அன்புள்ள சம்பத்,
உங்கள் கேள்விக்கு மிக நீண்டபதில் சொல்ல வேண்டும். தனிப்பதிவில் எழுதுகிறேன். இந்த விஷ்யத்தைப் பற்றி இந்தோநேசியாவில் வசிக்கும் திரு.பி.என்.குமார் என்ற நண்பர் மிக
ஆணித்தரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். இவர் எழுத்துக்களை ஆங்கிலக்குழு ஒன்றில் படித்திருக்கிறேன். தமிழில், சைவத்தில் இந்த அளவுக்கு வீச்சு கொண்டவர். என்பது இவர் திண்னையில் எழுதிய 'திருவண்டம்' என்ற அறிவியல் புதினத் தொடரினைப் படித்தபோதுதான் தெரிந்தது. அத்னைப் பாராட்டி எழுதியிருந்தேன். இந்தியா வருகையில் பேசுவதாகச் சொன்னார். சொன்னது போலவே சென்ற ஆண்டு இறுதியில் இந்தியா வந்திருந்தபோது தொடர்பு கொண்டு பேசினார். ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காத செந்தமிழில் இவர் பேசியது, சைவத்திருமுறையில் இவர் பெற்றிருக்கும் ஆழ்ந்த பார்வை என்னை வியக்க வைத்தது. மீண்டும் இந்தோநேசியா திரும்புகையில் பணிமாற்றத்தால் இணையத்தொடர்பு வசதி இல்லாத ஒரு தீவுக்குப் போவதாகவும் அதனால் தொடர்பு கொள்வது கஷ்டம் என்றும் சொன்னார். இவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது கேட்ட சில கேள்விகளில் இதுவும் ஒன்று. இது போன்ற பல விஷ்யங்களுக்கு அகத்தியர் என்ற யாஹூ குழுவில் நிறைய விளக்கங்கள் எழுதியிருப்பதாகச் சொன்னார். சில முக்கியமான கட்டுரைகளை மட்டும் எனக்காக அனுப்பி வைத்தார். இவற்றை திண்ணையில் மீள்பிரசுரம் செய்யட்டுமா என்றதற்கு மறுத்துவிட்டார். இருந்தாலும் உங்களின் இந்தக் கேள்விக்கு மட்டும் என்னிடம் இருக்கும் அவர் கட்டுரை ஒன்றை அவர் அனுமதி இல்லாமலே இங்கே பதிவு செய்கிறேன். இங்கு சகோதரர் ஜாவா குமார் அவர்களின் கருத்துகள் அனைத்துடனும் நான் உடன்படவில்லை என்பதனை தெளிவாக்க விரும்புகிறேன். ஆனால் அன்றுமுதல் இன்றுவரை கூச்சமின்றி நடைபெறும் ஜிகாதி இனப்படு கொலைகளினை இந்த சைவ-சமண மோதலின் ஒரு நிகழ்வினை வைத்து சமாளிக்க நினைக்கும் நேர்மையற்ற அறிவுஜீவித்தனத்திற்கு சகோதரர் ஜாவா குமாரின் கட்டுரை ஆழமான அறிவார்ந்த தமிழ் இலக்கியம் சார்ந்த வாதங்களை நேர்மையாக எடுத்து வைக்கிறது. இக்கட்டுரை ஒரு சைவ பார்வையில் இவ்விஷயத்தை அணுகியுள்ளது. இதில் முக்கியமாக நீங்கள் காண வேண்டியது எவ்விடத்திலும் அவர் புத்த ஜைன தருமங்களை அழிக்க வேண்டியவை என்று கூறவில்லை. சச்சரவோ மோதலோ அக்காலத்து ஒரு நிகழ்ச்சியேயன்றி -அன்றைய சூழலில் நிகழ்ந்ததே அன்றி- இன்றும் தொடர்வதல்ல. இன்றைக்கு வங்கதேசத்திலும், லடாக்கிலும், அருணாசல பிரதேசத்திலும் திபெத்திலும் பௌத்தர் வாழ்விற்காக குரல் கொடுப்போர் இந்து தேசியவாதிகளே ஆவார்.
