அகப்பயணம்

Thursday, November 30, 2006

பெண் : கணவனின் உணவு

கேள்வி: இஸ்லாமிய சகோதரிகள் 'பர்தா' அணிய அடிப்படைக்காரணமென்ன? அனைத்திலும் பெண்களுக்கு சமத்துவம் கோரும் இந்நாளிலும் இது தேவையா?

பதில்:
அனைத்திலும் - ஆம் - அனைத்திலும் பெண்கள் 'சமத்துவம்' கோரும் இந்நாளில்தான் பர்தா மிகமிக தேவை. உடலைப் போர்த்த மட்டுமல்ல உள்ளத்தைப் போர்த்தவும். உணவை திறந்து வைத்தால் தூசி படியும். - மண்ணின் வழி. பெண்ணைத் திறந்து வைத்தால் மாசு படியும் கண்ணின் வழி. அதனால்தான் இரண்டையுமே மூடி வைக்க வேண்டும். அதிலும் பெண் - ஒரு கணவனால் மட்டுமே உண்ணப்பட வேண்டிய உணவல்லவா? அதனால்தான் அது இன்னமும் அதிகமாய் சுத்தமாய் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது.

நன்றி: முஸ்லிம் முரசு (ஆகஸ்ட் 1993)

வேதாளம் சொன்ன சவூதி விமான டிக்கட் கதை


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே நீ யாரையோ திருப்தி செய்வதற்காக இந்த வேலையை செய்வதாக தெரிகிறது. அவர் உண்மையில் எப்படிபட்டவரோ! இப்போது மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர் போலவும், இனிய மார்க்கத்தவர் போலவும், அமைதியை விரும்புபவர் போலவும் தெரியலாம். ஆனால அவரது கைக்கு வலிமை ஏற்பட்டதும் சின்ன விசயங்களில் கூட உன்னுடைய சுவடே இல்லாமல் அழித்து விடலாம். சாதாரண விசயங்களில் கூட உன்னை நினைவுபடுத்தும் சின்ன தடையம் கூட இல்லாமல் செய்துவிடலாம். இது குறித்து நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன்" என்று கதை சொல்ல தொடங்கியது.


"பின்னொரு காலத்திலே சவூதி சவூதி என்றொரு பட்டணம் உண்டு. அந்த பட்டணம் அமைதியின் திருமார்க்கத்தின் சட்டங்கள் உன்னதமாக நிறைவேற்றப்படும் நாடு என அமைதி மார்க்கத்தவரால் கருதப்படும் நாடு ஆகும். புனிதப்போராளிகளான அமைதி மார்க்கத்தவர் இன்னொரு மார்க்கத்தவரும் சிலுவைப் போராளிகளுமான அன்பு மார்க்கத்தவர் தேவனின் ஒரே குமாரன் என வணங்குகிறவரையும் தம்முடைய இறைவாக்கினர் அதாவது நபி என சொல்லுவதுண்டு. இதனை அன்பு மார்க்கத்தவர் அவமானமாக நினைப்பதுண்டு. ஆனால் அமைதி மார்க்கத்தவரோ அன்பு மார்க்கத்தவரிடம் தாம் அந்த தேவகுமாரனை இறைவாக்கினர் என்று மிகவும் மதிப்பதாகவே சொல்லுவதுண்டு. டாவின்ஸி கோட் என்றாகப்பட்ட ஒரு நூல் வந்தபோது அந்த நூல் தேவகுமாரன் என தாம் வழிபட்ட கடவுளை பழித்ததாக அன்பு மார்க்கத்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது, அந்த நூல் தங்கள் இறைத்தூதர் ஒருவரை பழித்ததாக அன்பு மார்க்கத்தவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்படியாக இந்தியா என்கிற தேசத்திலே படம் காட்டி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிற இவர்களின் ஆதர்ச தேசமாக சவூதி விளங்கியது. அழுத்தி கேட்டால் 'உள்ளத்துக்குள் ஆதர்சம். முழு ஆதர்சம் அல்ல' என்று அமைதி மார்க்கத்தில் அமைதியை அதிகமாக விரும்புகிறவர்கள் சொல்வார்கள்."

"அப்படியாக இருக்கும்போது 1988 என்கிற வருசத்தில் அல்லது அதற்கு ஒன்றிரண்டு வருசங்களுக்கு இடையில் வானம் வழியாக சவூதிக்கும் சவூதியிலிருந்தும் செல்லும் பயணிகளுக்கு விமான டிக்கட்கள் வழங்கப்பட்டன. அதனை கவனித்த அமைதி விரும்பி மதத்தவர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த டிக்கட்டுகளை கொண்டு சென்று சவூதியில் அமைதி மார்க்க பண்பாட்டு காவலர்களிடம் எடுத்து சொன்னார்கள். உடனே தனது தவறை உணர்ந்த சவூதி அரசும் அந்த டிக்கட்டுகளை திரும்பப் பெற்று அதன் விநியோகத்தையும் நிறுத்தி புதிய டிக்கட்டுகளை பிரசுரித்து விநியோகம் செய்தது."

வேதாளம் இந்த கதையைக் கூறி அந்த இரண்டு டிக்கட்டுகளையும் காலவெளியில் டெலிபோர்ட் செய்து அவன் முன்னால் காட்டியது.
பின்னர் வேதாளம் விக்கிரமாதித்தனிடம்,
"ஏ அரசனே இதோ அந்த இரு டிக்கட்டுகளையும் பார். இந்த டிக்கட்டுகளில் அமைதி மார்க்கத்துக்கு புறம்பான அமைதிக்கு புறம்பாக பிரசுரிக்கப்பட்டிருக்கும் விசயத்தை நீ கண்டுபிடித்து சொல். விடை தெரிந்தும், நீ அமைதியாக இருந்தால் நான் உன் தலையை சுக்கு நூறாக சிதறடிப்பேன். அல்லது அமைதி மார்க்கத்தவர்கள் காஃபீர்களின் தொண்டைகளைக் கிழிப்பது போல கிழித்து விடுவேன்."
என்றது.

"அந்த டிக்கட்டுகளை கூர்ந்து நோக்கிய விக்கிரமாதித்தன் மேலே உள்ள டிக்கட்டில் s மற்றும் a ஆகிய எழுத்துகளுக்கு நடுவே உள்ள பகுதி ஒரு சிலுவை போல இருக்கிறது. இது சிலுவைப்போராளிகளான 'அன்பு' மார்க்கத்தவர்களின் சின்னம் என்று சில அதீத அமைதி விரும்பிகள் கண்டுபிடித்திருக்கக் கூடும். இது யூத-அமெரிக்க சதி என்று கூட எண்ணியிருக்கக் கூடும். எனவேதான் அந்த டிக்கட் அமைதி மார்க்கத்துக்கு எதிரானது என தடை செய்யப்பட்டு புதிய டிக்கட் விநியோகிக்கப்பட்டது."
என்று விக்கிரமாதித்தன் பதிலளித்தான்.


விக்கிரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக்கிளம்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


 • கதை அமைப்பு : நன்றி. அம்புலிமாமா
 • தகவல் நன்றி: பெயர் கூற வேண்டாமென்று கேட்டுக்கொண்ட முஸ்லீம் சகோதரருக்கும் அவர் தந்த இதழ்: 'முஸ்லீம் முரசு' ஏப்ரல் 1988 -க்கும்

Tuesday, November 28, 2006

புத்தனுக்கு முச்சந்தியில் முட்டாள் பட்டம்


புத்த சிலையை முச்சந்தியில் கட்டி வைத்து முட்டாள் பட்டம் கொடுத்த கொலைகார காட்டுமிராண்டி கும்பல் எதுவோ?
 • அ) பார்ப்பன வந்தேறி ஆரிய கும்பல்
 • ஆ) பார்ப்பன அடிவருடிகள்
 • இ) ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்
 • ஈ) நிச்சயமாக சைவர்கள்

சரியான பதிலுக்கு கொஞ்சம் கீழே வாருங்கள்
மன்னித்துக்கொள்ளுங்கள். சீன கலாச்சார புரட்சியின் போது அண்ணன் மாசேதுங் ஆணைபப்டி கம்யூனிஸ்ட் தோழர்களால் 'போட்டு தள்ளப்பட்டு' அவமானப்படுத்தப்பட்ட புத்த சிலைகள் தாம் நீங்கள் பார்த்தவை.
நன்றி:'Red color News Soldier' by Li Zhensheng, 'India Today' டிசம்பர் 4 2006.

Monday, November 27, 2006

முருகப்பிரியரை தூற்றும் சுவனப்பிரியன்

அன்புள்ள சகோதரர் சுவனப்பிரியனுக்கு,


என்னை மட்டம் தட்ட ஒரு இறைவனடி சேர்ந்த முது பெரும் தமிழ் ஞானியை, மாபெரும் முருக பக்தரை தவறுதலாக மேற்கோள் காட்டியுள்ளீர்கள். மறைந்த அம்மாமனிதரை தூற்றுவதற்கு சமமாகும் செய்கை இது.ஆனால் என்னைப் போன்றவரல்லர் அந்த மகான். 'செந்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்' வடலூர் வள்ளலை வணங்கி வாழ்ந்த அப்பெருந்தகையின் புண்ணிய நினைவு அறியாமல் நீங்கள் செய்திட்ட இப்பிழையை மன்னித்தருளும்.இனி விசயத்துக்கு வரலாம்.


//சுவனப்பிரியன்:
அந்த அனானி நான்தான் என்று வழக்கமான ஒரு பொய்யை சொல்லியிருக்கிறீகள்//


ஐயா சுவனப்பிரியரே:
நான் எழுதியிருப்பதை நன்றாக படித்து பாருங்கள். நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று: "அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம." ஒரு ஐயத்தை தெரிவித்திருந்தேனே அன்றி உங்களை நீங்கள் தான் போட்டீர்கள் என குற்றம் சாட்டவில்லை. IP அட்ரஸ்க்ளை அரைகுறையாக தெரிந்து கொண்டு அடுத்தவரை குற்றம் சொல்லுகிற மூளையில் ஆப்படித்த ஆசாமி நான் அல்ல. நீங்கள் இல்லை எனில் நல்லது. நீங்களாகவே இருந்தாலும் நல்லது. எதுவானாலும் நீங்கள் கூறுவதை நம்புகிறேன்.

ஆமாம் வழக்கமான பொய் என்கிறீர்களே அது என்ன ஐயா?


 • 1. மெக்கா பூமத்தியரேகையை ஒட்டி இருப்பதாக 'வழக்கமான பொய்' நான் சொன்னதல்லவே. மெக்காவின் தீர்க்க ரேகை 39.49 கிழக்கு என நான் கூறியது பொய்யா? அல்லது மெக்கா பூமத்திய ரேகையை ஒட்டி அமைந்துள்ளது என நீர் கூறியது பொய்யா?

 • 2. இளாவை 'இலா' என்று சொன்னது யார்? நானா? நீங்களா?

சரி விடுங்கள். விசயத்திற்கு வருவோம். சைவ இலக்கியங்கள் மட்டுமே சமணக் கழுவேற்றலைக் குறித்து குறிப்பிடுகின்றன. அதற்கு (சமண இலக்கியங்களில் அல்லது கல்வெட்டு சாசனங்கள் போன்றவற்றில்) புறச்சான்று கிடையாது. அத்துடன் சமணர்கள் தாமே கழுவேறுவதாகக் கூறினார்கள் என கூறியிருந்தேன். அதனை மறுத்து இல்லை. அவர்கள் கழுவேறுவதாகக் கூறவில்லை சைவ அரச நீதியின் படி சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே கூறியுள்ளார் என்பதாக ஒரு ஆதாரத்தை அளித்துள்ளீர்கள். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் கூறிய இந்த 'ஆதாரத்தின்' தன்மையை உங்களுக்கே காட்டிடுகிறேன். நீங்கள் கூறுகிறீர்கள்.
//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//இதோ சிவனருட்செல்வர் நூலில் உண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். நீங்கள் கூறியதற்கும் அதற்கும் இருக்கும் வேறுபாட்டினை நீங்களும் வாசிப்பவர்களும் உணர்ந்து கொள்ளலாம்.
"இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."
இதுதான் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதியது. இப்போது சொல்லும் ஐயா யார் கூறுவது உண்மை?

Saturday, November 25, 2006

குடியரசு தலைவர் கலாம் பேருரை

புதுடெல்லியில் நிகழ்ந்த 'Summit of the Powerless' மாநாட்டில் 20-11-2006 அன்று 'National Ambience : A scene of sweat' எனும் தலைப்பில் மேன்மைதங்கிய குடியரசு தலைவர் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள்:

சித்திரகூட புரா (PURA) - மத்திய பிரதேசம்


தீனதயாள் ஆராய்ச்சி மையத்தை (Deendayal Research Institute) ஸ்ரீ நானா தேஷ்முக்கும் (வயது 90) அவரது இயக்கத் தோழர்களும் மத்திய பிரதேசத்தில் சித்திரகூட புராவினை உருவாக்கியுள்ளார்கள்.


