அகப்பயணம்

Monday, October 31, 2005

பாயி மணி சிங் - தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். அதன் ன்மீக-உள் அர்த்தங்கள் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த பலிதானம் தீபப் பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரூவரின் ஞாபகத்திலும் இருக்கவேண்டியது அவசியம். நமது மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் கூறுவது போல பாரதியர்களாகிய நாம் பிறரின் விடுதலையை மதித்தவர்கள். நம் வழிபாட்டுமுறையை நம் வாழ்க்கை முறையை பிறரும் ஏற்கவேண்டும் என நிர்ப்பந்திக்காதவர்கள் நாம். னால் நம் மீது படையெடுத்து வந்த அன்னியர் நம்மை நயவஞ்சகமாக வென்று அவர்களது வழிபாட்டு முறைகளை நம்மை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியனர். யிரமாண்டுகள் அன்னியர் திக்கத்திற்கு எதிராக இன்று உலகிலேயே உயர்ந்ததாக உலகின் ன்றோர்கள் போற்றும் நம் வாழ்க்கை முறையை நம் கலாச்சாரத்தை அதன் அடிநாதமாக விளங்கும் தர்மத்தை, நம்முடையதாக நாம் உரிமை கொண்டாட நம் முன்னோர்கள் செய்த மகத்தான தியாகங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். நம் முன்னோரின் வீர வரலாறுகளையும் தியாகங்களையும் வருங்கால சந்ததியினருக்கு கூறி அவர்களையும் தர்மத்திற்காக தியாகங்கள் செய்திட தயாராக்க வேண்டும். நமது சனாதன தர்மம் அழிவற்றது. ஏனெனில் பிரபஞ்சம் அளாவிய பொதுமை சத்தியத்தை கூறுவது அது. அது நம் பாரதிய சமுதாயத்திற்கு, பாரத தேசத்திற்கு அருளப்பட்டுள்ளது. அதனை காப்பதும் உலகிற்கு ஒளியாக விளங்குவதுமே நம் தேசத்தின் ஜீவித நியாயமாகும்.
எனவேதான் அந்நியப்படையெடுப்பு மற்றும் க்கிரமிப்புகளின் போது நம் முன்னோர்கள் தமது குலத்தையே பலிதானமாக தந்தனர். நம் தர்மம் சனாதனமாக ஐயாயிரம் ண்டுகளுக்கும் மேற்பட்ட அறுபடாத செழுமையுடன் கற்பக விருட்சமாக விளங்க எத்தகைய பெரும் ன்மாக்கள் தங்கள் இதயக்குருதியை அதன் வேர்களில் அர்ப்பணித்தனர் என்பது நம் அனைவரும் ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய ஒன்று. அவ்வாறே தீபத் திருநாளாம் தீபாவளியன்று அத்திருநாளைக் கொண்டாடும் உரிமையைக் காக்க தம் உயிரை அர்ப்பணித்த ஒரு மகாஞானியும் வீரருமான பலிதானியை நாம் இத்தீப திருநாளன்று நினைவு கூர்வோம்.

பொது சகாப்தம் 1662 இல் பஞ்சாபின் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள கைபோவால் எனும் கிராமத்தில் துலாத்-தயா கவுர் தம்பதிகளுக்கு புதல்வனாக மணி ராம் பிறந்தார். அக்காலகட்டத்தில் காஷ்மீரில் மதவெறி இருளினைப் பரப்பி மத வெறியாட்டம் டிக்கொண்டிருந்தான் அவுரங்கசீப் எனும் கொடுங்கோலன். காஷ்மிரத்து பண்டிதர்தம் உரிமை காக்கவும் ஹிந்துஸ்தானின் தர்மம் காக்கவும் முன்வந்தார் சத்குரு தேஜ்பகதூர். அவுரங்கசீப்பிற்கும் அவனைச்சார்ந்த மதவெறிக்கும்பலுக்கும் தம்மை மதமாற்ற சவால் விட்டார். அவ்வாறு மதம் மாற்றினால் தாம் மட்டுமல்ல ஹிந்துஸ்தானமே அவுரங்கசீப்பின் மார்க்கத்தை தழுவும் என வாக்குறுதியும் அளித்தார் அவர். குரு தேஜ் பகதூரை மிரட்ட அவுரங்கசீப்பால் முஸ்லீமாகும் படி வற்புறுத்தப்பட்டு குருவின் கண் முன்பே சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பாய் தயால் தாஸ் மணிசிங்கின் மூத்த சகோதரராவார். ஹிமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தின் தொடக்கம் காண இயலாத வேதகாலம் முதல் இன்றைக்கும் என்றென்றைக்குமாக விளங்கும் தர்மமே ஒரு மானுட வடிவம் தரித்து நின்றது போல குரு தேஜ்பகதூர், அயோக்கியன் அவுரங்கசீப்பின் மதவெறி முன் நின்றார். தேஜ்பகதூர் காலடியில் அவுரங்கசீப்பின் மிரட்டல்களும், சித்திரவதைகளும், அவனைச் சார்ந்தவர்களின் சைவார்த்தைகளூம் தர்க்கங்களும், மதவெறி பிடித்த உருட்டல்களும் மண்ணைக்கவ்வின. வன்முறையில் மதம் வளர்க்கும் அடக்குமுறை ட்சி புரிந்த அந்நியக் கும்பல் தர்மத்தை கைவிடாத குருவின் தலையை வெட்டியது. தம்மையே இம்மண்ணின் தர்மத்துக்காக பலிதானம் செய்தார் அருட்குரு. அப்படியும் இரத்த வெறி தீராது பாரதம் முழுவதும் இருள் பரப்ப நினைத்த ஈன ட்சியாளருக்கு அன்று குரு தேசமான பஞ்சாப்தான் பெரும் சவாலாகவும் தர்மத்தின் அரணாகவும் விளங்கியது.

மணி ராம் பெற்றோர் னந்தபுரி சென்ற போது அவர்களுடன் சென்ற மணி ராம், குருவின் அருள் கிரகணங்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். தம் பெற்றோரிடம் தாம் இனி வீடு திரும்ப முடியாது என்றும் குருவின் பாத சேவையே இனி தமது வாழ்க்கை என்றும் தெள்ளத்தெளிவாக அறிவித்தார் அப்பெருமகனார். தம் மகனை மீண்டும் வீடு அழைத்து செல்லமுடியாது எனப் புரிந்து கொண்ட அப்பெற்றோர், தேஜ்பகதூரின் தர்ம பத்தினியான மாதா குருஜியிடம் தம் மகனை கவனிக்கும்படி கூறி விடைபெற்றனர். குருமாதா தம் புதல்வனைப்போலவே மணிசிங்கைக் கவனித்துக்கொண்டார். குரு மைந்தரான குரு கோவிந்த சிங்கின் சமவயதேயுடைய இச்சிறுவர் குருகுடும்பத்தில் ஒருவராகவே வளர்ந்து வரலானார்.குரு தேஜ்பகதூரின் புதல்வர் குரு கோவிந்த சிங் இச்சூழலில் கால்ஸா எனும் தொண்டர் படையைத் தோற்றுவித்தார்.