அகத்திய அறிஞர் பெருமக்களுக்கு,
இம்மன்றில் ஏதோ சைவசமயப் பெரியோர் சூழ்ச்சி செய்து அப்பாவியான பண்டைச் சமண பௌத்தச் சமயவாதியரை அழித்தொழித்து விட்டதாகவும், 'அவர் கடவுள் தாழ்ந்தோன்; என்
கடவுள் உயர்ந்தோன்' என்று மிஷனரிமார்பாணியில் தத்தம் கருத்தினைப் பரப்பிப் பின் பெருவாரியினர் விருப்பமின்றி அவரை மீண்டும் வலிய 'மதம்' மாற்றி விட்டதாகவும் போன்ற தொனியில் அவ்வப்போது சில மடல்களைக் காண்கிறேன்.
அதற்குச் சான்றாக 'அவர் சொன்னார் இவர் சொன்னார்' என்று பல்வேறு சுட்டிகளும் இடப்படுகின்றன. இத்திறக்கில் அடியேன் பலமடல்கள் எழுதியிருப்பினும் இறுதியாய்ச் சில
கருத்துக்களைச் சொல்லி மீள்கிறேன். பெருமதிப்புக்குரிய தமிழ்வல்லர் திரு.இராமகி அவர்களின் முந்தைய இடுகையும் ஒரு தூண்டுதலானது. இன்று பெரும்பான்மைத்
தமிழர் புரிதல் இங்ஙனமிருக்க அவரைக் குறை சொல்வது என் நோக்கமல்ல.
முதற்கண் சமண பௌத்தப் பிரிவினர் யாவரும் ஏதோ புத்தரையும், மஹாவீரரையும் போன்றே அன்புருவாய்த் திகழ்ந்து வந்தனர் என்று கொள்வதே பெருந்தவறென்பதை தம் சமயம் விட்டுப் போன முதியவரான அப்பர் பெருமானை சுண்ணாம்புக்காளவாயில் சுட்டெரித்தும், கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆனைகளை விட்டு மிதிக்க
வைத்தும் பார்த்த நிகழ்வுகள் மெய்ப்பிக்குமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டேயுள்ளன. பின்னர் பாலறாவாயரான சிறுகுழந்தையை அவர் தங்கியிருந்த மதுரை மடத்தோடு தீ வைத்து
அழிக்கப் பார்த்தது அதன் உச்சக்கட்டம். இப்படி ஆயிரம் சான்றுகளை இங்கிட முடியும்.
தமிழ்மண்ணின் பண்டை மரபையே சிதைத்திருந்த களப்பிரர் காலத்து வெறியர்களுடன் வாதிட்டு அவரை (கவனிக்க: பொதுமக்களான அப்பாவிகளை அல்ல) வென்றொழித்த பெருமை ஆளுடைப் பிள்ளையார் ஞானசம்பந்தப் பெருமானுக்குரியது. அவர் நமையாளும் முருகப்பெருமானே என்பதற்குச் சான்று தேடி நான் எந்த இந்தாலஜி அறிஞரையும் சுட்ட
வேண்டிய அவலச்சூழலில் இல்லை. குறைந்தது ஐம்பது திருப்புகழ் பாடல்களைச் சுட்ட முடியும். காட்டாய் கந்தரந்தாதியிலிருந்து பாடலொன்று:
திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே! (29)
பொருள்: தன்னடித் தொண்டருக்கு நன்னெறியாகத் தேவாரத்தை மொழிந்தருளியவரும், அருட்தலங்களைத் துதியாமலும், திருநீற்றின் மகத்துவத்தைத் தூற்றியும் இருந்த
சமணர்கள் கழுவேறும்படி வாதினால் வென்றவருமாகிய சம்பந்தாவதாரங் கொண்ட குமாரக்கடவுளேயன்றி வேறு தெய்வமில்லை!