தீனதயாள் ஆராய்ச்சி மைய சித்திரகூட புராவில் குடியரசுதலைவர்


பாரதத்தின் கிராம மேம்பாட்டுக்கான ஆகச்சிறந்த முன்னுதாரண மாதிரியை உருவாக்கியுள்ள தனித்தன்மை வாய்ந்த அமைப்பு தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஆகும். சித்திரகூடத்தினை சுற்றியுள்ள கிராமங்களில் தீனதயாள் ஆராய்ச்சி மையம், ஐந்து கிராமங்கள் கொண்ட ஒவ்வொரு தொகுப்பாக, 100 கிராமத் தொகுப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் 50000 மக்கள் வசிக்கும் 80 கிராமங்களில் (16 கிராமத் தொகுப்புகளில்) மேம்பாட்டினி உருவாக்கியுள்ளார்கள்.பாத்னி எனும் கிராமத்தில் தீனதயாள் ஆராய்ச்சி மையம் வளங்குன்றா வளமை கொண்ட மேம்பாட்டினை பாரத மண் சார்ந்த, ,மரபார்ந்த தொழில்நுட்பம் மூலமும், அறிவு அமைவுகள் மூலமும், அந்த உள்-பிராந்திய த்திலேயே கிடைக்கும் திறமையைச் சார்ந்தும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கிராமமும் ஆராய்ச்சியின் மூலம் சுயசார்புத்தன்மையை அடையும் வழிமுறைகள் இந்த மையத்தின் களப்பணிகள் மற்றும் களம் சார்ந்த ஆராய்ச்சிகள் மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.ஸ்ரீ நானாஜி தேஷ்முக்

 • கிராமங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரித்தல்
 • புதிதாக கண்டறியப்படும் விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்
 • கிராம மக்களிடையே அறிவியல்தன்மை கொண்ட நோக்கினை உருவாக்குதல்
 • சுகாதாரத்தினை மேம்படுத்துதல்
 • 100 சதவிகித படிப்பறிவினை மக்களிடையே உருவாக்குதல்

ஆகியவற்றினை குறிக்கோளாக கொண்டு இந்த மையத்தின் திட்டம் இயங்குகிறது.


ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றத்தின் ஒருபகுதியாக கிராம மக்கள் மழைநீர் சேகரிப்பிலும், அந்நீர் மூலம் உணவுதானிய உற்பத்தி, காய்கறி மற்றும் வாசனைச் செடிகளை வளர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவை போக இந்த மையம் இந்த 80 கிராமங்களை முழுக்க முழுக்க வழக்கு வம்புகள் அற்ற கிராமங்களாக மாற்றியுள்ளது.


இந்த சாதனைகள் அனைத்தும் தீனதயாள் ஆராய்ச்சி மையத்தின் 'சமாஜ சில்பி தம்பதிகள்' (சமுதாய சிற்பி தம்பதிகள்) எனும் கோட்பாட்டின் செயலாக்கத்தின் மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது. சமுதாய சிற்பி தம்பதிகளின் ஆற்றுப்படுத்துதல் (counselling) மற்றும் தலையீட்டினால் இந்த சாதனைகள் நிகழ்ந்துள்ளன.


சித்திரகூட புராவிலிருந்து நாம் பெறும் செய்தி என்ன?
சீரிய சீலம் கொண்ட தலைமையும், அந்த தலைமை கொண்ட இயக்கமும் மக்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். சமுதாய அர்ப்பணிப்பு கொண்ட 'சமுதாய
சிற்பி தம்பதிகள்' மூலம் மக்களினை வெற்றி அடைய செய்யமுடியும். இந்த வெற்றியினை உங்களைப் போன்ற ஊடகங்கள் கொண்டாடிட வேண்டும். அந்த வெற்றியின் செய்தியை
நாடெங்கும் கொண்டு செல்வது உங்களைப் போன்ற ஊடகங்களின் கடமை ஆகும்.


பெரியார் புரா


பெரியார் புரா நிர்வாகிகளுடன் குடியரசு தலைவர்

நான் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சென்றிருந்தேன். அங்கேயுள்ள பெரியார் புரா செயல்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வல்லத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கும் மேலாக் கொண்ட 65 கிராமங்கள் கொண்ட தொகுப்பினை புரா அமைப்பின் மூலம் மேம்படுத்தியுள்ளனர். இங்கு மூன்று முக்கிய இணைப்புத்தன்மைகளான
(connectivity) புறக்கட்டமைப்பு இணைப்புத்தன்மை (physical connectivity), மின்னணு இணைப்புத்தன்மை (electronic connectivity) மற்றும் அறிவு இணைப்புத்தன்மை (knowledge connectivity) ஆகியவை உள்ளன. இதன் மூலம் பொருளாதார இணைப்புத்தன்மை உருவாகியுள்ளது. இப்பொழுது பெரியார் புராவின் கீழ் உள்ள ஐந்து கிராமங்களுக்கு Wi-MAX connectivity கிடைத்துள்ளதாக அறிகிறேன். பெரியார் புராவில் சுகாதார நல அமைப்புகள், தொடக்க நிலை முதல் மேல்பட்டப்படிப்பு வரைக்குமான கல்வி மற்றும் தொழில்கல்வி பயிற்சி கூடங்கள், ஆகியவை உள்ளன. இதனால் பெருமளவு வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.பல தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர். அவர்களுக்கு 1500 சுய உதவிக்குழுக்களின் உதவியும் உள்ளது. 200 ஏக்கர் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு அவை விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டிற்காக நிலப்பரப்பு சார்ந்த நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் காட்டாமணக்கு மற்றும் மருந்து செடிகள் ஆகியவற்றினை பயிரிடுகிறார்கள். உயிரி மூலப்பொருட்களிலிருந்து ஆற்றல் உருவாக்குதல், உணவு உற்பத்தி மற்றும் உணவுப்பொருட்களை பதப்படுத்துதல், அனைத்திற்கும் மேலாக விற்பனை மையங்கள் ஆகியவை இயங்குகின்றன. இந்த புரா மாடல் அரசு உதவியற்று இயங்குகிறது.
(பெரியார் புரா இணையதளம்: இங்கே)


அண்மையில் சட்டீஸ்கர் ரய்ப்பூர் மாவட்ட பக்த்தாரா கிராமத்தில் உள்ள புராவிற்கு சென்றிருந்தேன். இந்த புரா அமைப்பு 36000 மக்கள் கொண்ட 22 கிராமங்களை கொண்டது.
விரைவில் இது மிகவும் மேம்பாடுடைய புராவாக மாறிவிடும். நல்ல சாலைகளும், பயோ-டீசல் மற்றும் பேட்றியால் இயங்கும் பேருந்துகளும் 1000 நல்ல தரமான உறைவிடங்களும் 250 படுக்கை வசதிகள் கொண்ட தரமான சுகாதார நலம் அளிக்கும் மருத்துவமனையும், இன்றைய தேதிக்கு சிறந்த கல்வியை அளித்திடும் தயானந்த் ஆங்கிலோ வைதிக் இயக்க
பள்ளிக்கூடமும் மருத்துவ சேவைக்கான பயிற்சி பள்ளியும் உள்ளன. பெரும் தொழிற் குழுமங்கள் இந்த புராவிற்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் கட்டமைப்புகள் அளிப்பதாக
கூறியுள்ளன. ...


இதுவரை புரா (PURA - Providing Urban amenities in Rural Areas) ஒரு நடைமுறை சாத்தியமாக மாறி வருவதை கண்டோ ம். வெவ்வேறு மாநிலங்களில், சீலமான தலைமை
மூலமும், ஒரு பொறியியல் கல்விசாலையில் உத்வேகத்தின் மூலமும், ஒரு மாநில அரசின் முனைப்பினாலும் புரா சாத்தியப்படுவதைக் கண்டோ ம். அடுத்ததாக தரமான மின்சார ஆற்றல் 18000 கிராமங்களை சென்றடையும் போது அது மக்களுக்கு (முன்னேறுவதில்) உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் எவ்வாறு அளிக்கிறது என்பதனை குஜராத்தில் காண்போம்.


குஜராத்
11 நவம்பர் 2006 இல் நான் குஜராத்தின் சாம்பனேர் கிராமத்தில் ஜோதி கிராம யோஜனா எனும் திட்டத்தினை தேசத்திற்கு அர்ப்பணம் செய்தேன். இந்த அர்ப்பணிப்பு விழாவில்
ஏறத்தாழ ஒரு இலட்சம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஜோதி கிராம திட்டம் மூலம் குஜராத்தில் 18000 கிராமங்களில் வாழும் 3 கோடி கிராம மக்களுக்கு 24 மணி நேரமும்
மூன்று பேஸ் மின்சாரம் கிடைக்கும். காலத்துடன் இந்த திட்டம் நடைமுறையாக்கப்படும் போது உள்ளூர் வேலைவாய்ப்புகள் பெருகும். சுகாதார சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவை மேன்மை அடையும். கிராம குழந்தைகளுக்கு கணினி கல்வி வசதி கிட்டும்.உள்ளூர் பால் உற்பத்தி பெருகும். மக்களின் வாழ்க்கை தரம் நன்றாவதுடன், கிராமத்திலிருந்து நகரம் செல்லும் போக்கு குறையும். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் நிச்சயமாக குஜராத்தின் 3 கோடி கிராம மக்களுக்கு வலிமை அளிக்கும் திட்டமே ஆகும்....


முழுப்பேச்சையும் காண்கஇங்கே

Friday, November 24, 2006

சம்பந்தரும் வள்ளலாரும் இந்து ஜிகாதிகளா?


சைவ பௌத்த மோதல் ஏன் 'புனிதப்போரா'கிடவில்லை என்று பதில் எதுவும் சொல்ல முடியாத பல ஆதாரங்களுடன் நண்பர் ஜாவா குமார் அவர்களின் அருமையான கட்டுரை ஒன்றை சென்ற பதிவில் போட்டிருந்தேன். அதில் கடைசியாய் இப்படி ஒரு அனானி பின்னூட்டம் வந்தது.


"கமலஹாசனின் அன்பேசிவம் படத்தில் நாசர் பட்டை கொட்டையுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்று அடிக்கொருதரம் சொல்லிக் கொண்டு கொஞ்சமும் கூசாமல் செய்யும் அயோக்கியத்தனங்களை அற்புதமாகப் படமெடுத்துக் காட்டியிருந்தார். அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான்.வெளியே ஆன்மீகம், செய்வதெல்லாம் பிறமத அழிப்பு, அக்கிரமங்கள். ஞானசம்பந்தன் என்ற ஆரியப்பார்ப்பனன் வைதீக இந்துமதம் பரப்ப சமணர்களைக் கழுவேற்றிக் கொலை செய்தது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. இதற்கு இவர்கள் பாடியதை வைத்தே சப்பைக்கட்டு வேறு. கேவலமாக இருக்கிறது."

பதிவில் சொல்லிய எந்த விஷயத்துக்கும் அறிவார்த்தமாக பதில்தராமல் கமலஹாசன் என்ற கீழ்த்தர copycat நடிகனின் படத்தை வைத்து கருத்தை எழுதிய இந்த அனானிக்கு பதில்
தருவது வீண்வேலை என்று விட்டுவிட்டேன். அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம்.
காண்க: http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html
அல்லது இந்த அனானியின் கருத்தினால் தாக்கம் பெற்று எழுதியிருந்தால் குறைந்த பட்சம் அதனை ஒத்துக்கொண்டிருக்கலாம். இரண்டும் இல்லையெனில் it is a case of remarkable coincidence. எதுவாயினும் நன்றி. இது குறித்து விளக்கமாக வெகுகாலமாக எழுத வேணும் என்றிருந்தேன்.