விக்கிரம் சகாப்தம் 1756 ம் ண்டு வைசாக திருநாள் பாரத தர்மத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாளாகும். அன்றுதான் புனிதமான கால்ஸா உருவானது. தருமத்தின் பொன்னிறக் கொடி உயர்ந்தது. அந்நாளில் குரு கோவிந்த சிம்மரின் திருக்கரத்தால் அமிர்தம் அருந்தி தர்மம் காக்கும் மகத்தான தூய சீடர் படையில் முக்கிய அங்கமாக இணைந்தார் பாயி மணிசிங். மதவெறி பிடித்த அன்றைய ட்சியாளர் வீர சத்குரு கோவிந்த சிங்கின் குடும்பத்தையே அழிக்கத் துணிந்தனர். பொது சகாப்தம் 1704 ம் ண்டு டிசம்பர் 20 ம் தேதி குருவின் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குருவின் குடும்பத்தை பாய்மணிசிங் காப்பாற்றினார். பின்னர் கால்ஸா அமைப்பில் ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் பணியை குருமாதா சுந்தரிஜி பாய் மணிசிங்கிற்கு அளித்து அவரை அமிர்தசரஸிக்கு அனுப்பினார். இவ்வாறு 1721 இல் அமிர்தசரஸிற்கு திரும்பிய பாயி மணிசிங் கால்ஸாவில் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு பவித்திரமான பொற்கோவிலாம் ஹரி மந்திர் சாகேப்பிலும் திறமையான நிர்வாகம் ஏற்பட வழிவகுத்தார். அவுரங்கசீப் தம் புதல்வர்களைக் கொன்றிருந்த போதிலும் அவுரங்கசீப்பின் மகனுக்கு அடைக்கலம் அளித்து, அவன் நோய் தீர சிகிச்சையளித்து தீயவர் நாண நன்னயச் செயல் புரிந்த மகாத்மா குருகோவிந்தசிங். கா! தேசத்தையும் தர்மத்தையும் காக்க வாளெடுத்து போராடிய குரு கோவிந்த சிங், தம் சொந்த சாபாசங்களுக்கு தனி வாழ்வில் இடங்கொடுக்காது வாழ்ந்தார் என்றால் அவரல்லவோ உண்மை மகாத்மா. பின்னாளில் அவர் இஸ்லாமிய மதவெறியனால் தூங்கிக்கொண்டிருக்கையில் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டார். யின் தர்மமும் தாயகமும் காக்கும் வீரர்தம் கால்ஸா தளரவில்லை. எனவே அன்றைய மதவெறி பிடித்த ஆட்சியாளருக்கு கால்ஸாவின் மைந்தர்களைத் துன்புறுத்துவதில் நாட்டம் குறையவில்லை. குரு கோவிந்தர் சமாதியடைந்துவிட்டதால் இனி மிக எளிதாக சீக்கியர்களை அடக்கிவிடலாம் என கருதிய அவர்கள் கடுமையான அடக்குமுறைகளை பஞ்சாபில் அவிழ்த்துவிட்டனர். அமிர்தசரஸுக்கு சீக்கியர் வரவும் புனித தடாகத்தில் நீராடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தாம் அழிக்க அழிக்க சீக்கியர்கள் மேலும் மேலும் தோன்றுவதற்கு காரணம் அமிர்தசரஸ் எனும் அமிர்த தடாகத்தின் புனித நீரே காரணம் என நினைத்து அத்தடாகத்தை அழிக்கவும் முற்பட்டனர். இந்த பாதகச் செயலை செய்ய தூண்டியவன் அப்துல் ரஸாக் என்கிற அதிகாரி. விரைவில் இவன் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டன என்றும் அவன் பாயி மணிசிங்கை சரணடைய, எந்த தடாகத்தை மூட, அந்த மூடன் தூண்டினானோ அதே தடாகத்தின் நீரினால் மணிசிங் அக்குழந்தைகளுக்கு நோய்கள் அகற்றுவித்து ரோக்கியம் அருளினார் எனவும் சீக்கிய வரலாறுகள் கூறுகின்றன. வைசாகத் திருநாள் அன்றும் தீபாவளித் திருநாள் அன்றும் சீக்கிய வீரகுல மக்கள் அமிர்தசரஸில் கூடுவர். உணர்ச்சியும் உரமும் பெறுவர். இது தர்மமற்ற அரசின் கண்ணை உறுத்தியது.

அடுத்ததாக தீபாவளித்திருநாளை அமிர்தசரஸில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாயி மணிசிங் அன்றைய மொகலாய ஆளுநராக இருந்த ஸகாரியா கானுக்கு தீபாவளித் திருநாளை கொண்டாட அனுமதி வழங்கக் கோரிக்கை விடுத்தார். தீபாவளித்திருநாளுக்கு முன்னர் 5000 பணம் கொடுத்தாலே தீபாவளி கொண்டாட அனுமதி வழங்கமுடியும் என தெரிவித்தான் ஸகாரியா கான். சொந்த நாட்டின் தர்மத்தின் ஒளி ஏற்றும் தீபத் திருநாளை கொண்டாட மாற்றானுக்கு பணம் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதும் பாயி மணிசிங் அதற்கு சம்மதித்தார். ஏனெனில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் அமிர்தசரஸிற்கு ஹரி மந்திரத்திருத்தலத்திற்கு தீபத்திருநாளைக் கொண்டாட வருவார்கள். அவர்களிடமிருந்து காணிக்கைகளை சேகரித்து மிகக் குறுகிய காலகெடுவுக்குள் இந்த மிக அதிகமான அநியாயக் கட்டணத்தை செலுத்தமுடியும் என அவர் எண்ணினார். இதனை அறிந்து கொண்ட ஸகாரியா கான் அமிர்தசரஸிற்குள் சீக்கியர் வருவதை தடைசெய்தான். ஸ்காரியா கானின் அடிவருடியும் கூலிப்படையாளனும் துரோகியுமான லக்பத்ராய் (இன்றைய போலி மதச்சார்பற்ற அஃறிணைகளின் மூதாதைகளில் ஒருவன்) மொகலாய இராணுவத்தை ஏவி திருவிழாவிற்கு வந்தவர்களை விரட்டினான். பின்னர் ஸகாரியா கான் கூறிய கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி பாயி மணிசிங்கை கைது செய்தான். எந்த தீபாவளித் திருநாளைக் கொண்டாட பாயி மணிசிங் அனுமதி கேட்டாரோ அதே திருநாளன்று காஸியின் முன்னிலையில் 'விசாரணை' நடத்தப் பட்டது. இந்த போலி விசாரணைகளும் சிறை வாசமும் சித்திரவதைகளும் தீபாவளி கைதில் ரம்பித்து று மாதங்கள் தொடர்ந்தன. பாயி மணிசிங் தமது தர்மத்தை துறந்து ஸகாரியாகானின் மதத்தை ஏற்க வேண்டும் இல்லையேல் அவரது உடல் அங்கங்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்படுவார் என தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பளித்தவன் யார் தெரியுமா யாருடைய குழந்தைகளுக்கு பாயி மணிசிங் வாழ்வளித்தாரோ அதே அப்துல் ரசாக்தான்.