அருணகிரியார் மட்டுமின்றி பின்னாளில் வண்ணச்சரபர் போல் பலருக்கும் சம்பந்தர் வடிவிலேயே காட்சிதந்தருளிய சான்றுகள் உண்டு. மறைந்த அருட்கவி சாதுராம்
ஸ்வாமிகளை ஒருமுறை சரபேஸ்வர மூர்த்தத்தைத் தமிழில் துதிக்க ஒரு போற்றிப் பாடலை எழுதித் தருமாறு வேண்டி நண்பர்களுடன் காணப் போயிருந்தேன்.
'உயிர்வர்க்கமாலை'யென்று சரசரவென்று எழுதித் தந்தவர், பள்ளிச் சிறுவனாய் தம் சிறுவயதிலேயே திருப்போரூரில் முதியவர் வடிவில் முருகப்பெருமான் காட்சிதந்து தம்மை
ஆட்கொண்டு முருகனருளால் தாம் தமிழ்க்கவி பாடும் திறன் பெற்ற கதையினை உருக்கத்துடன் விவரித்தார். அவ்வமயம் அமானுடமாய் முதலில் எழுந்த பாடலைப்
பாடியும் காட்டினார். அதிலே சம்பந்தராய் அவதரித்து தமிழ்ச் சமுதாயத்தை மாபெரும் வீழ்ச்சியிலிருந்து காத்தருளியதையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கக் கண்டேன்.
மெய்யில் நிகழ்ந்தவை இங்ஙனமிருக்க சிறுபிள்ளைத்தனமாய் ஏதோ சைவத்துக்கும் சமணத்துக்கும் போட்டி, பௌத்தருடன் சண்டை என்று இங்கே வெற்றுக்கதை வடித்திருப்பது
அந்தத் தமிழுக்கே இழுக்கு. முருகப்பெருமானுக்கு அசுரர் சேனையுடன், சூரபதுமனுடன் போட்டி என்பது எவ்வளவு அபத்தமோ, ராமபிரானுக்கு ராவணனுடன் போட்டி என்பது எவ்வணம் நகைப்புக்குரியதோ அங்ஙனமாகும்.
இனி சம்பந்தப் பெருமானே தம் திருவாயால் சமணர்தம் ஆதியான சான்றோர் குறித்துச் சொல்வதை அடுத்தமடலில் காண்போம். அடுத்து, திருஞானசம்பந்தப்பெருமான் மிஷனரிமார்பாணியில் 'எம்மிறை வலியர் நும்மிறை எளியர்' என்று பிரிவினைவாதம் செய்து பெருவாரியினரை மதம்மாற்றி விட்டதாய் அறிஞர் பெருமக்கள் சிலர் அவ்வப்போது எழுப்பிவரும் அபாண்டமானதொரு குற்றச்சாட்டினைக் காண்போம்.
தேவாரசாரமாய்த் தம் தந்தையார் எளிதில் பாடும் வகையில் அருளிய திருஎழுகூற்றிருக்கையின் சூக்குமம் விரித்து முன்னரிங்கு எழுதியிருந்தேன். அதை அவர் முடிப்பதே
'இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்' என்று. அங்ஙனம் ஒருமையின் பெருமையை மீண்டும் உலகுக்குணர்த்த வந்த
திருஅவதாரம் யாரையும் 'நம்மவர் பிறர்' என்று பிரித்திலர் என்பதை அவர்தம் திருவாயாலேயே பாடக் காண்கிறோம்.