அய்யா சுவனப்பிரியன் மற்றும் அனானி அவர்களே,
மிகத்தெளிவாக இந்துசமய நூல்களிலெங்கும் சமணருக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் வன்மையான நிகழ்வு என்பது சமணர் கழுவேறிய சம்பவமே ஆகும். இதற்கு கல்வெட்டு ஆதாரமோ அன்றி சமண இலக்கிய ஆதாரமோ கிடையாது என்பதனை கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு கழுவேற்றப்பட்டதாக கூறப்படுவோரும் தாமகவே கழுவேறியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா என்பது அடுத்த கேள்வி. நீங்கள் எடுத்து எழுதியிருக்கும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமணர்கள் கழுவேறியதை மட்டும் குறிப்பிட்டுவிட்டு முக்கியமான பாடல் ஒன்றை விட்டுவிட்டீர்கள். அதுசரி. நீங்கள் கட் அண்ட் பேஸ்ட்
பண்ணியிருப்பது எங்கோ எவனோ மிஷிநரி எடுத்த வாந்திதானே. இந்த விஷயம் சம்பந்தமாய் என்னிடம் இருந்த திரு.ஜாவா குமாரின் கட்டுரைகளில் ஆங்கிலத்தில் இருந்த சிலவற்றை விடுத்து தமிழில் இருந்தவற்றை மட்டும் தொகுத்துப்போட்டேன். விடுபட்ட ஆங்கிலக்கட்டுரை ஒன்றில் இந்தக் கேள்விக்கு அவர் அருமையாக பதில் தந்திருக்கிறார்.
அதனை தமிழில் தருகிறேன்:

தெய்வத்திரு ஞான சம்பந்தர் மீது கூறப்படும் இக்குற்றச்சாட்டு எந்த அளவு உண்மை?
நம் திரு ஆதீனங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நம் தெய்வத் திருமுறைகளில் எவ்வித மாற்றமோ சொருகலோ இன்றி காப்பாற்றி வந்த பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். நம் தெய்வத் திருமுறைகள் உண்மையை பகிர்கின்றன.
பாண்டியன் வெற்பினை தணித்த எம்மான் ஆளுடைய பிள்ளையார் தெய்வ தமிழ்ஞான சம்பந்த பெருமான் சமணரை வாதங்களில் வெல்கிறார். அப்போது அமைச்சர் குலச்சிறையார் அவ்வாதத்தில் தோற்போருக்கு என்ன ஆகும் என வினவ அதற்கான பதில் என்ன என்பதனை சேக்கிழார் பெருமான் திருவார்த்தைகளிலேயே கேட்கலாம்: (பெரியபுராணம் பாடல் 798)
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவற்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே - என்று சொன்னார்.

மத வைராக்கியம் கொண்ட சமணர்களை திருஞானசம்பந்தர் கழுவேற்றியதாக கூறித்திரிவோருக்கு ஒரே ஆதாரங்கள் சைவ இலக்கியங்களே. ஆனால் அந்த இலக்கியமே சைவர்கள் சமணர்களை கழுவேற்றியதாக கூறவில்லை. என்றாலும் இவர்கள் இதனை நாணமின்றி கூறித்திரிவர்.


பாட்டுக்குப்பாட்டு தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளமிட்டு தமிழ்ச் சமுதாயத்தை வாழ்விக்க வந்த தேவார முதல்வரான ஆளுடைய பிள்ளையாரை 'ஆரியவெறியனாக்கிய' அரசியலையும் இதில் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்: அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான் - என்று அனானி எழுதியிருப்பதைப் படித்தால் உங்கள் பக்க கும்பலின் (அல்லது ஒரு வேளை உங்களின்) அறியாமையை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அந்த வள்ளலாருக்கே ஞானகுரு சம்பந்தர்தான். அது உங்களுக்குத் தெரியாது. வள்ளலார் எங்கும் வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன்' என்றுதான் அவர் தன்னைச் சொல்லிக் கொண்டது. தன் குருவான சம்பந்தரை'அமண இருள் அற வந்த தெய்வமே' என்றும் அவரே பாடுகிறார்.

 • ஐந்தாம் திருமுறை 009.ஆளுடைய பிள்ளையார்
 • அருண்மாலை செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில் (29)
 • எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும் (30)
 • இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே (31)
 • தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே (32)
போதுமா, இனி வள்ளலாரையும் 'இந்து ஜிகாதிகள்' லிஸ்டில் சேர்த்து விடவும்.


எனக்கு என்ன வருத்தம் என்றால் தமிழ்நாட்டுச் சைவர்களை விட, ஈழத்துச்சைவர்கள் தங்களை சைவர்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு
போலில்லாமல் பாடசாலையில் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் படித்தும் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே இதுபோன்ற அவதூறுகளுக்கு விளக்கம் தர
முன்வருவதில்லையே. ஏன்?

Wednesday, November 22, 2006

திமுக அமைச்சரால் என்ன செய்ய முடியும்?

இது தினகரன்: (21-நவம்பர் 2006)


கடந்த 3-9-2006 அன்று அகில இந்திய செட்யூல்ட் இன இளைஞர் பேரவை மாநில செயலாளர் சங்கரன் தமிழக டி.ஜி.பி, சேலம் மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி இன்ஸ்பெக்டரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தாய், தந்தை இலாத மாணவிகள் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்கள் திடீரென காணாமல் போவது மட்டுமின்றி மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு யாருக்கும் தெரியாமல் பள்ளித் தோட்டத்தில் புதைந்துவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இதே போல ஒரு மாணவியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் வார்டன் இரவு காவலாளி உடந்தையாக இருக்கின்றனர். இறந்து போன மாணவியின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை நடத்த வேணும் என மனுவில் சங்கரன் குறிப்பிட்டிருந்ததாக தங்கம் (ஓமலூர் ஒன்றிய குழு உறுப்பினர்) கூறினார்,


நன்றி: தினகரன் 21-நவம்பர்-2006

சேலம்: நவ.21


ஓமலூர் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 86 பேரை இடமாற்றம் செய்த பின்னர் பள்ளி திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வகுப்புக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினா.

(தினகரன் 21-நவம்பர்-2006)

அமைச்சர் proposes ஆனால் கிறிஸ்தவ சர்ச் disposes.


திமுக அமைச்சருக்கு சேலம் பிஷப் பதிலடி

சேலம் நவ. 22


அமைச்சர் கூறியிருப்பது போல ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் 86 பேரையும் இடமாற்றம் செய்யமுடியாது. இது அரசு பள்ளியல்ல. தனியார் கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இருவரை மட்டுமே இடமாற்றம் செய்யமுடியும் என்று சேலம் மறைமாவட்ட பிஷப் சிங்கராயன் தெரிவித்தார், (தினமலர் நவம்பர்-22-2006)
இது பிஷப் பேட்டியில் இருந்து
...

 • கேள்வி: வகுப்பறையில் இரத்தம், உடைந்த வளையல், பூ இருந்ததாக பள்ளி மாணவி ஒருவர் பேட்டி அளித்துள்ளாரே?
 • பூனை பெருச்சாளியை கடித்ததால் ஏற்பட்ட ரத்தம் அது. உடைந்த வளையல் இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பெண்கள் பள்ளி என்றால் பூ வளையல் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
 • உங்கள் பள்ளியில்தான் பெண்கள் பூ வைக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளதே. எப்படி பூ வந்தது?
 • ...பதில் இல்லை
 • பள்ளிக்குள் மதுபான பாட்டில்க கைப்பற்றப்பட்டுள்ளது எப்படி?
 • இது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. இது தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.
.... (தினமலர், 22-நவம்பர்-2006)

Tuesday, November 21, 2006

இஸ்லாமியர்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச கும்பல் சதி

இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சதியை வெட்ட வெளிச்சமாக்கும் பதிவு இது.
மதச்சார்பின்மைக்கு எதிராக இயங்கும் மிகவும் மோசமான பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் என்கிற வந்தேறி பார்ப்பன கும்பல்தான். எனவேதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்காக குரல் கொடுக்கும் ஜமாயத் இ இஸ்லாமி முதல் தமுமுக வரை இந்த பாசிச கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகிறது. ஆனால் இந்த சதி கும்பல் பூனாவில் நடத்திவரும் சதி வேலையை நாம் தோலுரிக்க வேண்டியது அவசியமாகும். ஆம் தோழர்களே சதிதான். பயங்கரமான சதி. இஸ்லாமியர்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான பச்சை பாசிச பார்ப்பனீய சதி. இந்த பார்ப்பனீய சதியில் சில பெயர்தாங்கி முஸ்லீம்களும் விலை போகியிருக்கிறார்கள். பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த இழிவான சதியை விவரிக்கிறேன் கேளுங்கள்.


பூனே கல்வி மாவட்டத்தில் எப்போதுமே மாவட்ட அளவிலான அரசு பத்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலை இறுதி தேர்வுகளில் சித்பவன் மற்றும் இதர பிராமண மாணவர்களே முதலில் வருவது வழக்கம். எனவே கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் குறித்த முற்போக்கு பார்வைக்கு இது நல்ல ஆதாரமாக அமைகிறது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஆதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் ஈடுபட்டுள்ளது இப்போது வெளிவந்துள்ளது. ஆம்.2003 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் எடுத்ததில் முஸ்லீம் மாணவிகளும் மாணவர்களும் வந்துள்ளனர். இப்படி நடத்தியதன் பின்னணியில் இருக்கும் ஆசாமிகளை பார்க்கும் போதுதான் நமக்கு ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான நாசி பாசிச விஷப்பாம்புகள் என்பது புரியும்.உதாரணமாக வஜீதா சேரிப்பகுதியில் வாழும் முஸ்லீம் சிறுமி. இடையறாது ஒலிப்பெருக்கிகள் பாடல்களை பிளிறிக்கொண்டிருக்கும், சரியான மின்சாரவசதியற்ற பகுதியிலிருந்து வரும் இந்த சிறுமி பூனா கல்வி மாவட்டத்தில் பொதுவாக அந்தண மாணவ மாணவிகளே முதல் ரேங்குகள் எடுக்கும் தேர்வுகளில் அவர்களை வென்று முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவ்வளவு ஆண்டுகள் இல்லாத இந்த புதுமையை 70 வருடங்கள் அந்த இடத்திலிருந்து இயங்கும் உருது பள்ளிக்கூடம் நிகழ்த்தியிருக்கிறது. எவ்வாறு? என்று பார்த்தால்தான் இஸ்லாமின் ஆணிவேரை பிடுங்கிட ஆர்.எஸ்.எஸ் செய்யும் சதி அம்பலமாகிறது. இந்த சதிக்கு உடன்போகும் பெயர்தாங்கியின் பெயர் இனாம்தார் என்பது. இந்த பெயர்தாங்கி குலாம் முகமது ஆஸாம் கல்வி அறக்கட்டளை என்கிற போர்வையில் 16 ஆண்டு காலமாக நடத்திவரும் செய்கைகளின் விளைவுதான். வறுமையான குடும்பங்களில் இருந்தும் கூட இஸ்லாமிய பெண்கள் பூனேயில் மாவட்ட அளவில் முதலில் வருகின்றனர். இந்த பெயர்தாங்கி இஸ்லாமிய சமுதாய துரோகிக்கு உதாரணம் யார் தெரியுமா? முகமது கஜினியா? அவுரங்கசீப்பா? முகமதலி ஜின்னாவா? தாவூத் இப்ராகிமா? அல்லது அப்சலா? இத்தகைய இஸ்லாமிய சான்றோர்களை தனது உதாரணமாக எடுக்காத இந்த சமுதாய துரோகி இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை 'ஹிட்லரிய இயக்கங்கள்' என வசைபாடிய அம்பேத்கரை தமது முன்னுதாரணமாக கொள்கிறார். இனாம்தார் முஸ்லீம்கள் ஏதோ தாங்கள் இந்த தேசத்தில் கொடுமை படுத்த படுவதாகச் சொல்லுவதை விட்டுவிட்டு கல்வி மூலமாக பாடுபட்டு தம்மை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார். எப்படி இருக்கிறது கதை பாருங்கள்! முஸ்லீம்கள் இந்தியாவில் கொடுமைப்படுத்தப்படுவதாக சொல்வதுதானே அண்ணன் கயிதே-ஆசன முகமதலி ஜின்னா முதல் பாராளுமன்ற போராட்ட தியாகி அப்சல் அவர்கள் வரை நமக்கு காட்டிய மரபு. அதை விட்டு விட்டு முஸ்லீம்கள் அம்பேத்கர் வழியில் செல்லவேண்டுமாம். எப்படி இந்த இழிபிறவி பெயர்தாங்கிக்கு இந்த யோசனை வந்தது? என்று பார்க்கிறீர்களா?


தனது கல்வி அறக்கட்டளை மூலம் மாவட்ட அளவில் முதல் ரேங்க் வாங்குகிறதை பாராட்ட வரும் ஒவ்வொருவரிடமும் இந்த பெயர்தாங்கி கூறுவதை பாருங்கள். அவர் தவறாமல் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாராம், இந்த முஸ்லீம் மாணவர்கள் ஹிந்துக்களின் உதவியில்லாமல் இந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது என்று. மட்டுமல்ல மேலும் மறக்காமல் சொல்கிறாராம் அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்க கல்விசாலை ஆசிரியர்களை தமது மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த அழைத்த போது ஒவ்வொரு முறையும் அந்த பார்ப்பன வந்தேறிக்கும்பல் அழைப்பினைத் தட்டாமல் வந்து இந்த முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு மிகவும் அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தார்களாம்.(... Indeed, none of these students would have made it to the top had it not been for the contribution of Hindus. Mr. Inamdar makes it a point to declare that teachers from RSS-run schools have not only come whenever invited, as guest teachers for his special Merit List batch, but have also taught his students diligently.
ஆதாரம் : தி ஹிண்டு : வெள்ளிக்கிழமை , ஆகஸ்ட் 22, 2003, 'Changing face of Pune schools')இஸ்லாமிய சகோதரர்களே நாளைக்கு உங்கள் பகுதிகளிலும் இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஊடுருவி உங்கள் குழந்தைகளையும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதல் மதிப்பெண்கள் வாங்க செய்துவிடலாம். ஜாக்கிரதை எனவே புனிதமாதங்கள் முடிந்ததும் இந்த பார்ப்பன கும்பலை கண்ட இடங்களில் .... அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் அவர்கள் அலுவலகங்களையும் தடைசெய்யுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு முஸ்லீம்களின் வறுமையை கல்வியின்மையை முதலாக வைத்து நமது ஜிகாத் அரசியலை நடத்த முடியாது.