ஏக ஓங்கார தியானத்தில் ழ்ந்த அந்த ஞானியை, அன்னிய மார்க்க வெறி பிடித்த மாபாதகர்கள் செய்த சித்திரவதைக் கொடுமைகள் அனைத்து மக்கள் பார்வையிலும் நிறைவேற்றப்பட்டது. சீக்கிய அன்னைகள் பின்னர் தங்கள் குழந்தைகளுக்கு கூறுவார்கள்:
"தண்டனையை நிறைவேற்றுபவன் பாயி மணிசிங்கின் சில விரல்களை வெட்டினான். இவ்வாறு ஒருவரை சித்திரவதை செய்வதை அவனாலேயே தாங்க முடியவில்லை. எனவே மற்ற விரல்களை விட்டுவிட்டு அவரது கைகளை வெட்ட நிமிர்ந்த போது, பாயி மான் சிங் அன்புடன் அவனை அழைத்து, "ஒவ்வொரு அங்கத்தையும் துண்டாக்க வேண்டுமென்பது கட்டளையல்லவா! இதோ சில விரல்களை விட்டுவிட்டாயே அதையும் வெட்டிவிட்டு பின்னர் கரத்தை வெட்டு இல்லையேல் உடலை சோதிப்பவர்கள் உன்னை கடமையை சரிவர செய்யவில்லை என தண்டிக்கக்கூடும்" எனக் கூறினார். அனைவரும் அதிசயத்துடன் நோக்க அம்மகான் தம் அங்கத்தையே துண்டுதுண்டாக்கி பாரத தர்மத்திற்கு பலிதானமளித்தார். ஆனால் அவர் தமது தர்மத்தை என்றென்றும் விடவில்லை."
இப்புனித பலிதானம் வீணாகவில்லை என்பதை வரலாறு கூறும். பாயி மணிசிங்கின் மரணத்தின் பின்னர் 42 ண்டுகளுக்குப் பின்னர் ரஞ்சித் சிங் எனும் மாவீரர் தோன்றியதும் அன்னியரை அவர் விரட்டியடித்து தர்மத்தின் பொற்கொடியின் பட்டொளியை பாரதத்தின் ஆப்கானிய எல்லை வரை வீசிட வைத்தமையும், வல்லரசுகளாலும் அடக்கமுடியாத ப்கானியர் அவருக்கு கப்பம் கட்டி அடிபணிந்து வாழ்ந்தமையும் வரலாறு கூறும் செய்திகள். இன்று நாம் கொண்டாடும் தீபாவளித்திருநாளின் அதிகாலையில் புனித நீராட, பாரதத்தின் புண்ணிய நதிகளின் பெயர் சொல்லி நம் விரல்கள் நீரைத் தொடும் அத்தருணத்தில் ஒவ்வொரு விரல் முதல் தம் அங்கங்கள் அனைத்தையும் தர்மத்திற்கு ஈந்த அம்மகான் பாயி மணிசிங்கை நாம் நினைவு கூர்வோம். தியாகங்களால் வளர்க்கப்பட்ட இப்பண்பாட்டை சொத்தாகப் பெற்றிருக்கும் நாம் அப்பண்பாட்டிற்கு நம்மை நாமே தகுதியானவர்கள் ஆக்கிக் கொள்வோம்.

எஸ் அரவிந்தன் நீலகண்டன்

இணையதளங்கள்

க http://allaboutsikhs.com/bhagats/bhaimanisingh.htm
க http://www.sikh-history.com/sikhhist/martyrs/mani.html
க http://www.gurbani.net/Religion/sikhcommunity/manisingh.htm

Saturday, October 29, 2005

தீபாவளி பலிதானிகள்


நேற்று:

மதவெறி பிடித்த ஆட்சியாளர்களால் தீபாவளி கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்ட போது அதைக் கோரி போராடிய சீக்கிய வீர ஞானி பாயி மணிசிங் அவர்கள் பலிதானியாகி ஹிந்துஸ்தானத்தின் தீபாவளி கொண்டாடும் உரிமையை நமக்கும் நம் சந்ததிக்கும் பெற்றுத்தந்தார்கள். அதற்காக அவர்களது ஒவ்வொரு உறுப்பும் வெட்டப்பட்டு சித்திரவதை அனுபவித்தார்கள். எனினும் பாரத தர்மத்தையும், தீபாவளி கொண்டாடும் உரிமையையும் அவர்கள் கைவிடவில்லை. தர்மத்திற்கே தம்மை தர்மம் அளித்த பெருந்தகையாளரின் தியாகமே நாம் இன்று கொண்டாடும் தீபாவளித் திருநாளின் பின்னாலிருக்கும் தலைமுறைக்கும் மறக்கப்படக்கூடாத வரலாற்றுப் பின்னணி.
Bhai Mani Singh : Deepavali Sikh martyr
இன்று:

தீபத் திருநாளை கொண்டாட கடைத்தெருக்களில் கூட்டம். வாணவேடிக்கைகளை வாங்கிட சிறார்களின் ஆர்வம். அழகிய ஆடைகளை வாங்க திரண்டிருக்கும் பெண்களின் ஆனந்தம். அனைத்தையும் ஒரு நொடியில் சாம்பலாக்கிட்ட ஜிகாதி வெறி பிடித்த மிருகங்களின் தொடர் வெடிக் குண்டுகள். அறுபதிற்கும் மேற்பட்ட எம் சகோதர சகோதரிகளை பலி கொடுத்தோம். மேலும் பலர் படுகாயம். ஏன்? காஃபீர்களின் திருவிழாக் கொண்டாட்டம் ஜிகாதி மிருகங்களுக்கு பிடிக்கவில்லை. வாள் முனையிலும் துப்பாக்கி முனையிலும் மதம் வளர்த்த காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு பண்பாட்டின் அரிச்சுவடி புரியுமா?
Delhi victims of Jehadhis

அக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க சோரம் போகும் அறிவுஜீவி முற்போக்கு அஃறிணைகள், ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் போலி மதச்சார்பற்ற சாதிய அரசியல் விபச்சாரிகள் மறுபுறம். இவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் இரத்தக்கண்ணீர் வடித்து தம் குடும்பத்தவரை இழந்த எம்மக்களுக்கு எம் சகோதர சகோதரிகளுக்கு உண்மையான ஆறுதல் யார் வழங்க முடியும்? தீபாவளி ஆனந்தத்திலிருந்து ஒரே நிமிடத்தில் ஜிகாதி வெறிநாய்களின் கொடூரச் செயலால் தாய்களை இழந்து அழும் எம் குழந்தைகளுக்கு அரசியல்வாதிகளால், பாதுகாப்பளிக்க வக்கில்லாத அரசு இயந்திரங்களால் என்ன ஆறுதல் அளிக்க முடியும்? வெறுமே புலம்பிக்கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவுதான் என்ன ஆறுதல் அளிக்க முடியும்?
Hindustan's victim of Jehadhi terrorist pigs


ஆனால் உங்களாலும் என்னாலும் ஒன்று முடியும். இவர்களுக்கு நீதி அளிக்க முடியும்.


ஒன்றுபட்ட அரசியல் சமுதாய சக்தியாக ஒருங்கிணைந்து எழுவோம். வலிமையான அரசினை சமுதாயத்தை உருவாக்குவோம். நம் சமுதாய வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைவோம். இனியும் இச்சமுதாயம் வாளாவிருக்க வேண்டுமெனில் வேரோடழியும். நம் சமுதாயத்தை ஆக்கிரமிக்க அழிக்க நினைக்கும் பாலைவன பன்றிக்கும்பலுக்கும் அதற்கு துணை போகும் போலி மதச்சார்பற்ற சோர-விபச்சார அரசியல்வாதிகள் தலைமுறைகளுக்கு மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம்.