காரணப் பொருளையும் காரியப் பொருளையும் குழப்பியிருந்த அத்திநாத்திவாதியரை மறக்கருணைமிக அவர் சாடியிருக்கலாம். ஆயின் அந்தச் சமணர், சாக்கியர் கூட்டமும் கூட
தம்மிச்சையால் எதையும் செய்யவில்லையென்பதையும் அவரை அங்ஙனம் இயக்கியிருப்பதும் தம்பிரான் தன் திருவிளையாடலே என்பதையும் ஐயந்திரிபறத் திருமுறையிலேயே
பதிவு செய்துள்ளார். குறிப்பாய்ச் சில சான்றுகள்:
துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக்கியமாக் கியவாறே.
(திரு இறும்பூளைப் பதிகம் - 2-36-10)
பாக்கியம் பல செய்த பத்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை
யோதி னாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி
நின்றவனே அடைந்தார்க் கருளாயே. (திருக்களர்ப் பதிகம் - 2-51-10)
அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட
அமணும் மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும் வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையா னுகந்த நகர்தான் நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலு நமர்காள்.
(திருநனிபள்ளிப் பதிகம் - 2-84-10)
கலவமாமயி லார்இய லாள்கரும் பன்னமென்மொழியாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழலாளுமைகூறனை வேறுரையால் அலவைசொல்லுவார்
தேரமண் ஆதர்கள் ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற் புலவர்தாம்புகழ்
பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.
(திருப்பூந்தராய்ப் பதிகம் - 3-2-10)
வேதநாவனாய் நிற்கும் ஈசனே அமணரையும் சாக்கியரையும் ஆக்கி அவர்தம் நூலையும் அருளி, அவரை அவ்வணம் இயக்கியிருப்பவனும் ஆவானெனும் சம்பந்தப்பெருமானின்
ஒருமைப்பாட்டினை மேலே காணலாம். இதில் எங்கிருந்து வந்தது போட்டி? சைவக்குரவரை 'ஒருமையால் உலகை வெல்வார்' என்று சேக்கிழார் பெருமான் பாடுவதும் அதனாற்றான். இறைத்தத்துவத்துக்கே பொறாமையைப் புகுத்துவது இந்தியநெறிக்குப் புறம்பானது.
பின்னர் ஏனிந்த வாது?
அடுத்து பௌத்தருடன் அவர் திருமுன்னிலையில் நிகழ்ந்த வாதின் விவரங்களை மீண்டும் காண்போம். பாண்டி நாட்டில் திருவடி நெறியினை மீண்டும் தழைக்கச் செய்து சோழ
நாட்டுக்குத் திரும்புகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.
திருப்பரங்குன்றம், திருப்புத்தூர், திருப்பூவணம், திருக்குற்றாலம், நெல்வேலி வழியே ராமேச்சுரம், திருவாடானை வரை பாண்டி நாட்டுத் தலங்களுக்கேல்லாம் நீறு தரித்துய்ந்த
நின்ற நீர் நெடுமாறனும் உடன் சென்று விடைபெற, திருக்களரின் ஊடே பொன்னி நாட்டில் மீண்டும் புகுகிறார் சம்பந்தப் பெருமான். பல தலங்களைத் தரிசித்துத் திருநள்ளாற்றிலிருந்து
திருக்கடவூர் செல்லும் வழியில் புத்தம் (தேராவாதம், சௌத்ராந்திகம் எனும் பிரிவினர்) வலுத்திருந்த 'போதிமங்கை'யின் வழி செல்ல நேர்கிறது.
சம்பந்தப் பெருமானுடன் முன்செல்வோர் செய்த அரநாம ஆர்ப்பொலி கேட்டும், திருச்சின்னங்களைக் கண்டும் பொறாத புத்தநந்தி என்பான் அவரைத் தடுத்து 'வெற்றிபுனை
சின்னங்கள் வாதில் எம்மை வென்றன்றோ பிடிப்பது?' என்று வெகுண்டு சொல்கிறான்.
திருச்சின்னங்கள் மற்றும் வாத்தியக் கோஷ்டியெல்லாம் மறித்தனுப்பக் கண்டு மனம் பொறாத சம்பந்த சரணாலயர் என்ற சம்பந்தரின் அணுக்கரும், பதிகம் எழுதிக் கொள்ளும்
அடியாருமானவர், சம்பந்தர் பாடிய அருட்பாடல் (அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே என்ற பஞ்சாக்கரப் பதிகத்தின் பத்தாம் பாடல்) ஒன்றைப் பாட, திடுமென மின்னல் வெட்டி
புத்தநந்தி தலையில் இடியாய் இறங்குகிறது. தலை நூறுகூறாக விழுந்து மடிகிறான் புத்த நந்தி.
பயந்தோடிய பௌத்தரைத் திரட்டிய மற்றொரு தலைவனான சாரிபுத்தன் என்பார் 'இது மந்திரவாதமேயன்றி சைவ வாய்மையில்லை! எம்முடன் நேர்மையாய் வாதிட வல்லீரோ' என்றழைக்க பின்னால் வரும் சம்பந்தப் பெருமானுக்குச் செய்தி போய் அவரும் அதற்கிசைந்து அருகில் இருந்த சத்திர மண்டபம் ஒன்றில் எழுந்தருளுகிறார்.
சாரிபுத்தன் தலைமையில் தேரர் திரள வாது தொடங்குகிறது. தத்தம் புரட்சித்தலைகளுக்கு மாலை அணிவித்துத் தூபதீபம் காட்டியிருக்கும் கூட்டங்களும் அவசியம் அறிந்து
கொள்ள வேண்டிய வாதமிது. இனி, சேக்கிழார் பெருமான்தம் திருவாக்காலேயே காண்போம்:
1 - ஞானசம்பந்தர்தம் அன்பர்
2 - சாரிபுத்தன்
- 1. உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க!
- 2. கற்பங்கள்அனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில், பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்ய உற்பவிக்கும்
ஒழிவின்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன்!
- 1. நன்று! உமது தலைவன்தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்திதான் யாவது?
- 2. நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர் நின்ற ஞானமென நிகழ்ந்த ஐந்தும் ஒன்றி அக்கந்தத்து அவிவே முத்தி!
- 1. தாங்கிய ஞானத்துடன் ஆங்கு கந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டனவேல் தலைவன் தானும் ஈங்குளன்? யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்தோங்கு வடிவமைத்து
விழவெடுக்கும் பூசை கொள்வார் ஆர்? உரைக்க!
- 2. கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன் கலந்துளன் முத்தியில்.
- 1 காணும் இந்திரியம் கண்முதலாம் கரணந் தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை.
- 2. முந்தை அறிவிலனாகி உறங்கினானை நிந்தித்து மொழிந்துடல் மீதாடினார்க்கு வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வருமன்றோ நன்மை?
- 1. தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லையான போது அவன் பெறுதல் இல்லை.
- 2. முன்னவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால், இன்னுயிர் போய்க் கொலையாகி முடிந்தது அன்றோ!இப்படியால் எம் இறைவற்கு
எய்தும்!
- 1. இப்படியால் எய்தும்; நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான்போல் மெய்ப்படிய கரணங்கள் உயிர்தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கானபோது செப்பிய அக்
கந்தத்தின் விளைவின்றாகித் திரிவில்லா முத்தியிற் சென்றிலனும் ஆனான்; அப்படி அக்கந்தத்துள் அறிவுங் கெட்டால் அம்முத்தியுடன் இன்பம் அணையாதே!
- 2.அணைந்து உடன் அம்முத்தியெனும் அதுவும் பாழாம்!
- 1. பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்; எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம்!
- 2. உணர்வு பொதுச் சிறப்பென்ன இரண்டின் முன் அது உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப் புணர்சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பில்லாப்
பொருள்கள் எல்லாம் கொணரும் விறகினைக்குவை செய்திடினும் வேறு குறைத்தவற்றைத் தனித்தனியே இடினும் வெந்தீத் துணர்கதுவிச் சுடவல்லவாறு போலத் தொகுத்தும்
விரித்தும் தெரிக்கும் தொல்லோன்!