இஸ்லாமியர்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச கும்பல் சதி

இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சதியை வெட்ட வெளிச்சமாக்கும் பதிவு இது.


மதச்சார்பின்மைக்கு எதிராக இயங்கும் மிகவும் மோசமான பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் என்கிற வந்தேறி பார்ப்பன கும்பல்தான். எனவேதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்காக குரல் கொடுக்கும் ஜமாயத் இ இஸ்லாமி முதல் தமுமுக வரை இந்த பாசிச கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகிறது. ஆனால் இந்த சதி கும்பல் பூனாவில் நடத்திவரும் சதி வேலையை நாம் தோலுரிக்க வேண்டியது அவசியமாகும். ஆம் தோழர்களே சதிதான். பயங்கரமான சதி. இஸ்லாமியர்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான பச்சை பாசிச பார்ப்பனீய சதி. இந்த பார்ப்பனீய சதியில் சில பெயர்தாங்கி முஸ்லீம்களும் விலை போகியிருக்கிறார்கள். பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த இழிவான சதியை விவரிக்கிறேன் கேளுங்கள்.பூனே கல்வி மாவட்டத்தில் எப்போதுமே மாவட்ட அளவிலான அரசு பத்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலை இறுதி தேர்வுகளில் சித்பவன் மற்றும் இதர பிராமண மாணவர்களே முதலில் வருவது வழக்கம். எனவே கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் குறித்த முற்போக்கு பார்வைக்கு இது நல்ல ஆதாரமாக அமைகிறது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஆதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் ஈடுபட்டுள்ளது இப்போது வெளிவந்துள்ளது. ஆம். 2003 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் எடுத்ததில் முஸ்லீம் மாணவிகளும் மாணவர்களும் வந்துள்ளனர். இப்படி நடத்தியதன் பின்னணியில் இருக்கும் ஆசாமிகளை பார்க்கும் போதுதான் நமக்கு ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான நாசி பாசிச விஷப்பாம்புகள் என்பது புரியும்.உதாரணமாக வஜீதா சேரிப்பகுதியில் வாழும் முஸ்லீம் சிறுமி. இடையறாது ஒலிப்பெருக்கிகள் பாடல்களை பிளிறிக்கொண்டிருக்கும், சரியான மின்சாரவசதியற்ற பகுதியிலிருந்து வரும் இந்த சிறுமி பூனா கல்வி மாவட்டத்தில் பொதுவாக அந்தண மாணவ மாணவிகளே முதல் ரேங்குகள் எடுக்கும் தேர்வுகளில் அவர்களை வென்று முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவ்வளவு ஆண்டுகள் இல்லாத இந்த புதுமையை 70 வருடங்கள் அந்த இடத்திலிருந்து இயங்கும் உருது பள்ளிக்கூடம் நிகழ்த்தியிருக்கிறது. எவ்வாறு? என்று பார்த்தால்தான் இஸ்லாமின் ஆணிவேரை பிடுங்கிட ஆர்.எஸ்.எஸ் செய்யும் சதி அம்பலமாகிறது. இந்த சதிக்கு உடன்போகும் பெயர்தாங்கியின் பெயர் இனாம்தார் என்பது. இந்த பெயர்தாங்கி குலாம் முகமது ஆஸாம் கல்வி அறக்கட்டளை என்கிற போர்வையில் 16 ஆண்டு காலமாக நடத்திவரும் செய்கைகளின் விளைவுதான். வறுமையான குடும்பங்களில் இருந்தும் கூட இஸ்லாமிய பெண்கள் பூனேயில் மாவட்ட அளவில் முதலில் வருகின்றனர். இந்த பெயர்தாங்கி இஸ்லாமிய சமுதாய துரோகிக்கு உதாரணம் யார் தெரியுமா? முகமது கஜினியா? அவுரங்கசீப்பா? முகமதலி ஜின்னாவா? தாவூத் இப்ராகிமா? அல்லது அப்சலா? இத்தகைய இஸ்லாமிய சான்றோர்களை தனது உதாரணமாக எடுக்காத இந்த சமுதாய துரோகி இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை 'ஹிட்லரிய இயக்கங்கள்' என வசைபாடிய அம்பேத்கரை தமது முன்னுதாரணமாக கொள்கிறார். இனாம்தார் முஸ்லீம்கள் ஏதோ தாங்கள் இந்த தேசத்தில் கொடுமை படுத்த படுவதாகச் சொல்லுவதை விட்டுவிட்டு கல்வி மூலமாக பாடுபட்டு தம்மை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார். எப்படி இருக்கிறது கதை பாருங்கள்! முஸ்லீம்கள் இந்தியாவில் கொடுமைப்படுத்தப்படுவதாக சொல்வதுதானே அண்ணன் கயிதே-ஆசன முகமதலி ஜின்னா முதல் பாராளுமன்ற போராட்ட தியாகி அப்சல் அவர்கள் வரை நமக்கு காட்டிய மரபு. அதை விட்டு விட்டு முஸ்லீம்கள் அம்பேத்கர் வழியில் செல்லவேண்டுமாம். எப்படி இந்த இழிபிறவி பெயர்தாங்கிக்கு இந்த யோசனை வந்தது? என்று பார்க்கிறீர்களா?தனது கல்வி அறக்கட்டளை மூலம் மாவட்ட அளவில் முதல் ரேங்க் வாங்குகிறதை பாராட்ட வரும் ஒவ்வொருவரிடமும் இந்த பெயர்தாங்கி கூறுவதை பாருங்கள். அவர் தவறாமல் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாராம், இந்த முஸ்லீம் மாணவர்கள் ஹிந்துக்களின் உதவியில்லாமல் இந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது என்று. மட்டுமல்ல மேலும் மறக்காமல் சொல்கிறாராம் அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்க கல்விசாலை ஆசிரியர்களை தமது மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த அழைத்த போது ஒவ்வொரு முறையும் அந்த பார்ப்பன வந்தேறிக்கும்பல் அழைப்பினைத் தட்டாமல் வந்து இந்த முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு மிகவும் அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தார்களாம்.

(... Indeed, none of these students would have made it to the top had it not been for the contribution of Hindus. Mr. Inamdar makes it a point to declare that teachers from RSS-run schools have not only come whenever invited, as guest teachers for his special Merit List batch, but have also taught his students diligently.
ஆதாரம் : தி ஹிண்டு : வெள்ளிக்கிழமை , ஆகஸ்ட் 22, 2003, 'Changing face of Pune schools')


இஸ்லாமிய சகோதரர்களே நாளைக்கு உங்கள் பகுதிகளிலும் இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஊடுருவி உங்கள் குழந்தைகளையும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதல் மதிப்பெண்கள் வாங்க செய்துவிடலாம். ஜாக்கிரதை எனவே புனிதமாதங்கள் முடிந்ததும் இந்த பார்ப்பன கும்பலை கண்ட இடங்களில் .... அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் அவர்கள் அலுவலகங்களையும் தடைசெய்யுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு முஸ்லீம்களின் வறுமையை கல்வியின்மையை முதலாக வைத்து நமது ஜிகாத் அரசியலை நடத்த முடியாது.


Monday, November 20, 2006

ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச பார்ப்பனீய சதி-1

ஆம் நண்பர்களே! என்ன அதிசயமாக இருக்கிறதா? என்ன எப்போதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரித்து எழுதுகிற இவன் ஏன் இப்படி எழுதுகிறான் என்று. எத்தனையோ பகுத்தறிவு இயக்கத்தவர்கள் கூறினார்களே அப்போதெல்லாம் அவர்களை எள்ளி நகையாடினேன். ஆனால் இப்போதுதான் எனக்கே புரிந்தது ஆர்.எஸ்.எஸ் ஒரு பார்ப்பன பாசிச சதிகார இயக்கம் என்று. இதற்கு காரணம் இன்று மதியம் நான் அறிய நேர்ந்த ஒரு நிகழ்ச்சிதான். அதனை விளக்கமாக கூறுகிறேன் அப்போது உங்களுக்கெல்லாம் புரியும்.பாசிச அமைப்பில் பிரச்சாரக்காக இருந்து திராவிடருக்குள் ஊடுருவிய திரு. தனுசுஜி

1932 இல் சென்னை புளியந்தோப்பில் பிறந்த தனுசு என்பவர் 1955 இல் வந்தேறி பார்ப்பனகும்பலான ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரச்சாரக்காக சேர்ந்தார். இந்த பாசிஸ்டு அவரது தீவிர பார்ப்பனீய பாசிச ஈடுபாட்டால் பிராந்த வ்யவஸ்தா ப்ரமுக்காக பதவி உயர்வு பெற்றார். 1998 இல் இந்த பார்ப்பனீய வெறியர் இறந்துவிட்டார். அதற்கு பிறகு நடந்ததை படித்த போது எனது இரத்தம் அப்படியே உறைந்துவிட்டது நண்பர்களே. தந்தை பெரியார் கூறினாரே பார்ப்பன சதி என்று அந்த சதிதான் நடந்தேறியுள்ளது. ஆமாம் பார்ப்பன கும்பல் அந்த சாவை திராவிட இயக்கத்தில் ஊடுருவ பயன்படுத்திவிட்டது. அந்த வெட்கங்கெட்ட மனிதாபிமானமற்ற வந்தேறி கும்பல் அவரது கண்ணை தானமாக கொடுப்பதாக கூறி அதில் ஒரு கண்ணை ஒரு திராவிடர் கழக பிரமுகருக்கு அளித்துள்ளது.

பாருங்கள் எவ்வளவு தந்திரமாக பாசிச இயக்கத்தின் கண்ணை திராவிடர் கழகத்தில் உளவு பார்க்க ஊடுருவ வைத்துள்ளது இந்த சதிகார வந்தேறிகள் கும்பல் பார்த்தீர்களா நண்பர்களே. இந்த கண்தான -மன்னிக்கவும் - வந்தேறிகளின் கண் ஊடுருவல் விசயத்தை- வெளியே தெரியாமல் கமுக்கமாக உள்ளுக்குள்ளே வைத்திருக்கிறார்கள் இந்த பாசிஸ்ட்கள்.இதிலிருந்தே இந்த சதிகார கும்பலின் மனிதநேயமின்மை தெரியவில்லையா? எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய் நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளேவிடக்கூடாது எனக் கூறிய பகுத்தறிவு தந்தை(விடுதலை, 20-10-1967) பெரியாரின் மனிதாபிமானம் எங்கே?பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று கூறிய வந்தேறி முண்டாசு கவிஞனின் சூழ்ச்சியை கடைபிடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் கயவர் கும்பலெங்கே? இறந்த பிறகும் திராவிடர் கழக உறுப்பினருக்கு கண்ணை கொடுத்து ஊடுருவ பார்க்கும் வந்தேறி ஆர்,எஸ்,எஸ் கும்பலின் பாசிச போக்கு எங்கே! உண்மை அப்போதுதான் என் உள்ளத்தில் உறைத்தது என்னருமை தமிழ் மக்களே!
எனவேதான் தோழர்களே நான் ஆர்.எஸ்.எஸ்காரனாகவே இருந்துவிட்டு போகிறேன். நீங்கள் எப்படி?

Sunday, November 19, 2006

சைவ - பௌத்த மோதல் புனிதப்போராகிடவில்லை

அன்புள்ள சம்பத்,

உங்கள் கேள்விக்கு மிக நீண்டபதில் சொல்ல வேண்டும். தனிப்பதிவில் எழுதுகிறேன். இந்த விஷ்யத்தைப் பற்றி இந்தோநேசியாவில் வசிக்கும் திரு.பி.என்.குமார் என்ற நண்பர் மிக
ஆணித்தரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். இவர் எழுத்துக்களை ஆங்கிலக்குழு ஒன்றில் படித்திருக்கிறேன். தமிழில், சைவத்தில் இந்த அளவுக்கு வீச்சு கொண்டவர். என்பது இவர் திண்னையில் எழுதிய 'திருவண்டம்' என்ற அறிவியல் புதினத் தொடரினைப் படித்தபோதுதான் தெரிந்தது. அத்னைப் பாராட்டி எழுதியிருந்தேன். இந்தியா வருகையில் பேசுவதாகச் சொன்னார். சொன்னது போலவே சென்ற ஆண்டு இறுதியில் இந்தியா வந்திருந்தபோது தொடர்பு கொண்டு பேசினார். ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காத செந்தமிழில் இவர் பேசியது, சைவத்திருமுறையில் இவர் பெற்றிருக்கும் ஆழ்ந்த பார்வை என்னை வியக்க வைத்தது. மீண்டும் இந்தோநேசியா திரும்புகையில் பணிமாற்றத்தால் இணையத்தொடர்பு வசதி இல்லாத ஒரு தீவுக்குப் போவதாகவும் அதனால் தொடர்பு கொள்வது கஷ்டம் என்றும் சொன்னார். இவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது கேட்ட சில கேள்விகளில் இதுவும் ஒன்று. இது போன்ற பல விஷ்யங்களுக்கு அகத்தியர் என்ற யாஹூ குழுவில் நிறைய விளக்கங்கள் எழுதியிருப்பதாகச் சொன்னார். சில முக்கியமான கட்டுரைகளை மட்டும் எனக்காக அனுப்பி வைத்தார். இவற்றை திண்ணையில் மீள்பிரசுரம் செய்யட்டுமா என்றதற்கு மறுத்துவிட்டார். இருந்தாலும் உங்களின் இந்தக் கேள்விக்கு மட்டும் என்னிடம் இருக்கும் அவர் கட்டுரை ஒன்றை அவர் அனுமதி இல்லாமலே இங்கே பதிவு செய்கிறேன். இங்கு சகோதரர் ஜாவா குமார் அவர்களின் கருத்துகள் அனைத்துடனும் நான் உடன்படவில்லை என்பதனை தெளிவாக்க விரும்புகிறேன். ஆனால் அன்றுமுதல் இன்றுவரை கூச்சமின்றி நடைபெறும் ஜிகாதி இனப்படு கொலைகளினை இந்த சைவ-சமண மோதலின் ஒரு நிகழ்வினை வைத்து சமாளிக்க நினைக்கும் நேர்மையற்ற அறிவுஜீவித்தனத்திற்கு சகோதரர் ஜாவா குமாரின் கட்டுரை ஆழமான அறிவார்ந்த தமிழ் இலக்கியம் சார்ந்த வாதங்களை நேர்மையாக எடுத்து வைக்கிறது. இக்கட்டுரை ஒரு சைவ பார்வையில் இவ்விஷயத்தை அணுகியுள்ளது. இதில் முக்கியமாக நீங்கள் காண வேண்டியது எவ்விடத்திலும் அவர் புத்த ஜைன தருமங்களை அழிக்க வேண்டியவை என்று கூறவில்லை. சச்சரவோ மோதலோ அக்காலத்து ஒரு நிகழ்ச்சியேயன்றி -அன்றைய சூழலில் நிகழ்ந்ததே அன்றி- இன்றும் தொடர்வதல்ல. இன்றைக்கு வங்கதேசத்திலும், லடாக்கிலும், அருணாசல பிரதேசத்திலும் திபெத்திலும் பௌத்தர் வாழ்விற்காக குரல் கொடுப்போர் இந்து தேசியவாதிகளே ஆவார்.


அகத்திய அறிஞர் பெருமக்களுக்கு,


இம்மன்றில் ஏதோ சைவசமயப் பெரியோர் சூழ்ச்சி செய்து அப்பாவியான பண்டைச் சமண பௌத்தச் சமயவாதியரை அழித்தொழித்து விட்டதாகவும், 'அவர் கடவுள் தாழ்ந்தோன்; என்
கடவுள் உயர்ந்தோன்' என்று மிஷனரிமார்பாணியில் தத்தம் கருத்தினைப் பரப்பிப் பின் பெருவாரியினர் விருப்பமின்றி அவரை மீண்டும் வலிய 'மதம்' மாற்றி விட்டதாகவும் போன்ற தொனியில் அவ்வப்போது சில மடல்களைக் காண்கிறேன்.
அதற்குச் சான்றாக 'அவர் சொன்னார் இவர் சொன்னார்' என்று பல்வேறு சுட்டிகளும் இடப்படுகின்றன. இத்திறக்கில் அடியேன் பலமடல்கள் எழுதியிருப்பினும் இறுதியாய்ச் சில
கருத்துக்களைச் சொல்லி மீள்கிறேன். பெருமதிப்புக்குரிய தமிழ்வல்லர் திரு.இராமகி அவர்களின் முந்தைய இடுகையும் ஒரு தூண்டுதலானது. இன்று பெரும்பான்மைத்
தமிழர் புரிதல் இங்ஙனமிருக்க அவரைக் குறை சொல்வது என் நோக்கமல்ல.முதற்கண் சமண பௌத்தப் பிரிவினர் யாவரும் ஏதோ புத்தரையும், மஹாவீரரையும் போன்றே அன்புருவாய்த் திகழ்ந்து வந்தனர் என்று கொள்வதே பெருந்தவறென்பதை தம் சமயம் விட்டுப் போன முதியவரான அப்பர் பெருமானை சுண்ணாம்புக்காளவாயில் சுட்டெரித்தும், கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆனைகளை விட்டு மிதிக்க
வைத்தும் பார்த்த நிகழ்வுகள் மெய்ப்பிக்குமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டேயுள்ளன. பின்னர் பாலறாவாயரான சிறுகுழந்தையை அவர் தங்கியிருந்த மதுரை மடத்தோடு தீ வைத்து
அழிக்கப் பார்த்தது அதன் உச்சக்கட்டம். இப்படி ஆயிரம் சான்றுகளை இங்கிட முடியும்.


தமிழ்மண்ணின் பண்டை மரபையே சிதைத்திருந்த களப்பிரர் காலத்து வெறியர்களுடன் வாதிட்டு அவரை (கவனிக்க: பொதுமக்களான அப்பாவிகளை அல்ல) வென்றொழித்த பெருமை ஆளுடைப் பிள்ளையார் ஞானசம்பந்தப் பெருமானுக்குரியது. அவர் நமையாளும் முருகப்பெருமானே என்பதற்குச் சான்று தேடி நான் எந்த இந்தாலஜி அறிஞரையும் சுட்ட
வேண்டிய அவலச்சூழலில் இல்லை. குறைந்தது ஐம்பது திருப்புகழ் பாடல்களைச் சுட்ட முடியும். காட்டாய் கந்தரந்தாதியிலிருந்து பாடலொன்று:


திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே! (29)


பொருள்: தன்னடித் தொண்டருக்கு நன்னெறியாகத் தேவாரத்தை மொழிந்தருளியவரும், அருட்தலங்களைத் துதியாமலும், திருநீற்றின் மகத்துவத்தைத் தூற்றியும் இருந்த
சமணர்கள் கழுவேறும்படி வாதினால் வென்றவருமாகிய சம்பந்தாவதாரங் கொண்ட குமாரக்கடவுளேயன்றி வேறு தெய்வமில்லை!


அருணகிரியார் மட்டுமின்றி பின்னாளில் வண்ணச்சரபர் போல் பலருக்கும் சம்பந்தர் வடிவிலேயே காட்சிதந்தருளிய சான்றுகள் உண்டு. மறைந்த அருட்கவி சாதுராம்
ஸ்வாமிகளை ஒருமுறை சரபேஸ்வர மூர்த்தத்தைத் தமிழில் துதிக்க ஒரு போற்றிப் பாடலை எழுதித் தருமாறு வேண்டி நண்பர்களுடன் காணப் போயிருந்தேன்.


'உயிர்வர்க்கமாலை'யென்று சரசரவென்று எழுதித் தந்தவர், பள்ளிச் சிறுவனாய் தம் சிறுவயதிலேயே திருப்போரூரில் முதியவர் வடிவில் முருகப்பெருமான் காட்சிதந்து தம்மை
ஆட்கொண்டு முருகனருளால் தாம் தமிழ்க்கவி பாடும் திறன் பெற்ற கதையினை உருக்கத்துடன் விவரித்தார். அவ்வமயம் அமானுடமாய் முதலில் எழுந்த பாடலைப்
பாடியும் காட்டினார். அதிலே சம்பந்தராய் அவதரித்து தமிழ்ச் சமுதாயத்தை மாபெரும் வீழ்ச்சியிலிருந்து காத்தருளியதையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கக் கண்டேன்.


மெய்யில் நிகழ்ந்தவை இங்ஙனமிருக்க சிறுபிள்ளைத்தனமாய் ஏதோ சைவத்துக்கும் சமணத்துக்கும் போட்டி, பௌத்தருடன் சண்டை என்று இங்கே வெற்றுக்கதை வடித்திருப்பது
அந்தத் தமிழுக்கே இழுக்கு. முருகப்பெருமானுக்கு அசுரர் சேனையுடன், சூரபதுமனுடன் போட்டி என்பது எவ்வளவு அபத்தமோ, ராமபிரானுக்கு ராவணனுடன் போட்டி என்பது எவ்வணம் நகைப்புக்குரியதோ அங்ஙனமாகும்.


இனி சம்பந்தப் பெருமானே தம் திருவாயால் சமணர்தம் ஆதியான சான்றோர் குறித்துச் சொல்வதை அடுத்தமடலில் காண்போம். அடுத்து, திருஞானசம்பந்தப்பெருமான் மிஷனரிமார்பாணியில் 'எம்மிறை வலியர் நும்மிறை எளியர்' என்று பிரிவினைவாதம் செய்து பெருவாரியினரை மதம்மாற்றி விட்டதாய் அறிஞர் பெருமக்கள் சிலர் அவ்வப்போது எழுப்பிவரும் அபாண்டமானதொரு குற்றச்சாட்டினைக் காண்போம்.


தேவாரசாரமாய்த் தம் தந்தையார் எளிதில் பாடும் வகையில் அருளிய திருஎழுகூற்றிருக்கையின் சூக்குமம் விரித்து முன்னரிங்கு எழுதியிருந்தேன். அதை அவர் முடிப்பதே
'இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்' என்று. அங்ஙனம் ஒருமையின் பெருமையை மீண்டும் உலகுக்குணர்த்த வந்த
திருஅவதாரம் யாரையும் 'நம்மவர் பிறர்' என்று பிரித்திலர் என்பதை அவர்தம் திருவாயாலேயே பாடக் காண்கிறோம்.


காரணப் பொருளையும் காரியப் பொருளையும் குழப்பியிருந்த அத்திநாத்திவாதியரை மறக்கருணைமிக அவர் சாடியிருக்கலாம். ஆயின் அந்தச் சமணர், சாக்கியர் கூட்டமும் கூட
தம்மிச்சையால் எதையும் செய்யவில்லையென்பதையும் அவரை அங்ஙனம் இயக்கியிருப்பதும் தம்பிரான் தன் திருவிளையாடலே என்பதையும் ஐயந்திரிபறத் திருமுறையிலேயே
பதிவு செய்துள்ளார். குறிப்பாய்ச் சில சான்றுகள்:


துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக்கியமாக் கியவாறே.
(திரு இறும்பூளைப் பதிகம் - 2-36-10)


பாக்கியம் பல செய்த பத்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை
யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி
நின்றவனே அடைந்தார்க் கருளாயே. (திருக்களர்ப் பதிகம் - 2-51-10)


அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட
அமணும் மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும் வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையா னுகந்த நகர்தான் நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள்.
(திருநனிபள்ளிப் பதிகம் - 2-84-10)


கலவமாமயி லார்இய லாள்கரும் பன்னமென்மொழியாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழலாளுமைகூறனை வேறுரையால் அலவைசொல்லுவார்
தேரமண் ஆதர்கள் ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற் புலவர்தாம்புகழ்
பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.
(திருப்பூந்தராய்ப் பதிகம் - 3-2-10)


வேதநாவனாய் நிற்கும் ஈசனே அமணரையும் சாக்கியரையும் ஆக்கி அவர்தம் நூலையும் அருளி, அவரை அவ்வணம் இயக்கியிருப்பவனும் ஆவானெனும் சம்பந்தப்பெருமானின்
ஒருமைப்பாட்டினை மேலே காணலாம். இதில் எங்கிருந்து வந்தது போட்டி? சைவக்குரவரை 'ஒருமையால் உலகை வெல்வார்' என்று சேக்கிழார் பெருமான் பாடுவதும் அதனாற்றான். இறைத்தத்துவத்துக்கே பொறாமையைப் புகுத்துவது இந்தியநெறிக்குப் புறம்பானது.


பின்னர் ஏனிந்த வாது?


அடுத்து பௌத்தருடன் அவர் திருமுன்னிலையில் நிகழ்ந்த வாதின் விவரங்களை மீண்டும் காண்போம். பாண்டி நாட்டில் திருவடி நெறியினை மீண்டும் தழைக்கச் செய்து சோழ
நாட்டுக்குத் திரும்புகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.


திருப்பரங்குன்றம், திருப்புத்தூர், திருப்பூவணம், திருக்குற்றாலம், நெல்வேலி வழியே ராமேச்சுரம், திருவாடானை வரை பாண்டி நாட்டுத் தலங்களுக்கேல்லாம் நீறு தரித்துய்ந்த
நின்ற நீர் நெடுமாறனும் உடன் சென்று விடைபெற, திருக்களரின் ஊடே பொன்னி நாட்டில் மீண்டும் புகுகிறார் சம்பந்தப் பெருமான். பல தலங்களைத் தரிசித்துத் திருநள்ளாற்றிலிருந்து
திருக்கடவூர் செல்லும் வழியில் புத்தம் (தேராவாதம், சௌத்ராந்திகம் எனும் பிரிவினர்) வலுத்திருந்த 'போதிமங்கை'யின் வழி செல்ல நேர்கிறது.
சம்பந்தப் பெருமானுடன் முன்செல்வோர் செய்த அரநாம ஆர்ப்பொலி கேட்டும், திருச்சின்னங்களைக் கண்டும் பொறாத புத்தநந்தி என்பான் அவரைத் தடுத்து 'வெற்றிபுனை
சின்னங்கள் வாதில் எம்மை வென்றன்றோ பிடிப்பது?' என்று வெகுண்டு சொல்கிறான்.


திருச்சின்னங்கள் மற்றும் வாத்தியக் கோஷ்டியெல்லாம் மறித்தனுப்பக் கண்டு மனம் பொறாத சம்பந்த சரணாலயர் என்ற சம்பந்தரின் அணுக்கரும், பதிகம் எழுதிக் கொள்ளும்
அடியாருமானவர், சம்பந்தர் பாடிய அருட்பாடல் (அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே என்ற பஞ்சாக்கரப் பதிகத்தின் பத்தாம் பாடல்) ஒன்றைப் பாட, திடுமென மின்னல் வெட்டி
புத்தநந்தி தலையில் இடியாய் இறங்குகிறது. தலை நூறுகூறாக விழுந்து மடிகிறான் புத்த நந்தி.


பயந்தோடிய பௌத்தரைத் திரட்டிய மற்றொரு தலைவனான சாரிபுத்தன் என்பார் 'இது மந்திரவாதமேயன்றி சைவ வாய்மையில்லை! எம்முடன் நேர்மையாய் வாதிட வல்லீரோ' என்றழைக்க பின்னால் வரும் சம்பந்தப் பெருமானுக்குச் செய்தி போய் அவரும் அதற்கிசைந்து அருகில் இருந்த சத்திர மண்டபம் ஒன்றில் எழுந்தருளுகிறார்.
சாரிபுத்தன் தலைமையில் தேரர் திரள வாது தொடங்குகிறது. தத்தம் புரட்சித்தலைகளுக்கு மாலை அணிவித்துத் தூபதீபம் காட்டியிருக்கும் கூட்டங்களும் அவசியம் அறிந்து
கொள்ள வேண்டிய வாதமிது. இனி, சேக்கிழார் பெருமான்தம் திருவாக்காலேயே காண்போம்:
1 - ஞானசம்பந்தர்தம் அன்பர்
2 - சாரிபுத்தன்


 • 1. உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க!
 • 2. கற்பங்கள்அனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில், பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்ய உற்பவிக்கும்
  ஒழிவின்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன்!
 • 1. நன்று! உமது தலைவன்தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்திதான் யாவது?
 • 2. நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர் நின்ற ஞானமென நிகழ்ந்த ஐந்தும் ஒன்றி அக்கந்தத்து அவிவே முத்தி!
 • 1. தாங்கிய ஞானத்துடன் ஆங்கு கந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டனவேல் தலைவன் தானும் ஈங்குளன்? யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்தோங்கு வடிவமைத்து
  விழவெடுக்கும் பூசை கொள்வார் ஆர்? உரைக்க!
 • 2. கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன் கலந்துளன் முத்தியில்.
 • 1 காணும் இந்திரியம் கண்முதலாம் கரணந் தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை.
 • 2. முந்தை அறிவிலனாகி உறங்கினானை நிந்தித்து மொழிந்துடல் மீதாடினார்க்கு வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வருமன்றோ நன்மை?
 • 1. தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லையான போது அவன் பெறுதல் இல்லை.
 • 2. முன்னவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால், இன்னுயிர் போய்க் கொலையாகி முடிந்தது அன்றோ!இப்படியால் எம் இறைவற்கு
  எய்தும்!
 • 1. இப்படியால் எய்தும்; நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான்போல் மெய்ப்படிய கரணங்கள் உயிர்தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கானபோது செப்பிய அக்
  கந்தத்தின் விளைவின்றாகித் திரிவில்லா முத்தியிற் சென்றிலனும் ஆனான்; அப்படி அக்கந்தத்துள் அறிவுங் கெட்டால் அம்முத்தியுடன் இன்பம் அணையாதே!
 • 2.அணைந்து உடன் அம்முத்தியெனும் அதுவும் பாழாம்!
 • 1. பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்; எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம்!
 • 2. உணர்வு பொதுச் சிறப்பென்ன இரண்டின் முன் அது உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப் புணர்சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பில்லாப்
  பொருள்கள் எல்லாம் கொணரும் விறகினைக்குவை செய்திடினும் வேறு குறைத்தவற்றைத் தனித்தனியே இடினும் வெந்தீத் துணர்கதுவிச் சுடவல்லவாறு போலத் தொகுத்தும்
  விரித்தும் தெரிக்கும் தொல்லோன்!
 • 1. எரியுணர்வுக்கு எடுத்துக்காட்டாகச் சொன்னாய்; அடுத்த உணர்வுரு உடையதன்று சொன்ன அனல் வடிவிற்றாம், அதுவும் அறிதி நுங்கோன், தொடுத்த நிகழ்காலமே
  அன்றி ஏனைத் தொடர்ந்த இருகாலமும் தொக்கறியுமாகில் கடுத்த எரி நிகழ்காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அதுவாகாது. ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்தது நும் முத்தி போல் ஆயிற்றன்றே! ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்! - - என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய,வாதமா றொன்றின்றித்
  தோற்றான் புத்தன்;

மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர், பாததா மரைபணிந்தார் அன்பர்; தங்கள் பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார். வாதம் அம்மட்டே. அங்கிருந்த புத்தர்
யாவரும் ஞானசம்பந்தரைப் பணிந்து திருக்கடவூர் தொடர்ந்து சென்று சைவநெறிக்குத் திரும்பியதாகச் சொல்லிப் போகிறார் சேக்கிழார் பெருமான்.


இங்கேது சண்டை?


துறவுக்கோலமின்றி முக்தியில்லை என்ற பௌத்தர்தம் கோட்பாடே அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். சமணர் சாக்கியர் அளவுகோலின்படி கண்ணப்பரும், அதிபத்தரும்,
அன்னபிறரும் எய்திய முக்திக்குப் பொருளற்றுப் போய்விடும். இதையே சுட்டி சமணமும் பௌத்தமும் நன்கறிந்த அவையொன்றில் பலமுறை வினவியுள்ளேன். இங்கும் இதே வினாவினைப் பலமுறை எழுப்பியுள்ளேன். இன்னும் விடையினை எதிர்நோக்கியிருக்கும் இந்த வினாவினை இங்குமிடுகிறேன்.Let's see a fisherman devotee now. His name is 'Atipaththar'. He did not leave his family renouncing the worldly life. He continued his duties like any other fisherman. Yet, he attained Mukti. What made the difference? He could come out of **'I-ness' and Mine mindset** -Mamakara - and got detached even though he continued to be a fisherman. Hence the inclusion among Nayanmars. He is worshiped side by side with the Saints from orthodox Brahmins also - by the ultra orthodox Hindus in every Siva temple.

This saint was a fisherman born in Nulaipadi near Nagapattinam. It was his practice to let go one fish from his catch daily, as an offering unto the Lord. The Lord wanted to reveal his greatness to the world. Once it so happened that for many consecutive days he could catch only one fish. He let it go, in the name of Lord Siva, and went without food. One day he caught a golden fish, again only one for the day. And, he stuck to his vow and let it go, in the name of Lord Siva. The Lord appeared before him and blessed this illiterate, fisherman saint! Not indeed by vast erudition, nor by breath-taking austerities, nor by hearing and talking a lot, but by unflinching devotion alone can God be realised. This humble, simple, fisherman saint has proved that beyond the least trace of doubt. But, look at his steadfastness, Nishta! It is not easy to acquire, unless you have living faith in God. Otherwise, the mind will bring up all sorts of reasons (lame excuses!) for breaking the vow. This supreme faith and devotion is itself the highest Jnana. Only an ignorant man studies books: what need is there for a great scholar to study an elementary book on grammar? What need is there for one to whom God is a living presence, to stuff himself with words? Intellect is a help, if it serves faith: it is a hindrance if it shakes it. Devotion is indispensable for attaining Him.
I have just one question for those who say only Jainism & Bauddhism are egalitarian: Is the 'mukti'-ultimate enlightened liberation of this fisherman saint valid as per Jaina, Bauddha doctrines? Remember he didn't quit fishing to become a Saint.


அன்புடன், குமார் ஜாவா

ஈவேரா குறித்து சி.என்.அண்ணாதுரை: அண்ணாதுரை குறித்து ஈவேரா

சுயமரியாதையை விட பதவிஆசை அதிகம் ஈவேராவுக்கு - அண்ணாதுரை


போர்ஜரி செய்பவர்கள் - மோசக்காரர்கள் - ஈவேராபோற்றிப்பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டு விட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத்துளிகள் அவரது "சொந்த" வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது அது மாறும் வரை கழகப்பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழக தோழர்களும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர் துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்
...
தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறாரே ஒழிய சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை.... தலைமைப் பெருமையில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளரவேண்டும் அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை.

(திராவிட நாடு 21.8.1949)


பழங்காலத்து தபசிகள் சாபம் கொடுப்பார்கள் என்று கதை சொல்வார்களே அது போல பகுத்தறிவுத்தந்தை பலபல சாபமிடுகிறார்!!
 • விரட்டப்படுவார்கள் விரண்டோ டுவார்கள்
 • மறைந்து போவார்கள் வேறுகட்சியில் சேர்வார்கள்
 • தேர்தலுக்கு நிற்பார்கள் தேய்ந்து போவார்கள்

என்றெல்லாம் சாபம் இடுகிறார். இந்த ஏசல் சாபம் இவைகளை நான் அவர் அடைந்துள்ள ஏமாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால் எனக்கு கோபம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது.

(திராவிட நாடு, 9-10-1949)

வீரர் தீரர் என்று அழைத்தார் கண்ணைமூடிக்கொண்டு அவரைப்பின்பற்றுபவராக இருந்தவரையில். அவர் தீட்டிவிட்ட பகுத்தறிவினைத் துணை கொண்டு அவருடைய சொல்லையும் ஆராயும் போக்கு ஒரு சிறிதளவு காட்டினோம் உடனே கோபம் பிறந்துவிட்டது. போர்ஜரி செய்பவர்கள் மோசக்காரர்கள் என்று ஏசுகிறார்.
திராவிட நாடு (16-10-1949)

நன்றி:


சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா?-3

தெய்வ திரு உருவத்தின் ஆழ்ந்த குறியீட்டுத்தன்மை : விநாயக பெருமான் ஒரு எடுத்துக்காட்டுஇனி நமது பாரம்பரிய தெய்வத்த்திருவடிவங்கள் எத்தகைய ஆழமான ஆன்மிக தத்துவார்த்த சிறப்பும் செழுமையும் கொண்டவை என்பதனை ஒரு உதாரணத்தின் மூலம் காணலாம். ஆனை முகமும், தொந்தி வயிறும் கொண்ட பிள்ளையாரை எடுத்துக் கொள்வோம்.

பிள்ளையாரின் ஆனை முகம் பிரணவ வடிவமாக விளங்குகிறது. பிரணவம் எல்லையற்ற பரம்பொருளின் ஒலி வடிவம்.


பிள்ளையார் ஒரு கரத்தில் கோடாரி சார்ந்த அங்குசத்தை ஏந்தி இருக்கிறார். ஆனையை அடக்கும் அங்குசத்தினால் மதயானை போல் நம் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை அகற்றுகிறார். கோடாரியால் நம் அன்றாட வாழ்விலும் ஆன்மிக சாதனையிலும் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தளைகளைக் களைகிறார்.

மற்றொரு திருக்கரத்தில் விநாயகர் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தினை நோக்கி, (சில நேரங்களில் நாம் தயங்கி நிற்கும் போதும் கூட), அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது.

தொந்தி கணபதி என குழந்தைகள் அவரை அன்புடன் அழைக்கின்றனர்.


வேத முடிவில் நடம் நவிலும் விமலன்


அவரது தொந்தி அண்ட சராசரங்களும் பரம்பொருளுக்குள் அடக்கம் என்பதனைக் காட்டுகிறது. பரம்பொருளின் பிராண இயக்கத்தில் சுருங்கி விரியும் தொந்தி விரிவடைந்து சுருங்கி பின் மீண்டும் விரிவடைந்து பின் மீண்டும் சுருங்கும் பிரபஞ்ச இயக்கத்தினைக் காட்டுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் இயக்கமும் இறை சக்தியின் ஒரு பகுதியே எனக்கூறும் பாரத மெய்ஞான தரிசனத்தை இது உணர்த்துகிறது.


ஆனை வடிவம் கொண்ட விநாயகரின் வாகனமாக இத்தனை சிறிய பெருச்சாளியா? அவ்வை பாட்டி எழுதிய விநாயகர் அகவலுக்கு உரை விளக்கம் எழுதிய அறிஞர் திரு.இரசபதி கூறுகிறார்:

"வழிபாட்டு வளர்ச்சிக்கு தக்க அளவாக,ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும். அந்நிலையை சத்தி நிபாதம் என்பர். சத்திநிபாதம் படரும் சமயம் சாதகருக்கு குண்டலினிக் கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலினிக் கனலேறி அமர்ந்துள்ளார் பிள்ளையார் என்பது பிண்ட நுட்பம்."


இவ்வாறு ஒவ்வொரு வடிவமைப்பும் ஆழமான நுட்பமான ஆன்மீக உண்மைகளினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இந்த விநாயகரின் உண்மைத்தன்மைதான் என்ன? ஜான்.ஏ.க்ரிமஸ் எனும் தத்துவவியலாளர் 'Ganapathi: Song of the self' என ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் கூறுகிறார்,

"விக்னேஸ்வரராக விளங்கும் இந்த கணபதி எனும் கணேசர் யார்? ஒரே வார்த்தையில் சொல்வதானால் கணேசர் என்றால் மெய்யுணர்வு. மெய்யுணர்வு என்பது சாஸ்வதமான அழியாத உள்ளுறையும் சத்தியத்தை இங்கே இப்போது உணர்வதற்கு தடையாக விளங்கும் விக்னங்களை அகற்றுவது என்பதாகும்."அனந்த குணப் பரப்பும் உதிக்கும் பந்தமறுக்கும் திருவதனன் விநாயகப்பெருமான். நம்முள் விளங்கும் அக ஒளி. அவருக்கு நாம் படைக்கும் மோதகம் நம் உள்ளிருக்கும் நம் சுயத்தின் இனிப்பு இயற்கையை விளக்கும். அப்பெருமானின் வடிவின் முன் உடைக்கும் தேங்காயில் அகங்கார ஓடுடைய வெளியாகும் அமுத நீர் நாம் அடைய வேண்டிய நிலையை நமக்குணர்த்தும். பாச அறிவும் பசு அறிவும் பற்றுதற்கு அரிய சுத்த சைதன்ய அறிவு வடிவானவன் விநாயகன். விநாயகத் திருவடிவத்தினைப் போலவே பாரதத்தின் எண்ணற்ற தெய்வத் திருவுருவச்சிலைகளும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.


இத்தொடரின் அடுத்த பதிவில் மேலும் நம் பாரம்பரிய திருவடிவங்களின் ஆழ் பொருளை ஆழ்ந்து நோக்கலாம்.


Saturday, November 18, 2006

பௌத்த தர்மத்தை அழிக்கும் இஸ்லாமிய ஆதிக்கம்-2


"அந்த பௌத்த விகாரம் மலை சிகரத்தில் அமைந்திருந்தது, அந்த இடத்தை அடைந்த படையினர் அங்கிருந்த பெயர் தாங்கி நின்ற பலகையை அழித்தனர். படைதலைவர் ரஷீத்தினால் பௌத்த விகாரத்தின் உச்சியில் பறந்த தருமக் கொடி உடைத்தெறியப்பட்டது. பௌத்த துறவிகள் தங்கியிருந்த மடாலயம் தீ வைக்கப்பட்டது. மறுநாள் உள்ளூர் பௌத்த திருவிழாவிற்கு அந்த மடாலயத்திற்கும் விகாரத்திற்கும் மக்கள் எவரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அங்கு வழிபாட்டுக்கு நுழைந்த பெண்கள் தரதரவென வெளியே இழுத்து தள்ளப்பட்டனர். இரு பௌத்த வழிபாட்டாளர்கள் அங்கிருந்த தூணில் பிணைக்கப்பட்டனர். விகாரத்தின் நிலத்தில் ஒரு படைமுகாம் அமைக்கப்பட்டது. அங்கிருந்த விகாரத்தினை தகர்க்க படைவீரர்கள் முயற்சித்தனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி எதிர்ப்பு அதிகமாகவே அது சாத்தியப்படவில்லை. என்றாலும் பௌத்த விகாரத்தின் இடத்திலிருந்து படைகள் இன்னமும் நகரவில்லை."


மேலே கூறிய வர்ணனை எந்த மத்தியகால இஸ்லாமிய படையெடுப்பின் போது நிகழ்ந்ததென கூறமுடியுமா?

 • 1. முகமது கஜினி காந்தாரம் வழியாக வந்த போது (980களின் போது)
 • 2. பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலைக்கழகத்தை எரியூட்டிய போது (1193)
 • 3. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது (1297)
மன்னிக்கவும் எதுவுமே சரியான விடை அல்ல
இது நிகழ்ந்தது மே 27-28 2003 அன்று. பங்களா தேஷில் ஜும்மா பௌத்த வனவாசிகள் வாழும் ஃபாலி தாங்கியா மலை பகுதியில்.


புத்த தருமத்தின் அழிப்பும் இஸ்லாமும்


இந்த புத்தரை தூக்கில் தொங்க விட்டவர்கள் யார்?
விடை காண பாருங்கள்:
http://video.google.com/videoplay?docid=-6331994107023396223
பௌத்த மதம் அழிந்தது குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

"இந்தியாவில் பௌத்த தர்மத்தின் வீழ்ச்சிக்கு காரணம் முசல்மான்களின் படையெடுப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது." என்று கூறும் பாபா சாகேப் அம்பேத்கர் மேலும் தெள்ளத்தெளிவாக கூறுகிறார் "இஸ்லாம் இந்தியாவில் மட்டுமல்ல அது எங்கெங்கு சென்றதோ அங்கெல்லாம் அழித்தது." இக்கொடுமையை அவர் விவரிக்கிறார்,
"முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள். இசுலாமிய படையெடுப்பாளர்களின் வாளால் பௌத்த துறவிகள் அழிக்கப்பட்டதை முஸ்லீம் வரலாற்றாசிரியர்களே விவரித்து எழுதியுள்ளனர்" எனக்கூறும் அண்ணல் அம்பேத்கர் முடிக்கிறார்: " பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்." (பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்து தொகுப்பு பாகம்-2 பக். 229-38)

Friday, November 17, 2006

உள் அலைகளும் புனித குரானும்


பேராசிரியர். வில்லியம் ஹே


வில்லியம் ஹே நிலவியல் பேராசிரியர் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் கண்காட்சியக பொறுப்பிலும் இருப்பவர். இதோ இனி பேரா.வில்லியம் ஹே....அது 1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன். இரண்டு சவூதிக்கள் அமெரிக்க நிலவியல் கழகத்தை அணுகினார்கள். குரானுடன் தொடர்புடைய நிலவியல் சம்பந்தமான சில
விடயங்களைக் குறித்து பேசுவதற்காக என்று கூறினார்கள். அதாவது ஒரு காலத்தில் அராபியாவில் அறிவியல் செழித்தது போல மீண்டும் செழிக்க வைக்க தடையாக இருக்கும் மதவாதிகளை எதிர்கொள்வதற்காக இவ்வாறு அணுகுகிறார்கள் என்பது இது தொடர்பாக எங்கள் எண்ணமாக இருந்தது. சவூதி அரச குடும்பம் இதற்காக ஒரு "புனித மனிதர்" ஒருவரை அனுப்பியிருந்தது. ஷேக் ஸிந்தானி என்பது அவர் பெயர். இது தொடர்பாக நான் சவூதிக்கு அனுப்பப்பட்டேன். ஜெத்தாவில் இறங்கிய நான் ஒரு வாரத்தில் முக்கால்வாசி நேரம் ஷேக்குடனேயே கழிக்க வேண்டியிருந்தது.
எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று குரானில் ஒரு பகுதி. அப்பகுதி அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும் சமுத்திரத்தின் உள் அலைகள் குறித்து கூறுவது போன்றதாக இருந்தது.


நான் இந்த கேள்விக்கு முகமது ஒரு அறிவாளியான மனிதர் என்பதால் அவர் கூர்ந்து நோக்கும் பண்பு கொண்டவராக இருந்திருப்பார். எனவே ஒரு கடல் பயணத்தின் போது இந்த நிகழ்வினை அவர் கடல் பயணம் ஏதாவது மேற்கொண்டிருக்கும் போது அறிந்திருக்கலாம் என கூறினேன். உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். தூய இஸ்லாமியவாதிகள் முகமது படிப்பறிவும் எழுத்தறிவும் அற்றவர் என நம்புகின்றனர். அவரை மிகுந்த அறிவுடையவராக கூறுவது அங்கு மதக்குற்றமாகும். மேலும் அங்கு (என்னோடிருந்த ) ஷேக்கும் அவரது சகாக்களும் முகமது கடலையே கண்டதில்லை என சாதித்தனர் (இத்தனைக்கும் மெக்காவும் மதீனாவும் செங்கடலுக்கு ஏறக்குறைய பார்வைக்கெட்டிய தூரத்திலேயே உள்ளன. இந்த மறுப்புக்கு பிறகு நான் ஒருவேளை முகமதுவின் நண்பர்கள் எவரேனும் கூர்த்த பார்வை கொண்ட கடல் பயணிகளாக இருக்கலாம் என கூறினேன். இதுவும் மதக்குற்றமாகத்தான் கருதப்பட்டது. ஆக ஒரு நீளமான மதியத்தில் ஒரு படகில் கடும் சூரிய உஷ்ணம் தகிக்கையில் நான் அளித்த அனைத்து ஜாக்கிரதையான விளக்கங்களும் மறுக்கப்பட்ட நிலையில் இறை வெளிப்பாட்டு ஞானமாக விஷயம் விடிந்தது! ஆக எனது ஐயமான நிலைபாடு இந்த பதிவில் பிரதிபலிக்கவே இல்லை. அதே பயணத்தின் போது ஜெதா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டேன். அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசிய போது எனக்கு அறிவியல் தேடலை மிகவும் பத்திரமாகக் கொண்டு செல்ல செய்யப்படும் முயற்சி என்பதாக எனக்கு தோன்றியது.


நான் அமெரிக்கா திரும்பியதும் இந்த உள் அலைகளை பற்றிய அறிவு எத்தனை பழமையானது என ஆராயலானேன். நிச்சயமாக பழைய வைகிங்களுக்கு இந்த உள்அலை நிகழ்வு விளைவுகள் குறித்து நல்ல அறிவிருந்தது. கிரேக்க ரோமன்களுக்கு இது குறித்து தெரிந்திருந்தால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். மிகச்சிறந்த கடல் பயணிகளான அராபியர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வினைக் குறித்து அனுபவமடைந்திருப்பார்கள். நடைமுறையில் படகு ஒரு ஷார்ப்பான சந்திப்பை நீரின் மேல்பரப்பிற்கு அடியில் பெறுகின்றன. இந்த நீருடனான சந்திப்பே படகின் க்ஷனுடநுயநவு மேல் காணும் அலைகளுக்கும் நீர் சுழல்களுக்கும் அப்பால் நிர்ணயிக்கிறது.


சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாமாபாத்தில் ஷேக் சிந்தானி ஒரு மாநாட்டைக் கூட்டினார். அவர் ஏற்கனவே சந்தித்திருந்த இஸ்லாமியரல்லாத அறிவியலாளர்களைக் கொண்ட மாநாடு அறிவியலாளர்களான எங்களிடம் இந்த மாநாட்டில் வாசிக்க ஆய்வுத்தாள்கள் கேட்கப்பட்டன. எனது கட்டுரை சமுத்திரத்தின் உள் அலைகள் குறித்த பண்டைய அறிவு குறித்தது. அந்த கட்டுரை அம்மாநாட்டு கட்டுரை தொகுப்பு வெளியீட்டில் வரவில்லை என்பதனை நான் சொல்ல தேவையில்லை. இதற்கு பின்னர் இந்த உள்-அலை குறித்து இன்னமும் எளிய ஒரு விளக்கம் எனக்குள் எழுந்தது. நல்ல சூரிய வெளிச்சத்தில் எந்த நீர் நிலையை கூர்ந்து பார்த்தாலும் நீர் உட்செல்கையில் அதன் ஒளிச்சிதறலில் குறுகிய பிரகாசமான மற்றும் இருண்ட கோடுபோன்ற அமைப்பு இருக்கும். ஆனால் இவற்றினை உருவாக்கும் மேல்தள பரப்பின் அலைகளுக்கு தொடர்பற்று இருக்கும். இவையும் உள்-அலைகளாக இருக்கக்கூடும்.


எனக்கு அராபிக் தெரியாது. நான் வாசித்ததெல்லாம் ஷேக் சிந்தானி அளித்த மொழிபெயர்ப்பினைக் கொண்டுதான். இஸ்லாமிய மத அறிஞர்களின் மதநம்பிக்கை குரான் ஒரு வார்த்தை கூட மாற்றப்படாதது என்பதாகும் என நான் அறிவேன். ஆனால் வார்த்தைகளின் பொருள் கட்டாயமாக மாறி வருகிறது என்பதனை நான் அறிவேன். உதாரணமாக ஷேக்ஷ்பியரின் நாடகங்கள் பிபிசியில் காட்டப்படும் போது நவீன ஆங்கில பொருள் தலைப்புகள் (subtitle) போடுவது போல. சில சமயங்களில் இந்த பொருள் படு வித்தியாசமாகக் கூட இருக்கும். அராபிய மொழி பொருள் கொள்ளுதலுக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். எனில், குரானில் சில பகுதிகளுக்கு நவீன விளக்கம் அளிக்க முற்படும் இந்த முயற்சி வீணான ஒரு விஷயமே ஆகும்.வில்லியம் ஹே

நவம்பர் 16 2006(ஜாகீர் நாயக் என்பவர் 'குரானும் நவீன அறிவியலும்' என ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அவர் வில்லியம் ஹே எனும் புகழ் பெற்ற கடலியளாளரை தமது சாட்சியாக (அதாவது குரானுக்கு சாட்சியாக) அழைத்துள்ளார். வில்லியம் ஹேயை தொடர்பு கொண்டால் அவர் தரும் விளக்கம் வெகு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் எப்படி அறிவியலாளர்களிடம் சவூதி அரசு 'சாட்சியத்தை' வாங்கி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. பல அலுவல்களுக்கு நடுவே பொறுமையாகவும் விரிவாகவும் பதில் அளித்த பேரா. ஹேக்கு மனமார்ந்த நன்றி - அரவிந்தன் நீலகண்டன். )What happened to me was as follows. In 1983 or 1984 two Saudi's approached the Geological Society of America to locate experts on certain aspects of Geology which might Relate to the Koran. At that time our understanding was that the Saudis wanted to make it possible for science to flourish in the Arab countries as it once had, but the religious authorities stood in the way. The Saudi Royal Family sponsored a "holy man", Sheik Zindani for this project. Accordingly, I was flown to Jedda, and met with the Sheik for the better part of a week.


For me one of the questions concerned a passage in the Koran that seems to refer to internal waves in the ocean, and the idea was that these had been
discovered only recently.


I suggested that perhaps Mohammed was highly intelligent, and a good observer, and had been on a sea voyage. In case you are not aware of it,
proper Islamics believe that Mohammed was uneducated, illiterate, and to attribute a high level of intelligence to him is heresy. Also, the Sheik and his colleagues insisted that Mohammed never saw the sea (in spite of the fact that Mecca and Medina are almost in sight of the Red Sea.


I suggested that perhaps Mohammed had friends who were observant sailors, again this was cosidered heresy. So after one long afternoon on a boat in the hot sun, all of the caveats about observations having been rejected you come to divine inspiration! So none of my skepticism was reflected.


On the same trip I gave a geological lecture at the university in Jedda, and talking with faculty there I got the impression that the assumption that the goal was to make the pursuit of science safe was essentially correct.


When I got back to the US I started to look into how old information about internal waves was, and discovered that the Vikings certainly knew about
the effects of the phenomenon, and I wouldn't be surprised if the Greeks/Romans knew about it, and almost certainly the Arabs, who were the best sailors, would have had some experience with this phenomenon. In practical terms where there is a sharp interface within the water, the waves on this interface control the motion of the boat so that it does not correspond to the surface waves or currents.


A coupleof years later a conference was organized by Sheik Zindani in Islamabad bringing together most all of the non-Islamic scientists he had conferred with. We were asked to prepare papers to be published in the Conference Proceedings, and mine included what I had been able to learn about possible ancient knowledge of internal waves in the ocean. Needless to say it did not get included in the published proceedings.
Sinc ethen a much simpler explanation of the "internal waves" occurred to me. When you look down in clear, shallow water on a sunny day, you see the effect of dffraction of light passing through the water on the bottom as narrow bright bands separated by broad dark bands. These often seem to have little if anything to do with the surface waves that actually produce them. Those might be the "internal waves."


I do not read arabic, and hence had only the translation provided by Sheik Zindani to go on. I know that Islamic scholars believe the words of the Koran have been preserved exactly, but I would question whether the meaning of the words has remained unchanged. The meanings of words drift with time, so that for example, the BBC Productions of Shakespeare have modern English subtitles so one can understand the nuances of meaning. In some cases the meaning of words has changed completely. I suspect that this may have happened with arabic as well. If this is the case, it makes the modern interpretation of obscure passages of the Koran an exercise in futility.


I hope this is of some use to you.


Bill Hay
Date: Nov 16, 2006 1:53 AM


Thursday, November 16, 2006

சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா?-2

பாரதப் பண்பாட்டை போலவே பாரதத்தின் ஞான வெளிப்பாடான தெய்வத்திருவுருவச் சிலைகளும் மிகவும் தொன்மை வாய்ந்தவை.


5000 வருடங்களுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் சிந்து-சரஸ்வதி நாகரிகத்தில் சிலை வழிபாடு மிக உயர்ந்த முறையில் சிறந்திருந்ததைக் காண முடிகிறது. அகழ்வாராய்ச்சியாளர் B.B.லால் இது குறித்து கூறுகையில் கண்ணுக்குத் தெரியாத ஜீவ நதியாக சரஸ்வதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல நம் ஒவ்வொரு பண்பாட்டு இயக்கத்திலும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் ஆன்மிக பாரம்பரியம் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் டாக்டர்.பிஷ்ட் ரிக்வேத பண்பாட்டின் நிதர்சன வடிவமாக virtual reality ஆக சிந்து சமவெளி நாகரிக அமைப்புகள் திகழ்வதாகக் குறிப்பிடுகிறார். சில மாற்றுமத சகோதரர்கள் வேதங்கள் சிலை வழிபாட்டினை மறுப்பதாக தவறாகக் கூறுகின்றனர். இது பிழையான வாதமாகும். வேதங்களை நவீன காலத்தில் ஆராய்ச்சி செய்த ஸ்ரீ அரவிந்தரும் சரி, பழமையான உரையாசிரியராகிய சாயனரும் சரி வேதங்கள் உருவ வழிபாட்டினை கண்டனம் செய்ததாகக் கூறவில்லை. மாறாக ஸ்ரீ அரவிந்தர் வேதம் ஆழ்ந்த ஆன்மிக-உளவியல் உண்மைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.


வேத பண்பாட்டின் வெளிப்பாடாக அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அறியப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சார்ந்த இந்த முத்திரையை பாருங்கள்.


கடலடியில் அகழ்வாராய்ச்சி நடத்தி மறைந்த இதிகாச நகரங்களான பூம்புகாரையும் துவாரகையையும் கண்டுபிடித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் (marine archeologist) டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் இம்முத்திரையின் மேலே காணப்படும் காட்சி வேத கால அக்னி வழிபாட்டினை காட்டும் உருவ இலச்சினை என கூறுகிறார்.


இம்முத்திரையின் கீழே காணப்படும் ஏழு பெண்கள் வேதத்தில் கூறப்படும் ஏழு தெய்வீக சகோதரிகளாக நதிகளைக் கூறுவதினை நினைவுப்படுத்துகின்றனர். இன்றைக்கும் நீர்நிலைகளின் அருகில் சப்த மாதர் வழிபாடு உள்ளது.தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக வேதம் இந்திரனைப் போற்றுகிறது. வேதத்தில் இந்திரன் காளையாக உருவகிக்கப்பட்டுள்ளார்.புகழ்பெற்ற மொழியியலாளர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு விலங்கு


இலச்சினைகளை வேதத்தின் சோமபானச் சடங்குகளின் குறியீடாகக் காண்கிறார்.


இவையெல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கையில் வேத காலத்தில் உருவ வழிபாடு கிடையாது எனக்கூறுவது சரியல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேதம் வழிபாட்டுமுறையில் எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை.

'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்'
என ரிக்வேதம் கூறுகிறது. எனவே உருவ வழிபாடு வேத காலத்திலேயே நிலவியது மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மிக முறையாக ஏற்கப்பட்டும் விளங்கியது.

Wednesday, November 15, 2006

ஆர்.எஸ்.எஸ் சேவை அமைப்புகளுக்கு மத்திய அரசு பாராட்டு

'தன்னலமற்ற முறையில் திறமையாக வனவாசி மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன'வனவாசிகளுக்கு சிறந்த பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை மத்திய அரசின் வனவாசி மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கை பாராட்டியுள்ளது.
 • அகிலபாரத வனவாசி கல்யாண் ஆசிரமும் அது சார்ந்த அமைப்புகளும்
 • சேவா பாரதி
 • வித்யா பாரதி மற்றும்
 • தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஆகியவை இந்த அமைப்புகள் ஆகும்.
இவை மிகச்சிறந்த முறையிலும் தன்னலமற்ற முறையிலும் வனவாசிகளின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளன என்பதனை மத்திய அரசின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.சேவாபாரதி
சேவாபாரதி பாரதம் முழுவதும் 35000க்கும் அதிகமான சேவை பணிகளை செய்துவரும் இயக்கமாகும். இதன் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் சிறுவர் சிறுமியருக்கு கல்வி அளித்தல், அன்பு இல்லங்களை நடத்துதல், பெண்களுக்கு சுயசார்பு அளிக்கும் தொழில்கல்வி அளித்தல் மற்றும் சுயநிதி குழுக்கள் மூலம் அவர்கள் செயல்பட உதவுதல். மருத்துவ சேவைகள்,பேரிடர் துயர் களைதல் ஆகிய அரும் பணிகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்தி வரும் அமைப்பு சேவா பாரதி ஆகும்.வனவாசி கல்யாண் கேந்திரா


வனவாசி கல்யாண் கேந்திரா 1969 இல் உருவாக்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் முழுமையான வனவாசி முன்னேற்றத்திற்காக உழைக்கிறது. இந்த அமைப்பின் பல சமூக சேவகர்கள் பிரிவினைவாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்ற போதிலும் தளராது நலிவுற்ற மக்கள் சேவையில் முத்திரை பதித்து வருகிறது வனவாசி கல்யாண் கேந்திரா. தலித் பழங்குடி மக்களான ரியாங்குகளுக்காக நீதிமன்ற குரலை எழுப்புவதில் வெற்றி கண்டுள்ளது வனவாசி கல்யாண் அமைப்பின் வெற்றி மைல்கல்களில் ஒன்றாகும். ஒராசிரியர் பள்ளி மூலம் கல்வித்துறையில் இந்த அமைப்பு பெற்றுள்ள வெற்றி பல வளரும் நாடுகளுக்கு சிறந்த மாதிரியாக அமைந்துள்ளது.தீன் தயாள் ஆராய்ச்சி மையம்

தீன் தயாள் ஆராய்ச்சி மையம் குறித்து மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளதாவது:

"தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பாகும். ஏனென்றால் அந்த அமைப்பு பாரதத்திற்கு மிகவும் ஏற்புடையதான கிராம முன்னேற்ற மாதிரியை வளர்த்தெடுத்து அதனை நிறைவேற்றி வருகிறது. தீன்தயாள் ஆராய்ச்சி மையம் மக்கள் சக்தியே அரசியல் அதிகாரத்தை விட மிகவும் உள்வலிமையும் ஸ்திரத்தன்மையும் சாசுவதத்தன்மையும் கொண்டது என அறிந்துள்ளது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட நலிவடைந்த மக்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒருவர் அரசு நிர்வாகத்தின் இயக்க முறையை சரியாக அறிந்து கொள்ளலாம். சமுதாய முன்னேற்றமும் வளமும் ஏற்பட வேண்டுமானால் இளைய தலைமுறைக்கு செயல்திறமும் தற்சார்பும் கொண்ட உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தீன்தயாள் ஆராய்ச்சி மையம் 100 கிராமத் தொகுப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 5 கிராமங்கள் உள்ளன. ஏற்கனவே 16 தொகுப்புகளில் 50000 மக்கள் வாழும் 80 கிராமங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன."
(நன்றி : குடியரசு தலைவரின் இணையதளம்: 52 ஆவது தேசிய திரைப்பட விழா பரிசளிப்பின் போது டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பேசியதிலிருந்து: 21-10-2005, புது டெல்லி)