வெற்றி வேல் வீர வேல்

ஜெயஜெய பவானி ஜெயஜெய பாரதம

பாரத அன்னை வெல்க


Sunday, October 23, 2005

தமிழ்மணமும் அகப்பயணமும்



இப்பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். அது குறித்து எனக்கு கிஞ்சித்தும் வருத்தம் இல்லை. இப்பதிவின் வாசகர்கள் தொடர்ந்து இங்கு பதியப்படும் செய்திகளை படிக்கவும் விவாதிக்கவும் செய்வார்களென நம்புகிறேன். அகப்பயணத்தின் உள்ளீடுகளில் நானறிய 'தீவிர அரசியல்' அல்லது மத துவேச பதிவுகளை காணமுடியுமா என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை காஷ்மிர் நிலநடுக்கத்திற்கு பின்னர் ஜிகாதி வெறிபிடித்த மிருகங்களால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் குறித்தும் பின்னர் ஜிகாதிகளால் பிறிதொரு சமயம் கொல்லப்பட்ட இஸ்லாமியர் குறித்தும் கண்டனம் தெரிவித்திருந்தது காசியின் தமிழ்மணத்தில் 'பாசிச துர்நாற்றம்' எழுப்பியிருக்கலாம். அதற்காக அகப்பயணம் தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பின் நான் பெருமையடைகிறேன் என்றே கொள்ளலாம். விரைவில் அகப்பயணம் சில 'தீவிர' மாற்றங்களை அடையும்.

உலக இந்துக்களின் உரிமை குரலாக : இறையியல் பன்மையின் பாதுகாப்பு குரலாக
ஒடுக்கப்பட்டு ஒழிக்கப்படும் மக்களின் இதய குரலாக அது மாற்றப்படும்.
இஸ்ரேலிய -இந்துஸ்தான மக்களின் நட்புக்குரலாகவும்
ஹீப்ரு -ஹிந்து கலாச்சாரங்களின் சகோதரத்துவ பாலமாகவும் அது உருவாகும்.

சற்றே பொறுத்திருங்கள்.

Tuesday, October 18, 2005

இஸ்ரேலில் தொடரும் வெறியாட்டம்.




இஸ்ரேலிய தலைமை மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனியர்கள் என தம்மை அழைக்கும் கூட்டத்திற்கு ஒரு சமரச அடையாளமாக போரில் இஸ்ரேல் வெற்றி பெற்ற இடங்களை மீண்டும் அளிக்க முன் வந்ததை நாம் அறிவோம். வெற்றியில் பெருந்தன்மை மூலம் மானுட நேயத்தை மலர வைக்க முடியும் எனும் யூத அரசின் நம்பிக்கையில் மண் அள்ளி போட்டு வருகின்றனர் ஜிகாதி வெறியர்கள். இந்த வெறியர்கள் அண்மையில் யூத வழிபோக்கர்களை தெற்கு ஜெருசேலமருகில் சுட்டுக் கொன்றுள்ளனர். வடக்கு ஜெருசேலத்திலும் இத்தகையதோர் நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. பயங்கரவாதிகளின் வழக்கமான மனிதத்தன்மையற்ற கோழைத்தனமும் இதில் வெளிவந்துள்ளது. ஆம் கொல்லப்பட்டவர்களுள் இரு இளம் பெண்களும் ஒரு சிறுவனும் அடக்கம். இப்படுகொலையை செய்துள்ள ஜிகாதி வெறியர்களால் கொல்லப்பட்டவர்கள்:

  • ஓஸ் யிஸ்ரேல் பென் மெய்ர் வயது 14,

  • மதாத் ரோஸன் பீல்ட் அட்லர், வயது 21 (புது மணப்பெண்)

  • கின்னாரெட் மண்டேல், 23

இஸ்ரேலின் மனிதத்துவமுள்ள செய்கைகளை சுரண்டி இரத்தவெறியாட்டம் ஆடி வரும் அராபிய பயங்கரவாதிகளை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கண்டித்துள்ளது.


[நன்றி: அருட்ஸ்ஷெவா: இஸ்ரேல்நேஷனல்நியூஸ்.காம்-அக்டோ பர் 17 2005]
என்ன செய்வது அராபியத்தின் மனிதத்துவம் மடிந்து ஆயிற்று வருடங்கள் சுமார் 1400.
அய்ன் ராண்ட் என்று நினைக்கிறேன். Compromise குறித்து இவ்வாறு கூறினார்:
When you compromise between food and poison only death will win. துர்க்கா பூஜைக்கு முந்தைய இரவில் தொண்டை கிழிக்கப்பட்டு இறந்த காஷ்மீர ஹிந்துக்களும், யூதப்பண்டிகை காலத்தில் கொல்லப்பட்ட 14 வயது ஓஸ் யிஸ்ரேல் பென் மெய்ரின் பெற்றோர்களும் ஒத்துக்கொள்வார்களென்றே தோன்றுகிறது.

Monday, October 17, 2005

நேற்று-இன்று-நாளை?





  • நேற்று: இது மத வெறியர்களால் அழிக்கப்பட்ட நாலந்தா சர்வகலாசாலை இடிபாடுகள் (சுமார் கிபி 1124)


    Destroyed by Jehadhis
  • இன்று: இது உத்தர பிரதேசத்தில் மதவெறியர்களால் எரியூட்டப்பட்ட சமஸ்கிருத கல்விசாலை: வருடம் 2005
    The Hindu, 17-Oct-2005
    காஷ்மிரில் அழிக்கப்பட்ட நூல்நிலையங்கள்: இங்கே பாருங்கள்


  • நாளை?

Friday, October 14, 2005

நம் அன்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிட்டீங்களா?



இல்லைன்னா இங்க இருக்கிற வாழ்த்துக்களை அனுப்புறீங்களா?


பாரதியார் தீர்க்கதரிசிதாங்க. வருகின்ற ஹிந்துஸ்தானமாக அவர் வாழ்த்துறதெல்லாம் அப்படியே ஒரு மனுஷருக்கு பொருந்துறத பார்த்தீங்களா?
...

வெற்றிகொண்ட கையினாய் வா வா வா
விநயநின்ற நாவினாய் வா வா வா
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா
முழுமைசேர் முகத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா
கருதியதியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா வா வா


நம்ம பாரதநாட்டவங்க அம்புடுபேர் இதயத்திலும் இருக்கிற அந்த மகா மனிதருக்கு, நம் குடும்பத்தின் மூத்த தலைமகனுக்கு (என் மூணரை வயசு பையன் அவர 'ராக்கெட் தாத்தா' அப்படீன்னுவான்) இன்னைக்கு பிறந்தநாளுங்க.

அவருக்கு அனுப்பறதுக்காக மூணு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தயார் பண்ணினேனுங்க. இங்க பாருங்க: பிடிச்சா அவருடைய இணையதளத்தில இருக்கிற தொடர்பு பக்கத்தில போயி வாழ்த்துக்களை தெரிவிச்சு இதுங்கள்ல உங்களூக்கு பிடிச்சதோட உரலை போட்டு அனுப்பி வையுங்க:

  • 1. காட்டாமணக்கு: 'புரா' கிராம முன்னேற்ற மாதிரி (model) -அதுல இது முக்கியமான உள்ளீடுங்க. 'புரா'வால் வறுமையை புறம் காண்போம் அப்படீன்னு அவருக்கு வாழ்த்து அனுப்பலாங்க
    Jethropa- as Pura input and defeat Poverty
    உரல்:http://i17.photobucket.com/albums/b97/Aravindan/card1.jpg

  • 2.ஜெய்பூர் செயற்கை கால்கள் - அத இன்னமும் இலகுவாக்கிற இஸ்ரோ சாதனை பத்தி அடுத்த வாழ்த்தட்டைங்க. இந்த இஸ்ரோ சாதனை பின்னாடி இருக்கிற பேரன்பு இதயத்தில ஒண்ணுக்குதாங்க இன்னைக்கு பிறந்த நாள்
    ISRO innovation in Jaipur foot: Technology wipes out tears and brings in smiles
    உரல்:http://i17.photobucket.com/albums/b97/Aravindan/card2.jpg

  • 3. பிறந்த நாளன்னைக்கி அவரும் அவரோட குருவும் அந்த குருவோட கனவு நனவாகி நம்மளயெல்லாம் பெருமப்பட வைக்கிறதும் பத்தி அடுத்த வாழ்த்தட்டைங்க.
    Dr.Kalam, his Guru and Guru's dream in action
    உரல்:http://i17.photobucket.com/albums/b97/Aravindan/card3.jpg


பிடிச்சா முழிஞ்சா நேரம் கிடைச்சா செய்யுங்க
நம்ம குடியரசுத்தலைவர் மின்னஞ்சல்: presidentofindia@rb.nic.in
நம்ம குடியரசுத்தலைவர் தொடர்பு பக்கம் இங்கேங்க

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

Tuesday, October 11, 2005

ஜிகாதி மிருகங்கள் கொன்ற பாரதிய இஸ்லாமிய சகோதரர்கள்


"மகா மங்கலமான புண்ணிய பூமியே
இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும்" - சங்க பிரார்த்தனை


பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் குழந்தைகளும் அடக்கம். கொலை செய்தவர்கள் இஸ்லாமிய ஜிகாதிகள். காரணம் இந்த மக்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான கிராம பாதுகாப்பு படையில் இணைந்து செயல்படுவதுதான். எங்கோ ஈராக்கில் சித்திரவதை செய்ததாக சொல்லப்படுவதற்கு காஷ்மிர் முதல் நாகர்கோவில் வரை கொடி பிடித்து கூச்சல் போடும் வகாபி ரக இஸ்லாமிய சமுதாய தலைவர்களின் மவுனம் காதைச் செவிடாக்குகிறது. இந்த குஜார் இன மக்களின் தியாகம் யாராலும் நினைக்கப்படாமல் போகக்கூடாது. பொதுவாகவே நம் மதச்சார்பின்மைக்கு ஒரு நோய் உண்டு. அலி மியான்களுக்கும் அவுரங்கசீப்புகளுக்கும் வக்காலத்து வாங்கி அவர்களையே ஏதோ இஸ்லாமிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக காட்ட முற்படும் இடதுசாரி, சோசலிச மதச்சார்பற்ற கட்சிகள், நமக்கு அஷ்பக்குல்லா கானையோ அல்லது தாரா ஷுகோவையோ, ரஸகானையோ நமக்கு கூறுவதில்லை. அல்லது காஷ்மிரில் அராபிய மேன்மைவாத பயங்கரவாதத்தால் அழிக்கப்படும் உண்மை காஷ்மிரியத்தின் சூஃபி அம்சங்கள் குறித்து சிறிதும் கவலை கொள்வதில்லை.


எனவேதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடலாக்குடி எனும் இஸ்லாமியர் அதிகம் வாழும் ஊரில் வாழும் சராசரி இஸ்லாமிய இளைஞனுக்கு ஒசாமா பின் லாடனுக்காக கூறப்படும் 'மதச்சார்பற்ற' நியாயங்கள் தெரியுமளவுக்கு, யூத வெறுப்பின் 'நியாயங்கள்' தெரியமளவுக்கு, தக்கலை பீரப்பாவின் பாடல்கள் தெரிவதில்லை.
எனவேதான் சராசரி இந்திய இஸ்லாமிய இளைஞனுக்கு பாலஸ்தினீய பயங்கரவாதிகளுக்கு ஏற்படும் பரிவு காஷ்மீரில் அல்லாவின் புனிதப்படை என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்த அப்பாவி முஸ்லீம்கள் குறித்து (குறைந்தபட்ச வருத்தமோ கோபமோ கூட) ஏற்படவில்லை. ஆனால் நாம் அனைவருமே அந்த பாரத இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தலைவணங்க கடமைப்பட்டிருக்கிறோம்.


அடுத்ததாக 28 வயது சுதீர் குமார் புந்திர் மற்றும் அவரது சகோதரர் 18 வயது சகோதரர். சுதீர் ரயில்வே எஞ்சீனியர். காஸிகுந்த்-பாராமுல்லா புகைவண்டி இணைப்புப்பணியில் பணியாற்றி வந்தவர்.அவரையும் அவரை காண வந்த அவரது சகோதரரையும் ஷகீன் என்னும் வெறியனின் தலைமையில் இயங்கும் லக்ஷர்-ஈ-தொய்பா வெறியர்கள் கடத்திச் சென்றனர். 50 இலட்சம் ரூபாய் மீட்புத்தொகையாக கேட்ட இந்த வெறியர்கள் கடத்திச் சென்ற இருநாட்களுக்கு பின்னர் ஜூன் 25 ஆம் தேதி அவர்களை கொன்றனர். கழுத்துகளை வெட்டி. உலகெங்கும் இந்த கழுத்து வெட்டும் ஜிகாதி பண்பாடு அண்மையில் பிரசிக்தி வருகிறதென்றாலும் காஷ்மீருக்கு இது மிகவும் பழைய ஒன்று என்றுதான் கூறவேண்டும். பாரத பண்பாட்டில் சிறிது அதீத ஈடுபாடு கொண்ட சுற்றுலா பிரயாணியான நார்வேஜிய நாட்டு ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓஸ்ட்ரோ 1995 இல் அல்-பரான் (இன்று இந்த அமைப்பின் பெயர் ஹர்கத்-உல்-முஜாகிதீன்) அமைப்பினால் கழுத்து சீவப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட அவர் உடல் அல்-பரான் என்ற எழுத்துக்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதுதான் சர்வதேச அளவில் காஷ்மீரில் நடைபெறும் ஜிகாதி காட்டுமிராண்டித்தனத்தை வெளி உலகிற்கு கொண்டுவந்தது. ஆனால் இதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி பல காஷ்மீரி பண்டிட்களும் சரி, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தலைவணங்க மறுக்கும் இஸ்லாமியர்களும் சரி இந்த காட்டுமிராண்டித்தனத்தை அனுபவித்தே வருகின்றனர். 2001 இல் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு ஹிந்து கோவில் பூசாரிகள் தலை துண்டிக்கப்பட்டது. இம்முறை கொல்லப்பட்ட குஜார் இன மக்களில் ஐந்து வயது ஸாகிதாவும் அவளது நான்கு வயது தம்பியும் அடக்கம்.


இன்று மிகத்தெளிவாக லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதி என நிரூபிக்கப்பட்டுள்ள இஷ்ரத்துக்காக முதலைக்கண்ணீர் வடித்த அரசியல்வாதிகளும், 'மதச்சார்பற்ற' பத்திரிகையாளர்களும் இன்ன பிற இஸ்லாமிய மேன்மைவாதிகளும் ஸாகிதாவுக்காகவோ அல்லது சுதீர் குமார் புந்திருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீரையும் விடப்போவதில்லை. குறைந்த பட்சம் பாரதிய ஜனதாவாவது தங்கள் தோல்விக்கு யார் காரணம் என குடுமிப்பிடி சண்டை போடுவதை விட்டுவிட்டு இந்த உண்மையான தியாகிகளுக்காக தங்கள் மரியாதையையும் அஞ்சலியையும் காட்டி நாடு முழுவதும் அஞ்சலி கூட்டங்கள் நடத்தலாம். மீண்டும் இந்த தியாகிகளுக்கு சிரம் தாழ்த்துவோம். இந்த எழுதப்படாத தியாகங்களே நம் தேசத்தை வாழவைப்பவை. நம் ஒவ்வொரு செயலும் இத்தியாகங்களால் சுக வாழ்க்கை வாழும் நம்மை இத்தியாகங்களுக்கு சிறிதளவேனும் தகுதியுடையவர்களாக்கட்டும். ஜெய் ஹிந்த்!



('தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்' எனும் தலைப்பில் திண்ணை இணைய-இதழில் (ஜூலை 22, 2004) வெளியான கட்டுரை இது. நம் முற்போக்குகள் இன்ன மதச்சார்பற்ற ஜீவராசிகளின் உலகில் இத்தகையோர் வாழ்க்கைக்கு எவ்வித மதிப்புமில்லை என்பதால் அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஹிந்துத்வ பாசிஸ்ட்களாவது' அவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் பலிதானங்களை மதிக்கவேணும் என்பதற்காகவே இக்கட்டுரை.)
நன்றி: திண்ணை.காம்

Monday, October 10, 2005

காஷ்மிரில் இன்று ஒரு படுகொலை-நிலநடுக்கத்தால் அல்ல!




ஜிகாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு இந்த நிலநடுக்க அழிவுக்காலத்திலும் காஃபீர்களைக் கொல்லுவதுதான் மானுடசேவை போலும். பாரத இராணுவமும் பாரதம் அனைத்தும் ஒன்றாக ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் இறந்த-பாதிக்கப்பட்ட மக்களுக்காக -அவர்கள் ஹிந்துக்களோ இஸ்லாமியர்களோ- மன வேதனையுடன் உதவத் துடிக்கின்றனர். போலி-மதச்சார்பின்மை எனும் பர்தாவை போட்டுக்கொண்டு இஸ்லாமிய வெறியர்களுடன் கை கோர்க்கும் கீழ்த்தரங்கள் வில்லனாக சித்தரிக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமல்ல மிக மோசமாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கும் உதவ நேசக்கரம் நீட்டியுள்ளார். ஆனால் ஜிகாதி வெறி பிடித்தலையும் கீழ்த்தர ஜென்மங்களுக்கோ இந்த வேளையும் கூட காஃபீர்களான ஹிந்துக்களை கொல்லும் வேளைதான் போலும். ஜம்மு காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில் இரு குடும்பங்களைச்சார்ந்த 10 ஹிந்துக்கள், குழந்தைகள் உட்பட, கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். முன்ஷி ராம் வீட்டிற்குள் வந்து உணவருந்தி விட்டு ஹிபுல் முஜாகிதீன் எனும் ஜிகாதி அமைப்பினைச் சார்ந்த மிருகங்களை விட கேவலமான இந்த ஜென்மங்கள் (ஹிஸ்புல் முஜாகிதீன் ஜாமயத்-எ-இஸ்லாமி எனும் அமைப்பின் வளர்ப்பினங்கள். 'பீஸ்-அமைதி' என்கிற பெயரில் கண்காட்சிகளை தமிழ்நாட்டில் நடத்துவதில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் இந்த ஜாமயதி இஸ்லாமி அமைப்பின் க்ளோன்கள்தான்.) முன்ஷிராமையும் அவரது மகன்களையும் அவரது உறவினரையும் கழுத்தை வெட்டிக் கொன்று தங்கள் 'அமைதி-மார்க்க' வெறியை தணித்திருக்கின்றன. மீண்டும் 'அமைதி மார்க்கப் பற்று' விறைப்படைந்து விட்டது போலும். பின்னர் மோரா-காபர் எனும் கிராமத்திற்கு சென்று இந்த மார்க்கவெறியும் இரத்தவெறியும் பிடித்தலையும் மனிதத்தன்மையற்ற கீழ்த்தரங்கள் கர்த்தார் சிங் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவருடைய மகன்களையும் கொன்றுள்ளன. இந்த கொலைவெறியாட்டத்திற்கும் ஒரு ஜிகாதி சப்பைக்கட்டு இருக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும் படுகொலைகளுக்கு அத்தி பூத்தாற்போல என்றாவது ஹிந்துக்கள் வெகுண்டுவிட்டால் 'ஹிந்து பாசிசம்' என வாய் கிழிய ஓலமிடும் முற்போக்கு அஃறிணைகளே எங்கே போனீர்கள்? எங்கே உங்கள் மனித நேயம் போற்றும் தலையங்கங்கள்? எங்கே புதைந்துள்ளன உங்கள் முகங்கள்? எங்கே கலைந்து போயின உங்கள் முகங்களில் பூசப்பட்ட மத நல்லிணக்க அரிதாரங்கள்? ஹிந்துக்களே நீங்கள் எந்த சாதியாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, என்னதான் உயர்ந்த தத்துவங்களையும் ஆன்மிக உண்மைகளையும் உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு அளித்து அதன் வாரிசுகளாக நீங்கள் வாழ்ந்து வந்தாலும் சரி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் - நீங்கள் ஒரு அரசியல் சக்தியாக மாறாவிட்டால் - நாளை உங்கள் குழந்தைகளும் கழுத்து கிழித்து வெட்டிக் கொல்லப்படலாம், அதைவிட மோசமாக சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் விலங்குகளை விட கீழான நிலையில் வாழலாம். அன்றைக்கு, இன்று உங்களிடையே முற்போக்கும் இடதுசாரி அறிவுஜீவித்தனமும் பேசிக் கொண்டு வாழும் முற்போக்குகள் உங்களுக்காக வாயை அசைப்பது கூட அதிசயம். இன்று திபெத்தியர்களையும், பங்களாதேஷ் தலித் ஹிந்துக்களையும் பௌத்த வனவாசிகளையும் நாம் மறந்து வாழ்வதை போல அன்று நமது கொல்லப்பட்ட குழந்தைகளை அல்லது அகதி முகாம் வாழ் நம் குழந்தைகளை இந்த உலகம் கண்டு கொள்ள போவதில்லை.


பத்து ஹிந்துக்கள் படுகொலை: பிடிஐ செய்தி அக்டோபர் 10, 2005

Sunday, October 09, 2005

மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்ஸும்-1


ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினரின் அனுபவம்


"...மனு பற்றி நான் தெளிவுபடுத்தினேன். உரிய நேரத்தில் விவாதம் நிறைவுற்றது. அதன் பின்னர் சாதாராவின் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்னைச் சந்தித்தார். அவர் கூறினார்," மனுவைப் பற்றி தங்கள் கருத்து இதுவானால் உங்களை ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பதவியிலிருந்தும் விலக வேண்டியிருக்கும்." அவர் மிகத் திட்டவட்டமாக தன் கருத்தை எனக்கு தெரிவித்தார். அவரது பேச்சில் சோஷலிசப் போலித்தனமில்லை. ...காரணம் ஆர்.எஸ்.எஸ் மனுவாதி அமைப்பு என்பது அவருக்கு உறுதியான கருத்து."


தாழ்த்தப்பட்ட சகோதரர் ஆர்.எஸ்.எஸ் மனுவாத அமைப்பா இல்லையா என்பதைக் குறித்து தமது அனுபவங்களையும் சிந்தனைகளையும் சர்ச்சைகளையும் உள்ளரங்க நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். திறந்த மனதுடன் தயாராகுங்கள் ஒரு சூடான விவாதத்திற்கு!

Saturday, October 08, 2005

திருவாசகம்: கண்ணப்பன் ஒப்பதோர்...



Vishnu Temple, Parakkai, Kanyakumari district


கண்ணப்ப னொப்பதோ
ரன்பின்மை கண்டபின்
னென்னப்ப னென்னொப்பி
லென்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே
சென்றூதாய்! கோத்தும்பீ!


[கண்ணப்ப நாயனார் தூண் சிற்பம்; விஷ்ணு கோவில் உட்பிராகாரம், பறக்கை கிராமம், கன்னியாகுமரி மாவட்டம்]

Wednesday, October 05, 2005

இன்று வள்ளலார் ஜெயந்தி


Vallal emperuman
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி
குறைகள் இருப்பினும் குற்றங்கள் செய்யினும் நம் அனைவர் வாழ்வுகளிலும் ஜோதி வள்ளல் கருணையால் உள்ளொளி ஓங்கிப் பிரகாசிக்க இந்நாளில் வேண்டும்
-அரவிந்தன் நீலகண்டன்
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ் ஜோதி
அனைவருக்கும் வள்ளலார் ஜெயந்தி வாழ்த்துக்கள்

Monday, October 03, 2005

கேட்டீங்களா! கேட்டீங்களா! பத்தாவது 'கோளுக்கு' 'சந்திரனை' கண்டுபிடிச்சிருக்காங்களாம்!




மேலே இருக்கும் படத்தில் (கடிகாரத்தின்) மூன்று மணி இடத்தில் இருக்கிற புள்ளிதானுங்க அது.WM கெக் (Keck) வானவியல் மையத்திலிருந்து கெக்-II தொலை நோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்த சமாச்சாரம் பற்றிய தகவல்: உத்தேசமாக இக்'கோள்' பூமியின் அளவில் 1/5 பங்கு இருக்கும். அதன் 'துணைக்கோள்' நம் சந்திரனுக்கு 1/8 அளவாம். மேலேஇருக்கும் படத்தில் மேலும் விவரங்களை நேரடியாக அறிய பயணியுங்கள்: இங்கே

Saturday, October 01, 2005

பரிணாம பார்வையில் குஷ்பு-சர்ச்சை குறித்து




திண்ணை இணைய இதழ் எழுத்தாளர் சின்னக்கருப்பன் அவர்கள் முன்வைத்துள்ள இக்கட்டுரை இப்பிரச்சனையை பரிணாமப்பார்வையில் ஆராய்கிறது. ஒரு சுவாரசியமான தற்செயல் நிகழ்ச்சியாக இக்கட்டுரையை நான் பார்ப்பதற்கு முன்னதாக அன்றைய நாள் காலையில் திருவனந்தபுரத்தில் சூசன் ப்ளாக்மோரின் 'மீம் மெஷின்' எனும் நூலை வாங்கி இருந்தேன். மீம்கள் எனும் சுய-பெருக்கிகளின் மூலம் (self replicators) நம் கலாச்சார/உளவியல் நிகழ்வுகளை பரிணாமப்பார்வையில் ஆராய்கிறது அந்நூல். அன்று மாலை திண்ணையில் சின்னக்கருப்பனின் கட்டுரை. நமது சூழலில் நடந்துள்ள குஷ்பு-சர்ச்சையை அதே பரிணாம சட்டகத்தில் ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.


கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்

சின்னக்கருப்பன்

உழைக்கும் நடிகைகள் கூலி கேட்டால், அவர்களை விபச்சாரிகள் என்று தங்கர் பச்சான் சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார். மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு உட்பட்ட நடிகைகள் கேட்காமல் இருந்திருந்தால் அவர் மன்னிப்பு கேட்டிருந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலுறவு கொள்கிறார்கள், அதில் தப்பில்லை. ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். இதிலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கோரியதாலேயே மன்னிப்பு கேட்டார்.

தங்கர் பச்சானுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் நின்றிருக்கின்றன என்பது தெளிவு. அதனாலேயே குஷ்பு சொன்னதை பிடித்துக்கொண்டு அவர்மீது பாய்ந்தன என்பதும் தௌதவு. சினிமா என்ற கலையே நம் அரசியலை நிர்ணயிக்கிறது என்று ஆதங்கமெல்லாம் இல்லை எனக்கு. ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுகிறது. இது வன்முறையற்றதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே இதனை ஆதரிக்கவும் நான் (தனிப்பட்ட முறையில்) செய்கிறேன்.

கலாச்சாரம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. சமூக நீதிகள் என்பவையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தின் சமூக நீதிகள் அடுத்த காலத்தின் சமூக நீதிகளாக இருக்காது. அதனை உணர்ந்து கொண்டிருப்பது இந்து சமூகம். பல தெய்வீக விக்கிரகங்களை சுற்றி ஒரு அரைவட்ட வேலைப்பாடு இருக்கும். அதனைப் பற்றி ஒரு சில்பி எனக்கு விளக்கினார். உருவமற்ற சிதிலமான நிலையிலிருந்து மெல்ல மெல்ல ஒழுங்கை நோக்கி உச்சத்தை நோக்கி செல்கிறது சமூகம், உயிர் ஆகியவை. அது பின்னர் மீண்டும் மெல்ல மெல்ல சிதிலமாகி ஒழுங்கற்ற உருவமடைந்து அழிந்து மறைகிறது என்று சொன்னார். இதன் பின்னால் இறைவனின் திருத்தாண்டவம் இருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து மாறும் சமூக நீதிகளை சொல்லவந்த ஆச்சார்யன், ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு மனு என்று சொல்கிறான். மனுநீதியின் இறுதிப்பகுதியிலும், மனுநீதி விதிகளை சேர்க்கவோ, நீக்கவோ மாற்றவோ வழிமுறைகளை சொல்லும் இடத்தில், அறம் கற்றறிந்த நல்லோர் கூடி அதனைச் செய்ய கோருகிறது. அறம் எனும் தர்மம் எது என்பது திருக்குறளிலிருந்து பாரதம் என்று பல புத்தகங்களில் வலியுறுத்தப்படுவது, "மக்களின் செழுமையான நல்வாழ்வுக்கு எது வழியோ அது" என்று இயம்பப்படுகிறது.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற பரிணாமவியலாளர்கள் பார்வையிலும் ஒரு சமூகத்தின் கலாச்சார பரிமாணங்களை பார்க்க முடியும். எந்த சமூக விதிகள் அந்த சமூகம் தொடர்ந்து நீடித்திருக்க உதவுகின்றனவோ அவை தங்கும். எந்த சமூக விதிகள், ஒழுங்குகள் அந்த சமூகத்தை அழிக்கின்றனவோ. அந்த சமூகத்தோடு அவையும் அழியும். இன்றைய சமூக விதிகள் பரிணாமத்தின்பால் நம்மிடம் வந்தவை. அவைகள் நம்மிடம் இருக்க சமூக ரீதியான, வரலாறு ரீதியான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை இன்றைய கலாச்சார புரட்சியாளர்களோ, அல்லது கலாச்சார காவலர்களோ முழுவதுமாக புரிந்து கொள்வதில்லை. வெற்று கோஷங்களாலும், பண்டைய வாழ்வின் மீதான பாசங்களாலும், தனிமனித ஆர்வங்களாலும் நிலைப்பாடு எடுக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இன்று நிலைப்பாடுகள் எடுப்பதையும் பரிணாம இயங்கியலின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன்.

உதாரணம் மூலம் விளக்க முயல்கிறேன்.

ஒருவன் "பரந்த மனதுடையவனாக" தன்னுடைய மனைவியை சுதந்திரமாக அனுப்பி யாரிடமிருந்து வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள் என்று அனுப்புகிறான். மற்றவன், "குறுகிய மனதுடையவனாக" தன்னுடைய மனைவி தன்னிடமிருந்து மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறான். யாருடைய சந்ததி வாழும்? எவன் "குறுகிய மனதுடையவனாக" இருக்கிறானோ அவனது சந்ததிதான் வாழும். "பரந்த மனது" ஜீன் அவனோடு அழிந்துவிடும். அடுத்த தலைமுறையில் "குறுகிய மனதுடையவர்களின்" கூட்டமே அதிகரித்திருக்கும்.

மற்றொரு ஆண் புலியோடு செல்லும் ஒரு பெண்புலியை விரும்பும் மற்றொரு ஆண்புலி அந்த ஆண்புலியோடு மோதுகிறது. அந்த மோதலின் விளைவில் அந்த ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.

இது நம்மிடம் இன்னும் இல்லை? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள்? நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன. சமூகத்தின் விதிகளுக்கும் ஜீன்களின் கட்டளைகளுக்கும் நடுவே சிக்கி, ஒரு சிலர் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். ஜீன் செய் என்று சொல்லும் விஷயங்களை ஏன் சமூகம் செய்யாதே என்று சொல்கிறது? ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து. ஆனால், மனிதர்கள் சமூகம் என்று இணையும்போது, அந்த சமூக விதிகள் நமக்கு மற்றொரு வகையில் உதவுகின்றன. உழைப்பு பங்கீடு, ஒன்றுபட்ட சமூகம் ஆகியவை நமக்கு நம் சந்ததிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. ஆனால், இப்படிப்பட்ட உழைப்பு பங்கீடு, ஒன்று பட்ட சமூகம் ஆகிய கோரிக்கைகள் நம்மை ஒரு சில சமூக விதிகளை ஒப்புக்கொள்ள கோருகின்றன. தனியொரு மனிதனாக இருக்கும்போது உன் ஜீன் கோரிய படி நடந்தது போல இப்போது நடக்க முடியாது.

கட்டற்ற பாலுறவு வேட்கை, அடுத்தவனை கொலை செய்தாவது தன் வாழ்வுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வது ஆகியவை விலங்காக இருக்கும்போது உயிர்கள் தங்கள் சந்ததியை அதிகரிக்க உதவியிருக்கும். ஆனால், அதே விதிகளை ஏற்றுக்கொள்வது சமூக விலங்காக ஆகும்போது அந்த சமூகத்தை குலைத்துவிடுகின்றன. ஆகவே புதிய சமூக விதிகள், கடமைகளையும் உரிமைகளையும் தனித்தனியே பங்கிடுகின்றன. எப்படிவேண்டுமானாலும் தனது ஜீன்-தொகுப்பை அடுத்த சந்ததிக்கு அனுப்பி வைக்கலாம் என்பது விலங்கின ஒழுங்கு.

அதன் பல்வேறு கூறுகள் நிச்சயம் மனிதர்களிடம் இருக்கின்றன. அவற்றை ஒதுக்கிவிடுவது நமக்கே நாம் எழுதும் மரண சாசனம். சமூக விலங்காக மனிதன் ஆகும்போது, மனிதனுக்கு தன் சந்ததியை பாதுகாப்பாக எதிர்காலத்துக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே சமூகங்களின் தோற்ற காலத்தில் பல்வேறு முறைகள் இருந்திருக்கின்றன. சமூகத்தின் உற்பத்தி வழிமுறைகளும், உணவு கிடைக்கும் சூழலும் மாற மாற சமூக விதிமுறைகளும் மாறிக்கொண்டே போகின்றன. கால் பார்க்கக்கூடாது, தன்னுடைய உடலை தானே பார்க்ககூடாது என்ற அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாகவும் சனாதனமாகவும் இருந்த ஐரோப்பா, உணவும் இருப்பிடமும், சமூக செல்வமும் அதிகரித்துவிட்டபின்னர் உடலுக்கு கொடுத்துவந்த புனித உணர்வையும், பாவ உணர்வையும் ஒரு சேர இழந்தது.


ஆண்களால் மட்டுமே முடிகின்ற உடலுழைப்பு தேவைப்படும்போது, ஆண் தனது உடலுழைப்புக்கு ஈடாக பெண்ணின் சந்ததி முழுவதும் தனதாக மட்டுமே இருக்க வேண்டுமென்று கேட்கிறான்."ஆணாதிக்கம்" என்று இன்று அழைக்கப்படும் பல்வேறு கலாச்சார கூறுகளுக்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. இதுவே பல கணவர் முறை மறைந்து பலதார முறை மத- சமூக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம்.பெண்ணால் தனக்குத் தானே சம்பாதித்து உணவு சேர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை வரும்போது, ஆணின் இருப்பு தேவையற்றதாக ஆகிறது. ன்முறையிலிருந்தோ, மற்ற ஆண்களின் பாலுறவு வேட்கையிலிருந்தோ ஒரு பெண் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாம், அல்லது சமூகம் காப்பாற்றுகிறது என்பதும், தனக்குத்தானே உணவு சேர்த்துக்கொள்ளலாம், தன் சந்ததிக்கும் உணவை சேர்த்துக்கொள்ளலாம் என்ற நிலை வரும்போது ஆணின் இருப்பை அநாவசியமானதாக ஆகிறது.


இங்கு ஆணாதிக்க கூறுகளின் வலு குறைய ஆரம்பிக்கிறது. சென்ற நூற்றாண்டில் பெண் வேலைக்குப் போகலாம், பெண்ணுக்கு ஓட்டு போன்றவைகளுக்கு எதிர்ப்பு வந்ததன் அடிப்படையாக பல மத-சமூக பிற்போக்காளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் பெண்ணுக்கு ஆண் துணை தேவையிருக்காது என்பது பேசப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.அறிவியல் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆண் துணையில்லாமலேயே பெண் இன்னொரு பெண்ணின் மரபணு கூறுகளோடு தனது மரபணு கூறுகளை இணைத்து இன்னொரு பெண்ணை பிறக்க வைக்க முடியும் என்று வரப்போகிறது. அப்போது பரிமாணவியலின் பார்வையில் ஆணே தேவையற்றவன். Man will be extinct. (ஆனால், அந்த அறிவியல் கொடுத்த உபகரணங்களை மட்டுமே நம்பி ஆணை extinct பண்ணிய பின்னால், அந்த உபகரணங்களின் உற்பத்தி எந்த காரணத்தினாலோ தடைப்பட்டால், மனித இனமே காலி)

ஆனால், இன்று அந்த நிலை வந்துவிடவில்லை. இன்று பெரியாரின் பல்வேறு சமூக "புரட்சிகளில்" எந்த புரட்சியை மக்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று பார்த்தாலே நமக்கு பரிணாமம் எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரியும். பெண் ஏன் அடிமையானாள் என்ற கட்டுரையை படித்து எல்லோரும் தங்கள் பெண்களை கட்டற்ற வாழ்வு வாழ தூண்டவில்லை. திருமணம் செய்விக்காமல் இல்லை. ஆனால், தங்கள் வாழ்க்கை வசதியின் முன்னேற்றத்துக்கு பிராம்மண எதிர்ப்பு தேவை என்று ஒரு இனத்துவேஷத்தை எடுத்துக்கொண்டார்கள். பார்ப்பனிய விழுமியங்கள் என்று பெரியார் தூற்றிய அத்தனை சமூக விழுமியங்களையும் (இவை பார்ப்பனிய விழுமியங்கள் அல்ல) அரவணைத்துக்கொண்டு, பார்ப்பன ஜாதி வெறுப்பை மட்டுமே முன்னெடுத்து பெரியாரின் வாரிசுகளாக அறிவித்துக்கொண்டார்கள். கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் ஒரே ஆட்கள்தான். முன் பக்கம் ஒரு ஆள், பின்பக்கம் மற்றொரு ஆள். ஒரே நாணயத்தின் பிரிக்கமுடியாத இரு பக்கங்கள்.

நன்றி: திண்ணை.காம்