கள், அபு ஜஹில்கள். படிக்கவேண்டும் அறிவைத் தேடவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் மதரஸாவுக்குச் சென்றிருந்தால் நல்ல கருத்துக்கள் வௌதவரும். எதோ வறுமைக்குப் பயந்து அங்கேயாவது நல்ல சோறு கிடைக்குமே என்ற எண்ணத்தில் ஐந்தேழு ஆண்டுகள் பெஞ்சைத் தேய்த்துவிட்டு வௌதவந்தால், இவர்களிடமிருந்து என்ன வௌதவரும்? இப்படிப்பட்ட தீர்ப்புகள்தான்! இவர்களுக்கு அல்லாஹ்வையும் தெரியாது, ரசூலையும் தெரியாது, குர்ஆனும் புரியாது, ஹதீஸும் விளங்காது.
பெண்கள் படிக்கக்கூடாது விளையாடக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்று எங்கேயாவது இறைவன் சொல்லியிருக்கிறானா? இல்லை அவனது தூதர் ரசூல் (சல்) அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களா? எதையும் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களாக ஒரு முடிவு எடுத்து ஃபத்துவா கொடுப்பதல்ல! பெரியப் பெரிய தலைப்பாவும் நீண்ட தாடியும், கையில் தஸ்பிஹ் மணியும் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது? ஆழ்ந்த சிந்தனையும் தௌதவான அறிவும் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்று அப்போதே இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்களும் தக்களை ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்களும் சொல்லிவிட்டார்கள்.
பெண் என்பவள் ஆணுடைய இச்சையைத் தணிக்கக்கூடிய வடிகால் அல்ல; பிள்ளை பெற்று கொடுக்கக்கூடிய இயந்திரம் அல்ல; அடுப்படியில் அடங்கிக்கிடக்கும் அடிமையும் அல்ல. அவள் மென்மையானவள். இறைவனுடைய படைப்புகளிலேயே மிக புனிதமானப் படைப்பு பெண். இதை இந்த அறிவீனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். உன்னிடம் வீரமிருந்தால் அவளிடம் விவேகம் இருக்கிறது; உன்னிடம் கோபம் இருந்தால் அவளிடம் சாந்தம் இருக்கிறது; உன்னிடம் ஆனவம் இருந்தால் அவளிடம் அரவணைப்பு இருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே தியாகம் செய்யும் அந்த தாய்மை இருக்கிறது.
ஒரு பெண் விளையாடுகிறாள் என்றால் அதற்கென்று தனி பயிற்சி, தனி உடை இருக்கிறது. முஸ்லிம் பெண் என்பதற்காக புருக்கா அணியமுடியாது; ஹிந்து பெண் என்பதற்காக புடவைக் கட்டமுடியாது; கிருஸ்துவ பெண் என்பதற்காக நீண்ட அங்கி அணியமுடியாது. (Emphasis mine not author's) அவள் விளையாடும்போது நீ ஏன் அவளது அங்கங்களைப் பார்க்கிறாய்? அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சியைப் பார்; கண்களில் தெரியும் கூர்மையைப் பார்; பந்து எடுக்கும் லாவகத்தைப் பார்; அதை அடிக்கும் வேகத்தைப் பார். அப்போது புரியும் அவளது திறமை, துணிவு, சக்தி, வீரம், சாதுர்யம், அடக்கம் இவை அனைத்தும்.
முடிந்தால் எங்களுடன் சேர்ந்து அவள் வெற்றி மேல் வெற்றி பெற்று உலகில் முதலிடத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, இஸ்லாத்திற்கும் நல்லது.
அருஞ்சொற்கள்:
- ஃபத்துவா - மார்க்க தீர்ப்பு
- அபு ஜஹில் - அறிவீனனின் தந்தை, பெருமானார் காலத்து இஸ்லாத்தின் எதிரி
- தலைப்பா - தலைப்பாகை
- தஸ்பீஹ் - இறை திருநாமத்தை துதிக்க உபயோகப்படுத்தும் 100 மணிகள் கொண்ட மாலை
- மதரஸா - அரபி பாடகசாலை
- (சல்) - சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்
- (ரஹ்) - ரஹ்மத்துல்லாஹி அலைஹி
Hameed Jaffer
e.mail: maricar@emirates.net.ae


ஒரு வாரம் ஊருல இருக்க மாட்டேங்க. அதுனால ஒருவாரம் கழிச்சு பாக்கலாம். அதுக்குள்ள ஏதாவது வேற்றுகிரகவாசியோட மெசேஜ் கிடைச்சா மறக்காம சொல்லுங்க.