- 1. எரியுணர்வுக்கு எடுத்துக்காட்டாகச் சொன்னாய்; அடுத்த உணர்வுரு உடையதன்று சொன்ன அனல் வடிவிற்றாம், அதுவும் அறிதி நுங்கோன், தொடுத்த நிகழ்காலமே
அன்றி ஏனைத் தொடர்ந்த இருகாலமும் தொக்கறியுமாகில் கடுத்த எரி நிகழ்காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அதுவாகாது. ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்தது நும் முத்தி போல் ஆயிற்றன்றே! ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்! - - என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய,வாதமா றொன்றின்றித்
தோற்றான் புத்தன்;
மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர், பாததா மரைபணிந்தார் அன்பர்; தங்கள் பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார். வாதம் அம்மட்டே. அங்கிருந்த புத்தர்
யாவரும் ஞானசம்பந்தரைப் பணிந்து திருக்கடவூர் தொடர்ந்து சென்று சைவநெறிக்குத் திரும்பியதாகச் சொல்லிப் போகிறார் சேக்கிழார் பெருமான்.
இங்கேது சண்டை?
துறவுக்கோலமின்றி முக்தியில்லை என்ற பௌத்தர்தம் கோட்பாடே அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். சமணர் சாக்கியர் அளவுகோலின்படி கண்ணப்பரும், அதிபத்தரும்,
அன்னபிறரும் எய்திய முக்திக்குப் பொருளற்றுப் போய்விடும். இதையே சுட்டி சமணமும் பௌத்தமும் நன்கறிந்த அவையொன்றில் பலமுறை வினவியுள்ளேன். இங்கும் இதே வினாவினைப் பலமுறை எழுப்பியுள்ளேன். இன்னும் விடையினை எதிர்நோக்கியிருக்கும் இந்த வினாவினை இங்குமிடுகிறேன்.
Let's see a fisherman devotee now. His name is 'Atipaththar'. He did not leave his family renouncing the worldly life. He continued his duties like any other fisherman. Yet, he attained Mukti. What made the difference? He could come out of **'I-ness' and Mine mindset** -Mamakara - and got detached even though he continued to be a fisherman. Hence the inclusion among Nayanmars. He is worshiped side by side with the Saints from orthodox Brahmins also - by the ultra orthodox Hindus in every Siva temple.
This saint was a fisherman born in Nulaipadi near Nagapattinam. It was his practice to let go one fish from his catch daily, as an offering unto the Lord. The Lord wanted to reveal his greatness to the world. Once it so happened that for many consecutive days he could catch only one fish. He let it go, in the name of Lord Siva, and went without food. One day he caught a golden fish, again only one for the day. And, he stuck to his vow and let it go, in the name of Lord Siva. The Lord appeared before him and blessed this illiterate, fisherman saint! Not indeed by vast erudition, nor by breath-taking austerities, nor by hearing and talking a lot, but by unflinching devotion alone can God be realised. This humble, simple, fisherman saint has proved that beyond the least trace of doubt. But, look at his steadfastness, Nishta! It is not easy to acquire, unless you have living faith in God. Otherwise, the mind will bring up all sorts of reasons (lame excuses!) for breaking the vow. This supreme faith and devotion is itself the highest Jnana. Only an ignorant man studies books: what need is there for a great scholar to study an elementary book on grammar? What need is there for one to whom God is a living presence, to stuff himself with words? Intellect is a help, if it serves faith: it is a hindrance if it shakes it. Devotion is indispensable for attaining Him.
I have just one question for those who say only Jainism & Bauddhism are egalitarian: Is the 'mukti'-ultimate enlightened liberation of this fisherman saint valid as per Jaina, Bauddha doctrines? Remember he didn't quit fishing to become a Saint.
அன்புடன், குமார் ஜாவா