அமைப்பு சானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்லாமிய மதக்கோட்பாட்டுக்கு எதிராக ஆடை அணிந்து விளையாடுவதை நிறுத்தாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோ ம் என அந்த அமைப்பு மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.... (தினமணி செய்தி : செப்டம்பர் 17-2005) முழு செய்தியும் இங்கே பார்க்க:
எதுவாயினும் வங்க அரசும் மிர்ஸாவை 'இஸ்லாமிய உடை' அணியக் கூறி வற்புறுத்தாமல் இருந்தால் சரி.பாரதத்தின் பெண் குழந்தைகள் நலம் குறித்த சர்வதேச நல்லெண்ண தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரில் சானியாவும் ஒருவர் என்னும் முறையில் இந்த கீழ்த்தர மிரட்டல் பாரத இறையாண்மைக்கும் ஒரு சவால்.
ஆனால் சானியா புத்திசாலி பெண்ணாகத்தான் தெரிகிறார். இந்த பத்வா கூத்தெல்லாம் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இவருக்கு நல்ல பாப்புலாரிட்டி இருப்பதற்கு காரணம் அவரது விளையாட்டுத்திறனாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம். அது குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ முடிவெடுக்கும் உரிமை அவருடையது. அவர் தம்மை ஈமான் கொண்ட முஸ்லீமாகத்தான் கருதுகிறார். அவரது கழுத்தில் தொங்குவது ஏதோ மதநம்பிக்கை தொடர்பான லாக்கெட் போலத்தான் தெரிகிறது. அவரது செயல்பாடுகளில் ஜீவ சந்தோஷம் இருக்கிறது. மத வட்டங்களை கடந்து நிற்கும் இளம் தலைமுறையின் சாதனை குரலாக அவரது குரல்.
எடுத்தெறிந்து நிற்கும் தன்னம்பிக்கையை பறைசாற்றும் அவரது டி ஷர்ட்கள் stereotypeகளை உடைத்தெறிகின்றன. இத்துடன் தொடர்ந்து மற்றொரு விஷயத்தையும் கூறவேண்டும். வாலன்டைன் தினம், குறித்தது அது. வாலண்டைன் தின கொண்டாட்டங்களை அடித்து நொறுக்கும் கூட்டமும் சானியாவிற்கு எதிராக பத்வா விதிக்கும் கூட்டத்தை போன்றே புத்தி கெட்டது என்பேன். என்னைக் கேட்டால் கொண்டாடுபவர்கள் கொண்டாட்டுமே வேண்டுமென்றால் வாலண்டைன் தினத்தின் பாகன் வேர்களை முக்கியப்படுத்தி கார்டுகளை போட்டு அந்தக்காசைக் கொண்டு சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பங்களாதேஷ் இஸ்லாமிய வெறியர்களால் அகதிகளாக்கப்பட்டிருக்கும் பௌத்த வனவாசிகளுக்கும் ஹிந்து தலித்களுக்கும் ஏதாவது செய்யலாம் என்பேன். Violence is the last resort of the incompetent என்கிற வார்த்தைகளை நம்புகிறவன் நான். கூடவே டார்வின் தினத்தையும் கொண்டாடுங்கள் என்பேன் அதுவும் பிப்ரவரியில்தான் வருகிறது. வகாபியிச , எவாஞ்சலிக்க, சாதிய சிறைகளிலிருக்கும் மனங்களுக்கு அறிவியலின் ஒளியை கொண்டு செல்ல அந்த நாளை பயன்படுத்தலாம் நன்றாக. எல்லா தரப்புகளிலுமுள்ள நல்லடியாரும் அவருடைய மெமிடிக் க்ளோன்களும் குறைந்த பட்சம் சானியாவின் விளையாட்டரங்கப் பாவாடையின் நீளத்தைக் காட்டிலும் முக்கியமானவை இந்நீலக் கோளத்திலும் அப்பாலும் உள்ளதென அறிந்துகொள்ளலாம். நல்லடியார் கூட்டமும் இதர ஏகஇறை அடியாராக தம்மைக் கருதிக் கொள்ளும் கூட்டமும் சானியா போன்ற உண்மையான இஸ்லாமியராக இருக்க அவர்கள் நம்பும் ஏக இறைவன் அருள் புரியட்டும். சானியாவை பொறுத்தவரை ...மூக்குத்திப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள!